என்னவென்று நான் சொல்ல ?-105

105 தேடி வந்த கண்ணனின் பின்னாலே.. ஓடிச் சென்ற ராதையின் மனதையே.. என்னவென்று நான் சொல்ல.. ? இரவு முழுவதும் தூங்காமல் விழித்துவ...


105
தேடி வந்த கண்ணனின் பின்னாலே..
ஓடிச் சென்ற ராதையின் மனதையே..
என்னவென்று நான் சொல்ல..?


இரவு முழுவதும் தூங்காமல் விழித்துவிட்டு.. விடியற்காலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மாலினியை காவேரி எழுப்பினாள்...
"தூக்கம் வருதும்மா.." மாலினி கண் திறக்காமல் சிணுங்கினாள்..
"அதுதான் வேலையை விட்டுவிட்டு வந்துட்டயே.. நினைச்ச நேரமெல்லாம் தூங்கிப் பொழுதைக் கழிக்கலாம். இப்ப எழுந்து வா.. தூக்கம் எங்கேயும் ஓடிப்போய் விடாது. அதை மெதுவாய்.. அப்புறமாய்.. தூங்கிக்கலாம்.."
"இப்பவே எழுந்து நான் என்ன செய்யப் போகிறேன்?"
"நீ ஒண்ணும் வெட்டி முறிக்க வேண்டாம்.. சசி வந்திருக்கிறாள். எழுந்து வா.."
மாலினியின் தூக்கம் பறந்துவிட்டது. அவள் அவசரமாக எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.. அதற்குள் அறைக்கதவைத் திறந்து கொண்டு சசிரேகா உள்ளே வந்தாள்.. அவள் விழிகள் மாலினியை குற்றம்சாட்டின.. காவேரி குறிப்பறிந்தவளாக வெளியேறி விட்டாள்..
"சசிதான் வந்திருக்கிறேன்.. என்னை உனக்கு நினைவிருக்கில்ல?"
"என்னடி சசி.. இப்படியெல்லாம் பேசுகிற...?"
"நீ செய்து வைத்திருக்கும் வேலைக்கு உன்னைக் கொஞ்ச சொல்கிறாயா? உனக்கு நான் என்னடி கெடுதல் பண்ணினேன்..? ஏன் என் வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்கிறாய்.. இதுக்குத்தான் மார்த்தாண்டத்திற்கு தேடி வந்தாயா..?"
"நீ ஒருத்திதான் பாக்கி.. நீயும் எதையாவது பழியைத் தூக்கிப்போடு தாயே.."
"நீ உன்னைப் பற்றியே யோசி.. மற்றவர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்காதே.. அவசரக்குடுக்கை.. உன்னால் எனக்கு நிம்மதியே போச்சு.."
"எனக்கு வாழ்க்கையே போச்சு.."
"என் வீட்டு ஆள்களால் எப்பவுமே உனக்கு வாழ்க்கை போகாதுடிம்மா.. உன்னால்தான் என் வீட்டின் சந்தோஷம் போகும். நீ வன்மம் பிடிச்சவடி.."
"என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசாதே..."
"நீ சொன்னாயா.. எதையாவது என்னிடம் வாய்விட்டுச் சொன்னாயா? நீயும் அப்படித்தான்.. பெரியத் தானும் அப்படித்தான். உங்க மனதை வெளியில் சொல்லாமல் புதைத்து வைத்துக்கிட்டு உங்க இஷ்டம் போல ஆடிப் பார்க்கறீங்க.. பெரியத்தான் வெளிநாடு போகிறார். போகிறதுக்கு முன்னால தினகரனுக்கும் பவித்ராவிற்கும் கல்யாணத்தை பண்ணி வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறார். வீட்டில் எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு அவர் தனிமரமாய் சொத்து சுகம் சொந்த பந்தத்தை விட்டுவிட்டு கண்காணாமல் போகட்டும்.. நீ உன் பிடிவாதத்தை பிடித்துக் கொண்டு தொங்கு.. மன்னிக்கத் தெரிந்தவ தாண்டி மனுஷி..."
சசிரேகா பொரிந்து தள்ள.. மாலினி.. "சசி.." என்று விம்மி அழுதாள்..
"நீயேண்டி அழுகறே.. அழவேண்டியவ நானு. இனி என்கூட பவித்ராவும் சேர்ந்துக்குவா.. பெரியவர் தனிமரமாய் நிற்க.. குழந்தை பெற்றுக்கறது குற்றம்னு என் புருஷன் நினைப்பதை இப்பவே வாய்விட்டு தினகரன் சொல்லிட்டான்.. வேறு யாருக்காவது பவித்ராவைக் கட்டி வைத்து விடுவாங்கன்னுதான் அவ கழுத்தில் தாலியைக் கட்டப் போகிறானாம்.. சின்னவன் ஜொள்ளுதான் விடுவான்.. மத்தபடி.. அண்ணன்மார்களின் குணம் அப்படியே அவனிடமும் இருக்கும்.."
"இதெல்லாம் உன் வீட்டுப் பிரச்னை.. என்கிட்ட ஏண்டி சொல்கிற..?"
"அறைஞ்சேன்னா.. அத்தனை பல்லும் உதிர்ந்து விடும். என் பெரியத்தானை வீட்டை விட்டுத் துரத்தவா நீ ஊர்விட்டு ஊர் வந்த? அவர் என்னடி தப்பு பண்ணினார்? கேப்டன் இல்லாத கப்பலின் கதிதான் நாளைக்கு என் குடும்பத்துக்கு வரப்போகுது. நீ நிம்மதியாய் எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு குடித்தனம் நடத்து.."
"நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை.."
"அப்ப.. இந்த வீட்டின் நிம்மதியையும் குழிதோண்டிப் புதைக்கப் போகிறேன்னு சொல்லு.. உன் அண்ணிகாரி நான் உள்ளே வரும்போதே ஒரு மார்க்கமாய் பார்த்தா.. மார்த்தாண்டத்தில் என்ன நடந்தது.. ஏன் எங்க மாலினி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டாள்னு என்கிட்டயே கேட்டா.. அவ வாய்விட்டுக் கேட்டதை சித்தப்பாவும்.. சித்தியும் அண்ணனும் கண்களால் கேட்டாங்க.. இப்ப நீ கல்யாணம் வேண்டாமுன்னு சொன்னா.. உன் அண்ணியே காவியம் பாடி.. ஊரெல்லாம் ஒலிபரப்புவா.. அப்புறம் சித்தப்பாவும் சித்தியும் என்ன ஆவாங்களோ..?"
"பயமுறுத்துகிறாயா..?"
"இல்லைன்னு நான் சொல்லப் போவதில்லை. இப்ப நான் வந்தது வேறொன்றையும் உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான்.."
"என்னன்னு சொல்லித் தொலை..."
"பெரியத்தான் ஆக்ஸிடெண்டாகி ஹாஸ்பிட்டலில் கிடக்கிறார்..."
சசிரேகா கண்கள் இடுங்கக் கூற.. மாலினி பதறி எழுந்தாள்.. அவள் உடல் நடுங்கியது..
"என்னடி சொல்கிற.. பாவி.. இதைச் சொல்லாமல் இந்நேரம் வரைக்கும் கதையளந்தியே.."
"பொறு.. எதுக்கு இந்த குதி குதிக்கிறே.. உனக்கு தகவல் சொல்லக்கூடாதுன்னு பெரியத்தான் கண்டிப்பா சொல்லிட்டார்.. நீ வந்தாலும் அவர் உன்னைப் பார்க்க மாட்டார்.."
"அதைச் சொல்ல நீ யாருடி..? அவருக்கு என்ன ஆச்சு..?"
"உன்னைப் பார்க்க சென்னைக்கு வந்துட்டு திரும்பிய மனிதர்.. கண் மண் தெரியாம காரை ஓட்டியிருக்கிறார்.. ஆக்ஸிடெண்ட் ஆகியிருச்சு.. இப்ப உனக்கு நிம்மதியா...?"
"உன்னைக் கொன்றுவிடுவேன் சசி.. டாக்டர் என்ன சொல்கிறார்?"
"உயிருக்கு ஆபத்தில்லையாம்.. ஆனால் கை.. கால்.. தலைன்னு ஒரு இடம் விடாம அடிபட்டு கட்டுப் போட்டிருக்கு.. சாப்பாடு.. தண்ணியில்ல.. குளூகோஸ் இறங்கிக் கிட்டு இருக்கு..."
"வாடி போகலாம்.." மின்னல் வேகத்தில் மாலினி கிளம்ப..
"எங்கே.. கிளம்புகிறா..?" என்று அறைக்குள் காபியுடன் வந்த காவேரி கேட்டாள்..
"என்கூடத்தான் சித்தி.. மார்த்தாண்டம் வருகிறாள்..", மாலினி அறியாமல் சசிரேகா கண் சமிக்ஞை செய்ய, காவேரி புரிந்துகொண்டு மௌனமாகி விட்டாள்..
சசிரேகாவுடன் காரின் பின்ஸீட்டில் மாலினி அமர்ந்து கொள்ள, காரைக் கிளப்பினான் கருணாகரன். அப்போது தான் அவனைப் பார்த்த மாலினி ஆச்சரியத்துடன்...
"அத்தான்! நீங்க ஏன் வீட்டுக்குள் வரவில்லை?" என்று கேட்டாள்..
"என் அண்ணன் இருக்கும் நிலையில் என்னால் மாமனார் வீட்டுக்குள் வந்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது.." கடினமான முகத்துடன் சொன்னான் கருணாகரன்..
"கேட்டுக்கடி பிசாசே.. இனி காலமெல்லாம் என் புருஷன் சிரிக்கக்கூட மாட்டார்.. என் அண்ணனே வெளிநாடு போயிட்டார்.. எனக்கு சிரிப்பு ஒரு கேடான்னு கேட்பார்.. நீ இருக்கும் இடத்தில் சிரிப்பிருக்குமே மாலினி இப்ப இப்படி என்னை அழ வச்சிட்டயே.."
சசி வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, மாலினிக்குள் குற்ற உணர்வு எழுந்தது..
மார்த்தாண்டத்தின் பிரபலமான மருத்துவமனைக்குள் கார் சென்று நின்றது.. மாலினி இறங்கி ஓடினாள்.. சசிரேகா பின்னால் தொடர்ந்தாள்..
"ரூம் நம்பர் இருபத்து நாலுடி.." சசியின் குரல் காற்றில் வந்தது..
மாலினி இருபத்து நான்காம் எண் உள்ள அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடினாள்.. கட்டிலில் கண் திறவாமல் உடலெல்லாம் கட்டுக்களோடு பிரபாகரன் படுத்திருந்தான்.. மாலினி அதிர்ந்து வாய் பொத்தி அழுதாள்..
"அத்தான்.. என் அத்தான்.." என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள..
"பாட்டாடி பாடி வைக்கிற.." என்று அவள் பின்னால் வந்த சசிரேகா கடுப்படித்தாள்..
"என்னைக் கொல்லாதே சசி.. என்னால்தானே இவருக்கு இந்த நிலைமை?"
"தெரிந்தால் சரி.." சசிரேகா அறைக்கதவை மூடிக் கொண்டு சென்றுவிட்டாள்..
மாலினிக்கு பிரபாகரன் இருந்த நிலைமையைப் பார்த்து மனம் தாளவில்லை. உடலெல்லாம் கட்டுக்கள் போடப்பட்டிருக்க.. கட்டுக்கள் இல்லாத ஒரே இடமான அவனது பாதங்களில் தலை வைத்து கதறியழ ஆரம்பித்தாள்..
"நான் பாவி அத்தான்.. உங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கி விட்டேன்.. நீர் அடித்து நீர் விலகுமா..? நீங்கள் அடித்தால் நான் விலகிப் போவதா..? காலமெல்லாம் உங்கள் காலடியில் கிடந்திருக்க வேண்டாமா..? நீங்கள் ஒரு சொல் சொன்னால் நான் என்ன குறைந்தா போய் விடுவேன்..? உங்களைத் தண்டித்துவிட்டேனே அத்தான்.. நீங்கள் அடிபட்டுக் கிடக்க.. நான் மட்டும் காயமில்லாமல் இருப்பதா..? எனக்கும் இந்த வலியும் வேதனையும் வரட்டும்... "
மாலினி சுற்றுமுற்றும் பார்த்தாள்.. நீண்ட கைப்பிடி யோடு இருந்த கத்தி கையில் பட.. அதை எடுத்துக் கையை வெட்டிக் கொள்ளப் போனாள்.. கட்டுப்போடப் பட்டிருந்த பிரபாகரனின் கரம்.. அவளது கரத்தை இறுக்கிப் பிடித்து கத்தியை விழச் செய்தது.. அவனது கை அவள் கையை சுண்டியிழுக்க.. அவள் அவனது மார்பில் விழுந்தாள். மறுகணம் அவனது இறுக்கிய அணைப்பில் கட்டுண்டாள். அவனது கரம் அவனை ஆக்டோபஸ் போல வளைக்க..
'அடிபட்டவனின் பிடியாக இது இல்லையே..' என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது..
"அத்தான்.." என்று அவள் நிமிர்ந்து பார்க்க..
"உன் அத்தான்தான்.." என்று ஹெல்மெட்டைக் கழற்றுவதைப் போலத் தலையைச் சுற்றிப் போடப் பட்டிருந்த கட்டுக்களை.. தொப்பி போல கழட்டி வைத்துச் சிரித்தான் பிரபாகரன்..
"உடம்பில் இருக்கும் கட்டுக்கள்..?" மாலினி திகைக்க..
"இதோ அதையும் கழட்டிவிட்டால் போச்சு.." இலகுவாகக் கூறியபடி.. சட்டையைக் கழற்றுவதைப் போல உடலைச் சுற்றியிருந்த கட்டுக்களில் இருந்து விடுபட்டு வெளியே வந்தான்...
"பார்த்துக்க.. உடம்பில் ஒரு கீறலும் இல்லை.." பிரபாகரன் மீண்டும் அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டான்..
"அடப்பாவி.. ஹிட்லர்கூடப் பொய் சொல்வாரா?"
"காதல்னு வந்துவிட்டால் எல்லோரும் பொய் சொல்வாங்க.."
"அதுக்காக இப்படியா..? என் உயிரே பறந்துருச்சு.."
"வேற என்னடி செய்யச் சொல்கிற.. நீதான் பிடி வாதத்துக்கு பிறந்து தொலைச்சிட்டாயே.. என்னைத் தேடி உன்னை வரவைக்கணும்னா எனக்கு வேறுவழி தெரியலை.."
"வந்தவளுக்கு திருப்பிப் போக வழி தெரியாதா..?"
"பொய்யாக நான் நடத்திய இந்த நாடகத்தை உண்மையாக நடத்திக் காட்ட எனக்குத் தெரியாதா.. நீ என்னை விட்டு விலகி ஓர் அடி எடுத்து வைத்தாலும்.. என் உயிர் என் உடலில் தங்காது. அப்புறம். உன் இஷ்டம்.."
"ஐயோ.." மாலினி பதறி அவனது வாயைப் பொத்தினாள்.. அவனது வாயை மூடியிருந்த அவளது உள்ளங்கையில் அவன் முத்தம் பதித்தான்..
"நான் தோற்றுவிட்டேன்.." அவன் மார்பில் முகம் புதைத்தாள் மாலினி..

"ஊஹீம்.. என்னை ஜெயித்துவிட்டாய்.." அவளது இதழில் இதழ் பதித்தான் பிரபாகரன்..


Name

அகல்விளக்கு,20,அடுத்தடுத்து,1,அழகான ராட்சசியே,3,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,100,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,283,என்னவென்று நான் சொல்ல ?,117,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,24,நிலாக்கால நினைவுகள்,28,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,108,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,40,மகராசி,1,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: என்னவென்று நான் சொல்ல ?-105
என்னவென்று நான் சொல்ல ?-105
https://1.bp.blogspot.com/-3fUYBwqHCd4/XQOoM_4eImI/AAAAAAAAAoQ/up3eurNZ44MIjS8H2kvpDjJYdgfvpJ9AwCPcBGAYYCw/s320/yennavendru%2Bnan%2Bsolla%2B1.jpg
https://1.bp.blogspot.com/-3fUYBwqHCd4/XQOoM_4eImI/AAAAAAAAAoQ/up3eurNZ44MIjS8H2kvpDjJYdgfvpJ9AwCPcBGAYYCw/s72-c/yennavendru%2Bnan%2Bsolla%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/10/ennavenrunaansolla105.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/10/ennavenrunaansolla105.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy