சொல்லாமலே பூப்பூத்ததே -32

32 "ஏங்க.. காய்கறிக் கடைக்குப் போன் போட்டிங்களா.. ?" சாவித்திரி... வாஸந்திக்கு தலை வாரிப் பின்னலிட்டபடி கோபிநாதனிடம் கேட்ட...

32

"ஏங்க.. காய்கறிக் கடைக்குப் போன் போட்டிங்களா..?"
சாவித்திரி... வாஸந்திக்கு தலை வாரிப் பின்னலிட்டபடி கோபிநாதனிடம் கேட்டாள்.. அவர் அவசரமாக செல்போனை கையில் எடுத்தார்.. வாஸந்தி தலையை அசைத்தாள்.. அவள் தலையில் ஒரு குட்டு வைத்தாள் சாவித்திரி..
"அசையாதேடி.." மகளை அதட்டினாள்..
"தலை முடிய இறுக்கிப் பிடிக்காதேம்மா.. வலிக்குது.." வாஸந்தி சிணுங்கினாள்..
"ஏழுகழுதை வயசாகுது.. இன்னும் தானா எதையும் செய்யத் தெரியலை.." மகளைத் திட்டியபடி கோபிநாதனை பார்த்தாள் சாவித்திரி...
அந்தப் பார்வையில் அந்தத் திட்டு மகளுக்கானதா.. இல்லை.. அவருக்கானதா என்ற சந்தேகத்தில் ஆழ்ந்தார் கோபிநாதன்.. அந்த சந்தேகத்திற்கே இடம் வைக்காமல்..
"கல்யாணமாகிப் போனா என்னடி செய்வ..? அங்கே எல்லாத்தையும் நினைப்புக்கூட்டி நீதான் எடுத்துச் செய்தாகனும்.. தானாச் செய்யற ஆம்பளைகள நீ கனவில கூடப் பார்க்க முடியாது.. தலைமுடிய பின்னல் போடவே தெரியலைனா.. நீயெல்லாம் என்னத்த குப்பை கொட்டப் போறியோ.. உனக்கெல்லாம் எனக்கு வாய்ச்ச வாழ்க்க மாதிரி வாய்ச்சுட்டா அம்புட்டுத்தான்.." என்று சொல்லி அனைத்து திட்டுக்களும் அவருக்கானதே என்பதை உறுதிபடுத்தினாள் சாவித்திரி..
சாவித்திரிக்கு வாய்த்த வாழ்க்கை எத்தகையது.. அதனால் அவளுக்கு என்னகுறைவந்து விட்டது என்பதை கேட்டறிய ஆவல் கொண்டார் கோபிநாதன்.. அவ்வாறு கேட்டு விட்டால் அவள் பட்டியலிடும் குறைகளை அவரால் அந்த ஜென்மத்துக்குள் கேட்டு விட முடியுமா.. என்று அவரது அறிவு அவரைக் கேட்டு வைத்ததால் அதைக் கண்டு கொள்ளாமல் காய்கறிக் கடைக்காரரிடம் போனில் பேச ஆரம்பித்தார்..
"சமையல்காரன வரச்சொல்லியிருந்தீங்களே.. என்ன  இன்னும் காணோம்.." உமாபதியிடம் மண்டகப்படியை ஆரம்பித்துவைத்தாள் பார்வதி..
"நான் எப்படி வரச்சொன்னேன்..?" என்று வாய்விட்டு தானாகத் தூண்டிலில் மாட்டித் தொலைத்தார் உமாபதி..
"நினைச்சேன்.. நீங்க இப்படித்தான் செஞ்சு வைப்பீங்கன்னு.. ஒரு வீடான வீட்டில.. விசேசம் நடக்கப் போகுதே.. பெரிய மனுசனாய் லட்சணமாய் சமையலுக்கு ஆள் சொல்லி விடனும்கிற அறிவு இருக்க வேண்டாம்..?" பார்வதி பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்..
"சொன்னாத்தானடி செய்ய முடியும்..?" பரிதாபமாக கேட்டு வைத்தார் உமாபதி..
"ஓ.. ஐயா சொன்னத்தான் எதையும் செய்வீங்களோ.. சொல்லாம எதையும் செய்ய மாட்டிங்களோ...
அன்னைக்கு அரசகுளத்துக்கு வண்டியைக் கட்டிக்கிட்டுப் போணிங்களே.. அதை யார் சொல்லி செஞ்சீங்க..?" பார்வதி கேட்ட கேள்விக்கு திருதிருத்தார் உமாபதி..
"அத மட்டும் தானாச் செஞ்சவருக்கு.. இத தானாச் செய்யத் தெரியாதா..?" பார்வதி சரியான இடத்தை பிடித்து விட்டாள்..
உமாபதி போனை காதுக்கு கொடுத்தபடி வாசலுக்கு பாய்ந்து அங்கே ஏற்கனெவே காய்கறிக்காரருடன் போனில் பேசிக் கொண்டிருந்த மகனிடம் அடைக்கலமானார்..
நடந்து கொண்டிருந்த களேபரங்களைப் பார்த்தபடி மாடியிறங்கி வந்த நிவேதிதாவின் மனம் கனத்தது.. அந்த உயிர்ப்பு ததும்பும் வீட்டை விட்டு அவள் கிளம்பிப் போக வேண்டும்.. வாத்சல்யத்துடன் அவளைப் பார்த்துக் புன்னகைக்கும் பார்வதியையும்.. சாவித்திரியையும் அவள் பிரிந்தாக வேண்டும்.. அண்ணி.. அண்ணியென்று சுற்றிச் சுற்றி வரும் வாஸந்தியிடமிருந்து விலகி அவள் பெங்களூருக்குச் சென்றாக வேண்டும்..
'எதைச் சொன்னால் இவன் எதைச் செய்கிறான்.. பார்..' அவள் மனம் பொருமியது..
வாசலில் யாரையோ உமாபதி வரவேற்கும் சப்தத்தைக் கேட்ட சாவித்திரி.. மகளின் பின்னலை பின்னி முடிந்தவளாக அவளை
"போடி.." என்று தள்ளிவிட்டு..
"யாரு அத்தை..?" என்று பார்வதியிடம் கேட்டாள்..
"தெரியலையே.. உன் மாமனாருக்கு பேச ஆள் வேணும்னு தெருவில போறவரை வாங்க.. வாங்கங்கிறாரோ.." பார்வதி உமாபதியின் மீதான அவளது உயர்ந்த அபிப்ராயத்தைத் தெரியப்படுத்தினாள்..
"சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது அத்தை.." என்று மறுத்த சாவித்திரி..
"மத்த நாளில வேணும்னா அப்படிச் செய்வாராயிருக்கும்.. நாளைக்கு விசேசத்த தல மேல வைத்துக்கிட்டு இன்னைக்குப் போயி வம்பு மடத்தைக் கூட்டுவாரா என்ன..?" என்று கேட்டு வைத்ததில் நிவேதிதாவுக்கு சிரிப்பு வந்தது..
"வாங்க.. வாங்க.." என்றபடி வந்த உமாபதியைத் தொடர்ந்து வந்தவர்களைக் கண்டதும்..
"மாமா.. அத்தை.. அத்தான்.." என்று பரபரப்புடன் வரவேற்றாள் நிவேதிதா..
"அத்தை.. இவங்க என் தாய்மாமா.." நிவேதிதா அறிமுகப்படுத்தியதும்..
"ஓ.. மாளவிகாவோட அண்ணன் குடும்பமா..?" என்று கண்டு கொண்ட சாவித்திரி.. பார்வதியைப் பார்த்து..
"நான் சொன்னேனில்ல.." என்றாள்..
"என்ன சொன்னீங்க..?" நிவேதிதாவின் அத்தை கேட்டதும்..
"மொட்டை மாடியில காக்கா கத்துது அத்தை.. இன்னைக்கு விருந்தாளி வரப் போறாங்கன்னு என் மருமக சொன்னா.. இல்லே சாவித்திரி.." என்று சமாளித்தாள் பார்வதி..
"ஓ.." தலையாட்டி வைத்தாள் நிவேதிதாவின் அத்தை..
மில்லுக்குக் கிளம்பும் அவசரத்துடன் வந்த வாசுதேவனிடம் வந்திருந்த விருந்தாளிகளை அறிமுகப் படுத்தி வைத்தாள் நிவேதிதா..
"இவர்தான் உன் அத்தானா..?"
கோவர்த்தனனை முறைத்தபடி ஒரு தினுசாக வினவினான் வாசுதேவன்.. அவனது இடக்கு நிவேதிதாவுக்கு மட்டுமே புரிந்தது.. கோவர்த்தனன் வெள்ளையாகச் சிரித்தபடி வாசுதேவனுக்கு கை நீட்டினான்.. பதிலுக்கு வேண்டா வெறுப்பாக கை கொடுத்த வாசுதேவனுக்கு கடுப்பாக இருந்தது..
"நிவேதிதா வளைகாப்புக்கு முதல்நாளே நீங்க வந்திருக்கிறதில எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.." உபசாரமாக சொன்னாள் சாவித்திரி..
"இல்லைங்க.. நாங்க எங்க மகன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்தோம்.. நாளைக்கு வளைகாப்பு முடிஞ்சதும் நிவேதிதா பெங்களூருக்கு கிளம்பிப் போயிருவா.. அவ இங்கே இருக்கிறப்பவே அவளுக்கும் சேர்த்து நாங்க பத்திரிக்கை வைக்கனுமில்ல.. என்னதான் இருந்தாலும் இதுதான அவ வீடு..?" என்று கேட்டாள் நிவேதிதாவின் அத்தை..
வாசுதேவனின் பார்வையும் நிவேதிதாவின் பார்வையும் சந்தித்து விலகின...
"ஆமாமாம்.." பெருமிதத்துடன் ஆமோதித்தாள் சாவித்திரி...
"நாளைக்கு விசேச நாளில வந்து பத்திரிக்கை வைச்சா.. வந்த இடத்தில நாங்க பத்திரிக்கை வைச்சோம்கிற பேரு வந்திரும்.. இதுக்குன்னு தனியா வந்து நாங்க பத்திரிக்கை வைக்கிறதுதான் முறை.." வினயமாகப் பேசினாள் கோவர்த்தனனைப் பெற்றவள்..
"அதுவும் சரிதான்.." ஆமோதித்தாள் பார்வதி..
வெள்ளித்தாம்பாலத்தட்டில் வெற்றிலைபாக்கு.. பழம்.. இவற்றுடன் பணக்கட்டையும் சேர்த்து வைத்து அதன் மேல் பத்திரிக்கையை வைத்து தான் நிவேதிதாவிற்கு தாய்மாமன் என்பதைக் காட்டினார் மாளவிகாவின் அண்ணன்...
முறையான அந்த மரியாதையில் உமாபதியும்.. கோபிநாதனும் திருப்தி பட்டுப் போனார்கள்..
"வளமை தெரிஞ்சவங்க.." உமாபதியின் முணுமுணுப்பை லேசான தலையசைவின் மூலம் அங்கிகரித்தார் கோபிநாதன்..
வாசுதேவன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு எழுந்து கொண்டான்.. மில்லுக்கு நேரமாகிவிட்டதாகச் சொல்லி விட்டுக் கிளம்பியவன் நிவேதிதாவை ஒர் பார்வை பார்க்க... அந்தப் பார்வையின் அழைப்பில் அவனைப் பின் தொடர்ந்தாள் நிவேதிதா..
"என்ன..?" எங்கோ பார்த்தபடி அவள் கேட்க..
"நாளைக்கு நீ கிளம்பனுமில்ல.. உனக்குத் தேவையான மெடிசின்.. மத்த சாமான்கள்ன்னு என்னென்ன வேனும்னு சொன்னேன்னா நான் வர்றப் வாங்கிட்டு வந்திடுவேன்.." என்றான் வாசுதேவன்..
"எதுவும் தேவையில்லை.. எல்லாத்தையும் டாடி பார்த்துக்குவார்.." மறுத்தாள் நிவேதிதா..
"பிறக்கப் போகிறது என் குழந்தை.. அதுக்கு நான் தான் செலவு பண்ணனும்.." வாசுதேவன் சீற்றத்துடன் சொன்னான்..
"ஆனா.. நான் எங்க டாடியோட குழந்தை.. என்னை அவர் பார்த்துக்குவார்.." நிவேதிதா பதிலுக்கு சீறினாள்..
"அது கல்யாணத்துக்கு முந்தின சொந்தம்டி.. இப்ப நீ எனக்கு பொண்டாட்டி.." வாசுதேவனின் கண்கள் சிவந்தன...
"அதைக் கடமையிலிருந்து கழட்டி விட்டிருக்கிறதா சொல்கிறவர் சொல்லக் கூடாது.." நிவேதிதாவும் சொல்லி விட்டாள்...
வாசுதேவனின் கண்கள் மின்னின.. நிவேதிதா நாக்கைக் கடித்துக் கொண்டாள்.. வாயை விட்டு விட்டோமே என்று தனக்குத்தானே மானசீகமாக குட்டிக் கொண்டாள்..
அவன் எதையோ சொல்ல வாயெடுத்தான்.. அப்போது அங்கே வேகமாக வந்த கோவர்த்தனம்..
"நல்ல வேளையா நீங்க இன்னும் கிளம்பலை.." என்றான்..
வாசுதேவனின் முகம் சுருங்கியது.. லேசான கடுமையுடன்...
"என்ன விசயம்..?" என்று கேட்டான்..
அதை இப்படியா கேட்பது என்று மனம் புழுங்கினாள் நிவேதிதா.. இதை அவனிடம் யார் சொல்வது..?
"நன்றி சொல்ல வந்தேங்க.. நிவேதிதா எனக்கென்னன்னு போகாம என்கூட சண்டைக்கு நின்னதினால மட்டும்தான் எனக்குள்ள துணிச்சல் வந்தது.. இல்லேண்ணா என் காதல் என்னவாகியிருக்குமோ.. நீங்க செய்கிறது சரியில்லைன்னு நிவேதிதா சண்டை போடவும் நானும் துணிஞ்சு என் அப்பாம்மா கிட்ட மல்லுக்கு நின்னுட்டேன்.. அம்மா விசப் பாட்டிலை எடுத்துச்சு.. வா.. நீயும் நானும் ஒன்னாக் குடிக்கலாம்ன்னதும் வழிக்கு வந்திருச்சு.." முகம் மலரச் சொன்னான் கோவர்த்தனன்..
"இதைச் சொல்ல உங்களுக்கு சங்கடம் வரலையா கோவர்த்தனன்.." கண்கள் இடுங்கக் கேட்டான் வாசுவேதன்..
"எதுக்கு சங்கடப்படனும்..?"
"உங்களை நம்பி ஒருத்தி காதலிச்சிருக்கா.. அந்தப் பெண்ணை கைவிடாம இருக்கிறது உங்க கடமை.. அதைச் செல்லி உங்க கடமையை நினைவு படுத்த வேறொருத்தி வரனுமா..? உங்க காதலியைக் கட்டிக்கிற கடமை உங்களுக்கில்லையா..? இதைச் சொல்ல உங்களுக்கு சங்கடம் வரனும் கோவர்த்தனன்.."
வாசுதேவனின் நேரடியான கேள்வியில் உண்மையிலேயே சங்கடப்பட்டுப் போனான் கோவர்த்தனன்..
"ஒருவேளை நிவேதிதா உங்க விசயத்திலே தலையிடலைன்னா நீங்க சௌதாமினியைக் கல்யாணம் பண்ணிக்க உங்கவீட்டில் போராடியிருப்பீங்களா..?" என்ற வாசுதேவனின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை..
"நன்றி..."
பொதுவாக முணுமுணுத்து விட்டு வேகமாக அங்கிருந்து அகன்று விட்ட கோவர்த்தனின் முதுகைப் பார்த்து..
"மண்குதிரை." என்று கோபப்பட்டான் வாசுதேவன்..
"சௌதாமினியும் இதைத்தான் சொன்னா.." என்றாள் நிவேதிதா..
"உன் மாமா மகனைத் திட்டிட்டேன்னு உனக்கு கோபமாயிருக்கும்.." வாசுதேவன் நிவேதிதாவின் முகத்தை கூர்ந்து பார்த்தான்..
"இல்லை.. சந்தோசமாயிருக்கு.. நீங்க கேட்ட கேள்விகள் நியாயமானவை..."

நிவேதிதாவின் பதில் அவனை ஆச்சரியப் படுத்தியது.. ஏதோ ஒரு வகையில் அவளின் அந்தப் பதிலால் அவன் மனதில் இதம் பரவுவதை அவன் உணர்ந்தான்.. இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.. இருவருமே அசையாமல் நின்றார்கள்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: சொல்லாமலே பூப்பூத்ததே -32
சொல்லாமலே பூப்பூத்ததே -32
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s320/sollamale%2Bpooputhathu.jpg
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s72-c/sollamale%2Bpooputhathu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/sollaamalepooppththathe32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/sollaamalepooppththathe32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy