சொல்லாமலே பூப்பூத்ததே -31

31 "ஆமாம்ன்னுதான் வைத்துக்கங்களேன்..." ' வைத்து ' என்ற சொல்லில் நிவேதிதா கொடுத்த அழுத்தத்தில் வாசுதேவனின் விழிகளில...

31

"ஆமாம்ன்னுதான் வைத்துக்கங்களேன்..."
'வைத்து' என்ற சொல்லில் நிவேதிதா கொடுத்த அழுத்தத்தில் வாசுதேவனின் விழிகளில் தீப்பொறி பறந்தது.. அவன் கண்கள் இடுங்கின...
"ஓ.. நான் தாலி கட்டின என் அருமைப் பெண்டாட்டி என் விருப்பங்களப் பத்தி இப்ப பிட்டுப் பிட்டு வைக்கப் போகிறா..."
"செய்துட்டாப் போச்சு.. நீங்கள்ளாம் ஆண்குலம்.. உங்க விருப்பப்படி சிறகடிக்கிற உரிமை உங்களுக்கு மட்டும்தான் இருக்கு.. வீட்டுக்குள்ளே பெண்டாட்டியை பூட்டி வைச்சிட்டு நீங்க உலகம் சுற்றும் வாலிபனா சுற்றலாம்..."
"அட.. இது கூட நல்லாயிருக்கே.. அப்புறம்..?"
"ஆத்தங்கரையும்.. தோப்பு வீடும் உங்களுக்காத் தானே இருக்கு.."
"தோப்பு வீடு..? அங்கே யாரைச் சந்திப்பேன்னு நினைக்கிற..?"
"அது உங்க மனதுக்குத் தெரியும்..."
"உன் மனதுக்கு என்னடி தெரியும்..?"
அவன் புயலை உள்ளடக்கிய அமைதியுடன் கேட்டான்.. அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அவள் முகத்தைப் பற்றித் தன் பக்கமாக திருப்பி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான் வாசுதேவன்.. துளைக்கும் அவன் பார்வை அவள் மனதை படிக்க முயன்றது..
"சொல்லுடி.. உன் மனதில் என்ன ஓடுது..?"
"எதுவும் ஓடலை.." நிவேதிதா திமிற முயன்றாள்..
"அந்த வர்ணாகூட நான் தோப்பு வீட்டில் கொஞ்சிக் குழாவறேன்னுதானே என்மேல பழி போட்ட..?"
"அது பழியில்ல.. நிச்சயமான.. நடந்த உண்மை..."
"எந்த உண்மையைக் கண்டுட்ட.. ச்சே.. புருசன் மேல இருக்கிற கோபத்தில அடுத்த வீட்டுப் பெண்மேல பழியைப் போடுவியா..?"
"நான் பழிபோடலை.. அது என் குணமுமில்லை.. அவளைத்தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறிங்கன்னு உங்க வீட்டில நினைத்துக்கிட்டு இருந்தாங்கங்கிறது பொய்யா..?"
"இல்லை..." அவன் ஒப்புக் கொண்டான்.. தொடர்ந்து
"அதுக்கு நான் பிணையில்லை.." என்றான்..
"அந்தப் பெண் வர்ணா - காலேஜில சேருகிறதுக்கு என் உதவி வேண்டும்ன்னு கேட்டு என்னைப் பார்க்க மில்லுக்கு வந்திருந்தா.. நானும் எனக்குத் தெரிந்த காலேஜில உறவுக்காரப் பெண்ணுன்னு சொல்லி சேர்த்து விட்டேன்.. அதைத்தவிர அவளை நான் வேற எங்கேயும் சந்திச்சுப் பேசினதில்லை.. அவளுக்கும் எனக்குமான சம்பந்தம் அவ்வளவேதான்.."
"ஏன்..? அவளைக் காலேஜில் சேர்த்துவிட அவள் வீட்டில் யாரும் இல்லையா..?"
"யார் இருக்கிறாங்க..? அவளோட அப்பா உல்லாசப் பேர்வழி.. இருக்கிற சொத்தை ஜல்சா வாழ்க்கையிலே கரைச்சுக்கிட்டு இருக்கார்.. எப்ப எந்த ஊரில் சுத்துவாருன்னு யாருக்கும் தெரியாது.. அவளோட அம்மா வீடு வீடாப் போய்.. பொய்.. பொய்யா கதை பேசும்.. வேற ஒன்னும் தெரியாது.. அந்தப் பரிதாபத்திலதான் உதவி செய்தேன்.."
"ஆனா.. உங்க சொர்ணாத்தையே வர்ணாவும்.. நீங்களும் அடிக்கடி தோப்பில சந்திச்சுக்கிறதா உங்க வீடு தேடி வந்து சொல்லியிருக்காங்களாமே.. உங்க வீட்டில் இருக்கிறவங்க அதனாலதான் நீங்க வர்ணாவைத்தான் மேரேஜ் பண்ணிக்குவீங்கன்னு நினைச்சாங்களாமே..."
"சொர்ணாத்தை அதை மட்டும் சொல்லலை.. வர்ணாவை படிக்க வைக்கிறதே நான்தான்னு ஊர் பூராவும் சொல்லிக்கிட்டு அலையுது.. அதுக்காக வர்ணாவே எனக்கு போன் பண்ணி மன்னிப்புக் கேட்டிருக்கா.."
"ஓ..."
நிவேதிதா உச்சரித்த அந்த ஒற்றை எழுத்தில் ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தன...
"எதுக்காக இப்படியொரு ''வைப் போடறேன்னு தெரியுது.. ஒன்னை மனசில வைச்சுக்கடி.. நான் ஒன்னையே நினைச்சு அதிலேயே வாழ்கிற ரகம்.. வர்ணாவைக் காதலிச்சிருந்தா அவளைத்தான் கட்டியிருப்பேன்.. பழி தீர்க்கன்னு உன் கழுத்தில் தாலி கட்டியிருக்க மாட்டேன்.. நான் மட்டுமில்ல.. என் அப்பா.. தாத்தான்னு எங்க குடும்பத்து ஆம்பளைக.. பெண்டாட்டிக்கு மட்டும் புருசனா இருக்கிறவங்கடி.. என் தாத்தாவ அரச குளத்துக்கு வண்டி கட்டிக்கிட்டுப் போனார்ன்னு ஒட்டு மொத்தக் குடும்படும் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு கிண்டலடிப்போம்.. ஆனா.. அதைச் சொல்கிற பாட்டிக்கே தாத்தா தப்பான எண்ணத்தோட வண்டியக் கட்டிக்கிட்டுப் போகலைங்கிற உண்மை தெரியும்.. அதைச் சொல்லிக் கிண்டல் பண்ணும் போது எங்க தாத்தா முகத்தில வழிகிற அசடை ரசிக்கிறதுக்காகவே நாங்க வம்பிழுப்போம்.. மத்தபடி.. நாங்க மனசு சுத்த மானவங்க.. என் தோப்பு வீட்டில என் குடும்பத்தைத் தவிர வேற யாரும் காலடி வைத்ததில்ல..."
நீளமாகப் பேசியவன் அவள் முகத்தக்கு நேரே குனிந்து..
"அந்தத் தோப்பு வீட்டின் மாடி ரூமில உன்கூடக் கொஞ்சிக் குழாவினதப் போல வேற யார் கூடவும் நான் கொஞ்சிக் குழாவினதில்ல.." என்று மெதுவாக ஆனால் அழுத்தமான குரலில் சொன்னான்...
நிவேதிதாவின் முகம் சிவந்து விட்டது.. நீண்ட நாள்களுக்குப் பின்னால் சிவந்த அவளின் முகத்தை பார்த்தபடியே சில வினாடிகள் வரை அவன் அசையாமல் நின்றான்.. பின்.. ஒரு பெருமூச்சுடன் விலகிப் படுத்துத் தூங்கி விட்டான்..
நிச்சிந்தையாய் தூங்கியவன் அவளுக்குக் கொடுத்து விட்ட தடையற்ற சுதந்திரத்தில் நிவேதிதாவின் மனம் வலித்தது.. கட்டிலின் பெரும் பகுதியை அவளுக்கு விட்டு விட்டு.. ஓரமாக ஒதுங்கிப் படுத்திருந்தவனின் முதுகைப் பார்த்தபடி.. அவளும் படுத்தாள்.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது..
அன்று நிவேதிதா தூங்குவதற்கு நெடு நேரமானது..
அதன் பின்பு.. வாசுதேவன் அதிகமாக அவளிடம் பேசுவதில்லை.. வீட்டிலும் தூங்குவதில்லை.. புதிதாக ஜவுளிக்கடையைத் திறக்கப் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டவன் அதைக் காரணம் காட்டி வெளியூர் பயணங்களை அடிக்கடி மேற்கொண்டான்.. பயணங்கள் இல்லாத சமயங்களில் மற்ற வேலைகளே கதியென்று இருந்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்புவான்.. அவன் வரும் வரைக்கும் நிவேதிதா காத்திருந்து உணவு பரிமாறுவாள்.. அதை உணர்வுகள் துடைத்த முகத்துடன் பார்த்தபடி சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்லாமல் போய் விடுவான்..
"பாவம்.. புள்ளைத்தாய்ச்சிப் பொண்ணுடா.. உனக்காக கண் விழிச்சுக் காத்திருக்கா.. அவ உடம்புக்கு என்னவாகும்..?"
சாவித்திரியும்.. பார்வதியும் அவனை கடிந்து கொண்ட ஒர் தினத்தின் இரவில் அவன் அவளிடம் சொன்னான்..
"எனக்காக நீ காத்திருக்க வேணாம்..."
அதற்கான உடனடியான பதிலை அவளும் சொல்லி விட்டாள்..
"நான் உங்களுக்காக காத்திருக்கலை.. உங்க வீட்டுக்காக காத்திருக்கேன்.."
"புரியலை.."
"இந்த வீட்டைப் பொறுத்தவரை... நான் உங்க வொய்ஃப்... உங்களுக்காக காத்திருந்து சாப்பாடு போட வேண்டியது என்னோட கடமை அதை நான் செய்யலைன்னா உங்க குடும்பத்தில சந்தேகப் பட்டிருவாங்க..."
அவன் சட்டென்று அவளை கூர்ந்து பார்த்தான்.. அந்தப் பார்வையில் இருந்து அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள் நிவேதிதா..
மறுநாள் அவன் சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டான்.. ஹாலில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக குடும்பத்தில் இருந்த அனைவரும் குழுமியிருந்தார்கள்.. அன்று நடந்த பஞ்சாயத்தைப் பற்றி கோபிநாதனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தார் உமாபதி.. அந்தக் கதை கேட்கும் பழக்கம்தான் அவரை அரசகுளம் வரைக்கும் விரட்டிக் கொண்டு போனது என்று சாவித்திரியிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள் பார்வதி.. அது எதையும் கவனிக்காமல் டிவியின் திரையை ஊன்றிப் பார்த்தபடி அதைப்பற்றி நிவேதிதாவிடம் விமரிசனம் செய்து கொண்டிருந்தாள் வாஸந்தி...
"நாளான்னைக்கு.. நிவேதிதாவோட வீட்டில இருந்து கட்டிச்சோறு கொடுத்து அவளை அழைச்சுக்கிட்டுப் போக வர்றாங்க..."
பொதுப்படையாக அவன் அறிவித்ததில் அனைவரும் அவனை நிமிர்ந்து பார்த்தார்கள்.. பார்வதியும்.. சாவித்திரியும் முகம் மாறிப் போனார்கள்...
"என்னடா தம்பி இது.. இப்பத்தானே இவளுக்கு ஏழாம் மாசம் ஆரம்பிக்குது.. நேத்துத்தானடா ஆறாம் மாசக் கணக்கு முடிஞ்சுச்சு.. அதுக்குள்ள கட்டிச்சோறு குடுக்கனுமுன்னா எப்படிடா..? இப்பவே இவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பினா.. குழந்தை பிறந்து மூணாம் மாசம் தானே நாம கூப்பிட்டுக்கிட்டு வர முடியும்..? ஏழு மாசமா இவள விட்டுட்டு எப்படிடா இருக்கிறது..?" பார்வதி படபடத்தாள்..
'இவன் அதற்காகத்தானே இந்தத் திட்டம் போட்டிருக்கான்..' என்ற நினைவில் நிவேதிதா உதட்டைக் கடித்தாள்..
ஏழு மாதகால அளவு என்பது மிக நீண்ட காலம்.. அந்த நீண்ட காலப் பிரிவை அவன் அறிவிக்கிறான் என்றால் அதற்காக அவன் மனதளவில் தயாராகி விட்டான் என்றுதானே பொருளாகிறது..
அவள் மனதில் வெறுமை சூழ்ந்தது..
"நீயா ஒரு முடிவுக்கு வந்திருவியா..? வீட்டில இருக்கிற பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க மாட்டியா..?" சாவித்திரி சிடுசிடுத்தாள்..
"இப்பச் சொல்லு.. நானும் அப்பாவும் இதைச் சொன்னா.. குடும்பம் மொத்தமும் எங்ககிட்ட சண்டைக்கு வருவீங்க.. இப்ப அனுபவிங்க.."
அரிதாக மகனைக் குற்றம் சொல்ல வாய்ப்பு கிடைத்து விட்ட சந்தோசத்தில் அதை இருக்கமாக பற்றிக் கொண்டார் கோபிநாதன்..
"அதானே.." உமாபதி மகனுக்கு தாளம் போட்டார்..
"எங்கேம்மா போகப் போறா..? அவ பிறந்த வீட்டுக்குத்தான் போகப் போறா.. அவ அம்மாவும் அப்பாவும் அவளை நல்லாப் பார்த்துக்குவாங்க.. எனக்கு வேலை நிறைய இருக்கும்மா.. இவளப் பத்தின கவலையில வேலை ஓட மாட்டேங்குது.."
"அதுக்குன்னு இப்படியாடா செய்வ..? வீட்டில இத்தனை பேர் இருக்கோம்.. நாங்க இவளைப் பார்த்துக்க மாட்டோமா..? பெத்தவங்கதான் உசத்தியா..? மாமியா மருமகளைப் பார்த்துக்கவே மாட்டாளா..?" சாவித்திரிக்கு கண் கலங்கி விட்டது..
ஆனாலும் வாசுதேவன் அசைந்து கொடுக்கவில்லை.. அவன் முடிவெடுத்து விட்டால் மாற மாட்டான்.. என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருந்ததால்.. மறுநாளுக்கு அடுத்த நாளில் வரும் விஷேச தினத்தை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் இறங்கினார்கள்..
அன்று இரவு.. மாடியறைக்கு தூங்க வந்த நிவேதிதாவிடம்..
"இனி யாரும் உன் மேல என் பெண்டாட்டிங்கிற கடமையைத் தூக்கிப் போட மாட்டாங்க.. எனக்காக காத்திருந்து சாப்பாடு போட வேண்டிய வேலை உனக்கு இல்லை.." என்று சொன்னான் வாசுதேவன்..
"ஏழு மாதம்தானே.. அதுக்கப்புறம்..?"

அவனைக் காயப் படுத்தும் வேகத்தில் கேள்வி கேட்டு விட்டு படுத்துத் தூங்கி விட்டாள் நிவேதிதா.. வாசுதேவன் புருவச் சுளிப்புடன் விழித்திருந்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: சொல்லாமலே பூப்பூத்ததே -31
சொல்லாமலே பூப்பூத்ததே -31
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s320/sollamale%2Bpooputhathu.jpg
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s72-c/sollamale%2Bpooputhathu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/sollaamalepooppooththathe31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/sollaamalepooppooththathe31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy