சொல்லாமலே பூப்பூத்ததே -30

30 நிவேதாவிற்கு மூச்சுத் திணறியது.. அவளது தோள்மீது படிந்திருந்த அவனது கையின் ஸ்பரிசத்தில் அவளது மேனி மெலிதாக நடுங்கியது.. மிகவும் பிரயத்...

30
நிவேதாவிற்கு மூச்சுத் திணறியது.. அவளது தோள்மீது படிந்திருந்த அவனது கையின் ஸ்பரிசத்தில் அவளது மேனி மெலிதாக நடுங்கியது.. மிகவும் பிரயத்தனப் பட்டு அவனது கையை அவள் தள்ளி விட்டாள்.. அவள் தள்ளி விட்ட வேகத்தைவிட பன் மடங்கு அதிகமான வேகத்துடன் அவள் மீது படிந்து அவன் பக்கமாக முரட்டுத் தனமாக திருப்பியவன் சீறினான்..
"ஏன்..?"
அவன் அழுத்தமான கை பதிவிலும்.. முரட்டுத்-தனமாக திருப்பியதிலும் ஏற்பட்ட வேதனையில் முகம் சுளித்தவளைக் கண்டதும்தான் அவனுக்கு அவனுடைய தவறைப் புரிந்தது.. பழைய நினைவில் அவளிடம் முரட்டுத்தனத்தை பிரத்யேகித்து விட்டதில் உதட்டை மடித்துக் கடித்தவன்..
"ஸாரி.." என்றான்..
'இவனுக்கு ஸாரி சொல்லக் கூடத் தெரியுமா..?' நிவேதிதா பேசாமல் இருந்தாள்..
"எவ்வளவு சந்தோசமான விசயம் நடந்திருக்கு.. இதை என்கூடப் பகிர்ந்துக்கனும்னு கூட உனக்குத் தோணலை.. ஏண்டி..? பிறக்கப் போகிறது என் புள்ளைடி.."
அவனது வார்த்தைகள் சூட்டுக் கோலாய் மனதைச் சுட்டதில் கண்மூடி அந்த வேதனையை ஜீரணிக்க முயன்றாள் நிவேதிதா..
'இவன் இப்படியேதான் பேசுவானா..?'
"தாயறியாத சூள் இல்லைடி.. உன் மனசுக்கு பட்டவுடன் நீ முதல்ல என்கிட்டத்தான் விசயத்தைச் சொல்லியிருக்கனும்..?"
'சொல்கிறதைப் போலதான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோமா..?'
"ஆயிரம் கோபம் இருக்கட்டும்டி.. நான் ஆயிரம் சொல்லியிருக்கட்டும்.. இந்த விசயத்தை எப்படி டீ நீ மறைப்ப...?"
திரும்பத் திரும்ப அவளையே அவன் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதில் அவளுக்குச் சுள்ளென்று கோபம் வந்து விட்டது..
"சும்மா.. மறைச்சேன்.. மறைச்சேன்னு சொல்லக் கூடாது.. சொல்லலை.. அவ்வளவுதான்.. அதுக்கு மறைச்சதா அர்த்தமில்லை..."
வெகுநாள் கழித்து அவள் அவனுடன் நேரடியாகப் பேசிவிட்டதில் அவன் முகத்தில் மந்தஹாசம் பரவியது.. அவளது வெடுக்கென்ற அந்தப் பேச்சை ரசித்தவனின் மனதில் திருமணத்தைத் தொடர்ந்த ஆரம்ப நாள்கள் வந்து நின்றன.. நிவேதிதாவின் மீது படிந்திருந்த அவனது கை நகர்ந்து அவள் முகத்தைத் தடவ முயன்ற போது அவள் முகம் சுளித்துக் கண்மூடினாள்.. வாசுதேவனின் கை அப்படியே நின்று விலகி விட்டது...
"நிவேதா..?"
அவன் கேள்வியினை உணர்ந்தவள் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.. சாய்ந்து அமரும் போது தள்ளாடிய வளைத் தாங்கிப் பிடிக்க தன்னிச்சையாக அவன் கை கொடுத்த போது மறுத்து அவள் விலகி அமர்ந்ததில் அவன் பல்லைக் கடித்தான்...
"ஆனாலும் உனக்கு இத்தனை திமிர் இருக்கக் கூடாதுடி.. நானும் போனாப் போகுது.. என் பிள்ளைக்கு அம்மாவாகப் போகிறாளேன்னு பார்க்கிறேன்.. நீ உச்சாணிக் கொம்பில ஏறிக்கிட்டுப் போற.. இந்த வாசுதேவனை யாருன்னு நினைச்ச..?"
"அரைகுறையாய் கேட்கிற பேச்சை வைச்சுக்கிட்டு எப்பேற்பட்ட பழியையும் தூக்கிப் போட்டு விடுகிற ஆள்ன்னு நினைக்கிறேன்..." அழுத்தமாக பதில் சொன்னாள் நிவேதிதா..
"என்னது..? அரைகுறையான பேச்சா..?"
"யெஸ்.. அரைகுறையான பேச்சுத்தான்.. அன்னைக்கு அருவியிலயும் சரி.. அதுக்குப் பின்னாலே எங்க வீட்டிலயும் சரி.. நான் பேசின பேச்சுக்களோட அர்த்தமே வேற.. நீங்க மறைவா நின்னு கேட்டுக்கிட்ட அர்த்தம் வேற..."
"உங்க வீட்டில நீ பேசின பேச்சைக் கேட்ட எவனுக்கும் ரத்தம் கொதிக்கும்.."
"அதுக்கு விளக்கம் கேட்டிருக்கலாமே.. பழியைத் தூக்கி ஏன் போடனும்..?"
"விதண்டாவாதமா பேசாதே..."
"இது விதாண்டாவாதமில்ல.. என்பக்கமிருக்கும் நியாயத்தைச் சொல்கிற வாதம்.. ஏன்னு நான் சொல்லவா..?"
"சொல்லனும்னு ஆரம்பிச்சிட்டேயில்ல.. அதையும் ஏன் மிச்சம் வைக்கிற..? சொல்லித் தீத்திரு.."
"ஏன்னா.. உங்களுக்கு எப்பவுமே என்மேல நம்பிக்கையிருந்ததில்ல..."
நிவேதிதா புயலை உள்ளடக்கிய அமைதியுடன் சொன்னாள்.. அவள் சொன்னதில் இருந்த உண்மை அவனைச் சுட்டது..
"என்னை விட்டுருங்க.. நம்ம வாஸந்தியை எடுத்துக்கங்க.. அவமேல தெரியாத்தனமா ஒருத்தன் மோதறான்.. அவ தன்னிச்சையா.. அது யார்ன்னு கூடப் பார்க்காம 'த்ச்சு'ன்னு சொல்லிருவாளா இல்லையா..? அதைத்தானே நானும் செஞ்சேன்.. அதுக்கு மேலே இடித்தவங்க தெரியாம இடிச்சிருப்பாங்கங்கிற யோசனையில்லாம இதுக்குன்னே வர்றாங்கன்னு நான் சொன்னது தப்பு.. அதை நான் சொல்லியிருக்கக் கூடாது.. அந்தத் தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..?"
வாசுதேவனின் நெற்றி சுருங்கியது.. அவனது பார்வை சிந்தனையுடன் நிவேதிதா பேசிய போது வெளிப்பட்ட அவளின் முகபாவங்களையே கணித்தது.. அதில் தெரிந்த தார்மிகக் கோபத்தில் யோசனையானான்..
"நான் மோதினதுக்கு நீ பேசின பேச்சுக்கு நியாயம் சொல்லிட்ட.. கிராமமா.. சீச்சீன்னு சொன்னயே.. அதுக்கு என்ன சொல்லப் போற..? கூட்டுக் குடும்பமா.. உவ்வேன்னு சொன்னயே.. அதை எப்படி மாத்தப் போற..? விவசாயியா.. வேண்டாவே வேண்டாம்ன்னு சொன்னதுக்கு என்ன பதிலைச் சொல்லப் போற..?"
வாசுதேவன் அடுக்கிய குற்றச்சாட்டுக்களில் நிவேதிதாவின் மனம் வலித்தது.. இதற்கெல்லாம் விளக்கம் சொல்லித்தான் அவள் அவளை நிருபிக்க வேண்டுமா என்று துயரத்துடன் அவள் நினைத்தாள்...
அவள் விட்ட பெருமூச்சில் அவன் புருவங்கள் மேலேறின..
"என்ன..?" அதட்டினான்..
பதில் சொல்லாமல் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என்று அவளுக்குப் புரிந்தது..
"எந்த பதிலையும் சொல்லப் போறதில்ல.." அவள் கட்டிலை விட்டு இறங்க முயன்றாள்...
"இப்ப எதுக்காக அலட்டிக்கிற..?" அவன் முகம் சுளித்தான்..
"ம்ப்ச்.. நான் பேசினதில எது உண்மை.. எது பொய்யுன்னு என்னைச் சேர்ந்தவங்களுக்கும்.. கடவுளுக்கும் என் மனச்சாட்சிக்கும் தெரியும்.. உங்களிடம் நான்
எந்த விளக்கத்தைச் சொன்னாலும் அது பொய்யான விளக்கமாகத்தான் இருக்கும்.."
"அப்ப நான் உன்னைச் சேர்ந்தவன் இல்லேங்கறியா..?"
இப்படி அவன் மடக்கி கேள்வி கேட்டால் அவள் என்ன பதிலைச் சொல்லுவாள்.. சோர்வுடன் அவள் தலையை அசைத்தாள்..
"முடியலை.. என்னால உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியலை.. என் கழுத்தில் தாலியைக் கட்டிட்டதால மட்டும் நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டவரா ஆகிருவீங்களா..? என் குழந்தைக்கு அப்பாங்கிறதினால மட்டும் நீங்க என்னைச் சேர்ந்தவரா ஆகிருவீங்களா..?"
நிதானமாக அவள் கேட்ட கேள்வியில் அவன் கண்சிவந்தான்..
"என்னடி சொன்ன..?" ஏறக்குறைய கர்ஜித்தான்..
"இப்படிச் சொல்கிறவ எதுக்காகடி என்கூடக் கொஞ்சிக் குழாவி குடும்பம் நடத்தின..? இப்ப என் கையைத் தட்டி விடறவ.. அப்பவும் தட்டி விட்டுத் தள்ளிப் போயிருக்கலாமே..."
அவன் கேள்வியில் அவள் குன்றிப் போனாள்..
"செய்திருக்கனும்.. அதைச் செய்யாம போனது என் தப்புத்தான்.." குமுறினாள்..
"அந்தத் தப்பினால் வருத்தப்படறதைப் போல தெரியுதே.." அவன் ஊசிமுனைக் கேள்விகளால் அவளைக் குத்தினான்..
"ஆமாம்.. வருத்தப்படறேன்.." நிவேதிதா ஆவேசத்துடன் சொன்னாள்..
"நீ இப்படித்தான்னு நீங்க என்மேல அடுக்கடுக்கா குற்றங்களை அடுக்கின பின்னாலேயும் உங்க மேல மனசை சைச்சேனே.. அதை நினைத்து வருத்தப்படறேன்.."
"நிவேதா..."
"உங்க சொத்துக்காகவும்.. பணத்துக்காவும்.. விவசாயக் குடும்பத்தில பிறந்த உங்களுக்கு கழுத்தை நீட்டினதா என்மேல உயர்ந்த அபிப்ராயத்தைச் சொன்னீங்களே.. அதுக்கு மேலேயும் உங்ககூட குடும்பம் நடத்தத் துணிஞ்சேனே.. அதை நினைத்து வருத்தப் படறேன்..."
"ஏய்ய்ய்..."
"சீச்சீ கிராமம்ன்னு சொல்லிட்டு.. உங்க மாளிகை மாதிரியான வீட்டைப் பார்த்ததும் மயங்கிப் போய் உங்க கிட்டயும் மயங்கிப் போனதா சொன்னீங்களே.. அதுக்குப் பின்னாலேயும் உங்ககிட்ட நான் மயங்கி நின்னேனே.. அதை நினைத்து வருத்தப்படறேன்.."
"அடி.. ஏண்டி.. இப்படிப் பேசித் தொலைக்கிற..?"
"கூட்டுக்குடும்பம்ன்னா பிடிக்காம இருந்தவ.. உங்க வீட்டோட செல்வாக்கப் பார்த்துட்டு போலியா அவங்க கூடப் பேசிப் பழகறேன்னு சொன்னீங்களே.. அதைக் கேட்ட பின்னாலேயும்.. உங்க குடும்பத்தோட வாரிசை என் வயிற்றிலே சுமந்துக்கிட்டு இருக்கேனே.. அதை நினைத்து வருத்தப்படறேன்.."
"என்னது..?"
அவள் தலைமுடியை இறுக்கிப் பற்றி விட்டான் வாசுதேவன்.. வலியில் முகம் சுளித்தாலும்.. நிமிர்வாக முகம் திருப்பிக் கொண்டாள் நிவேதிதா..
"ச்ச்சீ..."
அருவெருப்புடன் அவளைத் தள்ளி விட்டான்.. அவள் தலையணையில் சரிந்தாள்.. வாசுதேவனின் கோபம் கட்டுக்கடங்காததாக இருந்தது.. நிவேதிதாவின் கோபமும்.. துயரமும் அதற்குக் குறையாததாக இருந்தது..
"தப்புப் பண்ணிட்டேண்டி.. உன்னைப் பழிதீர்க்கன்னு தாலி கட்டினவன் உன்னைத் தொட்டிருக்கக் கூடாது.. என் மனசில ஏதோ ஒரு மூலையில உன்மேல எந்தத் தப்பும் இல்லையோன்னு ஒரு பட்ஷி சொல்லிக்கிட்டே இருந்துச்சுடி.. அதனால உன்னைத் தொட்டுட்டேன்.. என்னைப் பார்த்தாவுடனே உன் கண்ணில பல்ப் எரிஞ்சுச்சே.. அதனால உன்னைத் தொட்டுட்டேன்.. என்கிட்ட மயங்கி நின்னயே.. அதனால உன்னைத் தொட்டுட்டேன்.. என்னைச் சுத்திச்சுத்தி வந்தியே.. அதனால உன்னைத் தொட்டுட்டேன்.. நான் தொட்டவுடன் உருகினியே.. அதனாலதாண்டி உன்னைத் தொட்டுத் தொலைச்சிட்டேன்..."
"இங்கேயும் அப்படித்தான்.. என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க.. ஒருநாள் என்னைச் சரியாப் புரிஞ்சுக்கிற காலம் வரும்ன்னு நானும் நினைத்துத் தொலைச்சிட்டேன்.."
"இதுவரை புரியாததையும் சேர்த்து இப்ப புரிய வைச்சிட்டியேடி..."
"வெல்.. எனக்கும் அப்படித்தான்..."
"இனி உன் இஷ்டப்படி நீ இருந்துக்க.."
"உங்க விருப்பப்படி நீங்களும் இருந்துக்கலாம்.. அதாவது.. என் இஷ்டம்ங்கிறது இந்த வீட்டின் எல்லைக் குள்ளே உங்ககிட்ட இருந்து தள்ளி நிக்கிற சுதந்திரம் வரைக்கும்தான் வரையறுக்கப் பட்டது.. உங்க விருப்பம்ங்கிறது அப்படியில்லை..."
நிவேதிதாவின் பூடகப் பேச்சில் அவன் முகம் சுருங்கினான்..
"வேற எப்படிங்கிறது உனக்குத் தெரிஞ்சிருக்கும் போல இருக்கே..."
அவனது நெருப்புப் பார்வை அவளைத் துளைப்பதைப் போலப் பார்த்ததை அவள் பொருட்படுத்த வில்லை.. அவளை அவன் தன் கண்ணோட்டத்தில் சித்தரித்திருந்த விதத்தில் அவள் கொதித்துப் போயிருந்தாள்..

கறந்த பாலின் தூய்மையைக் கொண்டவளைத் தண்ணீரின் தன்மையுடன் ஒப்பிட்டால் கூட அவள் பொறுத்துப் போகலாம்.. தண்ணீரை விட உயர்ந்தது எது..? கங்கை என்பவள் தூய்மையின் வடிவம் ஆனவளாயிற்றே.. கள்ளுடன் ஒப்பிட்டால் எப்படிப் பொறுத்துக் கொள்வது..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: சொல்லாமலே பூப்பூத்ததே -30
சொல்லாமலே பூப்பூத்ததே -30
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s320/sollamale%2Bpooputhathu.jpg
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s72-c/sollamale%2Bpooputhathu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/sollaamalepooppooththathe30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/sollaamalepooppooththathe30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy