பொதிகையிலே பூத்தவளே -36

36 லேப்டாப்பில் அன்று வந்திருந்த மெயில்களைப் படித்துக் கொண்டிருந்தாள் மீனா.. அவற்றுக்கான பதில்களை மனதுக்குள் யோசித்துக் கோர்வை படுத்தி...

36

லேப்டாப்பில் அன்று வந்திருந்த மெயில்களைப் படித்துக் கொண்டிருந்தாள் மீனா.. அவற்றுக்கான பதில்களை மனதுக்குள் யோசித்துக் கோர்வை படுத்திக் கொண்டிருநதபோது வெளியே தடதடவென சப்தம் கேட்டது.. அலுவலகத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் எழுந்த சப்தத்தில் கவனம் கலைந்த மீனாவிற்கு  எரிச்சலாக இருந்தது..
அது மலைபிரதேசம் என்பதினால் அவள் அலுவலக அறையின் ஜன்னல்களை விரியத் திறந்து வைத்து ஏஸியை அணைத்து விடுவாள்.. இயற்கையின் குளிர், ஏஸியின் குளிரைவிட அதி அற்புதமாக இருக்கும்.. அதை அனுபவிக்கும் சுகத்திற்காகத்தானே மக்கள் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள்..? மீனாவுக்குத் தானாக அந்த சுகம் கிடைத்திருக்கிறது.. அதை கதவுகளை மூடித் தடுத்து நிறுத்த வேண்டுமா என்ன..?
விஷ்வா இப்படிச் செய்ய மாட்டான்.. அவனது அலுவலக அறையின் ஜன்னல் கதவுகள் மூடியே இருக்கும்.. ஏனென்ற மீனாவின் கேள்விக்கு..
"சப்தம் கேட்கக் கூடாது.. தூசி வரக் கூடாது.." என்று சொல்வான்..
"இங்கே என்ன சத்தம் கேட்டுவிடப் போகுது..? பறவைகளின் சத்தமும் , மரம் செடி கொடிகள் அசையும் சத்தமும்தான் கேக்குது.. அது இசை போல மனதை தாலாட்டுது.. தூசியில்லாத சுத்தமான காத்தைச் சுவாசிக்காம ஜன்னலை அடைச்சுக்கிட்டு உட்காரணுமா..? காரும், பஸ்ஸீமா, வண்டிகளோட புகையும், இரைச்சலுமா இருக்கிற டவுனுப்பக்கம் நீங்க ஜன்னலை இறுக மூடிக்கறது சரி.. கானாடுகிரியில் குளிர் அதிகமாகிறப்ப மட்டும் ஜன்னலை மூடனும்.." மீனா அனுபவித்துப் பேசியதை இள நகையுடன் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா கேட்டான்..
"கானாடுகிரியில் பிறந்து வளர்ந்த நான்கூட என் ஊரை இப்படி ரசித்ததில்லை.. நீ ரசிக்கிற..? உனக்கு கானாடுகிரியை இந்த அளவுக்குப் பிடித்திருக்கா..?"
அன்று ஆமாம் என்ற பாவனையில் மீனா இமை மூடித் திறந்தாள்.. அதில் ஈர்க்கப்பட்ட விஷ்வா அவளை விழுங்கி விடுவதைப் போல பார்த்த நினைவு வர மீனாவுக்கு நினைவுகள் சுகமான சுமைகளாக அழுத்தின..
விஷ்வா வெளிநாட்டுக்குப் போய் இரண்டு வாரங்களாகி விட்டன.. தினமும் அவளுடன் போனில் பேசுகிறான்தான்.. அது அவளுக்குப் போதவில்லை.. பக்கத்தில் அவனில்லையே..
'என்ன சத்தம்..?' என்று செண்பகவள்ளியிடம் கேட்க இண்டர்காமை கையில் எடுத்தாள்..
அதற்குள் அவளது அறைக் கதவைப் புயலென திறந்து கொண்டு உள்ளே வந்தான் வினோத்.. ருத்ர அவதாரத்தில் இருந்தான்.. அதைக் கண்டு மீனா பயப்படவில்லை.. மாறாக யாரைக் கேட்டு இவன் அறைக்குள் வந்தான் என்ற கோபம்தான் வந்தது..
கையில் எடுத்து விட்ட இண்டர்காமில் சப்தம் போட்டாள்..
"செண்பகவள்ளி.. உள்ளே வாங்க.."
அவளது சப்தத்திற்கு ஆடி அசைந்து உள்ளே வந்து பதுமை போல நின்ற செண்பகவள்ளி, அவளை அழைத்த மீனாவிடம் என்னவென்று கேட்காமல் வினோத்துக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவனிடம் என்னவென்று கேட்டாள்..
"குட்மார்னிங் சார்.. என்ன சார்.. காலையிலேயே இவ்வளவு கோபமா வந்திருக்கீங்க..? எனிதிங் ராங்..?"
மீனா பல்லைக் கடித்தாள்.. செண்பகவள்ளியின் திமிர் அவளை பாதித்தது.. வினோத் செண்பகவள்ளியை விடத் திமிர் பிடித்தவனாக இருந்தான்.. மீனாவைத் துச்சமாகப் பார்த்தான்..
"கொஞ்சநாளா எல்லாமே ராங்காத்தான் போய்க்கிட்டு இருக்கு செண்பா.. நான் யார்ன்னு தெரியாம விளையாடுதுக.."
அவனது ஏக வசனத்தில் மீனா ரத்தம் கொதித்தாள்..
'விளையாடுதுகளா..?' நிமிர்ந்து உட்கார்ந்தவள்..
"செண்பகவள்ளி.. நீங்க யாருக்குப் பிஏ..? எனக்கா..? இல்லை மிஸ்டர் வினோத்துக்கா..?" என்று அதட்டினாள்..
செண்பகவள்ளிக்கு துளிக்கூட பயமில்லை.. நீயெல்லாம் ஒரு ஆளா என்பதைப் போலப் பார்த்தபடி..
"சார், மேனேஜர் மேம்.." என்றாள்..
"நான் சீனியர் மேனேஜர்.. தட் மீன்ஸ்.. மேனேஜருக்கெல்லாம் மேனேஜர்.. நீங்க என்னுடைய பி.ஏ.. நினைவிருக்கா..?"
"நினைவிருக்கப் போய்தானே நீங்க இண்டர்காமில் கூப்பிட்டதும் ஏன்னு கேட்க வந்திருக்கிறேன்..?"
"வந்திருக்கீங்க.. பட்.. ஏன்னு கேட்டது என்னிடமில்லை.. வினோத்திடம்.. ஆமாம்.. யாரைக் கேட்டு இவரை உள்ளே விட்டிங்க..? என் பெர்மிசன் இல்லாமல் இவர் உள்ளே வந்து நிற்கிறார்.. இதுதான் நீங்க வேலை பார்க்கிற லட்சணமா..?"
மிடுக்காக சுழல் நாற்காலியில் சாய்ந்து மீனா கேள்வி கேட்ட விதத்தில் செண்பகவள்ளி வாயடைத்துப் போனாள்.. ஒரு பெண்ணின் முன்னால் இன்னொரு பெண் அவமதித்துப் பேசி விட்டதில் வினோத் குன்றிப் போனான்.. அவமானத்தில் அவனது கோபம் அதிகமாகி முகம் பயங்கரமானது..
"மேடம்.."
"பர்ஸ்ட் இவரை வெளியில் போகச் சொல்லுங்க.. இனிமேல் என்னைப் பார்க்க வரனும்னா முறைப்படி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு பார்க்க வரனும்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி வையுங்க.. சுப்பிரியரின் ஆபிஸ் ரூம் கதவை தடால்ன்னு மேனர்ஸ் இல்லாமத் திறந்துக்கிட்டு காட்டுத்தனமா உள்ளே வருகிறாரே.. இவர் என்ன படித்திருக்கிறார்..?"
செண்பகவள்ளி கையைப் பிசைந்தாள்.. மீனா கேட்கச் சொல்லும் கேள்வியை, வினோத்தைப் பார்த்துக் கேட்க அவளுக்கு தைரியம் இல்லை.. இந்த உலகத்தில் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ள யாரும் அஞ்ச மாட்டார்கள்.. கெட்டவர்களைப் பகைத்துக் கொள்ளக் கனவிலும் துணிய மாட்டார்கள்..
வினோத் தன் சக்தியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான்.. செண்பகவள்ளியும் கார்மேகமும் அவனுக்கு அடிமைகள் போல இருப்பவர்கள்.. செண்பகவள்ளி இங்கே இருக்கிறாள்.. ஹாலில் இருக்கும் கார்மேகத்தின் செவி இந்நேரம் கழன்று வந்து கதவில் ஒட்டியிருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.. இப்போது அவனது குரல் உயரவில்லையென்றால் அவர்களிடம் அவனது அதிகாரம் செல்லுபடியாகாமல் போய்விடும் அபாயம் நேர்ந்து விடும்..
"முந்தாநாள் மழையில் நேற்று முளைத்தக் காளானெல்லாம் என் படிப்பை பற்றிக் கேட்கிறது.. இதைவிட நான் அதிகப்படிப்பைப் படித்தவன்னு சொல்லு செண்பா.."
செண்பகவள்ளியின் விழிகளில் பாராட்டுதல் வந்தது.. அதைப் பார்த்த வினோத் தன் மரியாதையை நிலைநாட்டி விட்ட நிம்மதியை அடைந்தான்.. செண்பகவள்ளி ஏளனமாக மீனாவைப் பார்த்தாள்..
மீனா துளிக்கூட அலட்டிக் கொள்ளவில்லை.. வினோத்தைக் கூர்மையாக ஏற இறங்க ஓர் பார்வை பார்த்தாள்..
"மெத்தப்படித்த மேதாவிக்கு பேஸிக் மேனர்ஸ் கூடத் தெரியலை.. வாய் மட்டும் கிழியுது.." என்றாள்..
செண்பகவள்ளி அயர்ந்து போனாள்.. வினோத்தின் அதிகாரம் மறுபடியும் ஆட்டம் கண்டது.. போதாக்குறைக்கு மீனா இண்டர்காமில் கார்மேகத்தை அழைத்தாள்.. ஒட்டுக் கேட்பதை விட நேரில் கேட்பது அதிக வசதியென்று அவன் அடுத்த நொடியில் அறைக்குள் ஆஜரானான்..
"கார்மேகம்.. மிஸ்டர் வினோத்தின் கையைப் பிடித்து அழைத்துக்கிட்டுப் போய் ஆபிஸ் பில்டிங்குக்கு வெளியே விட்டுவிட்டு வாங்க.. என்னைப் பார்க்கனும்னா என்னிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு, நான் அலோவ் பண்ணிய பின்புதான் பார்க்க வரனும்னு கட் அண்ட் ரைட்டா சொல்லி அனுப்பிவையுங்க.. அப்புறம், இன்னொரு விசயம்.. இன்றிலிருந்து என் பிஏவா அடிசனல் இன்ஜார்ஜை நீங்க எடுத்துக்கங்க.. செண்பகவள்ளி உங்களுக்கு அஸிஸ்டெண்டா, நீங்க சொல்கிற வேலையை மட்டும் பார்த்தால் போதும்.."
மீனா அதிரடியாக பிறப்பித்த உத்தரவில் செண்பகவள்ளி..
"மேடம்.." என்று அலறிவிட்டாள்..
'அஃது..' வெற்றிப்பார்வை பார்த்தாள் மீனா..
'யாருகிட்ட உன் வேலையைக் காட்டற..? வெளியூர்காரின்னா விரட்டிப் பார்க்கலாம்ன்னு மனதுக்குள் நினைப்பா..? பிளந்து கட்டிருவேன்.. நான் மீனா.. மீனாம்பிகை..!'
கார்மேகம் எப்போதும் கட்சி மாறும் பச்சோந்தி.. எந்தப்பக்கம் வலிமை அதிகரிக்கிறதோ.. அந்தப் பக்கம் சடுதியில் கட்சி மாறி விடுவான்.. ஆனானப்பட்ட வினோத்தையே கழுத்தை பிடித்து வெளியே தள்ளச் சொல்கிறாள் மீனா.. கார்மேகத்துக்கு பதவி உயர்வை கொடுத்து, செண்பகவள்ளியை செல்லாக் காசாக்கி மூலையில் தள்ளுகிறாள்.. மீனாவுக்கு அடி பணியாமல் இருப்பானா..?
"சார்.." வினோத்தைப் பார்த்தான்..
வினோத்தின் உடல் பதறி விட்டது.. கையைப் பிடித்து வெளியே தள்ளுவதும், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதும் ஒன்றுதான் என்பதை அவன் நன்கு அறிவான்.. மீனாவுக்கு இந்த அளவுக்கு தைரியம் இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.. விஷ்வாவின் அருகாமையில் மிதப்பு காட்டுகிறாள்.. விஷ்வா வெளியூர் போன சமயம் பார்த்து ஒரு காட்டுக் காட்டினால், ஊரை விட்டே ஓடி விடுவாள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டான்..
செண்பகவள்ளியின் நிலையும் அதுதான்.. அவள் பி.ஏ என்ற பதவியில் இருந்ததினால்தான் வினோத்திடமும், விஷ்வாவின் அண்ணன் ரங்கநாதனிடமும் பணம் கிடைத்து வந்தது.. கார்மேகமும் அவளுக்கு அடங்கிப் போனான்.. இப்போது பண வரவும் போய், கார்மேகத்தின் கீழ் அவள் வேலைபார்க்க வேண்டிய நிலை வந்து விட்டதே..
"இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொல்லிட்டேன்.." வினோத் ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தான்..
"உனக்குத்தானே..?" கிண்டலாகக் கேட்டாள் மீனா.
"நான் யார் தெரியுமா..?"
"நீங்கள் யார் மிஸ்டர் வினோத்..? என் கண்ட்ரோலுக்கு கீழே வேலை பார்க்கும் மேனேஜர்.. அதை மறக்காமல் வேலை பார்த்து பழகுங்க.. கெட் லாஸ்ட்.."
"இதுக்கான விளைவுகள் விபரீதமாக இருக்கும்.. உன்னை எச்சரிக்கிறேன்.."
"என்னத்தைக் கிழிக்கனுமோ.. கிழித்துக்கடா.. போடா.."
மீனாவின் அலட்சியமான பேச்சில் வினோத் அதிர்ந்து போனான்.. செண்பகவள்ளிக்கு மயக்கமே வந்துவிட்டது.. கார்மேகமோ, தான் கட்சி மாறியது சரியானதே என்று மகிழ்ந்து போனான்..
'இந்தம்மா விட்டு விளாசுது.. சூப்பரு..'
அதற்கு மேலும் தாமதிக்காமல் அவன் வினோத்தின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக தள்ளிக் கொண்டு போக முற்பட்டான்..
"கார்மேகம்.."
"என்கிட்ட சவுண்டு விட வேணாம் சார்.. நான் என் வேலையைத்தான் செய்கிறேன்.. பேசாம போயிருங்க.."
"ஏய்.. மீனா.. யாரைப் பார்த்து வாடா, போடாங்கிற..?"
"உன்னைப் பார்த்துத்தாண்டா.. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்.. நீ வா, போன்னு சொன்னா.. பதிலுக்கு வாடா, போடான்னுதான் சொல்ல முடியும்.. போடா.. போய், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கக் கத்துக்க.."
கார்மேகம் வினோத்தைத் தள்ளிக் கொண்டு போனான்.. செண்பகவள்ளி கைகட்டி வாய் பொத்தாத குறையாக..
"மேடம்.." என்று கெஞ்சினாள்..
"கெட் அவுட்.." உக்கிரமாக அவளைத் துரத்தி விட்டாள் மீனா..
நடந்து விட்ட சம்பவத்தின் கோபத்தோடு அவள் வேலைகளைத் தொடர முனைந்தபோது அடுத்த 'தடதட' கேட்டது.. இப்போது ஆவேசமாக அவளது அறைக் கதவைத் திறந்து உள்ளே வந்தது..

விஷ்வாவின் தமையனான ரங்கநாதன்..!


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -36
பொதிகையிலே பூத்தவளே -36
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/pothikaiyilepooththavale36.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/pothikaiyilepooththavale36.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy