இது நீரோடு செல்கின்ற ஓடம் -75

75 உன் நெஞ்ச மென்னும் மஞ்சத்திலே.. எனையன்றி யார் துயில்வார்.. ? வருணுக்கும்.. வைசாலிக்கும் வீட்டுப்பாடம் செய்யச் சொல்லிக் கொடு...


75
உன் நெஞ்ச மென்னும் மஞ்சத்திலே..
எனையன்றி யார் துயில்வார்..?


வருணுக்கும்.. வைசாலிக்கும் வீட்டுப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுத்தபடி அடிக்கண்ணில் நோட்டமிட்டாள் மிருதுளா.. விக்ரம் அதே ஹாலின் மறுமுனையில் உட்கார்ந் திருந்தான்.. அருகே ஒட்டுப் புல்லைப் போல லிஸி..
'இவ என்ன இவனோட வாலா..?' அவளுக்குள் ஆத்திரம் பொங்கத்தான் செய்தது..
காட்டிக் கொள்ளவில்லை.. காட்டிக் கொண்டால் அவன் என்ன செய்வான் என்பது மிருதுளாவுக்குத் தெரியாதா என்ன..? இப்போது தள்ளி உட்கார்ந்திருப்பவன்.. அவள் கடுப்பாகிறாள் என்று தெரிந்ததும் ஒட்டி உறவாட ஆரம்பித்து விட மாட்டானா..?
"நேக்கு தலய வலிச்சுது.."
வைசாலி புத்தகத்தை மூடி வைக்க காரணம் தேடினாள்..
'இந்தச் சின்னத் தலைக்கு வலி வருமா என்ன..?' மிருதுளாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது..
அந்தத் தலைவலியை ஓட்டும் வித்தை அவளுக்குத் தெரியும்.. வைசாலியைத் தூக்கி அவள் மடிமீது உட்கார வைத்து கையணைவில் அடக்கி.. உச்சி முகர்ந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால் அவளின் தலைவலி பறந்தோடி விடும்..
'இந்தக் குட்டியூண்டு வயசில எவ்வளவு பெரிய பேச்சைப் பேசறா.. இவளுக்குத் தலைவலியா..?'
அன்பைத் தேடும் அகதியாக பரிதவிக்கும் அந்தக் குழந்தையைத் தூக்கி மடிமீது உட்காரவைத்து இறுக்கி உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் மிருதுளா..
"இப்பத் தலைவலி ஓடிப் போயிருச்சா..?" வைசாலியின் காதோரமாக குனிந்து கேட்டாள்..
அதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு வைசாலியாய் தான் மாறி விடக் கூடாதா என்றிருந்தது..
"காணாமப் போச்சு.." மழலையாக கவிதை சொன்னாள் விக்ரமின் மகள்..
"போயிடுமில்ல.. எங்களுக்குத் தெரியுமில்ல.." கேலியாகச் சிரித்தபடி பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த மிருதுளாவின் கன்னம் தொட வேண்டும் போல ஆசை மனதில் கிளர... நிராசையுடன் பார்வையை வேறு திக்கில் திருப்பிக் கொண்டான் விக்ரம்..
"வாட்'ஸ் தி மேட்டர் விக்ரம்..?" லிஸி விசாரித்தாள்..
"போன்னு சொன்னா போக மாட்டேங்கிறா பாரு.. சட்டமா வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறா.." புகார் சொன்னான் விக்ரம்...
"அதில உனக்கு கோபமா.. வருத்தமா.. இல்லை சந்தோசமா..? லிஸியின் துளைக்கும் பார்வை அவனை அளந்தது.."
"கோ.. கோபம்தான்.. வேற என்ன..?" விக்ரம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்..
லிஸியின் நம்பாத பார்வையை எதிர்கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை..
"வருண் உன் ஹோம் வொர்க்கை முடிச்சிட்டியா..?" மிருதுளா வைசாலிக்கு சொல்லிக் கொடுத்தபடி வருணிடம் கேட்டாள்..
"ஜஸ்ட் ஒன் மினிட் மிஸ்.. முடிச்சிருவேன்.." பதில் சொன்ன வருண் கர்ம சீரத்தையாக சோபாவின் மீது கவிழ்ந்து நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தான்.
அப்படியொரு ஈடுபாட்டுடன் மகன் பாடம் படித்து விக்ரம் பார்த்ததே இல்லை.. மிருதுளாவின் கைகளில் வருணை அடக்கும் அங்குசம் எப்படி வந்தது என்று அவன் திகைத்தான்.. மந்திரக் கோலைச் சுழற்றி மாயங்கள் புரிவதைப் போல.. அவனால் வசப்படுத்த முடியாத அவன் பிள்ளைகளின் மனதை மிருதுளா வசப்படுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருந்தாள்..
"உன் குழந்தைக மிருதுளாகிட்ட குளோஸா இருக்கிறாங்க.." என்றாள் லிஸி..
அதில் சன்னமான பொறாமையும்.. நிறைய வருத்தமும் இருப்பதை விக்ரமால் உணர முடிந்தது.. லிஸி குழந்தைகளிடம் நெருங்கிப் பேச ஆர்வம் காட்டினாள்.. முயற்சி செய்தாள்.. பலன் பூஜ்யமாகத்தான் இருந்தது.. நெருங்கிப் போனவளிடமிருந்து விலகி நின்றார்கள் விக்ரமின் குழந்தைகள்..
வருண் அடாவடிக்காரன்.. அவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய அவனை நிர்பந்தப் படுத்திவிட முடியாது.. லிஸியை அவன் வெளிப்படையாகவே முறைத்தான்..
மீறி அணுக முயன்றால் கையில் கிடைத்ததை போட்டு உடைத்தான்..
வைசாலி வேறு ரகம்.. அவளுக்கு அடாவடித்தன மெல்லாம் தெரியாது.. அழுக மட்டும்தான் தெரியும்.. அது என்ன மாயமோ.. மந்திரமோ தெரியாது.. லிஸி ஒளிந்து மறைந்து.. வைசாலியின் முதுகுக்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கிப் பூனை போல போனாலும் வைசாலி அவள் நெருங்குவதைக் கண்டுபிடித்து விடுவாள்..
உடனே உதட்டைப் பிதுக்கி அழுது வைப்பாளே ஒரு அழுகை..! பங்களாவே அதிர்ந்து விடும்.. லிஸி அரண்டு போய் பின் வாங்கி விடுவாள்..
இப்படிப் பற்பல விதங்களில் லிஸியை அணுக விடாமல் தங்களைச் சுற்றி அரண் அமைத்துக் கொள்ளும் விக்ரமின் குழந்தைகள் மிருதுளாவிடம் மட்டும்.. அவள் அழைக்க வேண்டிய அவசியமேயில்லாமல் அவளைக் கண்டதும் ஓடிப் போய் ஒட்டிக் கொண்டால் லிஸிக்குப் பற்றிக் கொண்டு வராதா..?
"உன்னைப் போலவே உன் குழந்தைகளும் பாரபட்சம் காட்டறாங்க விக்ரம்.." லிஸி ஹாலை ஒட்டியிருந்த பால்கனியில் தெரிந்த வானத்தை வெறித்தபடி கூறினாள்..
"பாரபட்சமா..? நானா..? என்னோடு குழந்தை களையும் இணை சேர்க்கிறயா..? அவங்க குழந்தைக லிஸி.." விக்ரம் ஆட்சேபித்தான்..
"குழந்தைகள்தான்.. உன் குழந்தைக.. அதான்.. அப்பா மனது எங்கே போகுதோ.. அங்கேயே குழந்தைகளின் மனதும் போகுது.."
லிஸி விசுக்கென்று எழுந்து மிருதுளாவையும்.. குழந்தைகளையும் கடந்து மாடிப்படிகளில் இறங்கினாள்.. கடந்து போனவளை அரைக் கண்ணால் பார்த்த வருணின் விழிகளும்.. மிருதுளாவின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.. அதைப் பார்க்காததைப் போல பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் இதழ்களில் இளநகை அரும்பியது..
'பய கெட்டிக்காரன்தான்..' மனதுக்குள் மகனை மெச்சிக் கொண்டான்..
வருணுக்கும்.. மிருதுளாவுக்கும் இடையில் நிலவும் அந்த அன்யோன்யப் பிணைப்பில் அவன் மனம் நனைந்தது..
வைசாலி வீட்டுப் பாடத்தை முடித்து விட்டாள்.. மிருதுளா அவளை மடியில் வைத்து தலை கோதி பேசியபடியே.. அவளுடைய புத்தகங்களை எடுத்து அடுக்கி பையில் வைத்து மூடினாள்..
"இன்னைக்குள்ள முடிச்சிருவியா வருண்..?"
வருணிடம் அவள் சந்தேகம் கேட்டதில் விக்ரமின் சிரிப்பு விரிந்தது..
'வருணுக்கு இவதான் லாயக்கு..'
உதட்டை மடித்துக் கடித்தபடி அவன் மிருதுளாவை ஆழ்ந்த பார்வை பார்த்தான்.. அதே நொடியில் மின் வெட்டைப் போல உயர்ந்த அவளின் பார்வை.. அவன் பார்வையை சந்தித்து பிணைத்துக் கொண்டது..
விக்ரம் அவசரமாக முகத்தில் கடுமையை வர வைத்துக் கொண்டு.. அவளை முறைத்தான்.. அவள் உதடுகளை வளைத்து கேலியாக சிரித்து வைத்தாள்..
'போடா டேய்.. உன்னை எனக்குத் தெரியாதா..?'
அவள் விழி சொல்லிய பாசையில் வேறு திக்கில் திரும்பிக் கொண்டான் அவன்.. சற்று முன்பு லிஸியிடம் சொல்லிக் கொண்டிருந்த திட்டத்தை செயல் படுத்த முடியுமா என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது...
"அவ வரட்டும்.. பாடம் சொல்லிக் கொடுக்க இங்கே வந்துதான் தீருவேன்னு சொல்லிட்டாளாம்.. அவங்கப்பா என்னவோ அவர் மகளை நான்தான் வசியம் பண்ணி வைச்சிருக்கேன்னு என்கூட சண்டை போட்டுட்டுப் போறார்.. யார்.. யாரை வசியம் பண்ணி வைச்சிருக்கிறது..? அவ இல்ல என்னை வசியம் பண்ணி வைச்சிருக்கா.."
"ஓ.. அப்ப அந்த வசியத்தில இருந்து வெளியே வர உன்னால முடியாது.. இல்லையா விக்ரம்.." லிஸியின் வார்த்தைகள் அவனைச் சொல்லிக் காட்டின..
"ஏன் முடியாது..?" விக்ரம் சிலுப்பிக் கொண்டான்..
"இப்ப பாடம் எடுக்கிறேன் பேர்வழின்னு வருவாயில்ல.. அப்பக் காட்டறேன்.. இந்த விக்ரம் யாருங்கிறதை.. நான் பேசற பேச்சிலே அவ எப்படி ஓடப் போறான்னு பொறுத்திருந்து பாரு.."
இப்படி 'வெயிட் அண்ட் ஸீ' என்று சூளுரைத்த சுந்தர புருசனான விக்ரமுக்கு.. அந்த சூளுரையை நிறை வேற்ற முடியுமா என்று சந்தேகம் வந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை..
விக்ரம் யாரென்று மிருதுளாவுக்கு காட்ட அவன் நினைத்தால்.. அவள் மிருதுளா யாரென்று அவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்..
அவள் வரும் வழியில் விழி பதித்து நின்றிருந்தவனின் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பில்..
"நீ..? அவளை விரட்டியடிக்க எதிர் பார்க்கிற..?" என்று கேலியாக கேட்டு வைத்தாள் லிஸி..
"பின்னே..? என்னை யாருன்னு நினைச்சே..?" விக்ரம் தோள் தட்டினான்..
"முதல்ல அங்கே வர்றது யாருன்னு பாரு.."
லிஸி சுட்டிக் காட்டிய திசையில்.. காற்றில் சேலை முந்தானை பறக்க.. தேவதை போல வந்து கொண்டிருந்தாள் மிருதுளா..
"வந்துட்டா.." விக்ரமின் விழிகள் மின்னின.. உதடுகள் அசைந்தன..
"ஆமாம்.. வந்திட்டா.. இனிமேலயும் பால்கனியில கால்கடுக்க நிற்காம உள்ளே வா விக்ரம்.. எனக்குக் கால் வலிக்குது.." என்றாள் லிஸி..
உள்ளே வந்தவனின் பார்வை மாடிப்படிகளில் தேடியலைந்ததில் லிஸிக்கே அவனைப் பார்க்க பாவமாகி விட்டது..
மிருதுளா மாடிக்கு வந்தாள்.. அவளின் பார்வை குழந்தைகளை விட்டுவிட்டு விக்ரமின் மீது படிந்து சுண்டியிழுத்ததில்..
'விக்ரம் சொன்னது உண்மைதான்.. இவ விக்ரமை வசியம் பண்ணி வைத்திருக்கும் வசியக்காரியேதான்..' என்ற முடிவுக்கு வந்தாள் லிஸி...
மிருதுளாவின் பின்னலில் சூடியிருந்த மல்லிகையின் வாசனை அந்த ஹால் முழுவதையும் நிறைத்து விக்ரமின் நாசிகளில் நுழைந்தது.. வெகு அருகாமையில் அவள் கூந்தலின் நறுமணத்தை முகர்ந்த தருணங்களை அவன் மனது நினைத்துப் hபர்த்தப் பரவசம் கொண்டது.. அவள் பாடம் சொல்லிக் கொடுத்தபடியே அவனைப் பார்க்க.. அவன் பகையுடன் முறைப்பதாக நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்க என்று அங்கே.. செமத்தியான காதல் நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது..
"இதுதான் நீ இவளை விரட்டற விதமா..?" பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கேட்டு விட்டுத்தான் லிஸி எழுந்து போனாள்...
வருணும் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டான்.. மிருதுளா வைசாலியை மடியில் இறுக்கியபடி முன்னும் பின்னும் சாய்ந்தாடியபடி வருணிடம் கதை பேசினாள்.. அவனும் சுவராஸ்யமாக பதில் சொல்லியபடி அவனுடைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்..
"கத.." வைசாலி சிணுங்கினாள்..
அவளுக்கு அவளை விட்டு விட்டு வருணுடன் மிருதுளா கதை பேசுவதில் உடன்பாடில்லை.. மிருதுளாவின் அனைத்துப் பேச்சும் வைசாலியையே சுற்றி வரவேண்டு மென்று அந்த குழந்தை மனம் உரிமை கொண்டாடுவதைப் புரிந்து கொண்ட விக்ரமின் மனம் நெகிழ்ந்தது.. அதை கண்டு கொண்டவளாக மிருதுளா வைசாலியின் கன்னத்திலே கன்னம் வைத்துப் பாசம் கொண்டாடியதில் அவன் நெஞ்சம் வலித்தது..
அந்தத் தாய்பாசத்தை பிள்ளைகளிடமிருநது அவன் பிரிக்க வேண்டுமா..?
மிருதுளா வைசாலியை அணைத்தபடி விக்ரமை பார்த்த பார்வையில் இருந்த செய்தியில் அவன் மனதில் மணியடித்தது.. அவனுக்கு பிரத்யேகமான ஏதோ ஒன்றை அவள் சொல்லப் போகிறாள் என்று புரிந்து போனதில் அவனுக்குள் 'ஜிவ்' வென்ற உணர்வு பரவியது..
இது போன்ற உணர்வுகள் கூடலைவிட அற்புத மானவை.. இதை காதலில் மட்டுமே உணரமுடியும்.. காதல் மட்டுமே உணர்த்த முடியும்.. அதை உணர்த்தித்தான் மிருதுளா.. விக்ரமை வசியம் செய்து வைத்திருந்தாள்.. அவளின் கண்ணசைவில் அந்த முரடன் கட்டுண்டு நின்றதற்கு காதல் என்னும் கட்டுத்தறி மட்டுமே காரணம்..
'கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள..
                கட்டுத் தறி கண்டேனே..'
அவன் மனம் இசைந்தது.. எப்படி இதை உணர்ந்து சொன்னார் அந்தக் கவிஞர் என்று அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் மீது அவனுக்கு அபிமானம் பெருகியது..
"கத வேணுமா.." மிருதுளா விக்ரமின் முகத்தைப் பார்த்தபடியே அவன் மகளிடம் கேட்டாள்..
'நானாடி கதை கேட்டேன்.. கேட்ட ஆள்கிட்ட உன் கதையைச் சொல்லு..' அவன் பல்லைக்கடித்தபடி சமிக்ஞைசெய்தான்..
"வருண் நீயும் கேட்டுக்கடா.. நான் இப்ப கதை சொல்லப் போறேன்.." மிருதுளா விக்ரமையே இமைக்காமல் பார்த்தாள்..
'ஏய்ய்.. சொல்லுடி..' விக்ரம் சைகை செய்தான்..
"ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்..
               அந்த உறவுக்குப் பெயர் என்ன..?"
மிருதுளா கதையை பாட்டாகச் சொல்ல ஆரம்பிக்க..
'நினைத்தேன்..' என்று நினைத்துக் கொண்டான் விக்ரம்..
வருணும் வைசாலியும் தெரியாது என்பதைப் போல தலையாட்ட..
"காதல்.." என்று அவளே பதிலையும் சொல்லி அவர்களை அரவணைத்துக் கொண்டாள்...
'ஹா.. பெரிசா கொலம்பஸ் போல கண்டுபிடிப்பில அலட்டிக்கிறா..' விக்ரம் உதட்டைச் சுழித்தான்.. ஆனால் அவன் மனம் அவள் பாட்டில்தான் சுழன்றது..
  "அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்..
           அந்த உரிமைக்குப் பெயர் என்ன..?"
சுழலும் விழிகளால் விக்ரமை பார்த்தபடியே கேட்டு விட்டு..
"குடும்பம்.." என்று பதிலைச் சொன்னாள் மிருதுளா..
வைசாலி என்னவோ தெரிந்தவளைப் போல தலையாட்டி வைக்க.. அவளை இறுக்கி உச்சி முகர்ந்தபடி பாடலைத் தொடர்ந்தாள் அவள்..
"நினைத்தவன் அவளை மறந்துவிட்டால்..
              அவள் நிலைமையின் முடிவென்ன..?"
அவள் கண்கள் கலங்கி.. கண்ணீர் சொட்டாக விழுந்து கை நனைத்ததில் வைசாலி அண்ணாந்து மிருதுளாவின் முகம் பார்த்தாள்..
"துயரம்.."
மிருதுளாவின் துயரம் தோய்ந்து அந்த வார்த்தையில் விக்ரமின் மனமும் துயரம் கொண்டது.. அவளை மடி சாய்க்க.. அவள் மடிசாய.. மனதார விரும்பினான் அவன்.. அது முடியாது என்பதில் அவன் மனம் நிராசைகொண்டது..
"பிரிந்தவர் மீண்டும் சேர்நது விட்டால்.. 
                அங்கே பெண்மையின் நிலை என்ன..?"
மிருதளாவின் பார்வை மயிலிறகாய் மனம் வருடியதில் விக்ரம் மனம் நொந்தான்..
"மௌனம்.." பிரியத்துடன் சொன்னாள் மிருதுளா..
விக்ரம் மௌனமானான்.. அந்த மௌனத்தில் வெளிப்பட்ட அவன் மனதை புரிந்து கொண்டவளைப் போல மிருதுளா பார்த்து வைத்ததில் அவன் இதயம் பிளந்தது.. இந்த அவனை மட்டும் தேடும் பார்வை கொண்ட பாவையை அவன் விலக்கி நிறுத்த வேண்டு மென்று கட்டளையிட்ட காலத்திற்கு இரக்கமில்லையா என்று மனம் மருகினான் விக்ரம்..
"இரவும் பகலும் உன்னுருவம் - அதில்
                இங்கும் அங்கும் பெண்ணுருகும்...
     அடக்கம் என்பது பெண்ணுருவம் -அதை
                அடைந்தால் மறையும் உன்னுருவம்..
     மறக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை
                மறக்க நினைத்தேன் நடக்கவில்லை..
     நினைக்கும் நிலையிலும் நீயில்லை - உன்னை
                நெருங்கும் தகுதியும் எனக்கில்லை.."
மெல்லிய குரலில் அவள் பாடப்பாட.. உனக்கா தகுதியில்லை என்று விக்ரமின் மனம் பொங்கியது..

'எனக்குத்தான் தகுதி இல்லைடி.. கோடி கோடியாய் பணமிருந்தும் விடோயர்ங்கிற ஒருவார்த்தையில என்னை தள்ளி வைச்சுட்டாருடி உன் அப்பா..' அவன் மனம் புலம்பியது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -75
இது நீரோடு செல்கின்ற ஓடம் -75
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam75.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam75.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy