இது நீரோடு செல்கின்ற ஓடம் -71

71 தளைகள் பிணைக்கும் வாழ்வின்.. தடைகளைத் தகர்ப்பதே காதல்... "இன்னைக்கு இவ்வளவு போதும்.. புக்கை எடுத்து வை.." வருணின் ம...

71
தளைகள் பிணைக்கும் வாழ்வின்..
தடைகளைத் தகர்ப்பதே காதல்...

"இன்னைக்கு இவ்வளவு போதும்.. புக்கை எடுத்து வை.."
வருணின் முடி கோதியபடி சொன்னாள் மிருதுளா.. அவள் மடியில் படுத்திருந்த வைசாலியின் முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினாள்..
விக்ரம் எதைச் சொன்னாலும் அதற்கு நேர் மாறாக காரியங்களைச் செய்யும் வருண் சமர்த்துப் பிள்ளையாக புத்தகங்களை எடுத்து வைப்பதைக் கண்டான் விக்ரம்... சன்னமான குரலில் விரல் நுனியைக் காட்டி வைசாலி எதையோ சொல்ல.. உதட்டைக் குவித்து..
"அச்சச்சோ.." என்று சொன்ன மிருதுளா அந்தப் பிஞ்சுவிரலைப் பிடித்து ஊதி விட்டாள்..
விக்ரமின் முகம் கனிந்தது.. விரல் நுனியில் ஏதோ அடி பட்டிருக்கிறது என்று வைசாலி புகார் செய்திருக்க வேண்டும் என்பதை அவன் புரிந்து கொண்டான்.. மிருதுளாவின் கவனிப்பைத் தன்பக்கம் இழுக்க வைசாலி செய்யும் முயற்சி அது என்பதில் அவன் மனம் நெகிழ்ந்தது..
அதுபோன்ற முயற்சியை அவனிடம் வைசாலி செய்ததில்லையே.. ஏன்..?
வருண் மிருதுளாவின் தோள் மீது சாய்ந்து எதையோ பேச.. வைசாலி அவள் மடியை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஒன்றிக் கொள்ள.. இரண்டு குழந்தைகளையும் இறுக்கிக் கொண்டு கதை பேசிய மிருதுளாவின் முகத்தில் பொங்கிய தாய்மையில் அவன் மனம் வலித்தது..
இந்தச் சொந்தம் நிலைக்காதே.. அவன் பிள்ளைகள் என்ன அன்னையின் அன்பே கிடைக்கக் கூடாது என்ற சாபம் பெற்றவர்களா..?
பெற்றவள் அவர்களைப் பிள்ளைகள் என்று நினைத்ததில்லை.. ஒருநாள் ஒரு பொழுதாவது அவர்களை உண்மையான தாய் பாசத்துடன் தூக்கிக் கொஞ்சியதில்லை..
அவர்களை வளர்த்தது சுபாதான்.. அவர்களுக்குத் தாய்க்குத் தாயாக.. பாட்டிக்குப் பாட்டியாக இருந்து வளர்த்தாள்.. அவளின் அன்பும் அவன் குழந்தைகளுக்கு நிலைக்கவில்லை...
இதுதான் வாழ்க்கை என்றான பிறகு.. பாலை வனத்தின் சுடு மணலில் நடந்தபடி.. தன் பிள்ளைகளுக்கு தாயாக இருக்க முயன்றான் அவன்.. அவர்களோ அவனைக் கண்டாலே காததூரம் விலகி ஓடினார்கள்.. வருண் விக்ரமை வெறுத்தான்.. வைசாலியோ விக்ரமிடம் பயந்தாள்..
இந்நிலையில் பாலைவனச் சோலையாக அவன் வாழ்வில் வந்தாள் மிருதுளா.. அவனையும் அவன் குழந்தைகளையும் நேசித்தாள்.. உண்மையான பிரியத்தை உளமாறக் காட்டினாள்.. அவனையும் குழந்தைகளையும் உய்விக்க வந்த மகா சக்தியாக நின்றாள்..
'இருந்தும் என்ன பயன்..?'
விக்ரமின் இதழோரம் துயரம் கலந்த கோபச் சிரிப்பு வந்தது.. அவன் மிருதுளாவின் முன்னால் நின்று அதட்டினான்...
"போதும்.. போதும்.. நீ குழந்தைகளைக் கொஞ்சிச் சீராட்டலைன்னு யாரும் இங்கே காத்துக் கிடக்கலை.. அவங்களை விட்டுட்டுக் கிளம்பு..."
"கண்ட்ரோல் யுவர் ஷெல்ப்.. விக்ரம்.." லிஸி அவன் தோளைத் தொட்டு அழுத்தினாள்..
"இல்லை லிஸி.. இதை வளர விடக் கூடாது.. இவ அப்பா வந்து நம்மைச் சத்தம் போட்டதைக் கவனிச்சியில்ல.. இவளோட திட்டத்துக்கு என்னைக் குற்றவாளியா ஆக்கிறா.. இதை என்னால பொறுத்துக்க முடியாது.." விக்ரம் உறுமினான்..
அவர்களுக்கிடையே நடந்த உரையாடலைக் கேட்ட மிருதுளா அலட்டிக்கொள்ளவேயில்லை.. தன் போக்கில் குழந்தைகளுடன் அவள் பேசிக் கொண்டிருக்க.. விக்ரம் கடுப்பானான்..
"லிஸி.. குழந்தைகளை சாப்பிட அழைச்சிட்டுப் போ.." லிஸியிடம் சொன்னான்..
அவள் தயக்கத்துடன் குழந்தைகளை நெருங்க.. மிருதுளா குழந்தைகளின் கன்னம் தட்டி..
"போங்க.. போய் சாப்பிட்டுட்டுத் தூங்குங்க.. குட் நைட்.." என்று இதமாகச் சொன்னாள்..
"நீங்க மிஸ்..?" வருண் நகரவில்லை..
"நான் எங்க வீட்டுக்குப் போகனும்டா.. பட்.. நாளைக்கு கண்டிப்பா வருவேன்.. பயப்படாம போ.." மிருதுளா எடுத்துச் சொன்னாள்.
"என் மகன் எதுக்காக பயப்படப் போறான்..? இது அவன் வீடு.." விக்ரம் ஊடே வந்தான்.
மிருதுளாவோ உனக்கும் எனக்கும் பேச்சில்லை என்பதைப் போல அவனைக் கவனிக்காமல் அவள் மடியில் சுருண்டிருந்த வைசாலியைச் சமாதானப் படுத்தும் மும்முரத்தில் இருந்தாள்..
"என் பட்டுக்குட்டியில்ல.. சாப்பிடப் போ செல்லம்.."
"கை வலிச்சுது.."
"அதான்.. அப்பவே ஊதிட்டேன்ல்ல.. இந்நேரம் வலி மேஜிக் போல மாயமா ஓடி மறைஞ்சிருக்கும்.."
"பாப்பாக்கு பசிக்கல.."
"நீயே பாப்பா.. உனக்கு பசிக்குதான்னு உனக்கு எப்படித் தெரியும்..? எங்களுக்கில்ல தெரியும்.."
"அண்ணா அடிச்சான்.."
"இனிமே அடிக்க மாட்டான்.. டேய் வருண்.. தங்கையை அடிக்கக் கூடாது.. என்ன..?"
"நேக்கு ஜொரம்.."
"நோக்கு ஒன்னுமில்ல.. ஜீரமெல்லாம் சேட்டைக்கார பசங்களுக்குத்தான் வரும்.. உன்னைப் போல அழகு பாப்பாவுக்கெல்லாம் வராது.."
மிருதுளாவும் வைசாலியும் பேசிக் கொண்ட அழகில்.. லிஸிக்கே அவர்களைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் போய் விட்டது..
வைசாலி மிருதுளாவை விட்டு நகராமல் இருக்க என்னென்ன காரணங்களைக் கூற முடியுமோ.. அவை அத்தனையையும் சொல்லி.. மிருதுளாவை அங்கேயே நிறுத்திக் கொள்ளப் பார்த்தாள்..
மிருதுளாவின் கண்கள் கலங்கி விட்டன.. லிஸியின் முன்னால் கண்ணீர் விட அவள் தன்மானம் இடம் கொடுக்க வில்லை.. கண்களைச் சிமிட்டி.. கண்ணீர் துளிகளை அடக்கியபடி வைசாலியிடம் கெஞ்சுதலாகப் பேசி அவளைக் கிளப்பினாள்..
"நிச்சயமா நாளைக்கு நான் வருவேனாம்.. வந்து வைசாலிக்குட்டி வரைஞ்சு வச்சிருக்கிற டிராயிங்கைப் பார்ப்பேனாம்.. வருண் சேட்டை பண்ணியிருந்தா.. திட்டுவேணாம்.. இப்ப சாப்பிடப் போடா செல்லம்.."
குழந்தைகள் அவளைப் பிரிய மனமில்லாமல் கிளம்பிப் போனார்கள்.. அவர்களின் கைகளைப் பிடிக்க முயன்ற லிஸியின் கையை அவர்கள் உதறியதில் மிருதுளாவின் மனதில் இதம் பரவியது...
'இவங்க என் குழந்தைக...'
அவள் நிமிர்ந்தாள்.. அந்த நீண்ட நெடிய மாடி ஹாலில்.. விக்ரமும் அவளும் மட்டுமே தனித்து நிற்பதை உணர்ந்தாள்.. எத்தனையோ நாள்களுக்குப் பிறகு அரிதாக கிடைத்திருந்த அந்த தனிமையில் அவன் முகத்தை நேருக்கு நேராக பார்த்தபடி அசையாமல் அவள் நின்றாள்..
"என்ன.. என் பிள்ளைகளைக் கைக்குள் போட்டுக்கிட்டுத் திரும்பவும் என்கூட ஒட்டிக்கிரலாம்ன்னு பார்க்கறியா..?" இரக்கமில்லாமல் அவன் கேட்டான்..
அவள் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறவல் சுழித்தோடியது..
"எதுக்கெடுத்தாலும்.. என்னை விட்டுற மாட்டியே.. விட்டுற மாட்டியேன்னே கேட்பீங்களே.. இப்ப விடறது யார்..? நீங்களா..? இல்லை நானா..?"
அவன் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் நிதானமாக அவள் கேட்டதில் அவன் பேச்சு நின்று விட்டது..
"உங்களுக்கு உங்க மேல நம்பிக்கையிருந்தது.. எந்த நிலைமையிலயும் நீங்க என்னை விட்டுக் கொடுத்திர மாட்டிங்கங்கிற திடம் இருந்தது.. என்மேல தான் உங்களுக்கு நம்பிக்கையில்லாம இருந்தது.. அதனால நாம பேசின ஒவ்வொரு பேச்சோட முடிவிலயும் நீங்க இதைக் கேட்டிங்க.. உங்களை நான் விட்டுறக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டிங்க.. இப்ப என்ன ஆச்சு..? நான் உங்களை விடலை.. நீங்கதான் என்னை விட ரெடியாகிட்டிங்க.. நான் வார்த்தை தவறலை.. நீங்கதான் வார்த்தை தவறிட்டிங்க.."
மிருதுளா நிறுத்தி நிதானமாக கோர்வையாக பேசினாள்.. அழுத்தம் திருத்தமாகப் பேசினாள்.. நிமிர்வாகப் பேசினாள்.. கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்ற தீர்மானத்துடன் பேசினாள்.. அவன் விழிகளுக்குள் உற்றுப் பார்த்து அவன் மனதை ஊடுறியபடி பேசினாள்...
விக்ரம் உதட்டை மடித்துக் கடித்தான்.. அவன் காதலியின் இந்த நிமிர்வில் அவன் மனம் பெருமிதம் கொண்டது.. கண்களில் மெச்சுதல் வந்தது..
'இருந்தாலும்...?'
அவன் முகத்தில் இறுக்கம் வந்தது.. வரவழைத்துக் கொண்ட கடினத்துடன் அவளை முறைத்துப் பார்த்தான்..
"அது அப்போ.. இது இப்போ.." என்றான்..
"ஹ..." மிருதுளா முகம் திருப்பிக் கோபச் சிரிப்பு சிரித்தாள்..
"டயலாக்கெல்லாம் நல்லா இருக்கு.. இப்ப என்ன வந்துருச்சாம்..?"
"லிஸி வந்துருக்கா.."
விக்ரம் காதலுடன் லிஸி பெயரைச் சொன்னான்.. சொல்லும் போதே அவன் கண்கள் செருகிக் கொண்டன..
"ஓ.." உதட்டைக் குவித்துச் சுழித்தாள் மிருதுளா..
"மயக்கமாக்கும்..?" கேலியாக வினவினாள்..
"நான் மேரேஜ் பண்ணிக்கப் போகிறவமேலே எனக்கு மயக்கம் வராதா..?" விக்ரமின் புருவங்கள் ஏறி இறங்கின..
"வாஹ்ரே.. வா.. ஐயா அப்படிப் போறிங்களா..? அப்ப அன்னெக்கொரு நாள் கிறங்கி முழிச்சீங்களே.. அது மயக்கமில்லையா..?" மிருதுளா சந்தேகம் கேட்டாள்..
"என்னைக்கு..?" விக்ரம் யோசித்தான்..
மிருதுளாவுடன் தனித்திருந்த பொழுதுகள் ஒவ்வொன்றாக அவன் மனதில் வந்து போயின.. அதில் அவன் மனம் மயங்கியது.. அந்தச் சந்திப்புக்கள் அத்தனையிலும் அவன் அவளிடம் மயங்கித்தான் இருந்தான்.. அதைவிட.. அவள் அவனிடம் அதிகமாக மயங்கியிருந்தாள் என்ற நினைவில்..
"உன்னை விட அதிகமா மயங்கல.." என்று சொல்லி விட்டான்..
"அட.. என் அத்தானுக்கு இதெல்லாம்கூட ஞாபகத்தில இருக்குது..? ம்ம்..? அப்ப மட்டும் இல்லை மச்சான்.. இப்பவும் உங்ககிட்ட மயங்கித்தான் போயிருக்கேன்.. அதை ஒப்புக்கிற 'தில்' எனக்கு இருக்கு.. அதே 'தில்' உங்களுக்கு இருக்கா..? ம்ம்ம்..?" இப்போது மிருதுளாவின் புருவங்கள் ஏறி இறங்கின...
"கொழுப்பு..?" விக்ரம் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்..
"ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..?" மிருதுளா அவனையே பார்த்தபடி நெருங்கினாள்..
அவள் விழிகளின் வலை பரந்து விரிந்து அவனைச் சிக்க வைப்பதைப் போல இருந்ததில் அவன் பின்னால் நகர்ந்தபடி எச்சரித்தான்..
"வேண்டாம்.. கிட்ட வராதே.. சொல்லிட்டேன்.."
மிருதுளா வாய் விட்டு ரசித்துச் சிரித்தாள்.. அவள் சிரிப்பில் அவன் மனம் சிக்கித் தவித்தது.. அவள் கண்களில் போதை நிறைந்த மோகம் குடி கொண்டிருந்தது.. அவனது எச்சரிப்பை ஒரு உதட்டுச் சுழிப்பின் மூலம் புறக்கணித்து விட்டு முன்னேறினாள்..
"நீங்க என்ன ஹீரோயினா..? நான் என்ன வில்லனா..? நான் பேச வேண்டிய டயலாக்கை நீங்க பேசி வைக்கறிங்களே மச்சான்.. ஆனாலும்கூட.. கேட்க நல்லாத் தான் இருக்கு..."
விக்ரம் பல்லைக் கடித்தான்.. அவளை ஸ்வாஹா பண்ண அவன் கைகள் துடித்தன.. அவனைக் கிளப்பி விடும் அவள் பேச்சில் அவன் நரம்புகள் முறுக்கேறின.. கட்டியிருக்கும் தளைகளை அறுத்துவிட்டு அவளை ஆலிங்கனம் செய்து பாடம் புகட்ட அவன் புஜங்கள் அறைகூவின..
'ஆனால்..?'
அவன் புருவங்களைச் சுளித்தபடி பின்னால் நகர்ந்தான்.. நகர முடியாமல் சுவர் தடுக்க அதில் சாய்ந்து நின்றவனை அவள் நெருங்கி விட்டாள்.. அவன் சட்டையின் மீது அவள் கைகள் படிந்த ஸ்பரிசத்தில் அவன் கண்மூடித் தவித்தான்..
"இதைப் போல ஒருநாள் என்னை நீங்க மடக்கீனிங்க மச்சான்.. மறந்து போச்சா..?" கிசுகிசுப்பாக கேட்டாள் மிருதுளா..
"போயிருடி.." கரகரப்பாக பேசினான் விக்ரம்..
அது கொடுமையாக இருந்தது.. யாரைத்தேடி அவன் உடலும் மனமும் துடிக்கிறதோ.. அவள் அவன் கைகளுக்குள் வந்து நிற்கிறாள்.. அவனைக் கைது செய்ய முனைகிறாள்.. அவன் அசைய முடியாமல் அப்படியே நிற்கிறான்.. ஏன்..?
'எனக்கான சாபமா..?' அவன் கண்மூடி மறுகினான்..
மிருதுளாவின் கை உயர்ந்து அவன் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்து இறுக்கி முன்னே இழுத்தது.. அவளைத் தள்ளிவிட வலுவிருந்தும் அவன் அதைச் செய்ய முடியாமல் அவள் வசம் தன்னை ஒப்புக் கொடுத்தான்.. அவன் கழுத்தை வளைத்த மிருதுளாவின் கை அவனது பின்னந்தலையின் முடியை இறுக்கிப் பிடித்ததில் உண்டான இம்சையில் தாள மாட்டாத தாபத்துடன் அவன் கண்மூடினான்..
மிருதுளா எம்பினாள்.. அவன் இதழ்மீது இதழ் பதித்தாள்.. அலையடிக்கும் ஆழ்கடலில் அவர்கள் இருவரும் அமிழ்ந்தார்கள்.. விக்ரம் அவளைத் தள்ளி விடுவதாய் நினைத்துக் கொண்டு அவள் தோள் பற்றித் தழுவிக் கொண்டான்...
அவனது வலுவான கைகள் அவளைச் சுற்றி வளைத்ததில் வென்று விட்ட பெருமிதத்துடன் அவள் அட்டை போல அவனை ஒட்டிக் கொண்டாள்..
இப்போது மிருதுளா அவன் முகத்தை இழுக்க வேண்டிய அவசியமில்லாமலே விக்ரமின் முகம் ஆவேசத்துடன் குனிந்து மிருதுளாவின் முகம் முழுவதும் முத்தங்களைப் பதித்தது.. அவன் உதடுகளின் ஈரத்தில் குளித்த மிருதுளாவின் முகம் பனியில் நனைந்த ரோஜா வினைப் போல விகசித்தது.. அவன் கைகளின் இறுக்கமான அணைப்பு தந்த வலியில் அவள் முகம் இன்பத்தை பிரதிபலித்தது...
"என் விக்ரம்.." அவனிடம் அவள் ஒன்றிக் கொண்டாள்..
அவள் முதுகில் படர்ந்த அவன் கரங்கள் அவளை அவன் மேல் சாய்த்துக் கொண்டன.. அவள் காதோரம் பேசிய அவன் குரல் வேதனையில் தோய்ந்து காகரப்புடன் வெளிவந்தது..
"போய் விடு மிருதுளா.."
"எங்கே விக்ரம்..?"
"என்னை விட்டு.."
"மாட்டேன்.. உங்களை விட்டு போக மாட்டேன்.. உங்க பாசையில சொல்கிறதா இருந்தா.. உங்களை விட்டுற மாட்டேன்.."
"சொன்னாக் கேளுடி.."
"நீங்க எதைச் சொன்னாலும் கேட்பேன் விக்ரம்.. உயிரை விடுடின்னு சொல்லுங்க.. விட்டுர்றேன்.. ஆனா உங்களை விட மாட்டேன்.. நீங்க விடச் சொல்றதை கேட்க மாட்டேன்..."
"மிருதுளா.. மிருதுளா.."
அவன் அவளை இழுத்து திரும்பவும் கட்டிக் கொண்டான்.. அவர்கள் ஒருவரிடம் ஒருவர் ஒன்றி அவர்களின் அசைக்க முடியாத பிணைப்பை வெளிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.. அவன் தந்த முத்தங்களினால் கன்றிச் சிவந்திருந்த அவள் முகத்தை கைகளில் ஏந்தி.. அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்த விக்ரம் கெஞ்சினான்..
"எனக்காக என்னை விட்டுப் போயிருடி.."
"ஊஹீம்.." மிருதுளா மறுப்பாக தலையசைத்தாள்..
"எனக்காக உங்களை விட்டுப் போக மாட்டேன் விக்ரம்.. எனக்கு நீங்க வேண்டும்.. நீங்க மட்டும்தான் வேண்டும்.. என் மனசு சொல்லிக்கிட்டிருக்கும் ஒரே வார்த்தை உங்க பெயர் மட்டும்தான் விக்ரம்.. அது நினைச்சுக்கிட்டிருக்கிற ஒரே நினைவு.. உங்க நினைவு மட்டும்தான் விக்ரம்.. உங்களை விட்டு நான் போறதா..? நெவர்.."
"ஆனா.. நீ இங்கே இருக்க முடியாதுடி.."
"ஏன்னு நான் கேட்க மாட்டேன்.. கேட்டாலும் நீங்க சொல்ல மாட்டிங்க.. இது யுத்தம் விக்ரம்.. போர்.. அறப்போர்.. என் காதலுக்காக நான் செய்ய வேண்டிய போர் இது விக்ரம்.."
"ஏய்ய்..."
விக்ரம் அவள் முகத்தோடு முகம் வைத்து புருவங்களை வினவும் பாவனையில் உணர்த்தினான்..
"என்னடி.. என்னென்னவே பேசற..?"
"என்னென்னவோ நடந்திருக்கு விக்ரம்.. அதை நீங்க எனக்குச் சொல்லப் போறதில்ல.. ஒரே கையால நூறுபேரை எதிர்க்கிறவர் நீங்க.. இப்பச் சத்தமில்லாம தோத்துக்கிட்டு இருக்கீங்க.. யாருக்காக..? எனக்காக..?"
"மிருது..."
"என்மேலிருக்க காதலுக்காக.. என் காதலையே இழக்கத் துணிஞ்சிட்டிங்கள்ல..? என்னையே விலக்கத் துணிஞ்சிட்டிங்கள்ள..?"
"ஏய்ய்.."
விக்ரம் அவளைக் கட்டிக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்து கண்களை இறுக்கி மூடினான்.. மூடிய அவன் கண்களுக்குள் பிரளயம் வந்து நின்றது..

அவள்தான் அவனுக்கு எல்லாம்.. ஆனால்.. அவளை விரட்ட வேண்டிய நிர்பந்தம் எதனால் அவனுக்கு வந்தது..?

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -71
இது நீரோடு செல்கின்ற ஓடம் -71
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam71.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam71.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy