இது நீரோடு செல்கின்ற ஓடம் -63

63 துளித்துளியாய் உன் நினைவுகளை.. என் இதயத்திலே சேகரித்தேன்.. அந்த ஹாலை மெழுகுவர்த்திகளின் மெல்லிய வெளிச்சம் சூழ்ந்திருந்தது.. த...

63
துளித்துளியாய் உன் நினைவுகளை..
என் இதயத்திலே சேகரித்தேன்..


அந்த ஹாலை மெழுகுவர்த்திகளின் மெல்லிய வெளிச்சம் சூழ்ந்திருந்தது.. தனியான ஒரு மேஜைக்கு அவளை அழைத்துச் சென்றான் விக்ரம்.. அவள் உட்கார நாற்காலியை இழுத்துப் போட்டான்.. மெலிதான சிரிப்புடன் அமர்ந்தவளை ஆசை தீரப் பார்த்தபடி எதிரில் அமர்ந்தான்.. அவர்களுக்கு நடுவில் மேஜையில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது..
அதன் வேலைப்பாடு மிகுந்த தங்க முலாம் பூசிய பித்தளை ஸ்டாண்டை ரசித்துப் பார்த்தாள் மிருதுளா.. அவனோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான்..
மெழுகுவர்த்தியின் ஒளியில் அவள் முகம் அதிக சோபையுடன் மிக அழகாக இருந்தது.. ஒளி வெள்ளம் முகத்தில் படிந்ததில் அவளின் சின்ன உதட்டுச் சுழிப்புக் கூட சிருங்காரமாய் வெளிப்பட்டது..
"வாட் டு யு வாண்ட் சார்..?"
நுனி நாக்கு ஆங்கிலத்துடன் டை கட்டி.. சீருடை அணிந்த சர்வர் அங்கு வந்து நின்றான்.. காலம் தான் எவ்வளவு வேகமாக மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா.. அவள் பார்த்த பழைய திரைப் படங்களில் காதோரமாக பென்சிலை செருகிக் கொண்டு.. வந்து நிற்கும் சர்வர்கள்..
"இட்லி.. வடை.. பூரி.. போண்டா.. பொங்கல்.. சூடா பஜ்ஜி.. இருக்கு சார்.. உங்களுக்கு என்ன வேணும்.." என்று ஒப்பித்து விட்டு கேள்வி கேட்பார்கள்..
இப்போது அப்படியில்லை.. மெனு கார்டு தரப் படுகிறது.. அதைப் புரட்டிப் பார்த்து விட்டு சொல்வதை அவர்கள் குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொண்டு கிளம்புகிறார்கள்.. சற்று நேரம் கழித்து.. அலங்கரிக்கப் பட்ட உணவு வகைகளை.. அலங்காரமான கிண்ணங்களிலும்.. தட்டுக்களிலும் நிரப்பிக் கொண்டு வந்து மேஜையில் பரப்பி வைத்து விட்டுப் போய் விடுகிறார்கள்..
விக்ரம் மெனுகார்டை புரட்டியபடி மிருதுளாவிடம் புருவங்களை உயர்த்தினான்.. அவள்..
"அஸ் யு லைக்.." என்றாள்..
அந்தப் பதிலில் அவன் இதழ்கள் திருப்திப் புன்னகையை சிந்தின.. மெனுகார்டை புரட்டி அவன் விதம் விதமாக ஆர்டர் பண்ணிக் கொண்டிருக்க.. மிருதுளா பார்வையை சுழல விட்டாள்.. ஒவ்வொரு மேஜையும் இடைவெளி விட்டுத் தனித்தனியாக
போடப் பட்டிருந்தன.. அவற்றில் அமர்ந்திருந்தவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.. சப்தங்கள் இல்லாத அதிக வெளிச்சமில்லாத அந்தச் சூழ்நிலை ஒர்விதமான கிறக்கத்தை அவளுக்குள் உண்டு பண்ணியது...
பேரர் நகர்ந்ததும் விக்ரம் மற்றவர்களைப் போலவே மெலிதான குரலில் பேச ஆரம்பித்தான்.. மிருதுளாவுக்கு அது பிடித்திருந்தது.. அந்தச் சூழலை அவள் ரசித்தாள்.. அதுவரை விக்ரமுடன் அவள் இதுபோல வெளியில் வந்ததில்லை.. அவர்களின் சந்திப்பு பூங்காவுடன் முடிவடைந்து விடும்...
விக்ரம் கூப்பிடுவான்.. மிருதுளாதான் மறுத்து விடுவாள்..
"பப்ளிக் பிளேஸ் விக்ரம்.. யாராவது பார்த்துருவாங்க.."
பூங்கா பொது இடம்தானே என்று அவளிடம் கேட்க முடியாது.. அங்கே அவனும்.. அவளும் சேர்ந்து போக மாட்டார்கள்.. அவன் முதலில் போய் காத்திருப்பான்.. அதற்குப் பின்னால் அவள் தனியாக வந்து சேருவாள்.. மறைவான ஒரு பெஞ்சில் உட்கார்ந்து ஆசை தீர பேசி விட்டு பிரிந்து விடுவார்கள்.. சமீப காலமாக அதுவும் முடியாமல் போய் விட்டது..
"ஏன் லேட்டுன்னு அம்மா கேட்கிறாங்க.."
மிருதுளாவால் பொய் சொல்ல முடிந்ததில்லை.. அது அவளுடைய பலவீனமாக இருந்தது.. விக்ரம் அவளைக் கடிந்து கொள்ளவில்லை.. அவளை அவளாக இருக்க விட்டான்.. பிரிவின் துயரம் இருவரையும் ஒன்று போலவே வாட்டும் என்பதை உணர்ந்து வைத்திருப்பவன் அவன்.. ஒருவருக்கொருவர் முகம் முறித்து பிரிந்து சென்றால்தான் துயரம் வரும்.. ஒன்றுபட்ட மனதோடு சூழ்நிலையால் பிரிந்து நின்றால் அதில் துயரம் கம்மியாகத்தான் வரும்..
அப்படிப்பட்ட மிருதுளா அவனுடன் வெளிப் படையாக வெளியில் சேர்ந்து வர தயங்கியதில் அவனால் கோபப்படமுடியவில்லை.. பொறுமை காத்தான்.. அன்றைய பகல் பொழுது அவனுக்கானது என்று அவன் சொன்னதினால் அவள் அவனுடன் சேர்ந்து மதிய உணவு உண்ண வந்து விட்டாள்..
"சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா..
                சூரிய சந்திரரோ..?
     வட்டக் கரியவழி கண்ணம்மா..
                வானக் கருமை கொள்ளும்.."
விக்ரம் மெலிதான குரலில் அவளுக்காகப் பாடியதில்  அவளுக்குள் சந்தோசம் மிகுந்தது.. உணவு வகைகள் வந்தவுடன் அவளுக்கு வேண்டியவற்றைப் பரிமாறி அவள் முன்னால் வைத்தான்.. சிலாகிக்கும் புன்முறுவலுடன் அவள் சாப்பிட ஆரம்பித்தாள்..
அவர்கள் பேசினார்கள்.. விக்ரம் தனது சின்னவயது நினைவுகளை அவளுடன் பகிர்ந்து கொண்டான்..
"சட்டுன்னு கோபப் பட்டிருவேன்.. கையில் கிடைத்ததை எடுத்து நொறுக்கிருவேன்.. காலேஜில் ஜாயின் பண்றவரை அந்த பிஹேவியர் மாறலை.. அப்படியே இருந்தது.. அங்கே போனபின்னாலதான் கோபத்தை வெளிக்காட்டிக்காம ஜெயிக்கிற வித்தையை கத்துக்கிட்டேன்.. உனக்குத் தெரியுமா.. காலேஜிலேயும் என்னோட நிக் நேம் 'டெர்ரர்' தான்.."
"நிஜமாவா..?" மிருதுளா வியந்து சிரித்தாள்..
"பாரின்ல எம்.பி.ஏ பண்ணினேன்.. இந்தியா திரும்பினதும் பிஸினெஸ் மொத்தமும் என் கைக்கு வந்தது.. அதுக்கப்புறம் டோட்டலா என் லைஃப் ஸ்டைலே மாறிப் போயிருச்சு.. பேசறதுக்கு பேமெண்ட் கேக்கிறவன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.. அந்த அளவுக்கு குறைச்சலாத்தான் பேசுவேன்.."
"அதான் தெரியுமே.."
"அம்மா டாடியிடம் மட்டும்தான் நின்று பேசுவேன்.. அதுக்குத்தான் நேரம் இருக்கும்.. அதுக்கடுத்து நான் பேசிப் பழகினது லிஸி.. என் பிரண்ட்.. அஃப்ராடில் இருக்கா.."
"ஓ.." மிருதுளாவின் குரலில் அப்பட்டமான பொறாமை தெரிந்தது..
"இப்ப வரைக்கும் அவ என் பிரண்ட்தான்.." அவள் மனதைப் படித்தவனைப் போல சொன்னான் விக்ரம்..
"நான் ஒன்னும் கேக்கலியே.." மிருதுளா கடலின் ஆழத்திலிருந்து பேசுவதைப் போல பேசினாள்..
"வாய் விட்டுக் கேட்டால்தானா..? அதான் உன் முகமே உன் மனசை காட்டிக் கொடுக்குதே.. உனக்கு பளிங்கு முகம்டி.."
"கொஞ்ச வேணாம்.."
"அதை நீ சொல்லக் கூடாது.. யு நோ.. நான் அதிகமா பேசிப் பழகினது உன் ஒருத்திகிட்ட மட்டும்தான்டி.."
அதுதான் அவளுக்குத் தெரியுமே.. லன்ச் முடிந்ததும் விக்ரமின் விருப்பப்படி அவர்கள் சினிமா பார்க்கப் போனார்கள்..
"உங்க வீட்டிலேயே ஹோம் தியேட்டர் இருக்கு.."
"அப்ப அங்கே படம் பார்க்கலாம் வர்றியா..?"
"அது எப்படி..?"
"தெரியுதில்ல.. வாயை மூடிக்கிட்டு பேசாம கூடவா.."
"அதில்ல விக்ரம்.. நீங்களோ வி.ஐ.பி.."
"அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனு மாக்கும்..?"
"இதில எப்படி நாம பப்ளிக் பிளேசில படம் பார்க்க முடியும்..?"
"டிக்கெட் புக் பண்ணியாச்சு.. பால்கனி டிக்கெட்.. படம் ஆரம்பிச்சதும் போறோம்.. முடியறதுக்குள்ள எழுந்து வந்திடறோம்.."
"திருட்டுத்தனம்.."
"காதலே ஒருவகையான திருட்டுத்தனம் தாண்டி.. இதையும் நீதான் சொன்ன.. மறந்துருச்சா..?"
"மறக்கலை சாமி.. மறக்கலை.."
மிருதுளா விளையாட்டாக காதை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதைப் போல பாவனை காட்டினாள்.. விக்ரம் சொன்னதைப் போலவே படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து தியேட்டருக்குள் போனார்கள்.. மிருதுளாவின் கை விரல்களோடு விரல் கோர்த்துக் கொண்டான் விக்ரம்.. அவன் தோள்மீது தலை சாய்த்துக் கொண்டாள் மிருதுளா..
அந்த நிமிடங்கள்தான் எத்தனை சுகமானவை என்று அவர்கள் இருவருமே நினைத்தார்கள்..
சில மணித்துளிகளை நகரவிடக் கூடாது என்று நாம் நினைப்பதுண்டு.. காலம் யாருடைய கட்டுக்குள்ளும் நின்று விடுமா என்ன..?
அந்தந்த தருணங்களின் இன்ப.. துன்பங்களை அள்ளி வழங்கியபடி அது நிற்காமல் நகர்ந்து விடும்...
விக்ரமுக்கும்.. மிருதுளாவுக்குமான அந்த நொடிகளும் நகர்ந்து கொண்டே இருந்தன..
அதுவரை எத்தனையோ சினிமாக்களை மிருதுளா பார்த்திருக்கிறாள்.. அப்போது பார்த்த அந்த சினிமாவை பிடித்ததைப் போல வேறு எந்த சினிமாவையும் அவளுக்குப் பிடிக்கவில்லை..
படம் முடிய சில நொடிகள் இருந்தபோது... விக்ரம் அவள் கைதொட்டு அசைத்தான்.. சமிக்ஞையை உணர்ந்து கொண்ட மிருதுளாவிற்கு கிளம்ப வேண்டுமா என்றிருந்தது.. அவர்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்..
"இன்னும் கொஞ்சம் நேரமிருக்கு.." என்றான் விக்ரம்..
"எங்கே போகலாம்.."
"அஸ் யூசுவல் பார்க்குக்கு போக வேண்டியதுதான்.."
"கோவிலுக்குப் போகலாமா..?"
"அப்படியா சொல்ற..?"
"ம்ம்ம்.. பார்க்கிலயும்.. கார்டனிலயும் பேச வேண்டிய அளவுக்கு பேசியாச்சு.. இப்பக் கோவில்தான் எனக்குத் தேவை.. மனசுக்கு அமைதியும்.. நிம்மதியும் தேவை.."
"அங்கே யாராவது நம்மை சேர்ந்து பார்த்துட்டா..?"
"பார்த்தாப் பார்க்கட்டும்.. அந்தக் கடவுள் நம்மை பார்த்துக்குவார்.."
மிருதுளாவின் கலங்கிய கண்களில் எதுவும் பேசாமல் காரைக் கிளப்பினான் விக்ரம்.. கோவிலின் வாசலில் இருந்த கடைகளில் ஒன்றில் அர்ச்சனைக் கூடையை மிருதுளா வாங்கிக் கொள்ள விக்ரம் பணம் கொடுத்தான்..
"அம்மா.. பூ..."
பூக்காரப் பெண்ணின் குரலில் நின்ற விக்ரம்..
"பூ.. வாங்கிக்க.." என்றான்..
மிருதுளா குவியலாக வாங்கிக் கொண்ட பூவை தலையில் வைத்துக் கொள்வதை பார்த்தபடி பூவுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு அவளுடன் சேர்ந்து நடந்தான்..
அது போன்ற தருணங்களை அது வரை அவன் உணர்ந்ததில்லை.. பிறந்தநாள்களின் போது சுபாவுடன் கோவிலுக்கு வந்திருக்கிறான்.. அதுவும் கல்லூரியில் கால் பதித்தவுடன் நின்று விட்டது.. அவனுக்காக சுபாதான் கோவிலுக்குப் போய் விட்டு வருவாள்.. நீபாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்... கோவில் எந்தத் திசையில் இருக்கிறது என்று கேட்டு வைக்கும் பிறவி...
மனதுக்குப் பிடித்த பெண்ணுடன்.. மனம் நிறைய அமைதியுடன்.. கோவிலுக்குள் நடப்பதைப் போன்ற இனிமையான அனுபவம் வாழ்வில் வேறெதும் இல்லை என்று சொன்னது அவன் மனது..
இறைவனுக்கும்.. இறைவிக்குமான அபிசேக ஆராதனைகளை முடித்து வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தார்கள்.. கோவிலின் கோபுரங்களில் இருந்த நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளை நுணுக்கமாக கவனித்துக் கொண்டு வந்தான் விக்ரம்..
"ஹௌ நைஸ்.." வியந்தான்...
"நம்ம நாட்டோட கோவில்கள் கலாச்சார சின்னங்கள்.. அதோட நம்ம பாரம்பர்ய பழமையின் கட்டிடக் கலையை உலகுக்கு எடுத்துச் சொல்கிற கலைப் பொக்கிசங்கள்.." மிருதுளா சொன்னாள்..
இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லையே என்ற ஆச்சரியத்துடன் அங்கிருந்த மண்டபத்தில் தாவிஏறி அமர்ந்தான் விக்ரம்..
வாழ்க்கையில் எப்படிப்பட்ட அருமையான விவாதங் களையும் நினைவுகூர்தல்களையும் இழந்திருக்கிறான் என்ற மெலிதான சோகம் அவனுக்குள் ஏற்பட்டது..
மிருதுளா அவனருகில் ஏறி அமரச் சிரமப்பட்டவளாக அருகிலிருந்த படிக்கட்டுகளில் ஏறி தூணைச்சுற்றி வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. வாழைப் பழங்களில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்..
"தேங்காய் சாப்பிடலாமா..?"
உடைக்கப்பட்ட தேங்காயை சில்லுகளாக்கி அவனிடம் கொடுத்தாள்.. என்னவோ பக்கத்திலிருந்து அவள் பரிமாறுவதைப் போன்ற நூதன உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது..
கால்களைத் தொங்க விட்டு அமர்ந்திருந்த மிருதுளாவின் புடவை மடிப்புக்களில் அடியிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த பாதங்களின் அழகில் அவன் மனம் லயித்தது.. பின்னலை முன்னால் போட்டிருந்தாள்.. அவன் வாங்கிக் கொடுத்த மல்லிகைச் சரம் தோள்களில் சரிந்திருந்தது.. நெற்றியில் இட்டிருந்த அபிசேக குங்குமம் மங்களகரமான அவளின் அழகை அதிகப்படுத்தியது..
குடும்பப் பாங்கான தோற்றத்திலும் இத்தனை அழகு மிளிரக்கூடும் என்பதை அவளிடம் அவன் கண்டான்..
"அடிக்கடி கோவிலுக்கு வருவியா..?"
"ம்ம்ம்.. எனக்குப் பிடிச்ச இடங்கள்ன்னா.. முதலில் என் வீடு.. அடுத்ததா கோவில்தான்.."
"ஏன்..?"
"ஏன்னா.. இந்த ரெண்டு இடத்திலயும் எனக்குக் கிடைக்கிற நிம்மதியும் ஆறுதலும்.. வேற எங்கேயும் கிடைச்சதில்லை.."
"ஹௌ நைஸ்.."
"கோவிலா..?"
"உன் வார்த்தைகள்.."
"ஓ..."
"இப்படி உதட்டைக் குவிக்கிறப்ப நீ அழகாயிருக்கடி.."
"மத்த நேரங்கள்ல அழகில்லையா.."
"அப்ப இதை விட அழகுடி.."
"பேசியே ஆளை மயக்க உங்களால்தான் முடியும்.."
"நான் பேசாம இருக்கிறப்ப என்னைப் பாத்து நீ மயங்கினதில்லையா..?"
மெதுவான அவன் குரலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மிருதுளா.. ஆண்மை நிரம்பிய அவன் முகத்தின் கம்பீரத்தில் அவள் மனம் சிக்கித் தவித்தது.. மயங்கியது.. அவள் கண்களில் தெரிந்த அந்த மயக்கத்தில் உல்லாசமாக அவன் சிரித்ததில் அவளுக்கு வெட்கமாகி விட்டது..
'இவனுக்குத் தெரிந்திருக்கும்..'
தெரியாமலா அவன் கண்களில் தன்னம்பிக்கை பொங்கி வழிகிறது..
"ஆள் மயக்கி.." அவள் வாய் விட்டுச்சொன்னாள்..
"என்ன..? என்ன சொன்ன..?" அவனுக்குப் புரியவில்லை...
அவள் செல்லக் கோபத்துடன் திருப்பிச் சொன்னதும் அவன் கடகடவென்று வாய்விட்டு ரசித்துச் சிரித்தான்.. அந்தச் சிரிப்பில் வெளிப்பட்ட ஆண்மையின் கர்வமான கம்பீரத்தில் அவள் மனம் அசைந்தது..
"அந்தத் திமிர்தானே உங்களுக்கு..?"
"எந்தத் திமிர்..?"
"நான் உங்ககிட்ட மயங்கிக் கிடக்கிறேன்ங்கிற திமிர்.."
"ஹ.. ஆமாண்டி.. அதுக்கு என்ன செய்யப் போற..? வசிய மருந்தை முறியடிக்கிற மருந்தைத் தேடிப் போகப் போறயா..?"
"தேடிப் போனா கிடைச்சிருமா..? அப்படியொரு மருந்துதான் இந்த உலகத்தில இல்லவே இல்லையே.."
"ஹா.. ஹா.."
விக்ரம் கடகடவென்று அவள் சொன்னதை ரசித்துச் சிரித்தான்.. அவன் சிரிப்பில் தெரித்து விழுந்த கவர்ச்சியின் துளிகளில் அவளின் மனம் திளைத்தது..
அவளுடனான அந்தப் பேச்சை விக்ரமுக்குப் பிடித்திருந்தது.. கோவில் என்பதினால் அவள் இடைவெளி விட்டுத் தள்ளி அமர்ந்திருந்தாள்.. அவள் பார்வை
மட்டும் இடைவெளி விடாமல் அவன் மீதே படிந்து படர்ந்திருந்தது.. நொடிக்கொரு முறை அவனைப் பார்த்த அவள் பார்வையின் சிதறல்களில் அவன் மனம் சிக்குண்டிருந்தது.. அடிக்கடி தலையை ஒரு பக்கமாக சாய்த்து அவனைப் பார்த்துச் சிரித்த அவள் சிரிப்பில் அவன் தன் வயமிழந்து கொண்டிருந்தான்..
கூடுதல்தான் இன்பமென்று யார் சொன்னது..?
உணர்வுகள் கூடப் பேசிக் களிப்பதும் இன்பம் தான்.. பேசாமல் மௌனத்தில் கரையமைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும் அது சுகம் தான்..
அந்த சுகமான பேரின்பத்தை அப்போது உணர்ந்தான் விக்ரம்.. பெண் என்பவள் வெளிப்படுத்தும் மென்மையான பரிணாமங்கள் எத்தன்மை வாய்ந்தது என்பதை அவனுக்கு அடுக்கடுக்காக உணர்த்திக் கொண்டிருந்தாள் மிருதுளா..
அவளுடன் வாழும் வாழ்வு இனிதானது.. அந்த இனிமை அவனுக்கு வாய்க்குமா..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -63
இது நீரோடு செல்கின்ற ஓடம் -63
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam63.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam63.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy