இது நீரோடு செல்கின்ற ஓடம் -60

60 தொடுவானின் நிழலாக.. தொடமுடியாமல் உயர்வாயோ.. கடற்கரை மணலில் கால் சரித்து அமர்ந்திருந்தாள் மிருதுளா.. அவள் மடியில் தலை வைத்துப்...


60
தொடுவானின் நிழலாக..
தொடமுடியாமல் உயர்வாயோ..

கடற்கரை மணலில் கால் சரித்து அமர்ந்திருந்தாள் மிருதுளா.. அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த விக்ரமின் முடியைக் கலைந்து விளையாடிக் கொண்டிருந்தன அவள் விரல்கள்.. கலைப்பதும் பின் சீராக்குவதாகுமாக பாடாய் படுத்திக் கொண்டிருந்த அவள் விரல்கள் வசம் தன் சிகையை ஒப்படைத்திருந்த விக்ரமுக்கு அது பரம சுகமாக இருந்தது..
அவள் பேசியபடியே.. அவன் நெற்றியில் விரலால் கோடிழுத்தாள்.. மூக்கு நுனியை நிமிண்டினாள்.. அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.. வலித்ததில் ஏற்பட்ட இன்பத்தில் அவன் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான்.. சிரித்த அவன் இதழ்களை விரலால் அவள் நிரடியபோது அவள் விரலைக் கடித்தான்..
இப்போது வலி கலந்த சுகம் அவளுக்கு கிடைத்தது.. செல்லச் சிணுங்களுடன் உதட்டைச் சுழித்தவள்.. அவன் சட்டைக் காலரின் பட்டனைத் திருகினாள்..
"பிய்த்திரு.." என்றான் அவன் உல்லாசமாக..
அவன் மார்பைத் தடவிய அவள் கையின் மீது அவன் கையை வைத்து அழுத்திப் பற்றிக் கொண்டவன்..
"இங்கேதாண்டி நீ குடியிருக்கிற.." என்றான்..
மிருதுளாவின் முகம் விகசித்தது.. குழந்தையின் கையில் பொம்மையாக.. அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு அவள் மடியில் கிடக்கும் அவனைக் காதலுடன் அள்ளிப் பருகுவதைப் போல அவள் பார்த்தாள்.
"இப்படி நீ பாத்து எத்தனை நாளாச்சு தெரியுமா..?"
அவன் குரலின் ஏக்கத்தில் அவள் கரைந்தாள்..
அவளும்தான் என்ன செய்வாள்..? வீட்டில் வேலியிடப்பட்டு விட்டதை அவளின் பெண் மனம் துல்லியாக உணர்ந்து கொண்டு விட்டது..
நுணுக்கமான மன உணர்வுகள் கொண்டு நெய்யப் பட்டதுதான் பெண்மை... அது உணராத நூதன உணர்வென்று எதுவுமே இந்த உலகில் இருந்ததில்லை..
அந்தப் பெண் மனத்தால் சபாபதியையும். உமாவையும் உணர முடியாதா..?
மிருதுளா நிதானித்தாள்.. வேலியைத் தாண்டாமல் அதற்குள் சிறைபட்டாள்.. பள்ளியில் அவனைச் சந்திக்கலா மென்று அவள் நினைத்தபோது அவள் நினைவை அறிந்தவனைப் போல அவனே தேடிவந்து விட்டான்..
"மிருதுளா டீச்சர்.. உங்கள டெர்ரர் கூப்பிடறாரு.."
நடேசன் வந்து நின்றபோது.. நல்ல வேளையாக அங்கே சங்கீதா மட்டுமே இருந்தாள்..
"என்ன நடேசா.. வேற வேலைய தேடிக்கிட்டாப்புல இருக்கு..?" என்று துக்கம் விசாரித்தாள்..
நடேசனுக்கு தூக்கி வாரிப் போட்டது..
"என்னம்மா விட்ட விடிகாலயில குண்டத் தூக்கிப் போடறிங்க.. வேற வேலையை நான் ஏன் தேடனும்..? எனக்குத்தான் இந்த வேலை இருக்கே.."
"இப்போ இருக்கு.. இனிமேலயும் இருக்குமா..?"
"என்னத்தம்மா செஞ்சு வைச்சேன்..? இப்படி வயித்தில புளியப் போட்டுக் கரைக்கறிங்களே.." நடேசன் அழுது விடுபவனைப் போல ஆகிவிட்டான்..
"பின்னே..? கரெஸ்பாண்டெண்ட் கூப்பிடறாருன்னு சொல்லாம டெர்ரர் கூப்பிடறாருன்னு சொல்ற..?"
"இதுக்காக்கா இப்படிப் பயமுறுத்தினீங்க..? இன்னைக்கு நேத்தாவா இப்படிச் சொல்றேன்..? என்னைக்கு டெர்ரரை நேருக்கு நேராப் பாத்தேனோ.. அன்னையில இருந்து இதத்தான சொல்லிக்கிட்டு இருக்கேன்..?"
"அன்னைக்குப் போல என்னைக்கும் இருக்குமா..?"
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க.. மிருதுளா அதைக் கவனிக்காமல் புயல் வேகத்தில் கரெஸ்பாண் டெண்டின் அறையை நோக்கி விரைந்தாள்.. அவளின் நாடி நரம்பெல்லாம் அவனைத் தனிமையில் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பு கலந்த இன்பம் வியாபித்திருந்தது.. ஓடோடிக் கொண்டிருந்தவளின் எதிரே வந்த அஸிஸ்டென்ட் ஹெட் மாஸ்டர் முகத்தைச் சுளித்தார்..
"ஏ ஹெச் எம் வந்தா வணக்கம் சொல்லனும்கிற கர்ட்டஸியெல்லாம் காற்றோட போயாச்சா..?"
"சாரி சார்.. உங்களைக் கவனிக்கலை.."
"எதிரே வருகிறவனைக் கூடக் கவனிக்காம அப்படி எந்த வேலையை வெட்டி முறிக்க ஓடிக்கிட்டு இருக்கீங்க..?"
"கரெஸ் சார் கூப்பிட்டாராம்.. என்னன்னு கேட்க ஓடிக்கிட்டு இருக்கேன்.."
"ஓ..."
அவர் போட்ட ''வில் எண்பதாயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருந்தன...
"எல்லோரும் கரெஸ் சார் கூப்பிடறாருன்னா ஓடி ஒளிவாங்க.. நீங்க என்னடான்னா அவரைப் பார்க்க ஓடறிங்க.. நீங்க வித்தியாசமானவங்கதான்.."
அவர் கண்களில் தெரிந்த விசமத்தில் மிருதுளாவுக்குள் கோபம் கனன்றது.. பல்லைக் கடித்து தன்னை அடக்கிக் கொண்டாள்..
அந்தப் பள்ளியின் கரெஸ்பாண்டெண்டாக விக்ரம் இருந்தாலும் அவன் நினைத்தவுடன் எந்த ஆசிரியரையும் வேலையை விட்டுத் தூக்கிவிட முடியாது.. அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் வழங்குகிறது.. அதோடு அவர்களுக்கான யூனியன் பலமான கட்டமைப்போடு இருக்கிறது.. அஸிட்டெண்ட் ஹெட் மாஸ்டருக்கு சர்வீஸீம் அதிகம்..
மிருதுளா இழுத்து மூச்சை விட்டு தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்.. ஏ.ஹெச்.எம்மைப் பார்த்து அமைதியாக கேட்டாள்..
"சொல்லுங்க சார்.. நான் இப்ப என்ன செய்யனும்..? ஓடி ஒளியனுமா..? அதுதான் உங்க ஆர்டர்ன்னா தாராளமா ஓடி ஒளிஞ்சுக்கிறேன்.. ஏன் பார்க்க வரலைன்னு கரெஸ்
சார் கேட்டா ஏ.ஹெச்.எம் தான் ஓடி ஒளிஞ்சுக்கச் சொன்னாருன்னு சொல்றேன்.."
அவளின் பதிலில் அவரின் முகம் கருத்து விட்டது.. நேரடியான இந்தத் தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்க வில்லை.. அவளின் நிமிர்வில் அவர் நிலை குலைந்தார்..
அவர் அவளுக்கு சுப்பிரியராக இருந்தாலும்.. அவராலும் அவளை எதுவும் செய்துவிட முடியாது... எப்படி கரெஸ்பாண்டெண்ட்டால் அவர் வேலைமீது கை வைக்க முடியாதோ.. அதைப் போல அஸிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டரான அவராலும் மிருதுளாவின் வேலை மீது கை வைக்க முடியாது..
அவள் அந்தப் பள்ளியில் nவைலக்குச் சேர்ந்து ஓராண்டுக்கும் மேலே ஆகி விட்டது.. அவளது வேலையும் நிரந்தரமாகி விட்டிருந்தது.. அவளும் யூனியனில் ஒரு மெம்பர்.. அவருக்கு யூனியன் பாதுகாப்பைக் கொடுப்பதைப் போல அவளுக்கும் கொடுக்கும்..
மிருதுளா பள்ளியில் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கவில்லை.. அவளுக்கு வகுப்புகள் இல்லாத நேரத்தில் கரெஸ்பாண்டெண்ட் வரச் சொன்னதால் அவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறாள்..
அதைக் குற்றமென்று அவரால் சொல்ல முடியுமா..? சொன்னால் மிருதுளாதான் சும்மா விட்டு விடுவாளா..?
"சாரோட பிள்ளைகள் என்னிடம்தான் டியூசன் படிக்கிறாங்க.. அவர் அதைப் பத்திக் கேட்கக் கூப்பிட்டிருக் கலாம்.. இப்ப என்ன சார்.. நீங்க என்னை தடுத்து நிறுத்தி ஓடி ஒளிஞ்சுக்கச் சொன்னீங்கன்னு கரெஸ்சார் கிட்டச் சொல்லிட்டாப் போச்சு.. எதுக்கும் உங்களோட இந்த அட்வைஸை ஹெச்.எம்.சார் காதிலயும் போட்டு வைச்சிடறேன்.. அவரும் உங்களைப் பாராட்டுவார்.. கரெஸ்சாரும் தேவையில்லாம என்மேல கோபப்பட மாட்டார்.."
ஆனால் அவர்மேல் விக்ரம் கோபம் கொள்வான்.. அவனைப் பார்க்க வரும் பள்ளியின் ஆசிரியையை அச்சுருத்தியதாகச் சொல்லி அவர்மீது நடவடிக்கை எடுப்பான்.. அதற்குப் பள்ளியின் ஹெட்மாஸ்டரும் ஒத்துழைப்பார்..
இதிலிருந்து காப்பாற்ற யூனியனாலும் முடியாது..
"புதுசா வேலைக்கு வர்றவங்க கெட்டிக்காரங்களா இருக்கீங்க..."
"இல்லேன்னா எல்லோரும் தலையில மிளகாயை அரைச்சுருவாங்களே சார்.. அதுக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னுதான் இப்படி.. ஆமாம் சார்.. நான் புதுசுன்னு யார் சொன்னது..? வேலைக்கு வந்து ஒரு வருசத்துக்கும் மேலே ஆகுது.. வேலையும் கன்பர்ம் ஆயிருச்சு.. இப்பவும் நான் புதுசுன்னா.. போன மாதம் வேலைக்குச் சேர்ந்த மரியா டீச்சருக்கு யார் பதில் சொல்றது..? நேத்துதான் வேலையில ஜாயின் பண்ணின ஷாலினி டீச்சரை என்னன்னு சொல்றது..?"
மிருதுளாவின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட்ட குற்றத்திற்காக அவர் மேல் கேள்விக் கணைகளைத் தொடுத்து முற்றுகையிட்டு ஒருவழி பண்ணி விட்டாள் மிருதுளா..
அவர் கேள்விகளால் மூச்சுத் திணறி விட்டார்..
'இனிமே இந்தப் பொண்ண எங்கே பாத்தாலும்.. இதுக்கு எதிர்திசையில ஓடியே போயிரனும்..' மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார்...
"ஓகேம்மா.. நீங்க பழையவங்கதான்.."
"அரதப் பழசுன்னு சொல்றீங்களா..? நான் அதுவுமில்லையே.."
மிருதுளாவின் வார்த்தை மறைமுகமாக நீதான் 'அரதப் பழசு' என்றது.. அதை கண்டு கொள்ளாமல் நகர்ந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ஏ.ஹெச்.எம். அதற்கு மேலும் அங்கே நின்றால் மிருதுளா அடுத்து எதையாவது கேட்டு அவரை நோகடித்து நோன்பு கும்பிட வைத்து விடுவாள் என்பதினால் வேகமாக போய் விட்டார்..
'எங்கிருந்துதான் இதுக்குன்னு கிளம்பி வர்றாங்களோ..'
மிருதளாவுக்கு தலை நோவாக இருந்தது.. இருந்திருந்து ஒரு மாதமா கண்ணால் பார்க்க முடிந்தாலும்.. பிரத்யேகமாக ஒரு வார்த்தை பேச முடியாமல் இருந்த விக்ரமைப் பார்த்து.. அவள் பேசப் போகும் நேரத்திலா இந்த மனிதர் குறுக்கே வந்து நிற்க வேண்டும்..?
விக்ரமின் அறைக்குள் அவள் பிரவேசித்த போது.. அவளுக்காகவே காத்திருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. அவனது கூரிய விழிகளின் துளைக்கும் பார்வையில் அவளது கன்றிச் சிவந்த முகமும் கலங்கிய விழிகளும் தென்பட்டு விட்டன..
"என்ன..?" விசாரித்தான்..
"ஒன்றுமில்லை.." மிருதுளா முகத்தைத் துடைத்துக் கொண்டாள்..
அவ்வளவு அருகாமையில்.. தனிமையில் அவனைச் சந்திக்க முடிந்த ஆனந்தத்தில் அவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது..
தவிப்புடன் அவளது பார்வை அவன் உச்சி முதல் பாதம் வரை ஆசை தீர பார்த்து வைத்தது..
அவளின் அந்தப் பார்வையில் விக்ரமின் மனம் சிறகை விரித்தது.. அவன் எழுந்தான்.. டேபிளைச் சுற்றிக் கொண்டு அவளருகில் வந்தான்.. அவளையே பார்த்த வண்ணம் நெருங்கியவனை ஆவலுடன் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.. இருவர் பார்வையும் பின்னிப் பிணைந்ததில் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாமல் அப்படியே இருவரும் நின்று விட்டார்கள்..
'இது காதல் என்கிற கனவு..
                இனம் காண எண்ணுகிற மனசு..
     இது சேரத் துடிக்கிற வயசுதான்..'
அவர்களின் காதுகளில் அந்த நள்ளிரவின் தோட்டப் பாடல் ஒலித்தது.. விக்ரம் அவள் தோள் தொட்டு அருகில் இழுத்தான்.. மிருதுளா ஒரு விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தான்..
அவனைக் கண்டும் காண முடியாமல்.. பார்த்தும் பேச முடியாமல்.. கிட்டத்தில் இருந்தும் தொட முடியாமல் அவள் தவித்த தவிப்பு கண்ணீராக கரைந்து வழிந்து அவன் சட்டையை நனைத்தது..
விக்ரம் அவளது உச்சந்தலையில் முகத்தை புதைத்து அப்படியே நின்றான்.. அவனது சட்டையின் கண்ணீர் ஈரம் அவனுக்கான அவளின் தேடலைச் சொல்லி அவனைக் கர்வப்படுத்தியது..
அறைக்கு வெளியே கேட்ட காலடி ஓசையில் சட்டென விலகி நின்றாள் மிருதுளா..
விக்ரம் டேபிளில் இருந்த ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு.. அறையில் அவளுக்கு முதுகைக் காட்டியதைப் போல நின்று அதைப் பிரித்தான்..
"சார்.." அறைக் கதவை 'டொக்.. டொக்..' என்று தட்டுவதைப் போல உடைத்து வைத்தான் நடேசன்..
"வா.. நடேசா.."
அப்போதுதான் திரும்புகிறவனைப் போலத் திரும்பினான் விக்ரம்.. உள்ளே வந்த நடேசனின் கையில் கட்டுக் கட்டாக ஃபைல்கள் இருந்தன..
"இது அத்தனையிலயும் உங்க கையெழுத்து வேணுமாம்.. விட்டா சாரைப் பிடிக்க முடியாதுன்னு மூட்டை கட்டி ஹெச்.எம். கொடுத்து அனுப்பிச்சிருக்காரு.."
விக்ரமின் டேபிள்களில் ஃபைல்களை குவித்து வைத்த நடேசன் மிருதுளாவை வியப்பாக பார்த்தான்..
"நீங்கதான சார்... டீச்சரம்மாவ வரச் சொல்லச் சொன்னீங்க..?"
"ஆமாம்.. அதுக்கென்ன..?"
"அவங்களும் வந்து நிக்கிறாங்க.. நீங்க கண்டுக்காம புத்தகத்தப் புரட்டிக்கிட்டு இருக்கீங்களே.."
"கவனிக்கலை.. உட்காருங்க மிஸ் மிருதுளா.."
அப்போதுதான் அவளைக் கவனிப்பதைப் போல விக்ரம் சொல்ல மிருதுளா விக்ரமின் டேபிளுக்கு எதிரே கிடந்த சேர்களில் ஒன்றில் உட்கார்ந்தாள்..
'இனி இவன்.. எதுத்தாப்புல இருக்க இவன் நாற்காலிக்குப் போயிருவான்.. இவனுக்கும் எனக்கும் நடுவில கிடக்கிற இந்த டேபிள உத்துப் பாத்துக்கிட்டு நான் பேசி முடிக்கனும்...'
மிருதுளாவுக்கு வெறுத்துப் போய் விட்டது.. அவள் வடித்து வைத்த ஓவியம் போல அசையாமல் அப்படியே உட்கர்ந்திருக்க.. விக்ரம் நடேசனைப் பார்த்தான்..
"ஏன் நடேசா.. இந்த ஃபைல்களை சரிபார்த்து நான் சைன் பண்ணி முடிக்க ஒரு மணி நேரம் ஆகுமா..?"
"அதுக்கு கூடவே ஆகும்..?"
"அது வரைக்கும் டீச்சரை உட்காரச் சொல்ல முடியுமா..?"
"பாவம்ங்க சார்.. இந்தம்மா ஒருத்தங்கதான் உங்களப் பாக்க பயப்படாம வந்து நிக்கறாங்க.. மத்தவங்கள்ளாம் நீங்க கூப்பிடறிங்கன்னு தெரிஞ்சாலே குளிர் காய்ச்சல் வந்து ஜன்னியில விழுந்துர்றாங்க.. அதுக்காகவாவது இவங்க கிட்ட பேச வேண்டியத்ப் பேசிட்டு காலாகலத்தில அனுப்பி வைச்சிருங்க.."
"செய்துட்டாப் போச்சு.. ஸோ.. நீ இப்பப் போய் மத்த வேலைகளைப் பார்த்துட்டு இரண்டு மணி நேரம் கழிச்சு இந்தப் பக்கம் வா.."
"சரிங்க சார்.."
கல்மிசம் இல்லாத நடேசன் உடனடியாக அந்த இடத்தை விட்டு நீங்கினான்.. விக்ரம்.. டேபிளைச் சுற்றி அவனுடைய சுழல் நாற்காலியில் உட்காரப் போகாமல் மிருதுளாவின் பக்கத்தில் வந்து பின்புறமாக நின்று குனிந்து அவள் தோளைப் பற்றி இறுக்கிக் கொண்டான்.. அவள் தலையில் அவன் முகவாய் படிந்திருக்க.. அவள் தேளைச் சுற்றி அவன் கைகள் படர்ந்தன..
மிருதுளா கண்மூடிக் கொண்டாள்.. அந்த அண்மை அவளுக்கு வேண்டியிருந்தது.. அவனது அணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது.. அவனது ஸ்பரிசத்தை உணர்ந்த அவளின் தேகம் சிலிர்த்தது.. அவளது இமையோரம் பெருகிய நீர் கன்னத்தில் வழிந்தது..

அவளது மனத்துடிப்பை அவனும்.. அவனது மனத்துடிப்பை அவளும் அவதானித்து உணர்ந்த பொன்னான வினாடிகள் அவை.. அவற்றின் மதிப்பை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் மௌனத்தில் உறைந்திருந்தார்கள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -60
இது நீரோடு செல்கின்ற ஓடம் -60
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam60.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/ithuneeroduselkinraodam60.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy