எண்ணியிருந்தது ஈடேற -73

73 கண்ணாடிக் கதவுக்கு அப்பால் ஒளிர்ந்த விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் அரண்மனையின் சுற்றுப்புறம் ஒரு சுற்றுலா ஸ்தலத்தைப் போல ஒளிர்ந்தது...

73


கண்ணாடிக் கதவுக்கு அப்பால் ஒளிர்ந்த விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் அரண்மனையின் சுற்றுப்புறம் ஒரு சுற்றுலா ஸ்தலத்தைப் போல ஒளிர்ந்தது.. தோட்டத்தை ஒட்டிச் சென்ற அகன்ற சாலையின் இருபக்கமும் டூம் விளக்குகள் அணி வகுத்திருந்தன.. தோட்டத்துக்குள் வட்ட வடிவமாகவும்.. முக்கோணமாகவும் அந்தந்த இடங்களின் செடிகளின் வடிமைப்பிற்கு ஏற்ப ஒளிர்ந்த விளக்குகள் ஓவல் வடிவத்தில் இருந்த நீச்சல் குளத்தை அதே வடிவத்தில் சுற்றி வளைத்திருந்தன..
மாடி ஹாலில் ஹீட்டரின் கதகதப்போடு கம்பளியில் புதைந்தபடி சோபாவில் சுருண்டு உட்கார்ந்திருந்த நந்தினி..
"அழகாயிருக்கு.." என்று பிரமித்தாள்..
அவளது ரசிப்பை ரசித்த புன்முறுவலுடன் அவளைப் பார்த்த வீணாவின் பார்வை வாத்சல்யத்துடன் அவளை வருடிக் கொடுத்தது.. தாயின் பார்வையைக் கண்ட ரவிச்சந்திரன்..
"வேணும்ன்னா அவளைத் தூக்கி உங்க மடியிலே உட்கார வைத்துக்கங்கம்மா.." என்று யோசனை சொன்னான்..
ரம்யமாலினி கலகலத்து சிரித்தாள்.. நந்தினிக்கு வெட்கமாகிவிட்டது..
'இவன்தான் என்னைப் பப்பா மாதிரியே ட்ரீட் பண்றான்னா இவனோட அம்மாவையும் அதைப் போலவே ட்ரீட் பண்ணச் சொல்லி வைக்கிறான்.. என்ன ஒரு மாஸ்டர் பிளான்..! பல்லைக் கடித்தாள்..'
"சும்மாயிருடா.. எதுக்கெடுத்தாலும் அவளையே கிண்டல் பண்ணிக்கிட்டு.. எப்படிம்மா இவனை நம்பி வேலை பார்க்க வந்திருக்கே..?" ஆதுரத்துடன் விசாரித்தாள் வீணா..
"தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் ஆண்ட்டி.." உண்மையான ஆதங்கத்துடன் சொன்னாள் நந்தினி..
"கேட்டுக்கிட்டியா அண்ணா..?" மறுபடியும் கலகலத்துச் சிரித்தாள் ரம்ய மாலினி..
"ஊஹீம்..?" ரவிச்சந்திரனின் புருவங்கள் உயர்ந்து இறங்கியதில் நந்தினிக்குள் மின்சாரம் பாய்ந்தது..
முன் எப்போதையும் விட அந்த நொடியில் அவன் வெகு கவர்ச்சியாக இருந்து தொலைத்தான்.. குளிர் மிகுந்த அந்த இரவில் அவன் தாயின் மடியை விட அவனது மடி வெகு சிறப்பானதாக இருக்கும் என்று அவளது மனம் ஜொள்ளி வைத்தது..
அவள் மனதில் ரோஜா திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி விரிந்தது.. காஷ்மீரின் குளிர் நதியில் சால்வைகளைப் போர்த்தியபடி அரவிந்தசாமியும் ரோஜாவும் படகில் மிதக்கிறார்கள்.. குளிர் தாங்காமல் கைகள் இரண்டையும் தேய்த்துக் கன்னங்களில் வைத்து சூடேற்றிக் கொள்ளும் மதுபாலா இயல்பாக எழுந்து அரவிந்தசாமியின் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள்.. அரவிந்தசாமியின் சால்வை இருவரையும் போர்த்திக் கொள்கிறது.. படகோட்டி படகில் எவரும் இல்லாததைப் போல எங்கோ பார்த்தபடி அவர்களின் தனிமையைக் கலைக்காமல் படகைச் செழுத்துகிறான்..
'அதுவும் ஓர் பனி இரவுதான்.. இந்த இரவைப் போல..'
நந்தினியின் கண்கள் ரவிச்சந்திரனை வட்டமிட்டன.. அவளது பார்வை அவனை மொய்த்தது.. அவனது கவர்ச்சியில் அவள் மனது சிதிலமாகி சின்னாப் பின்னமானது.
'ராஸ்கல்..! இவனும் அரவிந்தசாமியைப் போலதான் இருந்து தொலைக்கிறான்.. ஆம்பளைக்கு எதற்கு இத்தனை அழகு..?'
இம்சையுடன் பெருமூச்சு விட்டாள் நந்தினி.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரனின் பார்வை அவளது தடுமாற்றத்தை துல்லியமாக பதிவு செய்து கொண்டிருப்பதை கவனிக்கத் தவறினாள்..
அவள் மனக் கண்ணில் காட்சி விரிந்தது.. காஷ்மீரின் நதி வயநாட்டின் நதியாக மாறிப் போனது.. அங்குதான் படகுகள் இருக்குமா என்ன..? கேரளத்தில் படகுகளுக் கென்ன பஞ்சமா..? காஷ்மீரில் படகு வீடுகள் இருந்தால் கேரளத்தில் படகு பங்களாக்களே இருக்குமாக்கும்..
அதுபோன்ற படகு ஒன்றில் அவளும், ரவிச்சந்திரனும் உட்கார்ந்திருக்கிறார்கள்.. இது போன்ற பனியிரவு.. குளிர்கிறது.. சால்வையையும் தாண்டி ஸ்வெட்டர்களை ஊசி முனைகளால் துளைக்கிறது.. ரவிச்சந்திரனின் பரந்த மடி அவளை உட்காரச் சொல்லி அழைக்கிறது.. படகில் படகோட்டி இருக்க வேண்டுமா என்று யோசித்தாள்.. தேவையில்லையென்று தோன்றியது.. கற்பனையில் வரும் படகுக்கு படகோட்டி எதற்கு..? வேண்டவே வேண்டாம்.. படகில் அவளும் ரவிச்சந்திரனும் மட்டும்தான் இருக்க வேண்டும்..
ரவிச்சந்திரனின் பார்வையின் அழைப்பில் நந்தினி எழுந்து கொள்கிறாள்.. அவன் மடியில் உட்கார்ந்து மார்போடு ஒன்றிக் கொள்கிறாள்.. கதகதப்பான ரவிச்சந்திரனின் மார்பு குளிருக்கு வெதுவெதுப்பான கணப்பாக மாறிப்போகிறது..
"என்ன..? எழுந்திரிச்சுட்டீங்க..?"
ரம்யமாலினியின் கேள்வியில் தூக்கிவாரிப் போட்டது நந்தினிக்கு.. கொட்டக் கொட்ட விழித்தபடி சுற்று முற்றும் பார்த்தாள்.. அதே குளிர்.. அதே ஸ்வெட்டர்..
அதே சால்வை.. எதிரில் அழைக்கும் பார்வையுடன் ரவிச்சந்திரன்.. இடம் மட்டும் நதியும், ஓடமுமல்ல.. வயநாட்டு அரண்மனையின் மாடி ஹால்..
'கடவுளே..! எனக்கு என்ன ஆச்சு..?'
அந்தக் குளிரிலும் வியர்த்துப் போனாள் நந்தினி.. சுயகட்டுப் பாட்டையிழந்து எழுந்து நிற்கும் அளவிற்கா ரவிச்சந்திரன் அவள் மனதை பாதித்திருக்கிறான்..?
"இல்லை.. அரண்மனைக்கு வெளியே பார்க்க டூரிஸ்ட் ஸ்பாட் போல இத்தனை அழகாயிருக்கே.. சுற்றிப் பார்க்கலாமான்னு தோணுச்சு.. அதான்.." தடுமாறினாள்..
துளைக்கும் ரவிச்சந்திரனின் பார்வை 'அப்படியா..?' என்று கேலியாக வினவியது.. அவன் பக்கமே பார்க்கக் கூடாது என்று ரம்யமாலினியின் பக்கமாகத் திரும்பி அமர்ந்து கொண்டாள்..
"உங்க பச்சை மண்ணோட ஆசையைக் கேட்டிங்களாம்மா..? இந்தக் குளிரில் தோட்டத்தில வாக் போகப் போகிறாங்களாம்.. அனுப்பி வைக்கலாமா..?" இடக்காக கேட்டான் ரவிச்சந்திரன்..
"விளையாடாதே ரவி.." கண்டிப்புடன் பேசினாள் வீணா..
"நந்தினி தமிழ்நாட்டில இருந்து வந்திருப்பவள்.. வயநாட்டுக் குளிரைப் பற்றி அவளுக்குத் தெரியாது.. நீ விளையாட்டுத்தனமாக எதையாவது சொல்லப் போக அவள் அதை நிஜமென்று நம்பி நைட் டயத்தில தோட்டத்துப் பக்கம் போய்விடப் போகிறா.."
"இவதானே..? கட்டாயம் போவா.. எதைச் செய்யனுமோ அதைச் செய்ய மாட்டா.. எதைச் செய்யக் கூடாதோ.. அதை ஓடோடிப் போய் செய்வா.."
'ஓடோடி..' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அவன் பேசியதில் நந்தினிக்கு 'சுருக்' கென்று ஆகிவிட்டது.. அவளுக்கு 'ஓடி வந்தவள்..' என்ற பட்டத்தை அளிப்பதிலேயே அவன் குறியாக இருந்து தொலைக்கிறானே..
"ஏன் செய்யக் கூடாதுன்னு எடுத்துச் சொன்னா செய்ய மாட்டா.. அதைச் செய்யாம அவளைக் கிண்டல் பண்ணாதே.."
"நான் சொன்னா இவ கேட்க மாட்டாம்மா.. சொல் பேச்சுக் கேட்காத பெர்சனல் செக்கரட்டரியை வைத்துக்கிட்டு எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறேனோ.. எண்ட குருவாயூரப்பா..! நீதான் ரட்சிக்கணும்.."
"ரட்சிப்பார்.. ரட்சிப்பார்.." என்ற நந்தினி வீணாவும், ரம்யமாலினியும் அங்கே இருப்பதை மறந்து விட்டு உதட்டைக் கோணி ரவிச்சந்திரனுக்கு அழகு காட்டினாள்..
பெர்சனல் மேனேஜர் என்று சொல்லாமல் பெர்சனல் செக்கரட்டரி என்று சொல்லியே ஒரு வழி பண்ணுகிறானே என்ற கோபம் அவளுக்கு.. அவளை தெரிந்து வைத்திருநத ரவிச்சந்திரனின் கண்களில் மின்னல் வர, வீணாவும் ரம்ய மாலினியும் சிரித்தார்கள்..
இரவு உணவுக்குப் பின்னால் நந்தினியை அவளது அறைக்கு அனுப்பி வைக்காமல் மாடி ஹாலில் நிறுத்தி வைத்து பேச்சில் பிடித்துக் கொண்டார்கள்.. நந்தினிக்குத்தான் அரட்டையடிப்பதென்றால் அல்வா சாப்பிடுவதைப் போல இருக்குமே.. வக்கணையாக சோபாவில் கால்களை மடித்து சம்மணம் கட்டி உட்கார்ந்து விட்டாள்.. அவள் பேசும் அத்தனை பேச்சுக்களையும் வீணாவும் ரம்ய மாலினியும் ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்க ரவிச்சந்திரன் மட்டும் அவளையே குறுகுறுவெனப் பார்த்து இன்பமான இம்சையைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.. வெறும் பார்வையில் உடல் முழுவதும் வருடிக் கொடுக்கும் இன்பத்தைக் கொடுக்க முடியுமா..? அவன் கொடுத்துக் கொண்டிருந்தானே.. நந்தினி தவித்துப் போனாள்..
"அண்ணா, இவங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.." என்றாள் ரம்யமாலினி..
"ஏன் பிடிக்காது..? பாஸாச்சேங்கிற பயமில்லாம இவ செய்கிற கோணங்கிச் சேட்டையைக் கண்டா இவளைப் பிடிக்கத்தானே செய்யும்..? ம்ஹீம்.. என்னத்தைச் சொல்ல..?" போலியாக அலுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"போதும்டா.." சிரித்தபடி மகனின் கையில் தட்டினாள் வீணா..
"அடிக்கறீங்களா ஆண்ட்டி..?" ஆர்வத்துடன் கேட்டாள் நந்தின..
"கேட்டுக்கங்கம்மா.. இவ பச்சை மண்ணாம்.. நான் அடி வாங்கறதைப் பார்க்க அத்தனை ஆசை..! இவளைப் போல செக்கரட்டரி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கனும்.."
அமர்த்தலாக ரவிச்சந்திரன் சொன்னதில் நந்தினியின் முகத்தில் குடம் குடமாய் அசடு வழிந்தது.. அதை சுவராஸ்யமாக அவன் வேடிக்கை பார்த்ததில் ரம்ய மாலினி பொங்கிச் சிரித்தாள்..
"அம்மா.. இவங்க ரெண்டு பேரும் பேசறதைக் கேட்டுக்கிட்டிருந்தா வயிறுதான் வலிக்கும்.."
மகள் சொன்னதை ஆமோதிப்பதைப் போல தலையாட்டிய வீணாவும் சிரித்துக் கொண்டுதான் இருந்தாள்.. நந்தினியின் முகத்திலிருந்து அறியாமை கலந்த துறுதுறுப்பு அவளை ஈர்த்தது..
"என்னை ஆண்ட்டின்னு கூப்பிடக் கூடாது நந்தினி.."
அன்பாகத்தான் வீணா சொன்னாள்.. நந்தினிக்குத் தான் 'திக்'கென்று ஆகிவிட்டது.. வேறு என்ன உறவுமுறையைச் சொல்லி கூப்பிடச் சொல்கிறாள் என்று பயந்து போனாள்..
'அம்மான்னு கூப்பிடம்மா.. எனக்கு ரம்யமாலினியும் நீயும் ஒன்றுதான்னு சொல்லிருவாங்களோ.. என்னங்கடா இது.. நந்தினிக்கு வந்த சோதனை..? இந்த குருவாயூரப்பன் வயநாட்டில இருக்கிற ரவிச்சந்திரனைத்தான் காப்பாத்து வாரா..? தமிழ்நாட்டில பிறந்த நந்தினியை அம்போன்னு விட்டுருவாரா..?'
ரம்யமாலினியின் போஸ்ட் தனக்கு வேண்டாம் என்று எப்படிச் சொல்வது என்று பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் நந்தினி.. யாருக்கு வேண்டும் அந்த போஸ்ட்..? ஆணழகன் ரவிச்சந்திரனை 'அண்ணா' என்று கூப்பிட எவள்தான் முன் வருவாள்..? முதலில் அவள் முன் வருவாளா..? ரவிச்சந்திரனை அவள் காதலிக்க வில்லைதான்.. அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் கனவில் இல்லைதான்.. அதற்காக அவனை 'அண்ணா' என்றழைக்கும் அளவிற்கு பாசமலராகவும் இல்லை.. ரம்யமாலினியே பாசமலரை வளர்க்கட்டும்.. நந்தினிக்கு அது தேவையில்லதா வேலை.. ஆள் மயக்கி ரவிச்சந்திரனை அண்ணா என்றழைக்கும் கொடுமைக்கு ஆளாவதை விட வயநாட்டு மலையுச்சியிலிருந்து பேகல் போர்ட் கோட்டை மீது குதித்து விடலாம்..
'அங்கேதானே அரவிந்தசாமி உயிரே.. உயிரே.. வந்து என்னோடு கலந்து விடுன்னு பாட்டுப் பாடினார்..'
"ஏய்ய்.. அரட்டை.."
அவளைக் கூப்பிட்ட ரவிச்சந்திரனின் கண்களில் சிரிப்பிருந்தது.. கண்டு கொண்டானோ என்று சம்சயம் கொண்டாள் நந்தினி.. அவனாவது.. கண்டு கொள்ளாமல் இருக்கிறதாவது.. அவளை ஊன்றிப் பார்க்கும் தூண்டில் பார்வை உன்னை நானறிவேன் என்று கெக்கலி கொட்டிச் சிரிக்கிறதே..
"எத்தனைதரம்தான் சொல்வது..? இப்படி டீப்பாத் திங் பண்றதைப் போல போஸ் கொடுக்காதே.. சிரிப்புச் சிரிப்பா வருது.. இல்லே ரம்யா..? ஹா.. ஹா.."
"ஆமாண்ணா.. கி..கி..கி.."
அண்ணனும் தங்கையும் சிரித்ததில் இந்த அளவுக்கு காமெடி பீஸாகி விட்டோமேயென்று நொந்து போனாள் நந்தினி..
"நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே.. இப்படியாடா ஒருத்தி அகப்பட்டா பலிகடா சிக்கிருச்சுன்னு மஞ்சத் தண்ணீயை ஊத்துவீங்க..?" சிரித்துக் கொண்டே பிள்ளைகளை கடிந்தாள் வீணா..
அவள் கடிந்து பேசியதில் நந்தினிக்கும் சந்தோசம்தான் என்றாலும் அவளும் பிள்ளைகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சிரித்ததில் செமத்தியான வருத்தம்.. அந்த வருத்தத்தை..
"ஆண்ட்டின்னு கூப்பிட்டா யாரோ மாதிரி தள்ளித் தெரியும்மா.. அத்தைன்னு சுத்தத் தமிழில் கூப்பிட்டா எனக்கு நம்ம ஊரில இருக்கிறதைப் போல சந்தோசமாயிருக்கும்.." என்று சொல்லி துரத்திவிட்டாள் வீணா..
அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம்..
"ஆகட்டும் அத்தை.." என்று தன் முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி மகிழ்ந்து போனாள் நந்தினி..
"இவ பச்சை மண்ணேதாண்டா.." பரிவுடன் வீணா சொல்ல..
'அப்படியா..?' என்பதைப் போல புருவங்களை உயர்த்தி இறக்கி நந்தினியை ஆழ்ந்த பார்வை பார்த்து கிறங்கடித்தான் ரவிச்சந்திரன்..
அவளது மகிழ்ச்சியை அவன் அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எச்சரிக்கையுணர்வில் உஷாரானாள் நந்தினி..
'இவனுக்கு உடம்பெல்லாம் கண்.. இவன் அத்தை மகனானதில் நான் மகிழ்ந்து போறேன்னு தப்புக் கணக்குப் போட்டிருவான்..'
அது தப்புக் கணக்கா என்று அவளது மனச்சாட் கேள்வி கேட்டதில் அதன் மென்னியைப் பிடித்துத் திருகி விடும் ஆத்திரம் வந்தது அவருக்கு.. அதென்ன அவள் சைட் அடிப்பதை மட்டும் ரவிச்சந்திரனும் அவளது மனச்சாட்சியும் உடனுக்குடனே கண்டு பிடிப்பது..? அவள் மட்டுமா சைட் அடிக்கிறாள்...? ஊரில் எத்தனையோ பேர் சைட் அடிக்கிறார்கள்.. அவர்களை விட்டுவிட்டு நந்தினியை மட்டும் அரட்டுவதா..?
"கேரளாவில குளிர் அதிகமாயிருக்கும் நந்தினி.. வயநாட்டைப் பற்றிச் சொல்லவே வேணாம்... இது மலைபிரதேசம்... குளிரில் விறைந்து விடுவோம்.. எங்களுக்கு இது பழக்கம்.. உனக்குப் பழக்கமில்லைல்ல.. அதனால நைட் டயத்தில தோட்டத்தைப் பார்க்கனும்னு ஆசையிருந்தா இப்படி கணகணன்னு ஹீட்டரைப் போட்டுட்டு பாதுகாப்பா மாடி ஹாலில உட்கார்ந்து வேடிக்கை பாரு.. பகல் நேரத்தில தோட்டத்தைச் சுற்றலாம்.. என்ன..?"
சிறு குழந்தைக்குச் சொல்வதைப் போலச் சொன்னாள் வீணா.. அவள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும் போல நந்தினிக்கு பாசம், பாசமாக இருந்ததால் பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள்..
"பரவாயில்லையே.. உங்க சொல் பேச்சைக் கேட்கிறாளே... மல்லுக் கட்டறதெல்லாம் என்னிடம்தான் போல.." வியந்து போனான் ரவிச்சந்திரன்..
"எப்பப் பார்த்தாலும் பாஸ், பாஸ்ன்னு பயம் காட்டிக் கிட்டு இருந்தா அப்படித்தான்.. நீ பயப்படாதேம்மா.. இவன் உன்னை பயம் காட்டினா என்னிடம் சொல்லு.. காதைத் திருகி தலைமேலே ஒரு கொட்டு வைக்கிறேன்.."
வீணா அளித்த உத்திரவாதம் நந்தினிக்குப் பிடித்தமானதாக இருந்ததில்.. "ஓகே அத்தை.." என்று உற்சாகமாக தலையை ஆட்டினாள்..
ரவிச்சந்திரன் பார்த்த பார்வை குளிரையும் தாண்டி அவளுக்குள் ஊடுறிவி திணற வைத்தது..
"எங்க அம்மாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு என்மேல தாக்குதல் நடத்தத் திட்டம் போடற போல.." என்றான் அவன்..
"பின்னே..? இத்தனை நாளா உங்களிடம் தனியா மாட்டிக்கிட்டு இருந்ததினாலதான அரட்டிக்கிட்டே இருந்தீங்க..? இப்ப அப்படியில்லைல்ல.. அத்தையே எனக்கு சப்போர்ட் பண்ணியாச்சு.. இனி மிரட்டினா அவ்வளவுதான்.." நந்தினி மிரட்டினாள்..
"என்ன செய்வ..?" அவளையே பார்த்தபடி கேட்டான் ரவிச்சந்திரன்..
நந்தினியின் உடல் சூடானது.. அவனை நேருக்கு நேர் பார்ப்பதை அவள் தவிர்த்தாள்.. அவன் பார்வையைச் சந்திக்கும் திராணியில்லாமல் தவித்தாள்.. ஒரு மனிதன் அழகனாக இருந்து வைக்கும் ஆணவத்தில் இப்படியா பார்த்து வைப்பான்..? பக்கத்தில் அம்மாவும், தங்கையும் இருக்கிறார்கள் என்ற அறிவு வேண்டாமா..?
"அத்தையிடம் பற்ற வைத்து விடுவேன்.." அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் நந்தினி..
"உங்க முன்னாலேயே என்னை எப்படி பிளாக் மெயில் பண்ணுகிறான்னு பாருங்கம்மா.. இவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க.."
"அப்படித்தான் செல்லம் கொடுப்பேன்.. போடா டேய்ய்.. நீ வாடா செல்லம்.."
வீணா கை நீட்ட சற்றும் யோசிக்காமல் அவள் கைகளுக்குள் புகுந்து கட்டிக் கொண்டாள் நந்தினி.. வீணாவின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தவளின் விழிகளோடு விழி கலந்தான் ரவிச்சந்திரன்.. அவன் பார்வையில் தெரிந்த சொந்தத்தில் திகைத்துப் போனாள் நந்தின.. மருண்ட அவள் விழிகளை பிரியத்துடன் பார்த்தவனின் பார்வையில் பிரேமம் வழிவதைப் போன்ற பிரமை அவளுக்கு உண்டானது..
'சீச்சீ.. அப்படியிருக்காது..' தனக்குள் சொல்லிக் கொண்டாள் நந்தினி..
'இவன் பார்க்காத பெண்ணா..? உலக அழகிகளைப் பார்த்திருப்பான்.. பழகியிருப்பான்.. மற்றவர்களை விட்டு விடலாம்.. இந்த அஜந்தாவின் அழகுக்கு ஈடாவேனா நான்..? சும்மா ஏதோ தோணுது..'
தலையைக் குலுக்கி மறுத்தவளை வினோதமாக பார்த்தாள் வீணா..
"என்னம்மா ஆச்சு..? நீயா தலையைக் குலுக்கிக்கற..?"
'அடடா.. மைண்ட் வாய்ஸீன்னு நினைச்சு சுவுண்டு வாய்ஸில பேசறததைப் போல மனசுக்குள்ள தலையாட்டறதா நினைச்சு நிஜமாவே தலையாட்டித் தொலைச்சிட்டேனே.. இப்ப இவங்க என்னை மறை கழண்ட கேஸீன்னு நினைச்சிட்டா என்ன பண்ணுவேன்..?' திருதிருத்த நந்தினி என்ன செய்வதென்று தெரியாமல் ரம்ய மாலினியைப் பார்த்து..
"ஹி.. ஹி.." என்று ஒரு மார்க்கமாக சிரித்து வைத்தாள்..
"என்ன அண்ணா இது..?" ரம்யமாலினி பயந்து போனவளைப் போல தமையனிடம் கேட்டு வைக்க.. அவன் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல்..
"நான் சொல்லலை..? இவளை புத்திசாலின்னு நினைச்சு ஏமாந்திராதீங்கன்னு சொன்னாக் கேட்கனும்.. இவ மறை கழண்ட கேஸ் ரம்யா.." என்று நந்தினி பயந்ததை ஊர்ஜிதம் செய்தான்..
'கன்பர்மே பண்ணிட்டானே..' பல்லை நறநறத்த நந்தினி.. வீணா அவளைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவளிடமும் ஒரு..
"ஹி.. ஹி.." யை உதிர்த்து வைத்தாள்..
"பார்த்துங்க அம்மா.." என்றான் ரவிச்சந்திரன்..
"பார்த்துக்கிட்டுத்தாண்டா இருக்கேன்.." மகனை முறைத்தாள் வீணா..
"ஏம்மா உளருகிறது அவ.. உதை வாங்கறது நானா..? இந்த முறைப்பை அங்கே முறைக்கனும்.. லூஸீ மாதிரி கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வைக்கிறா.. மழையில நனைஞ்ச ஆட்டுக்குட்டி மாதிரி தானாத் தலையைக் குலுக்கிக்கிறா.. இதையெல்லாம் நீங்க ஏன்னு கேட்க மாட்டிங்க.. என்கிட்டப் பார்த்துக்கிட்டுத்தாண்டா இருக்கேன்னு முறைப்பீங்க.. அப்படி என்னத்தைப் பார்த்துட்டிங்க..?"
"நீ அவளைப் பாடாய் படுத்தறதைப் பார்த்துக் கிட்டுத்தான் இருக்கேன்.. நீ வாம்மா.. உனக்கு நான் வேலை போட்டுத் தரேன்.. இவன் கொடுக்கிற வேலை உனக்கு வேணாம்.."
வீணா நந்தினியை இழுத்துக் கொண்டாள்... அவளது தோளில் தலை சாய்த்துக் கொண்ட நந்தினிக்கு வெந்நிலாவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டதைப் போல இருந்தது.. வீணாவிடம் சீராடியபடி ரவிச்சந்திரனைப் பார்த்தவளின் கண்கள்..
'படவா..!' என்று கனல் கக்கின..
'மறை கழண்ட கேஸ்ன்னா சொன்ன..? இருக்குடா உனக்கு..'
"ஊஹீம்..?" வாய் விட்டு அவன் கேட்டதும்..
'போச்சுடா..' என்று மனதுக்குள் அலறினாள் நந்தினி.

சுதாரித்து அவள் திரும்புவதற்குள் குறுகுறுவென அவள் மீது ஊறும் பார்வையுடன் புருவங்களை உயர்த்தி இறக்கி அவளை மயங்கவைத்தான் அந்த மாயவன்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,42,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -73
எண்ணியிருந்தது ஈடேற -73
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera73.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera73.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy