எண்ணியிருந்தது ஈடேற -60

60 பனிப்புகை சாம்பல் வண்ணத்தில் மலை முகடுகளில் முகாமிட்டு அதை மறைத்துக் கொண்டிருந்தது.. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற த...

60


பனிப்புகை சாம்பல் வண்ணத்தில் மலை முகடுகளில் முகாமிட்டு அதை மறைத்துக் கொண்டிருந்தது.. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற தேயிலைப் பாத்திகளும் செடி கொடிகளும் தெரிந்தன... நுரை பொங்கும் பாலாறு போன்ற
அருவி மலையுச்சியிலிருந்து குதித்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.. பூங்காவனம் போன்ற தோட்டம் சுற்றியிருக்க அதன் மத்தியில் அரண்மனை போன்ற பங்களாவும்.. அதையொட்டிய நீச்சல் குளமும் இருந்ததை மாடி பால்கனியில் இருந்து பார்த்த நந்தினிக்கு இதுவல்லவோ சொர்க்கம் என்று தோன்றியது..
மாடி ஹால் பரந்து விரிந்து பெரிதாக இருந்தது.. இங்கும் ஆங்காங்கே குழுவினராய் அமர்ந்து அரட்டையடிக்கவோ கலந்து பேசவோ தோதாக சோபாக்கள் போடப் பட்டிருந்தன.. பால்கனியிலும்.. ஹாலிலும் கண்ணாடி கதவுகள் இருந்தன.. நந்தினியும் ரவிச்சந்திரனும் வந்த சேரும்வரை வராத மழை அவர்கள் வந்து இறங்கிய கொஞ்ச நேரத்தில் சடசடத்து பொழிய ஆரம்பித்து விட்டது..
"இங்கே மழையில்லாம இருந்தாத்தான் அதிசயம்.." என்று சொன்னாள் வீணா..
"ஸ்வெட்டர் சால்வையெல்லாம் இருக்கில்ல.. இல்லைன்னா ரம்யாவிடம் வாங்கிக்க.." என்று அக்கறை காட்டினாள் யாழினி..
"எல்லாம் என்னிடம் இருக்கு பாட்டி.." நன்றியுணர்வுடன் கூடிய கூச்சத்துடன் மறுத்தாள் நந்தினி..
"இருக்கட்டும்.. எது வேண்டுமானாலும் நந்தினி தயக்கப்படாம கேட்டு வாங்கிக்கனும்.. மனசிலாயி..?" பரிவுடன் சொன்னாள் யாழினி..
"ஆகட்டும் பாட்டி.." என்று தலையை ஆட்டினாள் நந்தினி..
"நந்தினிக்கு மாடியில உள்ள கெஸ்ட் ரூமைக் காட்டு ஓமனா.. நந்தினியோட பொருள்களை அங்கன வைக்கனும்.. அறிஞ்சோ.."
"ஞான் அறியும் அம்மே.."
ஓமனா நந்தினியின் பெட்டியை உருட்டியபடி முன்னே செல்ல நந்தினி ரவிச்சந்திரனைப் பார்த்தபடி எழுந்து தயக்கத்துடன் ஓமனாவைப் பின் தொடர்ந்தாள்..
தாயைப் பிரிந்து செல்லும் குழந்தையின் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.. படியில் ஏறும் போது திரும்பிப் பார்த்தாள்..
'நீ போ.. நான் இப்போ அங்கே வந்து விடுவேன்..' ரவிச்சந்திரன் சைகை செய்தான்..
நந்தினியின் முகத்தில் தைரியம் வந்தது.. தயக்கம் அகன்றவளாக அவள் ஓமனாவைப் பின் தொடர்ந்தாள்.. மாடி மற்றொரு மாளிகை போல் இருந்ததில் பிரமித்தாள்.. ஹாலின் கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் கொட்டிய மழையில் ஜில்லென ஆனாள்..
ஹாலுக்கு அடுத்து வரிசையாக இருந்த அறைகளில் ஒன்றை நந்தினிக்காக திறந்து விட்ட ஓமனா நந்தினியின் பெட்டியை உள்ளே உருட்டிக் கொண்டு போனாள்..
முன்புறம் வரவேற்பறை.. அடுத்து பெரிய படுக்கையறை.. அதில் நான்கு நபர்கள் படுத்து உருளும் வகையில் போடப்பட்டிருந்த கட்டில்.. படுத்தால் அமிழ்ந்து விடுவதைப் போன்ற நுரை மெத்தை.. வரவேற்பறையிலும், படுக்கையறையிலும் இருந்த சோபாக்கள்.. படுக்கை யறையை ஒட்டிய உடை மாற்றும் அறை.. அதில் இருபக்க சுவர் முழுவதும் பதிக்கப்பட்டிருந்த சுவர் அலமாரிகள்.. நடுவில் ஆள் உயரக் கண்ணாடியுடன் இருந்த டிரஸ்ஸிங் டேபிள்.. உடைமாற்றும் அறையை ஒட்டியிருந்த குளியலறை என்று 'யாழ்' ஹோட்டலின் அறையை விட அழகானதாக இருந்தது அந்த அறை..
"ஈ ரூம்தான் நந்தினி அம்மேயிண்ட ரூம்.." என்றாள் ஓமனா..
"தேங்க்ஸ் ஓமனா.." என்றாள் நந்தினி..
"எதுக்கானு நந்தினி அம்மே தேங்க்ஸ்ஸீன்னு பறயறது..?"
"என் பெட்டியை கொண்டு வந்தில்ல.. அதுக்கு.."
"அது எண்ட ஜோலி அம்மே.."
"அம்மேயா..?" நந்தினியின் முகம் அஷ்ட கோணலானது..
"அதாணு அம்மே.."
"எனக்கென்னவோ ஆட்டுக்குட்டி 'மே, மே'ன்னு சொல்றதைப் போலவே இருக்க.. உனக்குப் புண்ணியமாப் போகும் ஓமனா.. உன் மரியாதை மனதில் இருந்தால் போதும்.. இப்படி 'அம்மே'ன்னு விளிக்கிறதை விட்டிரு.."
நந்தினியின் பேச்சில் ஓமனா சிரித்தாள்.. அவளுக்கு நந்தினியை பிடித்து விட்டது என்பது சுருக்கமில்லாமல் விரிக்கப் பட்டிருந்த படுக்கை விரிப்பை அவள் நீவி விட்டதிலிருந்தே தெரிந்தது..
"நீங்க வல்லிய சுந்தரி நந்தினி மேம்.."
"ஆரானு..? ஞானா..?"
"ஐ.. நந்தினி மேம் மலையாளத்தில சம்சாரிக்கானு.."
"வேற வழி..? தோ பாரு ஒமனாக்குட்டி.."
"ஓமனாக்குட்டி..? எண்ட முழுப்பேரும் நந்தினி மேம் அறியுமோ..?"
இதற்கு வெற்றிலையில் மை போட்டு பார்க்க வேண்டுமா என்றிருந்தது நந்தினிக்கு.. இந்த திவ்ய பிரபஞ்சத்தில் இருக்கும் மலையாள தேசத்தில் தடுக்கி விழுந்தால் ஓர் ஓமனாக் குட்டி எழுப்பி விடுவாள் என்பதை சினிமாக்கள் செப்பியிருக்கின்றனவே..
"அறியும்.. இப்ப அது பேச்சில்லை ஓமனா.. என்னைவிட வல்லிய சுந்தரி நம்ம யாழினிப் பாட்டிதான்.. அதனால என்னை வல்லிய சுந்தரின்னு செப்பறதை நிப்பாட்டிக்க.."
நந்தினியின் பேச்சில் ஓமனா வாய் பொத்திச் சிரித்தாள்.. அடக்க மாட்டாமல் அவள் சிரிக்கும் அளவுக்கு தான் அப்படி என்ன வல்லிய ஜோக்கை சம்சாரித்து விட்டோம் என குழம்பிப் போனாள் நந்தினி..
"நந்தினி மேமுக்கு எந்தக் காரியம் ஆகனு மின்னாலும் இந்த ஓமனாக் குட்டியை விளிக்கனும்.."
"அதுக்கென்ன ஓமனா.. விளிச்சுட்டாப் போச்சு.. நேத்தில இருந்து புதுவருசம் பிறக்குதுன்னு நான் முழிச்சுட்டேனா.. தூக்கம் தூக்கமா வருது.. நாம அப்புறமா சம்சாரிக்கலாமா..?"
ஓமனா அதற்கும் பொங்கிச் சிரித்தாள்..
'என்னடா இது வம்பாப் போச்சு.. ஈ மலையாள பெண் குட்டி ஞான் எதைச் சம்சாரித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்குது.. நகர மாட்டேங்குது.. எண்டே மலையாள பகவதி.. ஈ பெண் குட்டியை இவ்விடத்தில இருந்து அகற்றி ஞான் குளித்து துணி மாற்ற வகை செய்ய வேண்டும் அம்மே..'
நந்தினியின் மனம் புலம்பிய புலம்பலில்.. தான் இந்த அளவுக்கு மலையாளத்தில் பாண்டித்யம் பெற்று விட்டோமா என்று புளகாங்கிதப் பட்டுப் போனாள் நந்தினி..
"ஓமனா.. நீ இங்கேயே நின்றுட்டாயா..?"
ரம்ய மாலினி வாசலில் இருந்து அழைத்தாள்.. திரும்பிப் பார்த்த நந்தினி.. அது ரம்ய மாலினியின் வீடு என்பதை மறந்து போனவளாக..
"அங்கேயே ஏன் நிற்கறீங்க.. உள்ளே வாங்க ரம்யா.." என்று உபசரனையாக அழைத்தாள்..
அழைத்த பின்புதான் அது ரம்ய மாலினியின் வீடு.. நந்தினி அங்கே விருந்தாளி என்ற விவரம் நந்தினியின் மனதில் உதித்தது.. ரம்ய மாலினி என்ன நினைத்துக் கொள்வாளோ என்று கவலை கொண்டாள்..
ரம்ய மாலினி எதையும் நினைத்துக் கொள்ள வில்லை..
"தேங்க்ஸ்.." என்றபடி உள்ளே வந்தாள்..
"பாட்டியும், அம்மாவும் உன்னைத் தேடறாங்க ஓமனா.. சீக்கிரம் போ.." என்று ஓமனாவைத் துரத்தி விட்டு நந்தினியிடம் சிநேகிதமாக சிரித்தாள்..
"ஓமனாவுக்கு வாய் பார்க்கிறதுன்னா ரொம்பவும் இஷ்டம்.. பேச்சுக் கிடைத்தால் போதும்.. அங்கேயே நின்றுடுவா.. பாட்டி சத்தம் போட்டுக்கிட்டே இருப்பாங்க.." என்றாள்..
நந்தினி புரிதலுடன் தலையை ஆட்டிச் சிரித்தாள்..
"டிராவல் பண்ணினதில டயர்டாகியிருப்பீங்க.. ரெஸ்ட் எடுங்க.. நைட் டின்னர் டயத்தில மீட் பண்ணலாம்.." நாசுக்காக கிளம்பி விட்டாள் ரம்ய மாலினி.
'இங்கிதம் தெரிந்தவள்..'
நிம்மதியுடன் கதவை அடைத்துவிட்டு பெட்டியை உடைமாற்றும் அறைக்குள் உருட்டிக் கொண்டு போனாள் நந்தினி.. பெட்டியிலிருந்த துணிகளைப் பிரித்து அலமாரியில் அடுக்கி வைத்துவிட்டு பெட்டியை அலமாரியின் அடிப்பகுதியில் வைத்து விட்டு நிமிர்ந்தாள்.. டிரஸ்ஸிங் டேபிளில் பவுடர், ஹேர் ஆயில் மேக் அப்
பாக்ஸ் சீப்பு முதலானவைகளை வைத்துவிட்டு குளிக்க சோப், பேஸ்ட், பிரஷ் சகிதம் குளியலறைக்குள் புகுந்து அங்கிருந்த பாக்ஸைத் திறந்து அவற்றை வைக்கப் போனாள்.. அங்கே புதிதாக உரை பிரிக்கப்படாத சோப், பேஸ்ட், பிரஷ் முதலியவை இருந்தன..
'அரண்மனை வீட்டில இதெல்லாம் இல்லாம லிருந்தாத்தான் ஆச்சரியப்படனும்..'
குளித்து உடைமாற்றி அங்கிருந்த மூடி போட்ட பிளாஸ்டிக் கூடையில் அழுக்குத் துணிகளை போட்டு விட்டு அறையை விட்டு வெளியே வந்து ஹாலின் கண்ணாடிக் கதவுகளின் பக்கத்தில் நின்று வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழைத் தாரைகளை வேடிக்கை பார்த்தாள்..
'நந்தவனத்தின் மத்தியில் உள்ள அரண்மனை..!'
இதுபோன்ற அரண்மனை பங்களாவில் மாடி ஹாலில் மூடப்பட்ட கண்ணாடி கதவுகளுக்கு உள்ளே இருந்தபடி வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழையை ரசிப்பதற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்று தோன்றியது நந்தினிக்கு..
அந்தக் கொடுப்பினையைப் பற்றி அவள் ஏன் கவலைப்பட வேண்டும்..? அவள்தான் தஞ்சைக்கு திரும்பிப் போக வேண்டியவளாயிற்றே.. தற்காலிகமாக ஒளிந்து மறைந்து தங்க ஓர் இடம் தேவையென்று கிளம்பி வந்திருக்கிறாள்.. அந்த இடம் அரண்மனையும் நந்தவனமுமாக இருப்பதில் மகிழ்ந்து போகலாம்.. அங்கேயே உறைந்து போய் விட முடியாது..
"இந்த வீட்டை உன் வீடா நினைத்துக்கன்னு அத்தை சொன்னதை நீங்க கணக்கிலேயே எடுத்துக்காதீங்க.. ஏன்னா இது என் வீடு..!"
அழுத்தம் திருத்தமாக காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் திடுக்கிட்டுப் போய் திரும்பினாள் நந்தினி.. எதிரே நின்றிருந்தவளைப் பார்த்ததும் விழி விரித்தாள்..
அப்பழுக்கற்ற தேவதையின் ரூபமாக நின்று கொண்டிருந்தவளை நந்தினி எங்கோ பார்த்திருக்கிறாள்..
'எங்கே பார்த்திருப்பேன்..?'
மூளையைக் கசக்கி யோசித்தாள் நந்தினி.. பளிச்சென்று ஞாபகம் வந்து விட்டது.. மங்களூர் எக்ஸ்பிரஸில் இவளின் போட்டோ இருந்ததை நந்தினி பார்த்திருந்தாள்..
'இவ போட்டோவை அவன் ஏன் வைத்திருந்தான்..?'
நந்தினியின் திடுக்கிடலையும், திகைப்பையும், யோசனையையும் அவதானித்தபடி நிதானமாக அந்தப் பெண் பேசினாள்..
"நான் அஜந்தா.. ரவி அத்தானின் அத்தை மகள்.."
"ஓ.."
"என் அம்மா அவந்திகா ரவி அத்தானின் அப்பாவுடைய கூடப் பிறந்த தங்கை.. மாமாவுக்கு தங்கை மீது.. அதாவது என் அம்மாமீது பாசம் அதிகம்.. அவந்திகா வாய் விட்டுக் கேட்டுட்டா இல்லேங்கிற பதிலே என் வாயிலிருந்து வராது என்பார்.."
"அவந்திகாவா.. யாரது..?"
நந்தினியின் கேள்வியில் அஜந்தாவின் அழகிய முகத்தில் கோபத்தின் ஜ்வாலை தெரிந்தது.. நொடிப் பொழுதில் அதை மறைத்துக் கொண்டு..
"சத்தமா பேசிராதீங்க.." என்று நந்தினிக்கு நல்லது சொல்வதைப் போல எச்சரித்தாள்..
"நான் மெதுவாத்தானே பேசினேன்..?" குழப்பத்துடன் கேட்டாள் நந்தினி..
"மெதுவாக்கூட என் அம்மாவை யார்ன்னு நீங்க கேட்கக் கூடாது.."
"உங்க அம்மாவை யார்ன்னு நான் கேட்கலையே.."
"இப்போக் கேட்டிங்களே.."
"அவந்திகா யாருன்னுதான் கேட்டேன்.."
"அது என் அம்மாவின் பெயர்.."
அஜந்தாவின் பார்வை நந்தனியை சுட்டெரித்தது.. தேவையற்ற பகைமையில் நந்தினி மருண்டாள்.. இப்போதுதான் அந்த வீட்டுக்குள் வந்திருக்கிறாள்.. அங்கே யார் யார் வசிக்கிறார்கள்..? அவர்களின் பெயர்களெல்லாம் என்னென்ன என்று எப்படி அவளுக்குத் தெரியும்..?
"இது கோடிஸ்வரர் ரவிவர்மாவின் வீடு மட்டுமல்ல.. ராஜகுடும்பத்து ராஜா ரவிவர்மா, அவங்க தங்கை அவந்திகா தேவி குடும்பத்தினர் இருக்கும் வீடு.."
"அப்ப.. இது எங்க பாஸோட வீடில்லையா..?"
நந்தினிக்கு சந்தேகம் வந்து விட்டது.. அவள் கேட்ட கேள்வியில் கொதித்துப் போனவளாக 'தத்தி..' என்பதைப் போல நந்தினியை ஏளனமாக முறைத்து வைத்தாள் அஜந்தா..
"அப்படித்தான் இவங்க சொல்லிக்கிறாங்க.." என்ற ரவிச்சந்திரனின் குரலில் அஜந்தாவின் முகத்திலிருந்த கோபம், ஏளனம் ஆகிய உணர்வுகள் ஓடி மறைந்து நொடிப்பொழுதில் அங்கே சாந்தம் குடிகொண்டது..
"அத்தான்.."
ஆசையும் காதலுமாக அழைத்தபடி அவள் திரும்பினாள்.. நந்தினிக்குத் தான் தனித்து விடப் பட்டதைப் போன்ற உணர்வு எழுந்தது.. எப்போது தஞ்சைக்குத் திரும்புவோம் என்று அவள் ஏங்கிப் போனாள்..
கொஞ்சலாகப் பேசிய அஜந்தாவை ஒட்டுதல் இல்லாமல் பார்த்த ரவிச்சந்திரன் நந்தினியிடம் திரும்பி..
"இது வம்சாவழியில் வந்த அரண்மனைதான்.. எங்க தாத்தா அருள்மொழிவர்மருக்குச் சொந்தமானதுதான்.. பட் இப்ப இந்த அரண்மனை இந்த ரவிச்சந்திரனுக்கு மட்டும் தான் சொந்தம்.." என்றான்..
அதில் அந்த அஜந்தாவின் அழகு முகம் கொடூரமாக மாறிப் போனது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -60
எண்ணியிருந்தது ஈடேற -60
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera60.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera60.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy