எண்ணியிருந்தது ஈடேற -59

59 "கிளாட் டு மீட் யு.." அவள் பெயர் என்னவென்று அறிவதற்காக ' யு ' வில் ரம்ய மாலினி சற்று அழுத்தம் கொடுத்தபடி கைய...

59


"கிளாட் டு மீட் யு.."
அவள் பெயர் என்னவென்று அறிவதற்காக 'யு' வில் ரம்ய மாலினி சற்று அழுத்தம் கொடுத்தபடி கையை நீட்டினாள்..
கனவில் மிதப்பவளைப் போல எதுவும் பேசாமல் பேஸ்தடித்தவளாய் பேந்தப் பேந்த விழித்தபடி ரோபோ போல ரம்ய மாலினியின் கைளைப் பிடித்துக் குலுக்கினாள் நந்தினி..
பெயரைச் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரம்ய மாலினி அவள் எதுவும் பேசாமல் கையை மட்டும் குலுக்கியதில் புருவங்களை உயர்த்தி ரவிச்சந்திரனைப் பார்த்தாள்..
சிரிப்பை வலுக்கட்டாயமாக இதழ்களில் ஒட்டிய படியே நந்தினியின் பக்கம் குனிந்த ரவிச்சந்திரன்..
"அவதான் உன் பெயரைக் கேட்கிறாளே.. சொல்ல வேண்டியதுதானே.." என்று சினந்தான்..
"எவ..?" நந்தினி திருதிருத்தாள்..
"என் தங்கை.." அவன் அறிவுறுத்தினான்..
"எப்போக் கேட்டாங்க.."
"இப்போத்தான்.. 'யு'ன்னு சொல்லிக்கிட்டே உன் முகம் பார்த்தா உன் பெயரைக் கேட்கிறாங்கன்னு அர்த்தம்.."
"அப்படியா..? இது எனக்குத் தெரியாதே.."
"உனக்கு எதுதான் தெரிந்திருக்கு..? மக்கு.. இதில மேடத்தை என் பெர்சனல் செக்கரட்டரின்னு சொல்கிறது தப்பாம். பெர்சனல் மேனேஜர்ன்னு சொல்லனுமாம்..
ஏன்னா மேடம் 'பி... டெக்..' படித்திருக்காங்களாம்.. உனக்கெல்லாம் சீட் கொடுத்திருக்காங்க பாரு.. அவங்களைச் சொல்லனும்.."
ரம்ய மாலினியின் கண்கள் சுருங்கின.. தாழ்ந்த குரலில் வழக்கடித்துக் கொண்டிருந்த நந்தினியையும் ரவிச்சந்திரனையும் சுவராஸ்யத்துடன் வேடிக்கை
பார்க்க ஆரம்பித்து விட்டாள்.. அதை கண்டு கொண்ட ரவிச்சந்திரன் மழுப்பலான சிரிப்புடன்..
"ச்சும்மா.. ஒரு ஸ்மால் டிஸ்கசன்.." என்றான்..
"நான் எதுவும் கேட்கலையே.." என்ற ரம்ய மாலினி நந்தினியை ஆராய்ச்சியாக பார்த்தாள்..
அவளது ஆராயும் பார்வையில் நந்தினியின் இதயம் படபடத்தது..
'ஏன் இப்படிப் பார்க்கிறா..?'
அறியாத ஊரில்.. தெரியாத மனிதர்களின் நடுவில் நிற்கும் நிலைமை கொடுமையானது என்று தோன்றியது நந்தினிக்கு..
"என் பெயர் நந்தினி.." தயக்கத்துடன் சொன்னாள்..
"சுந்தரமான பெயரானு.." என்றாள் யாழினி..
"உங்க பெயரை விடவா என் பெயர் அழகு..? யாழினி.. எவ்வளவு அழகான பெயர் தெரியுமா பாட்டி.. யாழ்ன்னா இசை கொடுக்கும் வீணை வகையைச் சேர்ந்தது.. யாழினீ.. இசையே வடிவானவங்க.." ரசித்துச் சொன்னாள் நந்தினி..
"வாவ்.. நீங்க இந்த அளவுக்குப் பேசுவீங்களா.. அமைதியா இருக்கவும் 'ஷை' டைப்போன்னு நினைத்தேன்.." கை தட்டினாள் ரம்ய மாலினி..
யாழினி பாசத்துடன் நந்தினியின் கன்னங்களைத் தடவிக் கொஞ்சியதில் நந்தினியின் முகம் சிவந்து விட்டது..
"நானும் அப்படித்தான் நினைத்தேன்.." என்று யாழினி பேத்தியுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ள..
"வெளித்தோற்றத்தைப் பார்த்து யாரையும் எடை போடக் கூடாதுன்னு நீங்கதானே சொல்வீங்க பாட்டி.. இப்ப நீங்களே ஏமாறப் பார்க்கறீங்களே.." என்று ஆதங்கப் பட்டான் ரவிச்சந்திரன்..
"எண்ட் கொச்சுமோன் எந்தா பறயுனு..?" யாழினி கேட்க..
"பாட்டி.. இவங்களுக்கு மலையாளம் தெரியாது.. நமக்குத் தமிழ் தெரியும்.. பாவம்.. இவங்களைச் சோதிக்காம தமிழில பேசிருங்களேன்.. பிழைத்துப் போகட்டும்.." என்று ரம்ய மாலினி சிபாரிசுக்கு வந்தாள்..
"நான் என்ன சொல்கிறேன்னா.. இதோ இருக்கிறாளே.. நந்தினி.. இவ பார்க்கத்தான் ஷாப்ட் லேடி.. பழகிப் பார்த்தாத்தான் தெரியும்.. பக்கா கேடின்னு.." என்றான் ரவிச்சந்திரன்..
நந்தினிக்கு வந்த கடுப்பில் கையில் கிடைப்பதை அள்ளி அவன் மீது வீசி விட வேண்டும் போலதான் இருந்தது.. அப்படி வீசி அவன் சொன்னதை உண்மையென்று நிரூபணம் பண்ணிவிட வேண்டாமென்ற ஒரேயொரு காரணத்தினால் அமைதி காத்தாள்..
பேரன் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் தலையை ஆட்டி..
"சேச்சே.." என்று மறுத்த யாழினி..
"பாவம்.. இவ பச்சை மண்ணு..." என்றாள்..
"யாரு..? இவளா..? பச்சை மண்ணா..? நினைத்துக் கிட்டே இருங்க.." என்றான் ரவிச்சந்திரன்..
மற்றவர் அறியாமல் ரவிச்சந்திரனின் முழங்கையில் 'நறுக்'கென்று கிள்ளி விட்டு ஏதும் அறியாதவள் போல் தள்ளி நின்று கொண்டு ஓரக் கண்ணால் அவனை முறைத்தாள் நந்தினி..
'படவா ராஸ்கல்.. போட்டா கொடுக்கிற..?'
கிள்ளப்பட்ட முழங்கையைத் தடவியபடி அவளைப் பார்த்த ரவிச்சந்திரனின் விழிகளில் ரகசிய சந்தோசம் இருந்தது..
'இவனென்ன இப்படிப் பார்க்கிறான்.. வலிக்கலையா..?'
அழுத்தமாகக் கிள்ளவில்லையோ என்ற மனச் சஞ்சலத்திற்கு அவள் ஆளானாள்.. நகம் பதியத்தானே கிள்ளினாள்.. வலியால் துடித்துப் போவதற்குப் பதில்
அவன் 'ஜில்' லென்று இருப்பதைப் போல பற்களைக் காட்டுகிறானே..
"வேர் இஸ் மாம் அண்ட் டாட்..?"
"கோவிலுக்குப் போயிருக்காங்க சேட்டா.. இல்லை யில்லை.. அண்ணா.."
"ஒன்னு சேட்டான்னு விளி.. இல்லேன்னா அண்ணான்னு கூப்பிடு.. எதுவெண்டாலும் இந்தச் சேட்டனுக்கு இஷ்டம்தான்.. மனசிலாயி..?"
"அண்ணான்னே கூப்பிடறேன்.. நந்தினி மிரளக் கூடாது பாருங்க.."
"இவ மேல நீ வைக்கிற ஓவர் கான்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாது ரம்யா.. சொல்லிட்டேன்.. இவ ஊரையே மிரள வைப்பா.."
"சேச்சே.. இவங்களைப் பார்த்தா சாது போல இருக்காங்க.. நீ ஏன் இவங்களை வாரிக்கிட்டே இருக்கே..?"
"ம்ம்ம்.. அப்படியொரு வேண்டுதல் எனக்கு.."
"எனக்கும் அப்படித்தான் தோணுது.."
ரம்ய மாலினி நந்தினியை தோழமையுடன் அணைத்துக் கொண்டாள்.. அவள் காட்டிய தோழமை நந்தினியின் மனதுக்கு இதமாக இருந்தது.. தெரியாதவர்கள் வீட்டில் தங்க வேண்டி வந்து விட்டதே என்ற தவிப்பு மறைந்து ஓர்விதமான பாதுகாப்புணர்வு ஏற்பட்டது..
வாசலில் கார் சப்தம் கேட்டது..
"நிண்ட அச்சனும் அம்மையும் வருகிறாங்க போல.." என்றாள் யாழினி..
நந்தினியைப் பார்த்து சிநேகிதமாக சிரித்த ரம்ய மாலினி..
"பாட்டி இந்த அளவுக்கு தமிழ் பேசறதே பெரிது.. அவங்களாலே மலையாளக் கலப்பில்லாம பேச முடியாது.." என்றாள்..
"ஸோ வாட்..? அவங்களுக்கு எப்படிப் பேசப் பிடிக்குதோ அப்படியே பேசட்டும்.. நானென்ன கெஸ்ட்தானே.."
இணக்கமாக ரம்ய மாலினியிடம் பேசிக் கொண்டிருந்த நந்தினியை இணக்கமில்லாமல் முறைத்து வைத்தான் ரவிச்சந்திரன்..
'என்ன தவறு செய்தேன்..? - அதுதான்
                எனக்கும் புரியவில்லை..'
நந்தினியின் மைண்ட் வாய்ஸ் சோக ரசகம் பிழிந்தது.. 'ஜிவுஜிவு' என மிளகாய்ப்பழம் போல மாறிவிட்ட அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் வாசலைப் பார்த்தாள் நந்தினி.. அங்கே தம்பதி சமேதராக வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரனின் பெற்றோரைப் பார்த்ததும் அடுத்த விசாரணை ஆரம்பமா என்று மனது 'பதக்.. பதக்..' கென்று அடித்துக் கொண்டது..
அழகே உருவாக இருந்த ரவிச்சந்திரனின் அம்மா முகத்தில் தாய்மையின் பிரவாகம் ஒளிர்ந்தது.. கனிவுடன் அவள் நந்தினியைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு அறிமுகம் ஆகாத புதியவள் ஒருத்தி சிரிக்கின்ற சிரிப்பாக இல்லாமல் காலம் காலமாக பழகியவள் சிரிக்கும் வாத்சல்யச் சிரிப்பாக இருந்தது..
"வரனும் வீணா.. எந்தா இத்தினி மணிக்கறு மோளே..? கோவிலில் திவ்ய தரிசனம் கிட்டி..? வல்லிய கூட்டமோ..?" மருமகளிடம் கனிவாக விசாரித்தாள் யாழினி..
"புது வருசமில்லா.. கோவிலில் நிறையக் கூட்டம்தான் அத்தை.. ஆனா திவ்யமா தரிசனம் கிட்டுச்சு.." என்ற வீணா நந்தினியைப் பார்வையால் வருடியபடி..
"இந்தப் பெண் யார் ரவி..? உன்கூட வந்திருக்கிறான்னு ஓமனா சொன்னா.." என்று மகனிடம் கேட்டாள்..
'அப்பாடி.. இவங்க 'ஈ பெண்குட்டி ஆரானு'ன்னு கேட்டு என்னைக் குட்டியாக்கலை..'
அதனாலேயே நந்தினிக்கு வீணாவை மிகவும் பிடித்து விட்டது..
"என் பெர்சனல் செக்கரட்டரி அம்மா.. புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்.. தனியாக தங்க வைக்க இஷ்டமில்லை.." ரவிச்சந்திரன் விளக்கம் சொல்வதற்குள்..
"வயதுப் பெண்ணைத் தனியாக தங்க வைக்கனுமா..? ஏன்..? நம்ம வீட்டில் இடமா இல்லை..?" என்று மகனைக் கடிந்து கொண்டாள் வீணா..
'பார்த்தாயா..?' நந்தினியிடம் விழிகளால் கேள்வி கேட்டபடி..
"உங்களிடம் திட்டு வாங்க முடியாதுன்னுதான் நம்ம வீட்டிலேயே தங்கிக்கட்டும்ன்னு அழைத்துக்கிட்டு வந்தேன்ம்மா.." என்றான் ரவிச்சந்திரன்..
"நல்ல வேலை செய்தாய்.."
மகனைப் பாராட்டிய வீணா கையிலிருந்த வெள்ளி பூஜைக் கூடையிலிருந்த குங்கும பிரசாதத்தை எடுத்து நந்தினியின் நெற்றியில் இட்டு விட்டாள்.. அதைக் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத நந்தினியின் கண்கள் கலங்கி விட்டன..
"உனக்கு எந்த ஊர்ம்மா..?" பாசத்துடன் அவள் கேட்டதும்..
"எங்க ஊர் தஞ்சாவூர்ங்க.. படிச்சது சென்னை.." என்று ஒட்டுமொத்த ஜாதகத்தையும் கொட்டிக் கவிழ்க்கத் தயாராகி விட்டாள் நந்தினி..
"பாவம்.. கஷ்டப்படற பேமிலிம்மா.. அப்பா சின்னதா பெட்டிக்கடை வைத்திருக்காராம்.. அம்மா இட்லிக் கடையாம்.. தம்பி சின்னவனாம்.. இந்தப் பெண் மெரிட்ல பி.டெக் சீட் கிடைத்து இப்பத்தான் படிச்சு முடிச்சிருக்கு.. ரிசல்ட்கூட வரலை.. குடும்பச் சூழ்நிலையினாலே உடனடியா வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம்.. இவ படிப்புக்கு இவளோட அப்பா வாங்கியிருக்கிற கடனை அடைக்கனுமாம்.. அடமானத்தில இருக்கிற இவங்க வீட்டை மீட்கனுமாம்.. பிளாஸ் டூ படிச்சிருக்கிற தம்பியை மேலே படிக்க வைக்கனுமாம்.."
குரலை உயர்த்தி இறக்கி ஏற்ற இறக்கத்துடன் ரவிச்சந்திரன் கதை சொன்ன விதத்தில் பாவம் அந்த ஏழைப் பெண் என்று நந்தினியே உருகி விட்டாள்.. அதன் பின்னர்தான் அந்த ஏழைப்பெண் யாரென்று யோசித்துப் பார்த்தாள்.. அது அவள்தான் என்பது நினைவுக்கு வந்ததில்..
'அடப்பாவி..!' என்று விக்கித்துப் போய் நின்று விட்டாள்..
நந்தினியின் அப்பா பெட்டிக்கடை வைத்திருக் கிறாரா..? அம்மா இட்லிக்கடையா..? தம்பியை மேலே படிக்க வைக்க இவள் வேலைக்குப் போய் சம்பாதித்தாக வேண்டுமா..?
இவற்றை மட்டும் மேகநாதனும் வெந்நிலாவும் கேட்டிருக்க வேண்டும்.. ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார்கள்.. நந்தகுமாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. வீடு கட்டிக் களம் புகுந்திருப்பான்..
'வாயைத் திறக்காதே..'
ரவிச்சந்திரனின் விழிகளில் தெரிந்த எச்சரிக்கையில் அலைகடலாய் கொந்தளித்த மனதை அமைதிப் படுத்த முயன்றபடி பல்லைக் கடித்த வண்ணம் பொறுமை காத்தாள் நந்தினி..
"ஐயோ.. பாவம்.."
பரிதாபத்துடன் வீணா நந்தினியைப் பார்த்தாள்.. அக்கினிப் பிழம்பாய் நந்தினி ரவிச்சந்திரனைப் பார்த்தாள்.. அவனோ புன்னகை மன்னனாக..
'கூல்..' என்று பார்த்தான்..
"இந்த வயதில் இத்தனை கஷ்டமா..? நீ கவலைப்படாதேம்மா.. இந்த வீட்டை உன் வீடா நினைத்துக்க.. சென்னைக்குத் திரும்பிப் போகிற வரைக்கும்.. நீயும் இந்த வீட்டில ஒருத்திதான்.."
வீணா சொன்னதை பரிவான புன்னகையுடன் அங்கீகரித்த ரவிச்சந்திரனின் அப்பா பெயர் ரவிவர்மனாம்.. நந்தினியிடம் ரம்ய மாலினி சொன்னாள்..
'தாத்தா அருள்மொழி வர்மன்.. அப்பா ரவிவர்மன்.. நிஜமாவே சோழ, சேர மன்னர்கள் மத்தியிலே மாட்டிக் கிட்டதைப் போலதான் இருக்கு..'
"சாயா குடிச்சோ..?"
வீணா ரம்ய மாலினியிடம் கேட்க.. அவள்..
"இல்லை அம்மே.." என்றாள்..
"சாய் கொண்டு வரட்டே.."
அங்கே எட்டிப் பார்த்துக் கேள்வி கேட்ட இளம்பெண்தான் ஓமனாவாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. ரவிச்சந்திரனும் நந்தினியும் காரை விட்டு இறங்கும்போது அந்தப் பெண் தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் மின்னலைப் போல ஓடினாள்..
ஒரு நொடி 'வாம்மா.. மின்னல்..' என்று அழைக்கலாம் போல நந்தினிக்கு வாய் வரை வார்த்தைகள் வந்து விட்டன..
அங்கே அருள்மொழிவர்மனும், ரவிவர்மனும் நின்று கொண்டிருந்ததாலும்.. நந்தினியை 'பச்சை மண்..' என்று யாழினிப் பாட்டி நம்பிக் கொண்டிருப்பதாலும் வாயைத் திறக்காமல் அமைதிகாத்தாள்..
"சாய் கொண்டு வரட்டோன்னு பறயுனு..? ஓடு.. ஓடு.. ஆ நிமிசத்துல சாய் இவ்விடத்தே வரனுமாக்கும்.." யாழினி ஓமனாவை ஓட ஓட விரட்டினாள்..
'டீயை எதற்காக 'சாய்..' என்று சாய்க்கிறார்கள்..' என்று நந்தினி விசனம் கொண்டாள்..
அந்த விசனம் ஒரு புறமிருக்க.. குடிப்பதற்கான சுடுபானத்தை காபியாக கொடுக்காமல் 'டீ'யாகவே தந்தருள்கிறார்களே என்ற விசனம் இன்னொரு புறம் ஏற்பட்டது..
அவளுக்கு காபிதான் பிடிக்கும்.. அவள் கோழிக்கோடில் வந்து இறங்கியது முதல் 'காபி' என்ற பானம் காணாமல் போய் 'சாய்' எனும் 'டீ'யே முன்னிலை வகித்தது..
"ஏன் உங்க கேரளாவில 'டீ'யை மட்டும் கொண்டாடறீங்க.." என்று ரவிச்சந்திரனிடம் முணுமுணுத்தாள்..
"இது தேயிலை விளைகிற இடம்.. மலிவா தேயிலை கிடைக்கிறதினால இருக்கலாம்.. குளிருக்கு காபியை விட டீ பெட்டர்ங்கிறதினாலயும் இருக்கலாம்.. எங்களுக்கு 'டீ' தான் பழக்கம்.. உனக்கு வேண்டுமானால் காபி கொண்டு வரச் சொல்லட்டுமா..?" சன்னக் குரலில் ரவிச்சந்திரன் கேட்டான்..
"நோ.. நோ.. உங்க வீட்டில் யூசுவலா எது பழக்கமோ அதையே நானும் பழகிக்கறேன்.." உடனடியாக மறுத்துவிட்டாள் நந்தினி..
'குட்..' என்று மெச்சிய ரவிச்சந்திரனின் விழிகளில் நிலவிய திருப்தியில் அவனை வினோதமாக பார்த்தாள் நந்தினி..
'சின்ன விசயத்துக்கு ஏன் இந்த அளவுக்கு ரியாக்ட் பண்றான்..?'
மணமான 'சாய்' வந்து சேர்ந்தது... குடித்து முடித்தவுடன் உடலில் ஒர்விதமான சுறுசுறுப்பு பரவுவதை உணர்ந்தாள் நந்தினி.. அதனால்தான் குளிர் பிரதேசங்களில் 'டீ' குடிப்பதை விரும்புகிறார்களோ..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -59
எண்ணியிருந்தது ஈடேற -59
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera59.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera59.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy