எண்ணியிருந்தது ஈடேற -62

62 ' ஒரு கோடி.. இரண்டு கோடின்னாலே மயக்கம் வந்திரும்.. ஆயிரம் கோடியாம்.. ஹப்பா.. நினைத்தாலே மூச்சுத் திணறுதே.. இவ எப்படித்தான் இத்தனை...

62
'ஒரு கோடி.. இரண்டு கோடின்னாலே மயக்கம் வந்திரும்.. ஆயிரம் கோடியாம்.. ஹப்பா.. நினைத்தாலே மூச்சுத் திணறுதே.. இவ எப்படித்தான் இத்தனை திண்ணக்கமாய் நிற்கிறாளோ..'
அஜந்தா அப்படித்தான் நின்றாள்.. ரவிச்சந்திரன் சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழாதது போல நிஷ்டூரமாக அவனை முறைத்தாள்.. ரவிச்சந்திரனும் சளைத்தவனாக இல்லை.. அஜந்தாவை விடப் பன்மடங்கு அதிகமான நிஷ்டூரத்துடன் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்..
"உன் அப்பாவுடைய கடனை அடைக்கனும்னா பரம்பரைச் சொத்துக்களை என் பெயருக்கு எழுதிக் கொடுத்துடனும்னு கண்டிசன் போட்டேன்.. சேரளம் எஸ்டேட், ரப்பர் பேக்டரி, இந்த அரண்மனை, சணல் பேக்டரி.. எல்லாம் என் பெயருக்கு ரிஜிஸ்டர் ஆகிருச்சு.. உன் குடும்பத்து ஆளுக முதற் கொண்டு அத்தனை பேரும் ரிஜிஸ்டர் ஆபிசுக்கே நேரில வந்து சைன் பண்ணினீங்க.. மறந்து போச்சா..? ரிமம்பர் இட்.. 'யாழ்..' ஹோட்டல் என் உழைப்பில் உருவானது.. முதன் முதலாய் திருவனந்த புரத்திலே தொடங்கிய ஹோட்டலை சங்கிலித் தொடராய் இந்தியாவில இருக்கிற அத்தனை சிட்டிகளிலும் ஆரம்பித்து விரிவு படுத்தினேன்.. உன் அப்பா கடனுக்காக நான் கொடுத்த ஆயிரம் கோடியும் என் சுய சம்பாத்தியம்.. இது என் அரண்மனை.. மனசிலாயி.."
அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாதவளாய் சீற்றத்துடன் விரைந்து விட்டாள் அஜந்தா.. அசையாமல் சிற்பம் போல நின்ற கொண்டிருந்த நந்தினியைப் பார்த்தான் ரவிச்சந்திரன்.. அவளது விழிகளில் தெரிந்த மிரட்சியில்..
"பயப்படாதே.." என்றான்..
"பயம்ன்னு இல்லை.. அன்ஈஸியா ஃபீல் பண்றேன்.. எனக்குன்னு குவார்ட்டர்ஸோ, லேடிஸ் ஹாஸ்டலோ அரேன்ஜ் பண்ணினாத் தேவலை.."
"இது வயநாடு நந்தினி.."
"நான் மட்டும் இது கொல்கத்தான்னா சொன்னேன்..?"
"ஹா.. ஹா.."
வரிசைப் பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் நந்தினி.. அஜந்தாவைப் போன்ற அத்தை மகள் இருக்கும் வீட்டில் எப்படித்தான் இவனால் இப்படிச் சிரிக்க முடிகின்றதோ..
"சிரிச்சது போதும் பாஸ்.. விசயத்துக்கு வாங்க.."
"வயநாடு அதிகமா மக்கள் புழங்காத இடங்களைக் கொண்ட மலைபிரதேசம் நந்தினி.. அதிகமா மழை கொட்டிக்கிட்டு இருக்கும்.. உன்னைத் தனியா குவார்ட்டர்ஸில் தங்க வைக்க முடியாது.. இந்த கிளைமேட் பழகினவங்களுக்குத்தான் சரிப்பட்டு வரும்..
நீ பயந்துருவ.. லேடிஸ் ஹாஸ்டலும் அப்படித்தான்.. உன்னைப் பத்திரமா கவனித்துக்கறேன்னு வினீத்துக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்.. அதைக் காப்பாத்தியா கனும்னா நீ என் கண்பார்வையிலே என் வீட்டிலே இருந்தாகனும்.."
"பட்..."
"சட்..! எதுக்காக இந்த 'பட்..?' ம்ம்ம்..? இந்த வீட்டில அஜந்தா மட்டுமா இருக்கா..? என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, ரம்யா நான் இப்படி எத்தனை பேர் இருக்கோம்..? அத்தனை பேரும் உன் மேலே பிரியமாத்தானே இருக்கோம்..? நீ ஏன் உன்னை தேர்ட் பெர்சனா நினைத்துக்கற.. இந்த வீட்டிலே ஒருத்தியா நினைத்துக்க வேண்டியதுதானே..?"
ரவிச்சந்திரனின் மோகப்பார்வை நந்தினியின் மீது படிந்து தீ மூட்ட முற்பட்டது.. குளிர் நிரம்பிய வயநாட்டில்.. மழை பொழிந்து கொண்டிருந்த அந்த ஈரப் பொழுதில் அவன் பார்வை அவளுக்குள் கனல் மூட்டி கதகதப்பை உண்டாக்கியது.. அவன் ஒரடி முன்னால் வைத்து நந்தினியை நெருங்கி நின்றான்.. அவள் தோள் தொட்டு அணைத்து கன்னம் வருடினான்.. நந்தினி நடுங்கிப் போனவளாக விலகி விட்டாள்..
ரவிச்சந்திரன் நந்தினிக்கு தைரியம் கொடுக்கக் கூட நெருங்கி நின்று அணைத்திருக்கலாம்.. அதை அஜந்தா பார்த்து விட்டால் எசகு பிசகாய் நினைத்து விட மாட்டாளா..?
'தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டாலும் போட்டு விடுவாள்..'
வயநாட்டில் கற்களுக்கா பஞ்சம்..?
"ப்ளீஸ்.." நந்தினியின் கெஞ்சலில்..
"இட்ஸ் ஓகே.." என்று தோள்களைக் குலுக்கி விட்டுப் போய் விட்டான் ரவிச்சந்திரன்..
'ஹப்பாடி.. தப்பித்தேன்..' நந்தினி கண்களை இறுக்கமாக மூடி நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஓர்நொடி கூட ஆகியிருக்காது..
"ரொம்பத்தான் கனவு காணாதே.." என்ற கடுமையான குரல் நந்தினியின் காதுகளில் விழுந்து அவளது நிம்மதியை துரத்திவிட்டது..
'இது அஜந்தாவோட வாய்ஸ் மாதிரி இருக்கே..' நடுக்கத்துடன் இமைகளைத் திறந்தாள்..
சாட்சாத் அஜந்தாவேதான் எதிரில் நின்றிருந்தாள்..
'இவளிடம் என்னத்தைப் பேசறது..?' திருதிருத்த நந்தினி மெதுவாக அங்கிருந்து நழுவிவிட நினைத்து நகர்ந்தாள்..
"நில்.." அஜந்தா கட்டளையிட்டாள்..
'இவளுக்கும் இவளுடைய மாமன் மகனுக்கும் வேறு வேலையே இல்லை.. எதற்கெடுத்தாலும் இதை ஒன்றைச் சொல்லி விடுகிறார்கள்..' நந்தினிக்கு எரிச்சல் மண்டியது..
வம்பு வேண்டாம் என்று பிய்த்துக் கொண்டு கிளம்புகிறவளை 'நில்..' என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்தி வைத்துத் தொலைக்கிறார்களே.. எதற்காம்..?
அஜந்தாவின் கட்டளைக்கு அடிபணிய நந்தினிக்கு விருப்பமில்லை.. நீ என்ன சொல்வது.. நான் என்ன கேட்பது என்று முறைத்துக் கொண்டு போய் விடலாமா
என்று யோசித்தாள்.. தேவையில்லாத பகைமையை அது உண்டு பண்ணிவிடக் கூடும் என்று பல்லைக் கடித்தபடி நின்றாள்..
"எனக்கும் என் அத்தானுக்கும் இடையே இதைப் போல செல்லச் சண்டைகள் வரும்.."
'அடிப்பாவி..! இது செல்லச் சண்டையா..? உன் குடும்பத்தையே அவன் கழுவிக் கழுவி ஊத்தினான்.. இதைப் போய் செல்ல சண்டைன்னு சொல்றியே.. நிஜச் சண்டையா இருந்தா இதுக்கும் மேலே வீடு கட்டி அடிப்பானா..? அது எப்படிடீ மனச்சாட்சியை கழட்டி வைத்துட்டு பேசற..'
"அதைப் பார்த்துட்டு அத்தானுக்கும் எனக்கும் ஆகவே ஆகாதுன்னு முடிவுக்கு வந்து விடாதே.."
'வேற என்ன முடிவுக்கு வர அஜந்தா ஓவியமே..? நீயென்றால் உன் அத்தானுக்கு உயிர் என்ற முடிவுக்கு வந்து விடவா..?'
அஜந்தா அதைத்தான் சொன்னாள்.. அவளென்றால் ரவிச்சந்திரனுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றாள்... வல்லிய நேசம் அவர்களது நேசம் என்றாள்.. அவளை மகரந்தப்பூ என்று ரவிச்சந்திரன் கொண்டாடுவான் என்று வெட்கினாள்..
"அத்தான் என்னைக் காதலிக்கிறார் நந்தினி.. நானும் அவர்மீது உயிரையே வைத்திருக்கிறேன்.."
'அதை எதுக்கு என்னை நிறுத்தி வைத்து ஒப்பிக்கிற..?'
நந்தினிக்கு இருக்குமோ என்ற சந்தேகம் முளைத்தது.. அஜந்தாவின் போட்டோவை ரவிச்சந்திரன் வைத்திருக்கிறானே.. அதை ரயிலில் நந்தினி பார்த்தாளே..
'இல்லாத ஒன்றை இவள் என்னிடம் ஏன் சொல்ல வேண்டும்..? அப்படியொன்றும் இவளைவிட நான் அழகியில்லையே..'
"என் அப்பா செய்து வைத்த வேலையினால் அத்தைக்கும் ரம்யாவுக்கும் எங்கள் குடும்பத்தைக் கண்டாலே பிடிக்காமல் போய்விட்டது.. தாத்தாவும் பாட்டியும் அவங்களோட பேத்தியான என்னைத்தான் ரவி அத்தான் விவாகம் செய்துக்கனும்னு இஷ்டப்படறாங்க.. மாமாவுக்கும் அதே எண்ணம்தான்.. பட்சே.. அத்தையோட மனசு வேறயா இருக்கிறதாலே அத்தான் எங்க காதலை மறந்திரலாம்ன்னு சொல்கிறார் நந்தினி.. வயநாட்டிலே இருந்தால் என்னை மறக்க முடியாதுன்னு ஊர் ஊராச் சுத்திக்கிட்டு இருக்கார்.. உன்னிடம் சொல்வதற்கென்ன.. நந்தினி.."
அஜந்தா ஏதோ பரம ரகசியம் ஒன்றைப் பகிரப் போகிறவளைப் போலச் சுற்று முற்றும் பார்த்து வைத்தாள்.. அந்த அளவுக்கு அவளது நம்பிக்கைக்கு தான் பாத்திரமாகி விட்டோமா என்று நந்தினி திருதிருத்தாள்..
'என்னத்தைச் சொல்லப் போறா..? இந்த அரண்மனையிலே பாதாள அறை இருக்கு.. அது நிறைய தங்கமும், வைரமுமா கொட்டிக் கிடக்குன்னு புதையல் ரகசியம் எதையும் சொல்லப் போகிறாளா..?'
ரவிச்சந்திரனை விடப் பெரிதான புதையல் எதுவும் இருக்க முடியுமா என்று ஜொள்ளியது நந்தினியின் மனம்..
'ஆ ஆள் வல்லிய சுந்தரனல்லோ..!'
"கேள் நந்தினி.."
'கேட்காமல் எங்கேடி போய் தொலைஞ்சேன்..? பேசாம ரூமுக்குள்ள போய் அடைந்துக்கலாம்ன்னு பம்மிப் பம்மி நகர்ந்தவளை நில்லுங்கிற ஒற்றை வார்தையிலே கட்டிப் போட்டு நிறுத்தி வைச்சுட்டு கேள்ன்னு சொல்றியே.. இது உனக்கே அடுக்குமா அஜந்தா..?'
"என்னை மறக்க முடியாம அத்தான் டிரிங்க பண்ண ஆரம்பிச்சுட்டார்.. லேடிஸ் பழக்கமும் உண்டாகிருச்சு.. இதைக் கேள்விப்பட்டப்ப என் மனசு எப்படித் துடிச்சுப் போயிருச்சுன்னு தெரியுமா..?"
நந்தினியின் மனமும் துடிக்கத்தான் செய்தது.. அங்கிருந்து அகன்று விட்டால் நன்றாக இருக்குமென்று அவள் தவித்துக் கொண்டிருந்த போது இன்னொரு அதிரூப சுந்தரி அங்கே வருகை தந்து தன் அழகினால் நந்தினியை மயக்கமுறச் செய்தாள்..
'ஈ தேவகுமாரி யாரானு..?'
அந்த வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் தேவலோக அப்சரஸ்களை மிஞ்சும் அதிரூப சுந்தரிகளாக இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கக்கூடும் என்று ஆழ்ந்து யோசித்தாள் நந்தினி..
"எந்தா மோளே.. இத்தரயும் ஆலோசிக்கனு..?" ரம்யமாக முறுவலித்தாள் அந்த மாது..
'பேசாம இந்தம்மாவுக்கு ரம்ய மாலினின்னு பெயர் வைத்திருக்கலாம்..'
"அம்மே.. ஈ பெண்குட்டி பேரு நந்தினி.. இவிட ரவி அத்தானிடம் ஜோலி பார்க்க வந்திருக்காங்க.."
"வரனும் மோளே.." என்று வரவேற்ற அந்தப் பெண்மணிதான் அஜந்தாவைப் பெற்றெடுத்த அவந்திகாவாம்..
"அவந்திகா தேவி.." என்று அழுத்தம் திருத்தமாக தங்களது ராஜ பாரம்பர்யத்தை அறிவித்தாள் அஜந்தா எனும் அஜந்தா தேவி..
"சாய் குடிச்சோ..?" அவந்திகா விசாரித்தாள்..
'இந்தக் கேரள மலைநாட்டில இது ஒன்னை எல்லோரும் கேட்டு வைச்சிருவாங்க..'
"ஆச்சு அம்மே.." என்றாள் அஜந்தா..
தாயும் மகளும் தாழ்ந்த குரலில் எதையோ விவாதிக்க ஆரம்பிக்க தப்பித்தேன் பிழைத்தேன் என்று லேசான தலையசைவில் விடை பெற்றுக் கொண்டு தன் அறைக்கு ஒரே ஓட்டமாக ஓடித் தப்பித்தாள் நந்தினி.. அறையின் கதவைப் பூட்டித் தாழிட்டு விட்டு அதன்மீது சாய்ந்து நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் மறந்தும் அந்த அறையை விட்டு வெளியேறி விடக் கூடாது என்று தனக்குள் சங்கல்பம் செய்து கொண்டாள்.. அறையிலிருந்த ஆள் உயர ஜன்னலின் கண்ணாடிக் கதவை கனத்த திரை மறைத்திருந்தது.. விலக்கிப் பார்த்தாள்.. ஹாலின் கண்ணாடிக் கதவை விட இங்கே அதியற்புதமான இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடிந்தது..
'இங்கேயே வியூ பிரமாதமாய் இருக்கே.. எதுக்காக ரூமைவிட்டு வெளியே போய் தேவையில்லாத அக்கப் போரையெல்லாம் காதில் கேட்கனும்..?'
சோபாவை இழுத்துக் கண்ணாடிக் கதவின் பக்கம் போட்டு கம்பளியைப் போர்த்திக் கொண்டு அதில் கால் மடக்கி படுக்கை வாக்கில் உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்த நந்தினி அப்படியே தூங்கி விட்டாள்..
"டிர்ர்ர்ர்...ர்.."
அறையின் காலிங் பெல் அலறியதில் உலுக்கிப் போட்டவளாக கண் விழித்தவள் சோபாவை விட்டுக் குதித்து கம்பளியை தலையோடு போர்த்திக் கொண்டு கதவைத் திறக்கப் போனாள்..
"நந்தினி அம்மே.." என்று வாயிலிருந்த பற்களையெல்லாம் இந்தா எண்ணிக்கொள் என்று காட்டியபடி உள்ளே வந்த ஓமனா கம்பளி போர்த்திய உருவத்தைக் கண்டு பயந்து போனவளாக துள்ளிக் குதித்து நான்கடி தள்ளி நின்று..
"என்டே மலையாள பகவதி அம்மே..!" என்று அபயக்குரல் கொடுத்து நெஞ்சில் கை வைத்தாள்..
"பகவதியம்மனை டிஸ்டர்ப் பண்ணாதே ஓமனா.. இந்த மழையில் அவங்க கோவிலுக்குள்ள நிம்மதியா ரெஸ்ட் எடுக்கட்டும்.." நந்தினி கம்பளிக்குள் இருந்து வெளிப்பட்டு முகம் காட்டினாள்..
"நீங்களா அம்மே எனைச் சோதிச்சது..?"
"உன்னைச் சோதிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை ஓமனாக்குட்டி.. என்னைத்தான் இந்த வாழ்க்கை சோதனையாய் சோதிக்குது.." அலுத்துக் கொண்டாள் நந்தினி..
"ஏன் அம்மே..?" கதை கேட்க ஆர்வமானாள் ஓமனா.
"விதி ஓமனே.." நந்தினி நெற்றியின் மையத்தில் ஆள்காட்டி விரலைக் கொண்டு சென்று சுழி போட்டுக் காட்டினாள்..
"அம்மே சம்சாரிக்கிறதும் சரிதானு.. விதி வலியது அம்மே.." ஓமனா கன்னத்தில் கையை வைத்துப் பெருமூச்சு விட்டாள்..
"தா.. நீயே சொல்லிட்ட பாரு.. இதை நீ சொல்லி நான் கேட்க வயநாட்டுக்கு வந்து சேரனும்னு காலம் எனக்கு விதிச்சிருக்கு பாரு.. அங்கதான் ஆண்டவன் நிற்கிறாரு ஓமனா.." என்றாள் நந்தினி..
"அவ்விடத்தே நம்ம ஐயன் அல்லவோ நிக்கிறாரு அம்மே.." ஓமனாவின் சுட்டு விரல் சுட்டிக் காட்டிய இடத்தில் கைகளை மடித்துக் கட்டி.. அறை வாசலில் சாய்ந்து நின்றிருந்தான் ரவிச்சந்திரன்..
'இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்..?'
நந்தினி கம்பளியின் ஞாபகம் வரப் பெற்றவளாய் அதைச் சுருட்டிக் கட்டிலில் போட்டுவிட்டு அவனைப் பார்த்தாள்.. நிதானமாக அவன் உள்ளே வந்தான்.. ஓமனாவைப் பார்த்தான்..
"நந்தினி அம்மேயை ஊன் கழிக்க வரச்சொல்லி.. அம்மே விளிச்சு.." என்றாள் அவள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -62
எண்ணியிருந்தது ஈடேற -62
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera-62.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera-62.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy