பூமிக்கு வந்த நிலவு -7

7 வெந்நிலாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.. தசரதன் பேசிய பேச்சுக்களில் அவள் கொதித்துப் போயிருந்தாள்.. விவரத்தை பெற்ற தந்தையிடம் கூடச் சொல...

7

வெந்நிலாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.. தசரதன் பேசிய பேச்சுக்களில் அவள் கொதித்துப் போயிருந்தாள்.. விவரத்தை பெற்ற தந்தையிடம் கூடச் சொல்ல முடியாமல் தன்மானப் பிரச்னை வந்து தடுத்தது.. கடப்பாறையை விழுங்குவதைப் போல.. அவன் பேசிய பேச்சுக்களை ஜீரணம்பண்ண முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.. போதாக்குறைக்கு அவள் தங்கியிருந்த அந்த மாடியறையை..
"என் அண்ணனின் ரூம்..." என்று சாரதா சொல்லியிருந்தாள்...
"உன் அண்ணனின் ரூமா..? நான் இதில தங்க மாட்டேன்..." வெந்நிலா முகம் சுளித்தாள்..
"வேற எங்கே தங்குவீங்க.. மாடியில இருக்கிறது ரெண்டு ரூம்.. ஒன்னு சின்னது.. ஒன்னு பெரிசு.. சின்னரூமில நான் படிப்பேன்.. பெரிய ரூமில அண்ணன் தங்கிக்கும்.. இப்ப.. சின்ன ரூமை உங்க அப்பாவுக்கு கொடுத்தாச்சு.. பெரிய ரூம் உங்களுக்கு.." சாரதா விவரம் சொன்னாள்..
"உன் அண்ணன் வந்து தொலைச்சா..?" வெறுப்புடன் கேட்டாள் வெந்நிலா...
"கீழே தங்கிக்கச் சொல்லுவோம்..." இலகுவாக வழி சொன்னாள் சாரதா...
அன்று முழுவதும் தசரதன் வீட்டுப் பக்கமே வரவில்லை.. அதை நிம்மதியாக உணர்ந்தாள்
வெந்நிலா..
'அவனும்.. அவன் பேச்சும்.. எப்படித்தான் ஒன்வீக்கை கழிக்கப் போகிறேனோ.. காட்..!'
பேசாமல் சென்னைக்கு கிளம்பிப் போய் விடலாமா என்று தான் அவளுக்கு இருந்தது.. ஆனால் நாராயண மூர்த்தி அதை ஒப்புக்கொள்ள மாட்டார்...
அல்லியூருக்கு கிளம்பி வர மறுத்து.. சென்னையிலேயே தங்கி விடுகிறேன் என்று சொன்னவளிடம் பலத்த ஆட்சேபத்தை தெரிவித்தவர் அவர்..
"லுக் நிலா..! எனக்கும் அந்த வில்லேஜில்.. வசதி குறைவான வீட்டில் போய் தங்கியிருப்பதில் விருப்பமில்லை.. பட்.. நோ அதர் வே.. ஷியாம் சுந்தருடன் உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு.. இந்த மன்த் என்டிலே ஷியாம் பாரினிலிருந்து இன்டியாக்கு ரிடர்ன் ஆகிறான்.. அவன் வந்தவுடன் மேரேஜ்.."
"அதுக்கும்.. இதுக்கும் என்ன சம்பந்தம் டாடி...?"
"லின்க் இருக்கும்மா.. உன் மேரேஜ் முடிந்ததும் நாம குலதெய்வம் கோவிலுக்கு வந்து கும்பிட்டுட்டு போக வேண்டியிருக்கும்.. அப்ப நம்ம பூர்விக வீடு இடிந்து கிடந்தா ஷியாமின் பேமிலியில என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க...?"
"ஓகே.. டாட்.. அதுக்கு நான் எதுக்கு..? நீங்க மட்டும் போய் விட்டு வரலாமே.. நான் சென்னையில இருந்து நம்ம கம்பெனியை கவனிச்சுக்கறேன்..."
"நோ.. நோ.. ஷியாமின் பேமிலி.. கட்டுக் கோப்பானது.. அவங்க சிட்டியில இருந்தாலும்.. சில கொள்கைகளை ஃபாலோ பண்றவங்க.. வயதுப் பெண்ணைத் தனியாய் விட்டுவிட்டு நான் மட்டும் கிராமத்துக்கு போயிட்டேன்னு குற்றம் சொல்லிருவாங்க..."
"ஓ.. டாட்.. அப்ப ஒன்னு செய்யலாம்.. பக்கத்து டவுனில் நல்லதா ஹோட்டல் இருந்தா ரூம் புக் பண்ணிக்கலாம்.. ஒன்வீக்தானே.. நோ பிராப்ளம்..."
"அதுதான் பிராப்ளம்..."
"வாட்..?"
"யெஸ்.. வயதுப் பெண்ணை ஹோட்டலில் தங்க வைக்கலாமான்னு ஷியாமின் பாட்டி கேட்டு வைப்பாங்க.."
"ஓ.. நோ.. இது என்ன டாடி.. நான் உட்காருகிறதுக்கும்.. நடக்கிறதுக்கும் அவங்களுக்கு பதில் சொல்லனுமா..?"
"பதில் சொல்லித்தான் ஆகனும் பேபி.. அது நீ வாழப்போகிற வீடு..."
"என்னவோ போங்க.. எனக்கு இது பிடிக்கலை.. இப்படிப் பட்ட பேமிலியில நான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகனுமா...?"
"யார் சொன்னது..? மேரேஜ் முடிந்ததும்.. நீ ஷியாமுடன் கனடாவுக்கு பறந்துரப் போற.. அங்கே வந்தா அவனோட பாட்டி கேள்வி கேட்க முடியும்..?"
"அது ஒன்றுதான் என்னை இந்த மேரேஜீக்கு ஓகே சொல்ல வைத்திருக்கு.. மற்றபடி அவங்க பேமிலி என்னைக் கண்ட்ரோல் பண்ண நான் அனுமதிக்க முடியாது.."
வெந்நிலா ஒன்றும் மனம் போன போக்கில் வாழ நினைக்கும் பெண்ணில்லை.. அதே சமயம் அவளுடைய சுதந்திரத்தை மற்றவர் கொடுத்து அதைப் பெற்று வாழ நேர்வதை அவள் விரும்பவில்லை.. எது சரி.. எது தவறு என்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டும்.. அதற்கான அறிவும்.. வளர்ப்பும்.. அவளுக்கு இருக்கிறது.. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மற்றவர்கள் தீர்மானிப்பார்கள் என்றால் அது கொத்தடிமைத்தனம் அல்லவா...?
"ரிலாக்ஸ் நிலா.. மேரேஜ் முடிகிற வரைக்கும் அவங்க சொல்கிறதை மறுக்காம இருப்போமே..."
"ம்ம்.. அப்படின்னா சரிதான்.. பட்.. உங்க வில்லேஜிலேயே நாம தங்கிக்க முடியாதா..? பக்கத்து வில்லேஜில வேற ஒருத்தங்க வீட்டில தங்கனுமா..?"
"எங்க ஊரில.. என் வீட்டை அரண்மனை வீடுன்னு எல்லோரும் சொல்லுவாங்க.. அப்படிப்பட்ட வீட்டை வைத்திருக்கிறவன்.. அந்த வீட்டில் தங்க முடியாம அடுத்தவர்களின் வீட்டில் தங்குவதுன்னா எப்படிம்மா..? அதோட.. அல்லியூரில இருக்கிற பாரிஜாதம் எனக்கு
தூரத்து உறவு முறையில தங்கை..."
"தூரத்து சொந்தம்தானே டாடி..?"
"அதுதான் கரெக்டா இருக்கும்.. நெருங்கின சொந்தத்தில இருக்கிறவங்க எல்லாருமே நம்மளப் போல வசதி வாய்ப்பா இருக்கிறவங்கதான்.. இங்கே அப்படியில்லை.. ஊருக்குள்ளே பெயர் சொல்கிற அளவுக்கு பிழைத்தாலும் நம்ம கிட்டக்கூட வரமுடியாது.. இங்கே தங்கினா விழுந்து.. விழுந்து கவனித்துக்குவாங்க..."
"பின்னே..? நம்மைப் போல இருக்கிறவங்க அவங்க வீட்டில் ஒரு கப் காப்பியைக் குடிக்கிறதே பெரிது.. இதில ஒன்வீக் தங்கினா அவங்களுக்கு கால் தரையில் பதியாது தான்... பட் டாடி.. கிளம்பறப்ப நாம தங்கியிருந்ததுக்கான பணத்தை நீங்க கொடுத்துரனும்..."
"நான் அதை யோசித்து வைத்துட்டேன்ம்மா.. இவங்களிடம் பணமா கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க.. சுயமரியாதை.. அது.. இதுன்னு பேசுவாங்க..."
"அதை எதுக்கு தேவையில்லாம இவங்க பேசறாங்க..?"
வெந்நிலாவைப் பொருத்தவரை சுயமரியாதை என்பது பணக்காரர்களின் சொத்து.. பணவசதி அதிக மில்லாதவர்களுக்கு அது தேவையில்லாத சுமை என்பாள்..
"அவங்க அப்படித்தான்.. ஊருக்குள்ளே கௌரமான குடும்பம்.. விருந்தாளிகளை வைத்து தாங்க எங்களால முடியாதான்னு சண்டைக்கு வந்துருவாங்க.. ஸோ.. ஏதாவது நகையை வாங்கிக் கொடுத்துட்டா அது அண்ணன் கொடுத்த சீதனமா நினைத்து பாரிஜாதம் வாங்கிக்கிரும்.."
"எதையாவது செய்துருங்க.. ப்ரீயா தங்க என்னால முடியாது.. ஐ டோன்ட் லைக் இட்..."
"ஓகே பேபி.. அதை நான் பார்த்துக்கிறேன்.."
அதனால்தான் வெந்நிலா அலட்சியப் பார்வையுடன் அந்த வீட்டுக்குள் வளைய வந்தாள்.. அவளைப் பொறுத்தவரை அது ஒரு கிராமிய பாணி வீட்டைப் போல இருக்கும் ஹோட்டல்.. உறவினர் வீடல்ல...
அன்று இரவு சாப்பிடப் போனபோதும் தசரதன் வீடு திரும்பியிருக்கவில்லை.. கயிலைநாதன் மட்டும் வந்திருந்தார்...
"டவுனுக்குப் போயிருந்தோமா.. அங்கே தசரதன் கூடப் படிச்ச கணேசனைப் பார்த்தோம்..." என்றார்..
"கணேசனுக்கென்ன..?"
"அவனுக்கு ஒன்னுமில்லைடி.. அவன் ஊரில்தான் திருவிழாவாம்..."
"அதுக்கும்.. நமக்கும் என்ன சம்பந்தம்..?"
"உனக்கும்..  எனக்கும் சம்பந்தமில்லைதான்.. ஆனா கணேசனுக்கும் நம்ம தசரதனுக்கும் சம்பந்தம் இருக்கே.. கூடப்படிச்ச சேக்காளிக..."
"இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க...?"
"தசரதன் கணேசனோட ஊருக்கு திருவிழா கொண்டாட போயிட்டான்..."
"இது வேறயா..? இங்கே வீட்டில விருந்தாளிக வந்து இறங்கியிருக்காங்க.. இவன் சேக்காளி வீட்டுக்கு விருந்தாளியாப் போயிருக்கான்.. எங்கிட்டுப் போயி இதைச் சொல்ல...?"
"எங்கிட்டச் சொல்லு..."
"உங்ககிட்டச் சொல்லிட்டாழும்..! விளங்கிரும்..!" எரிச்சலுடன் சமையலறைக்குள் போனாள் பாரிஜாதம்...
அவளுக்கு வேறு கவலை...
வந்திருக்கும் உறவினர்கள் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. அவர்களுக்கு.. வழக்கமாக செய்யும் சாதாரண சமையல் வகைகளை செய்து போட முடியாது..
தினமும் வேளாவேளைக்கு விதம்விதமாக சைவ.. அசைவ பதார்த்தங்களைச் செய்து பறிமாற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளுக்கு.. அந்தப் பதார்த்தங்களை பெற்ற பிள்ளைக்கு பரிமாறினால்தானே வயிறு நிறையும்..?
அவள் தசரதனைப் பெற்ற தாய்.. கயிலைநாதனுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை.. அவர் தான் தகப்பனாயிற்றே.. அதனால் இலையில் பரிமாறப்பட்ட அசைவ சமையலை வீடுகட்டி அடித்தார்.. தசரதனுக்கும் சேர்த்து சமைத்தது வீணாகி விட்டதே என்று பாரிஜாதம் வருத்தப் படவேண்டிய நிலைமையில் வைக்காமல்.. அவர் மிச்சம் மீதி வைத்தால்தான் சாரதாவிற்கு ஏதாவது கிடைக்கும் என்ற சூழலை உருவாக்கி வைத்தார்...
வெந்நிலாவிற்கு நிம்மதியாக இருந்தது...
'அப்பாடி.. அந்த திமிர்பிடிச்சவனின் முகத்தில் இன்றைக்கு விழிக்க வேண்டிய அவசியமில்லை...'
அன்று மட்டுமில்லாமல் எத்தனை தினங்களுக்கு அந்த அவசியம் இல்லாமல் இருக்கப் போகிறது என்று அறியும் ஆவல் அவளுக்குள் உதித்தது...
"ஏன் சாரதா.. உங்க வில்லேஜில் எல்லாம் திருவிழா பங்சன் முடிய எத்தனை நாளாகும்..?" என்று கேட்கும் போதே...
'இவ ஒன்வீக்காகும்ன்னு சொன்னால் தேவலையே..' என்று அவள் மனம்கிடந்து அடித்துக் கொண்டது..

அவன் முகத்தில் விழிக்காமல் அந்த ஒரு வாரத்தையும் நிம்மதியாகக் கடந்து.. சென்னையைப் பார்த்து ஓடிப் போய் விடலாமே...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -7
பூமிக்கு வந்த நிலவு -7
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy