பூமிக்கு வந்த நிலவு -6

6 தசரதனுக்கு பிரியாணி கசந்தது.. பாரிஜாதத்தின் கைப்பக்குவத்தில் அவன் இலையில் பரப்பப்பட்டிருந்த கோழி வறுவலும்.. மீன் பொரியலும்.. அவனது...


6

தசரதனுக்கு பிரியாணி கசந்தது.. பாரிஜாதத்தின் கைப்பக்குவத்தில் அவன் இலையில் பரப்பப்பட்டிருந்த கோழி வறுவலும்.. மீன் பொரியலும்.. அவனது கணிப்புப் படியே தொண்டையை விட்டு இறங்க மறுத்தது...
அது அவன் பிறந்து வளர்ந்த வீடு.. அந்த வீட்டில் அவனுடைய அம்மா விருந்து சமைத்து பரிமாறிக் கொண்டிருக்கிறாள்.. அந்த விருந்தில் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட நாராயணமூர்த்தியும்.. அவர் பெற்ற ஆணவக்காரியான வெந்நிலாவும்.. என்னவோ சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டதைப் போல முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டதை அவனால் பார்க்க முடியவில்லை...
"அண்ணா... இவன்தான் என் மகன்.. தசரதன்.."
பாரிஜாதம் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தபோது அந்த நாராயணமூர்த்தி மருந்துக்குக் கூடச் சிரிக்கவில்லை..
சிரிப்பில்லாத கடினமான முகத்துடன் மிக லேசாக அவர் தலையசைத்த போது.. இந்த அறிமுகம் தேவைதானா என்று தசரதனுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
நாராயணமூர்த்தி தசரதனைப் பொருட்படுத்தாததை பாரிஜாதம் பொருட்படுத்துவதாகவே இல்லை.. அவள் மகனின் அருமை.. பெருமைகளை கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருந்தாள்...
"எம்.ஏ படிச்சிருக்கான் அண்ணா.. ஆபிசர் வேலைக்கெல்லாம் பரிட்சை எழுதிக்கிட்டு இருக்கான்.. போன மாசம்கூட ஏதோ இன்டர்வாய்தாவுக்கு போயிட்டு வந்தான்..."
பாரிஜாதம் பிளந்து கட்ட.. 'கடவுளே..' என்று மானசீகமாக நெற்றியில் கை வைத்தான் தசரதன்...
'சும்மாவே இந்த நிலாக்காரியை பிடிக்க முடியாது.. இந்த லட்சணத்திலே இந்த அம்மா வேற.. இன்டர்வியூக்கு போயிட்டு வந்ததை.. இன்டர் வாய்தான்னு சொல்லி வைக்குதே...'
லேசாக அவன் பார்வையை உயர்த்தி பார்த்தபோது சாப்பாட்டு மேஜையில் அவனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த வெந்நிலாவின் உதடுகளில் இகழ்ச்சிப் புன்னகை உதித்திருப்பதை பார்க்க முடிந்தது...
இப்போது நேரடியாகவே அவளை முறைத்தான் தசரதன்...
"அம்மா.. அது இன்டர்வாய்தா இல்லை.. இன்டர்வியு.." என்று தாயைத் திருத்தவும் செய்தான்...
"அப்படியாப்பா..? பாத்தீங்களா அண்ணா.. நான் தான் படிப்பை அரைகுறையாய் விட்டுட்டேன்.. என் புள்ளைக அப்படியில்ல.. மகன் எம்.ஏ படிச்சவனில்ல.. அதனால இங்கிலீஷில பிளந்து கட்டுவான்.."
பாரிஜாதம் மகன் திருத்திய சொற்பிழையிலும்.. கோட்டையை கட்ட முனைந்தாள் அந்த வெந்நிலாவோ கேலிப் புன்னகையுடன்...
"தெரியும்.. தெரியும்.. ஐ டோன்ட் கேர்ன்னு உங்க சன் பீட்டர் விட்டாரில்ல.. அப்பவே தெரியும்.. ஆஹா எவ்வளவு பெரிய ஸ்பீச்..." என்று கிண்டலாகச் சொன்னாள்...
பாரிஜாதத்திற்கு அந்தக் கிண்டல் புரியவில்லையா.. இல்லை அதை அவள் பொருட்படுத்த விரும்பவில்லையா  என்று தசரதனால் இனம் காண முடியவில்லை...
அவனும்.. கயிலைநாதனும் ஒற்றைச் சொல்லை கேலியாகச் சொல்லி விட்டால் அதற்கு.. ஒரு கோடி கேலிச்சொற்களைச் சொல்லி போர் முரசு கொட்டும் பாரிஜாதம்..
"அப்படியாம்மா..?" என்று கண்களை விரித்து அப்பாவியாகக் கேட்டாள்...
"ஆமாம் ஆண்ட்டி.. நான் அசந்தே போயிட்டேனில்ல.." அவள் வாய் பொத்தி சிரித்தாள்...
சாப்பிட்டு முடியும் வரை தசரதன் அவளை கீழ் பார்வையிலே முறைத்துக் கொண்டேயிருந்தான்... கை கழுவ அவள் எழுந்து போன போது இயல்பாக பின்னாலே போவதைப் போலப் போனவன்...
"இது கிராமம்.. இங்கே பீட்டர் விட்டா.. அவனைத்தான் பேக்கைப் பார்க்கிறதைப் போலப் பார்ப்பாங்க... ஆமா.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே..?" என்று கேட்டான்.
"வாட்..?"
"வாட்டாவது.. ஓட்டாவது.. உன் மனசில நீ பெரிய இவன்னு நினைப்பா..? உன் வீடு இடிஞ்சு கிடக்கு.. அதை சரிபண்ற வரைக்கும் என் வீட்டில் நீ ஒண்டிக்கிட்டு இருக்கே.. அந்த நினைப்பு உன் மனசில் இருக்கட்டும்.."
"என்னது..?"
"ஆ.. இப்ப தமிழ் வருதுல்ல..? இந்த தமிழ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே எங்கே போயிருந்துச்சு..? குற்றால அருவியில வெயிலுக்கு ஒரு குளியலைப் போட்டுட்டு வரலாம்ன்னு போயிருந்துச்சா..?"
"நான் யார் தெரியுமா..? என் ரேன்ஜ் என்னன்னு தெரியுமா..? என் தகுதிக்கு உங்க வீட்டில் நான் காலடி வைத்ததே பெரிய விசயம்.. வீடாமில்ல.. இதை விட பெரிய வீடா எங்க பங்களாவில தோட்டத்தைப் பார்த்துக்கிற காத்தவராயனுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறோம்.. ஏதோ சொந்தக்காரங்கன்னு டாடி சொன்னாரேன்னு உங்க வீட்டில வந்து தங்க ஒப்புக்கிட்டா.. பெரிசா மைசூர் பேலஸ் போல அலட்டிக்கிறிங்க..? அது சரி.. உங்க தகுதிக்கு இது பெரிய வீடுதான்.. எனக்கு அப்படியில்லை.. ஸோ.. மைன்ட் யுவர் வெர்ட்ஸ்..."
கோபத்தில் முகம் ஜிவுஜிவுக்க வெந்நிலா படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.. ஏற்கனெவே கடுப்பில் இருந்த தசரதனுக்கு சுள்ளென்று கோபம் தலைக்கு ஏறிவிட்டது.. அவள் யார்.. அவன் யார் என்ற நினைவே மறந்துவிட.. அவன் மரியாதையை கைவிட்டவனாக அடிக்குரலில் அவளிடம் சீறினான்...
"என்னடி சொன்ன..?"
அவன் 'டீ' என்று அழைத்ததில் வெந்நிலா அதிர்ந்து விட்டாள்.. அதுவரை அவளிடம் யாரும் மரியாதை குறைவாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.. 'வாங்க மேடம்..' 'போங்க மேடம்..' என்ற வார்த்தைகளுக்கும்.. வணக்கங்களுக்கும் பழக்கப்பட்டவள் அவள்.. தசரதனின் வாயிலிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள் வருமென்று கொஞ்சம்கூட அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...
"என்னது..?.. 'டீ'.. யா..?"
"ஆமாண்டி.. அப்படித்தாண்டி என்னடி செய்வ..?"
"என் டாடியைக் கூப்பிடறேன்..."
"கூப்பிடு.. அவரிடமே பஞ்சாயத்து வைக்கலாம்.. என் வீட்டைப் பார்த்தா உன் வீட்டுத் தோட்டக்காரனின் வீடுதான் உனக்கு நினைப்பில வருதா..? இந்த வீட்டுக்கு வான்னு உன்னை நாங்களா வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சோம்...?"
"ஸ்டுப்பிட்.. மரியாதை தெரியாத ஸ்கௌன்ட்ரல்.. கண்ட்ரி புரூட்..."
"இதுக்குத்தான் நீ இங்கிலீஷ் படிச்சியா..? பெரிசா ஸ்பீச்சைப் பத்திப் பேசின... இதுதான் உன் ஸ்பீச்சா...? நான் ஸ்பீச் கொடுக்கவா..? எதைப் பத்திக் கொடுக்கட்டும்..? பொலிடிகல்..? சயின்ஸ்..? கல்ச்சர்..? பிஸினெஸ்..? டெல் மீ.. எதைப்பத்தி நான் ஸ்பீச் கொடுக்கனும்..? எதை வேணும்னாலும் நீ சூஸ் பண்ணு.. அருமையாய் என் ஸ்பீச்சைக் கொடுப்பேன்.. அதை விட்டுட்டு உன்னைப் போல அநாகரிகமாய் திட்டறதுக்கு இங்கிலீஷ் வார்த்தைகளை யூஸ் பண்ண மாட்டேன்..."
"இன்டீஸன்டைப் பத்தி நீ பேசாதே.. ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசறதுன்னு கூடத் தெரியாத பட்டிக்காட்டான் நீ..."
"பெண்ணா..? இங்கேயா..? எங்கேயிருக்கா..?"
தசரதன் கைகளை மேலே குவித்து தேடுவதைப் போல பாவனை செய்ய.. வெந்நிலாவின் கோபம் அதிகமானது.. அவள் கால்களை தரையில் உதைத்து...
"யு.. யு.. யு.." என்று மூச்சிரைத்தாள்...
"ஐ ஆம் தசரதன்.. உனக்குத் தெரியாதா..? பெண்ணோ.. ஆணோ.. அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுத்தாத்தான் மரியாதை கிடைக்கும்.. அதை விட்டுட்டு என் ரேன்ஜீக்கு.. நீ கிட்டக்கூட வர முடியாதுன்னு அலட்டினா இப்படித்தான்..."
"உன் கூட நின்னு ஈக்குவலா பேசறதே தப்பு..."
வெந்நிலா கடைசி அம்புகளை எய்து விட்டு.. அவன் பேச வாயைத் திறப்பதற்குள் அங்கிருந்து விரைந்து விட்டாள்.. கையை கழுவி விட்டு வாசல் பக்கமாக வந்த தசரதனுக்கு தலையை வலித்தது...
'ம்ப்ச்.. வீட்டுக்கு வந்தா எப்பவுமே மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.. இன்னைக்கு அது கிடைக்கக்கூடாதுன்னு என் தலையில எழுதி வைச்சிருக்கு போல...'
வெறுப்புடன் புல்லட்டின் மீது ஏறி.. இருந்த கடுப்பையெல்லாம் காட்டி ஓங்கி ஒரு உதையை விட்டான்.. அது அலறிக் கொண்டு.. ஒரே உதை போதுமென்று ஓடத் தயாராகி விட்டது...
"டவுனுப் பக்கம் போறயா தசரதா..." கயிலைநாதன் கேட்டார்..
"ஆமாம்ப்பா.. உரமூட்டை தேவைப்படும் போல இருக்கு விலையை விசாரிச்சுட்டு வர்றேன்..."
"இரு.. நானும் வர்றேன்..."
கயிலைநாதன் தசரதனின் பின்னால் ஏறிக் கொண்டார்... புல்லட் டவுனை நோக்கிச் சென்ற
சாலையில் புயல்வேகத்தில் பறந்தது.. பயந்து போனவராக கயிலைநாதன் பல்லி போல மகனின் முதுகில் ஒட்டிக் கொண்டார்...
"எதுக்குடா இம்புட்டு வேகம்..? யார் மேல உனக்கு கோவம்...?"
"வேகமா ஓட்டினா கோவம்ன்னு அர்த்தமா..?"
"பின்னே இல்லையா..? எனக்கு உன்னைத் தெரியாதாடா மகனே..? சொல்லு... உன் கோவம்
யார் மேல..?"
"நிச்சயமா உங்கமேல இல்லை..."
"அப்பாடி.. நிம்மதியாச்சு.. தைரியமா உன் பின்னாலே உட்காரலாம்.. என்மேல கோவமில்லைன்னா.. வேற யார் மேல கோவம்..? உந்தங்கச்சி மேல நீ கோபப்பட மாட்ட.. அந்த விசயத்தில நீ பாசமலர் வளர்க்கிறவன்.. அடுத்தது யாரு..? உன் அம்மாவா..?"
"அவங்க யாருப்பா...?"
"எவங்கடா...?"
"அதான்.. நம்ம வீட்டில வந்து டேரா அடிச்சிருக்கிறவங்க...?"
"ஓ.. அதான் உனக்கு கோவமா..? தசரதா.. நமக்கு பிடிக்குதோ.. பிடிக்கலையோ.. அவங்க விருந்தாளியா நம்ம வீட்டில வந்து இறங்கிட்டாங்க.. வந்த பின்னாலே நாம முகத்தை தூக்கிக்கிறக் கூடாது.. அது பண்பாடில்ல.. அதனால..."
"அதனால..."
"சகித்துபோக பழகிக்கடா மகனே..."

தசரதனால் சகித்துப் போக முடியவில்லை...

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -6
பூமிக்கு வந்த நிலவு -6
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy