பூமிக்கு வந்த நிலவு -5

5 தசரதன் உடை மாற்றிக் கொண்டிருந்தான்.. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.. சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி கதவைத்திறந்தான்.. "சா...

5

தசரதன் உடை மாற்றிக் கொண்டிருந்தான்.. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.. சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி கதவைத்திறந்தான்..
"சாப்பிட வாடா..." என்றபடி பாரிஜாதம் அறைக்குள் வந்தாள்...
"அவங்க சாப்பிட்டாச்சா..?" தசரதன் விசாரித்தான்...
"ஊஹீம்.. சேர்ந்து சாப்பிடட்டும்ன்னு உன் அப்பா சொல்லிட்டாரு.. சீக்கிரமா வா.. அவங்க பசிதாங்க மாட்டாங்க..."
தசரதனுக்கு எரிச்சல் வந்தது.. விடிவதற்கு முன்னாலேயே எழுந்து வயலுக்குப் போய் தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்தவன் பசி தாங்குவானாம்.. ஒய்யாரமாக வந்து இறங்கியிருக்கும் விருந்தாளிகள் பசிதாங்க மாட்டார்களாம்..
'என்ன காலக் கொடுமைடா இது...'
தசரதனுக்கு அது அவன் வீடா என்பதில் சந்தேகம் வந்தது.. எப்போதும் அவனுடைய தேவைகளைப் பற்றியே நினைக்கும் அவனது தாய்.. வயலில் இருந்து வந்தவனுக்கு ஒரு வாய் காப்பித் தண்ணீரை கண்ணில் காட்டாமல்.. எங்கிருந்தோ வந்து இறங்கியிருக்கும் தூரத்து சொந்தத்திற்கு.. கோழியடித்து குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறாள்.. இந்த லட்சணத்தில் வந்திருக்கும் உறவினர்களின் பசிக்காக அவன் போய் சாப்பிட வேண்டுமாம்...
'நல்ல கதை...'
தலையை சிலுப்பிக் கொண்டான் தசரதன்.. சற்று முன்னால் பார்த்த அந்த வெண்ணிலாவின் அலட்சியப் பார்வை அவன் நினைவில் எழுந்தது...
'ம்ஹீம்.. அந்த மகராசி முன்னாலே உட்கார்ந்து சாப்பிட்டா.. தொண்டையிலேயே சாப்பாடு நின்னுக்கும்.. தொண்டைக் குழியை விட்டு சாப்பாடு இறங்காது...'
எரிச்சல் மண்டியதில் அவன் பாரிஜாதத்தின் அழைப்பை நிராகரித்தான்..
"முதல்ல வந்திருக்கிறவங்க சாப்பிட்டு முடிக்கட்டும்.. நான் அப்புறமா வர்றேன்.."
"நானும் அதைத்தான் சொன்னேன்.. எங்கே..? உன் அப்பா என் பேச்சை காதில வாங்கினாத்தானே..? உன் அண்ணனுக்கும்.. அண்ணன் மகளுக்கும் போட்டது போக மிச்சம் மீதி இருக்கிறதை எங்களுக்கு போட நினைக்கறியான்னு சண்டைக்கு வந்திட்டாரு.." பாரிஜாதம் பஞ்சாயத்து வைத்தாள்..
'இது வேறயா...'
பசியோடு இருந்த தசரதன் பற்களைக் கடித்தான்.. அந்த நேரத்தில் கயிலைநாதனின் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆதரவு அவன் மனதில் மிகப்பலமாக எழுந்தது...
"சரியாத்தானே சொல்லியிருக்காரு..."
வெண்ணிலாவின் ஆணவ முகத்தின் நினைவில் அவன் தெரியாத்தனமாக வாய் விட்டுவிட.. பாரிஜாதம் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்...
"ஆமடா.. வராத என் அண்ணன் வந்ததுக்கு உன் அப்பா வக்கணையா பேசுவாரு.. நீயும் அதுக்கு துணை போவியா...?"
"அதுக்கில்லைம்மா.."
"எதுக்கில்லை..? எனக்கு இந்த வீட்டில மதிப்பு இல்லை... சும்மாவா சொன்னாங்க.. விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்ன்னு..."
இப்போது எதற்காக அம்மா விதையையும் சுரைக்காயையும் உவமானம் சொல்கிறாள் என்று விளங்காதவனாக.. பசித்த வயிறோடு தலைமுடியைப் பிய்த்துக்கொண்டான் தசரதன்...
"நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்டுட்டுப் பேசும்மா..." அவன் மன்றாடினான்...
"என்னத்தைச் சொல்லப் போற..? சுரைக்காய்க்கு உப்பில்லைன்னா சொல்லப் போற..?" பாரிஜாதம் சுரைக்காயை விடுவேனா என்று பிடித்து வைத்துக் கொண்டு மல்லுக் கட்டினாள்...
"ஏம்மா.. என்னைப் பேசவிட மாட்டியா...?"
"பேசுப்பா.. பேசு.. நீயும்.. உன் அப்பாவும் பேசறதைக் கேக்கிறதுக்கு மட்டும்தானே நான் பிறப்பெடுத்திருக்கேன்..?"
"கடவுளே..."
"அவரை ஏண்டா கூப்பிடறே..? ஒரு நாளாவது நான் பேசறதை நீயும்.. உன் அப்பாவும் காதுகுடுத்து கேட்டிருக்கீங்களா..?"
அதைத்தானே இத்தனை நாளும் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லத்தான் நினைத்தான் தசரதன்.. சொல்ல நினைத்த வார்த்தைகளை சொல்லி விட அவனால் முடியுமா.. என்ன..? அதனால் வாயை மூடிக் கொண்டான் ஆனால் பாரிஜாதம் வாயை மூடவில்லை...
"அப்படியே.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கேடா.. அவரு சொல்லுறதைச் சொல்லுற கிளிப் பிள்ளையாடா நீ...?"
"யாரு சொன்னது..?"
"ஏன்..? நான்தான் சொல்லுறேன்.. இதைச் சொல்றதுக்கு.. வெத்தலைப் பொட்டியை கக்கத்தில இடுக்கிக்கிட்டு ஜோசியனா வந்து இறங்குவான்..?"
"அம்மா.. தெரியாத்தனமா வாய் விட்டுட்டேன்.. நீ ஆளை விட்டிரும்மா..."
"யாரு தெரியாம வாயை விட்டது..? நீயா..? அப்படியே அப்பாவோட கல்லுளி மங்கத்தனத்தை உரிச்சு வைச்சு பிறந்திருக்கிற பிறவி தானடா நீ..? உனக்கா பேசச் சொல்லித்தரனும்..."
"என்னமோ பேசிப்புட்டேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?"
"டேய் மகனே.. பெத்தவகிட்டயே எகிறிப் பேசறயா..? பேசுடா.. பேசு.. போன மாசத்தில ஊரில இருந்து உறவு கொண்டாடிக்கிட்டு வந்து இறங்கினாளே உன் அத்தைகாரி.. அவ வந்திருந்தப்ப இந்தப் பேச்சு எங்கேடா போயிருந்துச்சு..?"
'ஐயா.. தசரதா.. என் அண்ணன் மகனே..!' என்று வாய் நிறைய பாசத்தோடு அழைத்தபடி வந்த அவனுடைய அத்தையும் கயிலைநாதனின் உடன் பிறந்த அக்காவுமான கமலம் அவன் மனதில் தோன்றினாள்...
'அந்த அத்தையும்.. இந்த ஆணவக்காரியும் ஒன்னா..?'
இதை பாரிஜாதத்திடம் யார் கேட்பது..?
அந்த வீட்டிலிருந்த மற்றவர்கள்தான் பாரிஜாதத்-திடம் கேள்வி கேட்கத் தயங்குவார்கள்.. அவள் மற்றவர்களை கேள்வி கேட்டு வறுத்தெடுக்க தயங்கவே மாட்டாள்...
"அத்தேன்னு அவ மடியில தலையை வைச்சுக்கிட்டியே.. அப்ப இந்தப் பேச்சைக் கானோமே.. அதை விடு.. அதுக்கு முத மாசம்.. உன் பெரியப்பான்னு ஒருத்தர் வந்து இறங்கினாரே..."
"அம்மா.. அவரு நம்ம பெரியப்பாதானே..? அப்பாவோட கூடப்பிறந்த அண்ணன்ம்மா..."
"அந்த நொண்ணனை எங்களுக்கும் தெரியும்.. நீ சொல்லித்தான் தெரிஞ்சுக்கனும்கிற அவசியமில்ல..."
"அது சரி..."
"அவரு பட்டணத்தில பிழைக்கப் போனவர்ன்னு உங்க அப்பா சொன்னப்ப பூம்பூம் மாடுபோல தலையைத் ஆட்டினயே..."
"ஏம்மா.. அப்பா சொன்னா தலையை ஆட்ட வேணாமா..? அதோட.. பெரியப்பா ஒன்னும் பஞ்சம் பிழைக்க பட்டினம் போனதா அப்பா சொல்லலையே.. பெரியம்மா பட்டினத்திலே வேலை பாக்கிறாங்க.. அதனால பெரியப்பா அங்கேயே மளிகைக்கடை ஆரம்பிச்சுட்டுப் போயிட்டதா இல்ல சொன்னாரு..? அந்தக் கடைகூட இப்ப பெரிசாகி அந்த ஏரியாவிலேயே பிரபலமான டிபார்ட் மென்டல் ஸ்டோராகிருச்சுன்னும் சொன்னாரே.. அது உனக்கு நினைப்பில் இல்லையா..?"
"இருக்கும்டா.. இருக்கும்.. அவ பெரிய டீச்சரு.. அது உன் மனசில இருக்கும்.. உன் அம்மா வெறும் ஐஞ்சாம் கிளாஸ்தானே.. என் பேச்சு உன் மனசில ஏறுமா..?"
"யம்மோவ்.. எதுக்கும்.. எதுக்கும் இணை கூட்டறே..?"
"அவளுக்கு நான் இணையில்லங்கறியா..?"
பேச்சு எந்தத்திசையில் போனாலும் அந்தத் திசையில் வந்து வழி மறிக்கும் பாரிஜாதத்தின் பேச்சுத் திறமைக்கு முன்னால் சொற்போர் நடத்த முடியாமல் களைத்துப் போனான் தசரதன்..
"இப்ப நான் என்னதான்ம்மா செய்யனும்..?"
"கீழே இறங்கிவாடா.. உன் அத்தை மடியில உக்காந்துக்கிட்டு சாப்பிடுவ.. உன் பெரியப்பாவைக் கொஞ்சிக்கிட்டே சாப்பிடுவ.. என் அண்ணன் கூட உக்காந்து சாப்பிடச் சொன்னா மட்டும் அப்புறமா வரேன்னு சொல்லுவியோ..?"
"தெரியாத்தனமா சொல்லிட்டேன்ம்மா.. நீ முன்னாலே போ.. நான் பின்னாலே வாரேன்..."
"அந்தக் கதையெல்லாம் எவளாச்சும் கட்டப்புள்ள.. குட்ட புள்ள.. கருகமணி போட்ட புள்ள கிட்ட வைச்சுக்க.. எங்கிட்ட வேணாம்.. ஒழுங்கா கூட வந்து சேரு..."

தசரதனை கைபிடியாய் பிடித்துக் கொண்டுதான் படியிறங்கினாள் பாரிஜாதம்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -5
பூமிக்கு வந்த நிலவு -5
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy