பூமிக்கு வந்த நிலவு -2

2 ஈரக்காற்று உடல் தழுவ.. விடியலின் புத்துணர்வை அனுபவித்து ரசித்தபடி வரப்பில் நடக்க ஆரம்பித்தான் தசரதன்... அவன் பின்னால் ஓட்டமும் நடையு...

2

ஈரக்காற்று உடல் தழுவ.. விடியலின் புத்துணர்வை அனுபவித்து ரசித்தபடி வரப்பில் நடக்க ஆரம்பித்தான் தசரதன்... அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்த சரவணன்..
"மெல்ல நடடா மச்சான்.." என்று கெஞ்சினான்...
"நான் உனக்கு மாமன் மகன்டா சரவணா..."
"யாரு இல்லைன்னு சொன்னது..?"
"பின்னே.. என்னவோ மாமன் மகளைப் பார்த்துக் கொஞ்சறதைப் போல.. மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்ன்னு சொல்லி வைக்கறியே..."
"மாமன் மகளைப் பார்த்துச் சொல்ல ஆசைதான்.."
"என்னது..?"
தசரதன் சிவந்த கண்களுடன் திரும்பிப் பார்க்க சரவணன் நடுங்கிப் போனவனாக பின் வாங்கினான்...
"மாமன் மகன்னுதானே சொன்னேன்..? உன் தங்கச்சின்னு சொன்னேனாடா மச்சான்..? இப்படி கொலைவெறிப் பார்வையைப் பார்க்கறியே..."
"அது.. அந்த பயம் இருக்கட்டும்..."
"அது எப்பவும் இருக்கும் மச்சான்..."
"அதைக் குறையாம பார்த்துக்க.. அதுதான் உனக்கு நல்லது.."
தசரதன் எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுத்தபடி நடையில் வேகம் கூட்ட.. சரவணன் அவனுடைய ஆறடி உயரத்தையும்.. அகன்ற மார்பினையும்.. பொறாமையுடன் அளவிட்டான்...
'ஆளைப்பாரு.. அப்படியே வாட்ட சாட்டமா ஆணழகன் அர்ச்சுனனைப் போல இருந்து வைக்கிறான்.. ஊரில இருக்கிற இவனோட முறைப் பொண்ணுகளெல்லாம் இவனைப் பார்த்து சொக்கிப் போறாளுக... அவளுக மட்டும் இவனைப் பாக்கலாமாம்.. நான் மட்டும் இவனோட தங்கச்சியைப் பார்க்கக் கூடாதாம்...'
சரவணன் மனதுக்குள் புலம்ப.. தசரதன் திரும்பி புருவங்களை உயர்த்தினான்...
"என்னடா மச்சான்..?"
சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.. தசரதன் ஊடுறுவும் பார்வையொன்றை வீசி வைக்க சரவணனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. எதற்காக அந்த அனல் வீசும் பார்வை அவனை நோக்கிப் பாய்கிறது என்று அறியாதவனாக அவன் மனதிற்குள் அழுது புலம்புவதாக நினைத்துக் கொண்டு சத்தமாக பாடிப் புலம்பினான்..
"என்ன தவறு செய்தேன்..? - அதுதான்
                எனக்கும் புரியவில்லை...
     வந்து பிறந்து விட்டேன் - ஆனால்
                இவன் மனது தெரியவில்லை..."
"என்னடா மச்சான்.. மனசுக்குள்ள நடிகர் திலகத்தோட மறு அவதாரம்ங்கிற நினைப்பா..?"
"இல்லடா மச்சான்.."
"அப்புறம் எதுக்கு இந்த பாட்டு..?"
"எதுக்குடா இந்தப் பார்வை..?"
"என்னை என்னோட முறைப் பொண்ணுக சைட் அடிச்சா.. நீ எந்தங்கச்சிகளை சைட் அடிக்க கிளம்பிருவியா..?"
"உனக்கு ஒரே தங்கச்சிதானடா..?"
"சித்தப்பா மகளுக.. பெரியப்பா மகளுகளை என்னன்னு சொல்லுவ..? அத்தை மக.. மாமன் மகன்னா சொல்லுவ..?"
"ஏண்டா மச்சான்.. இது உனக்கே நியாயமா இருக்காடா மச்சான்.. உங்க அப்பாவுக்கு ஊரு பூராவும் பங்காளிக..."
"அதுக்கு..?"
"உன் படைபலம் ஜாஸ்திடா மச்சான்.. ஊருக்குள்ளே இருக்கிற பருவப் பொண்ணுகள்ள முக்கால் வாசிப் பொண்ணுக உனக்கு அக்கா.. தங்கச்சி முறையாகனும்.."
"அந்த முக்கால்வாசிப் பக்கம் திரும்பாதேண்ணேன்.."
"அடப்பாவி மச்சான்.. மீதி கால்வாசி எனக்கு அக்கா.. தங்கச்சி முறையாகனுமேடா..."
"அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..? இதெல்லாம் ஆண்டவன் போடற கணக்குடா மச்சான்.."
"அப்படிங்கறே..?"
"ஆமாங்கிறேன்..."
"அப்ப.. என்னை கணக்குப் போட நீ விட மாட்ட..?"
"அருவாளைத் தூக்குவேன்.. பரவாயில்லையா..?"
"அது எதுக்கு தேவையில்லாம.. அது பாட்டுக்கு பரணிலே கிடக்கட்டும்.. கழுதையை விட்டுத் தள்ளு.."
"நீ கணக்குப் போட ஆசைப்பட்டியே..."
"அதுக்கு கணக்கு டீச்சர்கிட்ட டியுசன் போனா வந்துட்டுப் போகுது..."
"இதைப் பாருடா.. அது எந்த டீச்சர்..?"
"நம்ம ஊருக்குப் புதுசா வந்திருக்கிற சரிதா டீச்சர்தான்.. பாருடா மச்சான்.. அந்த டீச்சருக்கும்.. உனக்கும் ஒட்டுமில்ல.. உறவுமில்ல.. பரணில தூங்கற வீச்சரிவாள வெளியில எடுக்கிற யோசனையையெல்லாம் மூட்டை கட்டி அந்த அருவா இருக்கிற பரணிலேயே தூக்கிப் போடு..."
"ஹா.. ஹா..."
"சிரிக்காம எனக்கு நல்லதொரு பதிலாச் சொல்லுடா மச்சான்..."
"பிழைச்சுப் போ.."
"அப்பாடி.. இப்பத்தான் நிம்மதியா மூச்சே விட முடியுது.."
"ஆமாம்.. உன் அப்பா உனக்கு பொண்ணு பாக்கனும்னு போன புதன்கிழமை வாகைக்குளத்துக்கு வண்டியைக் கட்டிக்கிட்டுப் போனாரே..."
"ஆமாமாம்..."
"எதுக்குடா இத்தனை ஆமாம்சாமி போடறவன்..?"
"நீ கேட்டியே மச்சான்.."
"அந்தக் கதை என்னாச்சு..?"
"பேச்சு வார்த்தையில இருக்கு.."
"அங்கேயும் பேச்சு வார்த்தை.. இந்த சரிதா டீச்சர்கிட்டேயும் பேச்சு வார்த்தையா..?"
"ரெண்டு பேச்சு வார்த்தையும் வேறவேற மச்சான்.."
"அப்படியா..? எங்கே ஆறு வித்தியாசத்தை சொல்லு பார்க்கலாம்..."
"ஆறு எதுக்குடா மச்சான்... ஒன்னே ஒன்னு... கண்ணேகண்ணுன்னு ஒரு வித்தியாசத்தைச் சொல்றேன்.. கேட்கறியா..?"
"வேண்டாம்ன்னா.. விடவா போற.. சொல்லித் தொலை..."
"அங்கே பேச்சு வார்த்தையை நடத்தறது என் அப்பா.."
"ஓஹோ.."
"இங்கே பேச்சு வார்த்தையை நடத்தறது நான்.."
"அப்படிப்போடு அருவாளை..."
தசரதன் பாராட்டி வைக்க.. சரவணன் மிரண்டு போனான்..
"இப்ப எதுக்குடா மச்சான் அருவாளைக் கட்டி இழுக்கற..?"
"அடப் போடா இவனே...! உன்னைப் பாராட்டறேண்டா..."
"பாராட்டுக்கும் அருவாதானா..? வேண்டாம்டா மச்சான்.. உனக்கு கோடி புண்ணியமா போயிடும்.. விட்டுரு..."
"நீ விடு.. நான் விடறேன்..."
"இந்தாப் பாரு மச்சான்.. இதப் பத்தின டீலை ஏற்கனெவே பேசி முடிச்சிட்டோம்.. நீ பேச்சு மாறாதே..."
"ஏண்டா அலையற..?"
"வேற என்னத்தைடா செய்யறது..? என் தலைவிதிக்கு நான் அலைந்துதான் லட்சணமான பொண்ணைத் தேடனும்.. உன்னைப் போல தானா வந்து மாட்டுமா..?"
"தானா வந்து மாட்டுதா...? எதுடா..?"
"அப்சரஸ்..."
இவனுக்கென்ன வைத்தியமா பிடித்திருக்கிறது என்ற சந்தேகத்துடன் சரவணனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து வைத்தான் தசரதன்...
"எதுக்குடா அப்படிப் பார்க்கற..?"
"நானும் அப்போ பிடிச்சுப் பாக்கறேன்.. என்னமோ அப்சரஸ்.. அப்சரஸ் அப்படின்னு பினாத்தறயே.. என்னடா ஆச்சு..? சித்திரை மாசத்து கத்தரி வெயிலில உன் மண்டை மூளை குழம்பிப் போயிருச்சா..?"
"ஆமாடா.. இந்த விட்ட விடிகாலையில.. குளுகுளுன்னு காத்து வருகிற வயல் வரப்பில எனக்கு மண்டை மூளை குளிராம.. குழம்பிப் போயிருக்கு... போடா.. போ.. உன் வீட்டிலேதான் ஒரு அப்சரஸ் வந்து இறங்கியிருக்கு..."
"பொடி வைச்சுப் பேசாம விசயத்துக்கு வாடா..."
"அதை நான் சொன்னா நல்லாயிருக்காது..."
"அது உனக்கே தெரிஞ்சாச்சரி.. நீ சொல்ற எது தாண்டா நல்லாயிருக்கு..? எல்லாமே நாதாரித்தனமாத்தான் இருக்கு.."
"மத்ததை விடு.. இது அப்படியில்ல.. நீயே நேராப் போயி பாத்துக்க..."
"நீ எங்கே போகிறவன்..?"
"அந்தத் தெரு முக்கில சரிதா டீச்சர் வீடு இருக்கு.."
"இருந்தா..?"
"இந்தப் பச்சைக் காய்கறியை கொடுத்து.. காலை வணக்கம் ஜொள்ளப் போறேன்..."
"பச்சைக் காய்கறியா..?"
அப்போதுதான் சரவணின் கையிலிருந்த ஏதோவொரு துணிக்கடையின் பெயர் போட்ட மஞ்சள் பையைக் கவனித்தான் தசரதன்...
அதுநேரம் வரை எதற்காக சரவணன்.. ஒரு கையை முதுகுக்குப் பின்னாலேயே ஒளித்து வைத்திருந்தான் என்ற விவரம் அவனுக்கு அப்போதுதான் பிடிபட்டது...
"அடப்பாவி.. இது என் தோட்டத்துக் காய்டா..."
"என் மச்சான் தோட்டத்துக் காய்டா மச்சான்..."
"எடு அருவாளா.. ஏண்டா.. நீ சரிதா டீச்சருக்கு காலை வணக்கம் ஜொள்ள பயன் படும்ன்னுதான் என் தோட்டத்தில காய் பயிர் செய்கிறேனா..?"
"என்னடா மச்சான்.. ஒரு நாலுகாயை பறிச்சதுக்கு இந்த கோவம்.. கோவிச்சுக்கற..? ஏண்டா.. எனக்கு அந்த உரிமையில்லையா..?"
"இந்தாப்பாரு.. இதையெல்லாம் உன் வீட்டுக்கு கொண்டு போயி உன் அம்மா கையில கொடு.. நான் ஏன்னு கேக்க மாட்டேன்..."
"ஏண்டா கேக்கப் போற..? அது அப்படியே இந்தக் காய்கள அடுப்பங்கரையில இருக்கிற எந்தங்கச்சி கையில கொடுக்கும்.. அந்த தங்கச்சி காயை எடுப்பா.. அதில உம்முகம் தெரியும்.. இதுதானே உன் ஐடியா..?"
"அடச்சீ.. உன் ஐடியாவைக் கொண்டு போயி குப்பையில போடு.. அது உன்புத்தி.. உன் மூக்குறுஞ்சி தங்கச்சிக்கு நூல் விடனும்னு நான் கனவில கூட நினைக்க மாட்டேன்.."
"டேய்.. தானாடா விட்டாலும் சதை ஆடும்..."
"இதப் பாருடா.. நீ கூட என்னென்னவோ சொல்ற.."
"நான் சொல்லலை.. பெரியவங்க சொல்லி-யிருக்காங்க..."
"அதையெல்லாம் நீ எதுக்குடா சொல்ற...?"
"ஆயிரம்தான் இருந்தாலும் அவ எந்தங்கச்சி.."
"அதுக்கு..?"
"அது எப்படி.. அவள நீ மூக்குறுஞ்சின்னு சொல்லலாம்...?"
"அடிச்சேன்னா பல்லைக் கழட்டிருவேன்.. படவா.. அவ பின்னே வேற யாரு..? பாக்தாத் பேரழகியா..? அழகு தங்கச்சி கூடப் பொறந்துட்டு பேச வந்திட்டான்..."
"இந்தா பாரு.. என்னை என்ன வேணும்னாலும் சொல்லு..."
"அடேங்கப்பா.. உன்கிட்ட கேட்டுட்டுத்தான் சொல்லனுமாக்கும்...?"
"எந்தங்கச்சியை எதுவும் சொல்லாதே..."
"சொன்னா.. என்னடா பண்ணுவ...?"
"இப்படி ஓடியே போயிருவேன்..."
சரவணன் இரண்டே எட்டில் சரிதாவின் வீட்டை நோக்கி ஓடிவிட.. தசரதன் வாய்விட்டுச் சிரித்தபடி வீட்டைப் பார்த்து நடந்தான்.. வீட்டு வாசலில் வெளிநாட்டுக்கார் நின்றிருந்தது.. அவன் புருவங்கள் உயர்ந்தான்..

'யாராய்.. இருக்கும்...?'


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -2
பூமிக்கு வந்த நிலவு -2
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu2_13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu2_13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy