பூமிக்கு வந்த நிலவு -19

19 ' அடிப்பாவி.. அவ கட்டையை மறந்தாலும் இவ மறக்க விட மாட்டா போல இருக்கே.. விட்டா விறகுக் கட்டய எடுத்து அவ கையில கொடுத்திருவா போல இர...

19

'அடிப்பாவி.. அவ கட்டையை மறந்தாலும் இவ மறக்க விட மாட்டா போல இருக்கே.. விட்டா விறகுக் கட்டய எடுத்து அவ கையில கொடுத்திருவா போல இருக்கே...'
பாரிஜாதம் ரங்கத்தின் அச்சத்தை அதிகப் படுத்துவதைப் போல விறகுக்கட்டைக்கு அருகே வந்தாள்..
'ஊஹீம்.. இதுக்கு மேல இங்க நிக்கக் கூடாது..' ரங்கம் சிட்டாகப் பறந்து விட்டாள்...
"ஓடறதைப் பாரு.. இவளுக்கு இதே பொழப்பாப் போச்சு.. நீ வேலயப் பாரு பாரிஜாதம்.." அடுத்த வீட்டுக்காரப் பெண் ஆறுதலாகப் பேசிவிட்டு நகர்ந்தாள்...
கூட்டம் அவர்களுக்குள் பேசியபடி கலைந்து விட்டது.. பாரிஜாதம் வாய்க்குள் திட்டியபடி கயிலைநாதனிடம் வந்தாள்...
"இப்படியே உக்காந்திருந்தா எப்படி..?" என்று கேட்டாள்...
"என்னடி செய்யச் சொல்ற..?"
"புள்ளயக் காணோம்.. அந்த நினப்பு மனசில இருக்கா இல்லையா..?"
"எல்லாம் எனக்கும் இருக்கு.. அவனைத் தேடிக் கூப்பிட்டுக்கிட்டு வர சரவணனை அனுப்பி வைச்சிருக்கேன்..."
"ஏனாம்..? அந்த வேலய நீங்க செய்கிறதுக்- கென்ன..?"
"யாருடி இவ.. இளந்தாரிப் பய.. மனசு சோர்ந்தா எங்கே போயி உக்காருவான்னு கூட்டாளிக்குத்தான் தெரியும்.. அப்பன்காரனுக்கு எப்புடிடீ தெரியும்..?"
பாரிஜாதம் பதில் சொல்லாமல் வாசல் படியில் அமர்ந்தாள்.. அவள் முகத்தில் சோகம் அமிழ்ந்திருந்தது.. அதை கயிலைநாதனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. இது கல்யாண வீடா என்று அவர் மனம் கசந்தார்...
புதுமணப்பெண் மாடியறையில் புதைந்திருக்கிறாள்..
மணமகனோ தாலி கட்டியதும் மாயமாகி விட்டான்.. எங்கேயிருக்கிறான் என்றே தெரியவில்லை.. இந்த லட்சணத்தில் இருக்கும் கல்யாண வீடு அவர் வீடாகத்தான் இருக்கும் என்று நெடுமூச்சு விட்டார்...
"அந்தப் பொண்ணு என்ன செய்யுதுடி...?"
"கட்டிலில் குப்புறப் படுத்திருக்காம்.. நம்ம சாரதா பார்த்துட்டு வந்து சொன்னா..."
"சாப்பிட ஏதாச்சும் குடுத்து விட்டியா..?"
"பாலையே குடிக்கலை... திருப்பி அனுப்பிருச்சு.. இதில சாப்பாட்டைக் கொடுத்து விட்டாச் சாப்பிடுவாளா..?"
"எதுவும் தப்பா நடக்கலைடி... தசரதன் தெரியாமத்- தான் மாடி ரூமுக்கு போயிருக்கான்... ஜாமத்துக்கு மேலே ஆகிருச்சு.. அசதியில படுத்தவுடன் அப்படியே தூங்கியிருப்பான்..."
"எனக்கு மட்டும் அது தெரியாதா..? இன்னைக்குன்னு பாத்து ரங்கம் வந்து தொலைச்சிட்டா.. பத்தாக் குறைக்கு சரவணனும்... சொக்கலிங்க அண்ணனும் சேந்து வந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியை பாத்துத் தொலைச்சிட்டாங்க.."
"சரவணனைப் பத்தியும்.. சொக்கலிங்கத்தைப் பத்தியும் கவலையில்லடி.. இந்த ரங்கம் கொடுமதான் பெரும் கொடுமையாகப் போச்சு.. இவள யாருடி விட்ட விடிகாலையில நம்ம வீட்டுக்கு வரச்சொன்னது...?"
"ஊம்.. நான்தான் போயி வெத்தலபாக்கை வைச்சு அழைச்சிட்டு வந்திட்டேன்.. தொங்கச்சி.. முறைன்னு உரிமை கொண்டாட விட்டது யாராம்..? இந்தக் கொடுமைக்குத்தான் அவள வீட்டுவாசப்படி ஏற விடாதீங்கன்னு தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. என் பேச்சை யாரு கேட்டது..?"
"இந்தக் கொடுமை பண்ணுவான்னு கனவாடி கண்டேன்..."
"இனிப் புலம்பி என்ன செய்ய..? நடத்தற நாடகத்தை நடத்தி முடிச்சிட்டு அவ ஓடிட்டா.. என் புள்ளதான் எங்கே இருக்கானோ..? என்ன செய்கிறானோ..?"
தசரதன் ஆற்றங்கரை மண்டபத்தில் கைகளை மடித்து தலைக்கு அணைவாகக் கொடுத்து அண்ணாந்து பார்த்தபடி படுத்திருந்தான்.. காலடியோசை கேட்டு லேசாக தலையைத் திருப்பிப் பார்த்தான்.. சரவணன் நின்று கொண்டிருந்தான்...
"நினைச்சேன்டா.. நீ இங்கதான் இருப்பன்னு..." என்றபடி தசரதனின் அருகில் தூணில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான்...
"எங்க போயி ஒளிஞ்சாலும் நீ என்னை விடவே மாட்டியா..?" சலிப்புடன் கேட்டான் தசரதன்....
"எதுக்குடா ஒளியனும்..? இதான் எனக்குப் புரிய மாட்டேங்குது.. கண்ணா லட்டு திங்க ஆசையான்னு கடவுள் கேட்டு உன் கையில திருப்பதி லட்டையே திணிச்சிருக்கார்... நீயென்னடான்னா.. ஆத்தங்கரை மண்டபத்தில படுத்து அண்ணாந்து விட்டத்தை வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருக்க..."
"டேய்.. நானே வெறுப்பில இருக்கேன்.. ஓடிப் போயிரு..."
"அதை என்ன கழுதைக்கு செய்யச் சொல்ற..? இங்கே பாருடா மச்சான்.. அந்தப் பொண்ணு எனக்குத் தங்கச்சி முறைதான் ஆகனும்.. ஆனாலும் என்னால இதைச் சொல்லாம இருக்க முடியல.. அழகுன்னா அழகு.. அப்படியொரு அழகு.. அப்சரஸ்ன்னா இந்தப் பொண்ணுதான்.. நினைச்சுக்கூடப் பார்க்கல மச்சான்.. நீ இந்தப் பொண்ணு கழுத்தில தாலியக் கட்டுவேன்னு.. ஜாக்பாட் அடிச்சிருக்கே.. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில கலந்துக்கிட்டாக்கூட ஒரு கோடிதான் கிடைக்கும்.. இப்பப் பாரு.. எத்தனை கோடி சொத்துக்கு மருமகனா ஆகியிருக்கே.. வாடா மச்சான்.. இதை இனிப்பைச் சாப்பிட்டுக் கொண்டாடலாம்..."
"கடுப்பைக் கிளப்பாதேடா சரவணா..."
"அட எழுந்திருடா மச்சான்.. இருட்டிக்கிட்டு வருது.. நீ இங்க வந்து படுத்திருக்கே.. அங்கே வீட்டில உன்னைக் காணாம உங்கம்மா மனசு என்ன பாடுபடும்ன்னு நினைச்சாவது பாத்தியா..?"
சரவணனின் முயற்சிக்குப் பலனிருந்தது.. தசரதன் எழுந்து அமர்ந்தான்.. ஆற்றை வெறித்தான்...
'ம்ஹீம்.. இவனெல்லாம் இளவட்டப் பயல்ன்னு சொல்லிக்கிறான்.. இம்புட்டு நேரமும் இவனக் கட்டிக்கிட்டவ அழகப்பத்தி கதைகதையாய் சொன்னேன்.. பயபுள்ள அசையாம படுத்துக்கிடந்தான்.. அம்மாவப்
பத்திச் சொன்னதும் எழுந்திருச்சே உக்காந்துட்டான்...'
இரும்பு இளகத் தொடங்குவதைப் புரிந்து கொண்டவனாக தசரதனின் அருகில் நகர்ந்து அமர்ந்தான் சரவணன்...
"பாருடா மாப்பிள்ளை.. காலயில இருந்து உன் பல்லிலயும் பச்சத்தண்ணி படல.. உன் வீட்டாளுக பல்லிலயும் பச்சத்தண்ணி படல.. என்ன கழுதைக்காக குடும்பமே விரதமிருக்கறிங்க...?"
"அவ போயிட்டாளா...?"
"எவளக் கேக்கற..? ஓ.. அந்த அப்சரஸைக் கேக்கறியா..? அது எப்படிடா போகும்...?"
"அப்ப... அவ போகலையா...? வீட்டிலதான் இருக்காளா...?"
தசரதன் மீண்டும் படுக்கப் போக.. அவனைப் படுக்கவிடாமல் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் சரவணன்...
"வேணான்டா மச்சான்.. உன் வீட்டு சினிமாவால நானும் கொலை பட்டினியாக் கிடக்கிறேன்.. உன்னைக் கொண்டு போயி உங்கம்மா முன்னால விட்டாத்தான் என் வீட்டில நானு கை நனைக்க முடியும்.. இல்லன்னா சோறு தண்ணிய எங்கம்மா என் கண்ணுலயே காட்டாது..."
"அவ அப்பன் என்ன ஆனாரு..."
"அவரு ஊரைப் பாத்துக் கிளம்பிப் போயிட்டாரு.."
"என்னது..!.."
"எதுக்கு இத்தாம் பெரிய என்னது போடற..? பொண்ணைக் கட்டிக் கொடுத்த மனுசன் ஊரைப் பார்க்கப் போகாம பொண்ணு கொடுத்த வீட்டிலேயா டேரா போடுவாரு...? என்ன கேள்வியின்னு இதைக் கேட்டு வைக்கிற..?"
"போன மகராசன் மகளைக் கையில பிடிச்சுக்கிட்டுப் போகாம ஏண்டா விட்டுப்புட்டு போனாரு...?"
"இதுக்குப் பதில் ஒன்னே ஒன்னுதாண்டா மச்சான்.. அது என்னன்னா.. உங்கல்யாணத்தை அவரு மனசார ஏத்துக்கிட்டாரு.. அதனாலதான் ஒத்தைப் பொண்ண உன்வீட்டில விட்டுப்புட்டு போயிருக்காரு..."
தசரதனுக்கு தலையை வலித்தது.. காலையிலிருந்து சாப்பிடாத வயிறு பசித்தது... தலையைப் பிடித்துக் கொண்டான்...
"சரவணா.. நான் தப்புப் பண்ணலைடா..." என்றான்..
"எனக்குத் தெரியாதாடா மச்சான்..? நீ தப்புப் பண்ணினேன்னு சொன்னாக்கூட நான் நம்ப மாட்டேனே.." சரவணன் ஆறுதலாகப் பேசினான்...
"அப்புறம் ஏண்டா அவ அப்படிச் சொன்னா..?"
"யாருக்குத் தெரியும்..? நீயே போய் அவளிடம் கேளு..."
சரவணன் சொன்னதைக் கேட்ட தசரதன் அவனை முறைத்தான்...
"அவகிட்ட நான் போய் கேக்கறதா..? என்னை யாருன்னு நினைச்ச...?"
"என் மச்சான்னு நினைச்சேன்... நீ வாடா.. வீட்டுக்குப் போகலாம்..."
"வீட்டில அவ இருப்பாளே..."
'இது என்னடா பெருங்கொடுமையாப் போயிருச்சு..'
நொந்து போனான் சரவணன்.. ஊர் கூடிய பஞ்சாயத்தில் தசரதனின் கையால் தாலி வாங்கிக் கொண்டவள் தசரதனின் வீட்டில் இல்லாமல் எங்கே போவாள்...?
"ஏண்டா மச்சான் இந்தப் பாடுபடுத்தற..? அந்தப் பொண்ணின் கழுத்தைப் பிடிச்சு வெளியிலயா தள்ள முடியும்...? அப்புறம்.. அதுக்கும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிப் புடுவானுங்கடா..."
"அவ இருக்கிற வீட்டுக்கு நான் வரமாட்டேன்..."
"ஐயா..! சாமி..! தசரதா...! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்.. கொஞ்சமாவது என் பாவத்தப் பாருடா.. உன்னக் கொண்டு போயி உன் வீட்டுக்குள்ளே சேக்காம என் வீட்டுக்குள்ள நான் நுழைய முடியாதுடா ராசா.. இதப் புரிஞ்சுக்கடா மச்சான்.. உன் வீட்டுக்குள்ள அந்தப் பொண்ணு மட்டும்தான் இருக்குதா..? கூடவே உன் அம்மா இருக்குது.. உன் தங்கச்சி இருக்குது.. அப்பா.. இருக்காரு.. அத நினைச்சுப் பாருடா..."
"அவள மட்டும் நினைக்க மாட்டேன்..."
தசரதன் விடாமல் அந்த ஒன்றிலேயே நிலையாய் நிற்க.. குடித்திருக்கிறானோ என்று சந்தேகப் பட்டுப் போனான் சரவணன்...
'இவன் நல்ல பையனாச்சே.. குடிக்க மாட்டானே...'

குனிந்து முகர்ந்து பார்த்தான்.. தசரதன் குடித்திருக்கவில்லை.. ஆனாலும் பேசியதையே பேசிக் கொண்டிருந்தான்.. அவன் போக்கிலேயே பேசி அவனை இழுத்துக் கொண்டு போய் வீடு சேர்ப்பதற்குள் சரவணன் பாடாய் பட்டு விட்டான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -19
பூமிக்கு வந்த நிலவு -19
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy