பூமிக்கு வந்த நிலவு -13

13 கேள்வி கேட்டவனை அழமாட்டாத குறையாக பார்த்தான் சரவணன்... பாரிஜாதம் என்னவோ.. வேறு திக்கில்தான் கரண்டியை விட்டு எறிந்தாள்.. அந்த எறித...

13

கேள்வி கேட்டவனை அழமாட்டாத குறையாக பார்த்தான் சரவணன்...
பாரிஜாதம் என்னவோ.. வேறு திக்கில்தான் கரண்டியை விட்டு எறிந்தாள்.. அந்த எறிதலும் கேலி செய்யும் நோக்கத்தில்தான் வீசப்பட்டது.. சரவணனின் தலைவிதியோ.. இல்லை பாரிஜாதத்தின் தலைவிதியோ.. அது மிகச்சரியாக சரவணின் நெற்றியை பதம் பார்த்து வைத்தால் பாவம்.. பாரிஜாதம்தான் என்ன பண்ணுவாள்..?
"உனக்கு இந்தப் பெருமை வேற இருக்காடா தசரதா..?"
"இது பெருமையா...? சந்தேகம்டா.. எங்கம்மாவுக்கு உன்மேல அப்படியொன்னும் வன்மம் இல்ல..."
"அப்படித்தாண்டா நானும் நினைக்கிறேன்..."
"அப்படியிருந்தும் அது வீசின கரண்டி எப்படிடா குறிபார்த்து உன் நெற்றியில் பட்டுச்சு..?"
"என்னைக் கேட்டா..? போய் உன் அம்மாவைக் கேளு..."
"ம்ஹீம்.. என் வீட்டில இருக்கிறது நாலு பேரு.. நாலில் ஒருத்தன் உனக்கு நண்பனா போயிட்டேன்..."
"அதுக்காக விட்டு வைச்சியாடா..?"
"என்னைச் சொல்லாதே.. கடுப்பேத்தி வாங்கிக் கட்டிக்கிட்டு என்னைச் சொல்ல வர்றியா..."
"இந்தாபாரு.. நடுஜாமத்திலே புதுசா எதையும் ஆரம்பிக்காதே.. இப்ப என்னத்துக்கு ஒரு வீட்டிலே நாலு பேருன்னு கதை சொல்ல ஆரம்பிச்ச..?"
"அதில்லடா மச்சான்.. நானோ உன் நண்பன்.."
"இருக்கட்டும்..."
"அப்பாவும்.. அம்மாவும்.. வீச்சருவாளையும் கரண்டியையும் விட்டெறிகிற ஆளுக..."
"நான் மறக்க நினைச்சாலும் நீ விட மாட்டேங்கறியே.."
"மீதியிருக்கிறது சாரதாதான்..."
"இந்தா பாரு.. நான் பேய்க்கு பயந்தவன் தான்.. அதுக்காக உன் வீட்டு பாப்பாவுக்கெல்லாம் பயப்படுகிறவன்னு தப்புக்கணக்கு போடாதே..."
"பாப்பாவா..? எங்க சாரதாவா..? இரு.. எங்க வீட்டுப் பக்கம் நீ வருவேல்ல.. அப்ப என் தங்கச்சிகிட்ட பத்த வைக்கிறேன்.."
"உனக்கு தசரதன்னு பேரு வைச்சது தப்புடா மச்சான்.. வத்திக்குச்சின்னு பேரு வைச்சிருக்கனும்.. ஆமா.. உன் தங்கச்சி என்ன பெரிய பிஸ்தாவா..? பூச்சாண்டி யெல்லாம் காட்டற...?"
"வேணாம்டா சரவணா.. வாயைக் கொடுத்து உடம்பை ரணகளமாக்கிக்காதே.. அவளுக்கு கோபம் வந்தா காத்தில எழும்பி.. பறந்து பறந்து அடிப்பா..."
சரவணனுக்கு நிஜமாகவே பயம் பிடித்துக் கொண்டது.. அந்த மூக்குறுஞ்சி சாரதா 'கன்பைட் காஞ்சனா' வாக இருக்கக் கூடும் என்று அவன் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை... அவளின் காதுபட 'மூக்குறிஞ்சி' என்ற பெயரை உச்சரித்திருக்கிறோமா என்று நினைவின் அலைகளில் அவன் தேடிப் பார்த்தான்.. அதுவரை எப்படியோ.. அடுத்து அவள் காதுபட அந்தப் பட்டப்பெயரை மொழிவதில்லை என்று மனதிற்குள் சங்கல்பமும் செய்து கொண்டான்...
ஊருக்குள் நுழைந்ததும்.. அப்பாடி என்ற நிம்மதி பெருமூச்சு சரவணனுக்கு வந்தது...
'ஒருநாள் இவன்கூடப் போயிட்டு வந்ததுக்கே கண்ணைக் கட்டுதே.. இவன் எப்படித்தான் தினமும் அர்த்த ஜாமத்திலே தண்ணி கட்டப் போயிட்டு திரும்பி வாரானோ...' தசரதனை பிரமிப்புடன் பார்த்தான் சரவணன்...
"என்னைப் பார்க்கிறதை விட்டுப்புட்டு உன் அப்பாவைப் போயி இப்படி ''ன்னு பாரு.. அந்த மகராசனும் நடுஜாமத்தில தண்ணி கட்ட வயலுக்கு போயிட்டு வர்றவர்தான்..." அவன் மனதைப் படித்ததைப் போலச் சொன்னான் தசரதன்...
"நானு மனசுக்குள்ள நினைச்சது உனக்கெப்படி மச்சான் தெரிஞ்சது..?" அதற்கும் வாய் பிளந்தான் சரவணன்...
"ஊம்..? சூ மந்திரகாளி மந்திரம் போட்டேன்.. போடா..." வீட்டைப் பார்த்து கயிலைநாதனுடன் நடந்தான் தசரதன்...
வீட்டின் முன் பக்க விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.. வாசலில் கிடந்த கயிற்றுக்
கட்டிலில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு தலையணை வைக்கப்பட்டிருந்தது..
"நீ போயி உன் அம்மாகிட்ட தலையைக் காண்பிச்சுட்டு தூங்குப்பா..." அசதியுடன் கண் செறுக கட்டிலில் படுத்து விட்டார் கயிலைநாதன்...
மாடியிலிருந்த தசரதனின் அறையில் தான் வெந்நிலா தங்கியிருக்கிறாள் என்ற விவரம் தசரதனுக்குத் தெரியாது...
அவனுக்கு அது தெரியாது என்ற விவரம் கயிலைநாதனுக்கும்.. பாரிஜாதத்திற்கும் தெரியாது...
வீட்டின் ஹாலில் மகனுக்காக பாய் விரித்து.. தலையணையையும்.. போர்வையையும் போட்டு வைத்திருந்தாள் பாரிஜாதம்.. வயலுக்குப் போன கயிலைநாதன் மகனை அழைத்து வந்து படுக்க வைத்து விடுவார் என்ற நினைவுடன் அவள் உள்ளறையில் சாரதாவுடன் படுத்து தூங்கி விட்டாள்...
வீட்டுக் கதவைத் திறந்த தசரதன் விளக்கைப் போடவில்லை.. நடுநிசியில் தூங்கிக் கொண்டிருப்பவர்-களை வெளிச்சம் தொந்தரவு பண்ணும் என்ற எண்ணத்தோடு கதவை மூடிவிட்டு அவன் எப்போதும் போல சத்தமில்லாமல் மாடிப்படியில் ஏறிவிட்டான்.. அவனுடைய அறைக்கதவைத் திறந்து உள்ளே போனவன்.. அசதியுடன் கட்டிலில் சரிந்து தூங் கிவிட்டான்...
அதே கட்டிலின் மறு கோடியில் படுத்திருந்த வெந்நிலா.. சற்று நேரத்திற்கு முன்னர் வரை தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள்தான்.. அடிக்கடி வெளியே போய் பால்கனியில் நிற்பதும் பின் அறைக்குள் வருவதுமாக இருந்தவளுக்கு.. அறைக் கதவை மூடித் தாழிட வேண்டும் என்ற நினைவு இல்லாமல் போய் விட்டது...
அங்கேயிருந்த அந்த ஐந்து நாள்களில் ஒருநாள் கூட அவள் இரவில் கதவை மூடவில்லை.. அவளுடைய சென்னை வீட்டில் அவளுக்கென்று இருந்த பிரம்மாண்டமான அறையில் பெரிய ஹாலும்.. படுக்கையறையும்.. அதையொட்டிய பால்கனியும் இருக்கும்.. அங்கேயிருந்த நினைவில் இங்கேயும் அவள் மாடி ஹாலையும்.. அதை ஒட்டிய பால்கனியையும் ஒரே அறை போல நினைத்து விட்டாள் சென்னை வீட்டில் இருந்ததைப் போல.. அல்லியூர் வீட்டில் அறையுடன் சேர்ந்து பால்கனி இல்லை.. அது மாடி ஹாலில் பொதுவாக இருந்தது...
பிடிக்காத இடத்தில் தூக்கம் பிடிக்காமல் உலவிக் கொண்டிருக்க.. மாடி பால்கனிதான் வெந்நிலாவுக்கு தோதான இடமாக அமைந்திருந்தது.. அதனால் அவள் சிறிது நேரம் உலாவுவதும்.. பின்னர்.. அறைக்குள் போய் படுப்பதுமாக இருந்தாள்.. ஒரு கட்டத்தில் பால்கனிக்கு போக மறந்து அயர்ந்து தூங்கி விட்டாள்...
ஒருவரையொருவர் மனதார வெறுக்கும் அந்த இருவரும்.. ஒரே கட்டிலில் படுத்துத் தூங்குவதைப்பற்றி அறியாதவர்களாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்...
விடிந்தது.. வாசல் தெளித்து கோலம் போட எழுந்த பாரிஜாதம்.. ஹாலில் கிடந்த பாயில் மகன் இல்லாததைக் கண்டாள்.. வாசலில் படுத்திருந்த கயிலைநாதனை உலுக்கி எழுப்பியவள்..
"தசரதன் எங்கேங்க..?" என்று கேட்டாள்..
"ஜாமத்திலயே வந்துட்டானே.. உள்ளாரதான் தூங்க வந்தான்.." கயிலைநாதன் தூக்கக் கலக்கத்துடன் சொன்னார்...
"உள்ளார இல்ல..."
"அப்ப.. குளிக்கிறதுக்கு மோட்டார் ரூமுக்கு போயிருப்பான்.. இது ஒரு கேள்வியா..? தூங்க விடுடி.."
"தூங்கித்தூங்கி என்னத்தைக் கண்டிங்க..?"
"அதான்.. ரெண்டு புள்ளகளை கண்டிருக்கேனில்ல.. அது போதும்டி..."
"அடச்சீ.. வீட்டில வயசுப்பொண்ணு இருக்கு.. நினைப்பில இருக்கட்டும்... விடிஞ்சும் விடியாம இருக்கிறப்ப.. பேச்சப் பாரு பேச்ச.. மகன் கல்யாணம் பண்ணி புள்ள பெத்துக்கிற வயசில நிக்கிறான்.. இவரு இப்பத்தான் புள்ளய பெத்த கதையைச் சொல்றாரு.. ராத்திரி பூராவும் மயலில் தண்ணி கட்டின எம்மகன்.. விடியக் காலையிலேயே வயலைத் தேடிக்கிட்டு போயிருக்கானேன்னு நான் கிடந்து அல்லாடறேன்... இவரு சரசம் பேசறாரு.. சரசம்..?"
பாரிஜாதம் புலம்பியபடியே வாசலைத் தெளித்துப் பெருக்கி.. கோலம் போட்டாள்.. வீட்டுக்குள் வந்து சாரதாவை எழுப்பி விட்டு.. காபி போடப் போனாள்..
வாசலில் படுத்திருந்த கயிலைநாதன்.. பாரிஜாதத்தின் சப்தத்தில் எழுந்து.. பால்சொம்புடன் பால் கறக்கப் போனார்.. அடுக்களைக்குள் பால் பாத்திரத்துடன் அவர் போன போது.. காபியை இறக்கி வைத்துவிட்டு காலைப் பலகாரத்திற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்திருந்தாள் பாரிஜாதம்...
'இனித் தூங்க முடியாது...' ஏக்கப் பெருமூச்சுடன் வாசல் பக்கமிருந்த வேப்பமரத்துக்கு வேப்பங்குச்சியை நாடிச் சென்றார் கயிலைநாதன்...
"தங்கச்சி..." வாசல் பக்கம் சப்தம் கேட்டது...
"ம்ஹீம்.. இந்த வீட்டில காபித்தண்ணியக் கூட நிம்மதியாக் கலக்கிக் குடிக்க முடியல..." எரிச்சலுடன் வாசல் பக்கம் சென்றாள் பாரிஜாதம்...
"உரமூட்டை பத்தலை.. தசரதன்கிட்டக் கேட்டேன்.. காலையில வீட்டுக்கு வாங்க மாமான்னு சொல்லுச்சு.. தசரதன்.. எங்கேம்மா..?" சரவணனின் அப்பாவான சொக்கலிங்கம் நின்று கொண்டிருந்தார்...
"அவன் வயலுப் பக்கம் போயிருக்காண்ணே..." பாரிஜாதம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. சைக்கிள் மணியோசை கேட்டது...
"அப்பா நீங்க.. இங்கேயா இருக்கீங்க..." சரவணன் வந்து இறங்கினான்..
"என்னடா..?"
"ஒரு ஐயாயிரம் பணம் வேணும்..."
"எதுக்கு..."
"கடையை விரிவு பண்ணத்தான்..."
"பொறு.. தசரதன் வந்ததும் உரமூட்டையை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போகலாம்.. போனதும் அலமாரியில பணம் இருக்கான்னு பாக்கறேன்..."
"அங்கே இல்ல..."
"அதையும் திறந்து பார்த்திட்டியா...?"
தந்தையும்.. மகனும் பேசியபடி வீட்டுக்குள் சுவாதீனமாக நுழைந்து நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டார்கள்... காலைக் காப்பிக்கு இரண்டு ஆள்கள் கூடியாகி விட்டதா என்ற எரிச்சலுடன் பாரிஜாதம் சமையலறைக்குள் நுழைந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -13
பூமிக்கு வந்த நிலவு -13
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy