பூமிக்கு வந்த நிலவு -10

10 தசரதன் போய் விட்டான்... வெந்நிலா அசையாமல் அந்த இடத்திலேயே செதுக்கி வைத்த சிலையாய் நின்றாள்.. தசரதன் பேசிவிட்டுப் போன பேச்சு அவள் கா...

10

தசரதன் போய் விட்டான்... வெந்நிலா அசையாமல் அந்த இடத்திலேயே செதுக்கி வைத்த சிலையாய் நின்றாள்.. தசரதன் பேசிவிட்டுப் போன பேச்சு அவள் காதுகளில் ஒலித்தது...
"உன்னக் கட்டிக்கனும்னு நான் ஆசைப்படறேனா..? கனவு காணாதே..."
"கனவா..? ஹலோ.. நான் யார் தெரியுமா...?"
"யாரு நீ..? ஒரு பொண்ணுதானே..."
"பெண்ணுன்னா இளப்பமா..?"
"அந்தப் பழக்கம் எனக்கு இல்லை.. நான் என்னோட அம்மாவுக்கு மகன்... தங்கைக்கு அண்ணன் - அவங்க ரெண்டு பேரும் பொண்ணுகதான்.. அவங்கன்னா எனக்கு உயிர்..."
"உங்க வீட்டுப் பெண்களை உயர்வாக நினைக்கலாம்... அதுவே மத்தவங்க வீட்டுப் பெண்ணுன்னா குறைவாப் பேசனுமா..?"
"யாரு குறைவா பேசினது..? ஊருக்குள்ளே போயி கேட்டுப்பாரு.. இந்த தசரதன் எப்படிப்பட்டவன்.. பெண்ணுகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறவன்னு இந்த ஊர் சொல்லும்..."
"காட்..! இதைக் கேட்க இந்த வில்லேஜீக்குள்ள நான் போகனுமா..?"
"இது.. இது.. இதைத்தான் நான் சொன்னேன்.. உன் உடம்பில ஓடுற திமிர்.. இந்த ஊரு பொண்ணுககிட்ட இல்லை.."
"எப்படியிருக்கும்...? அவங்க என்ன பிறக்கும் போதே என்னைப் போல கோல்டு ஸ்பூனோடதான் பிறந்தாங்களா..?"
"எங்களுக்கு அது தேவையில்லை... உன் பணத்தை நீயே வைச்சுக்க.. எங்களுக்கென்ன வந்தது..? நாங்க பாட்டுக்கு எங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கோம்.. நீயும் உன் வேலையை முடிச்சுட்டு ஒழுங்காய் ஊர் போய் சேரு..."
தசரதன் கடுப்புடன் சொல்லிக் கொண்டிருந்த போது சாரதா அங்கே வந்தாள்...
"என்னன்ணா எப்ப வந்த..?" என்று கேட்டாள்...
"இப்பத்தான்..."
"திருவிழா முடிஞ்சுருச்சா..."
"ம்ஹீம்.. முடிஞ்சிருச்சு.."
"ஏக்கமா சொல்ற.. மூணு நாள் திருவிழாவுக்கு நாலு நாள் இருந்துட்டு வந்திருக்க.. பத்தாதா..?"
"பத்தாதும்மா.. பேசாம ஏழுநாள் இருந்துட்டு வந்திருக்கலாம்..."
வெந்நிலாவை ஜாடையாக பார்த்தபடி தசரதன் சொன்னான்.. அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது... அவள் சென்னைக்கு கிளம்பிப் போக ஏழு தினங்கள் ஆகுமென்பதால்.. அந்த ஏழு தினங்களும் வீட்டுப்பக்கம் வராமல் இருந்திருக்கலாம் என்பதைத்தான் அவன் மறைமுகமாக அப்படிச் சொல்கிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது...
அவளைத் தவிர்க்கவும் ஒருவன் நினைக்கிறானா..? அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
ஒரு சாதாரண கிராமத்து வாலிபன் அவளைப் புறக்கணிக்கிறானா..?
"போண்னா.. உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல.. எங்கே போனாலும் தூங்கறதுக்கு நம்ம வீட்டுக்கு வந்துருவ.. உனக்கு அடுத்தவங்க வீட்டில தங்கவே பிடிக்காது.. நீ போய் இப்படியெல்லாம் சொன்னா.. நான் நம்பனுமாக்கும்...?"
"நம்ப வேணாமாக்கும்..?"
"கேழ்வரகில நெய் வடியுதுன்னு சொல்லு.. நம்பறேன்.. இத மட்டும் நம்பவே மாட்டேன்..."
"ஹ.. ஹா..."
தசரதன் சிரித்தபடி வெளியே போய் விட்டான்.. அன்று இரவு அவனுக்காக சாப்பாடு கொண்டு போக சரவணன் வந்திருந்தான்...
"என் புள்ள எங்கேய்யா..?" பாரிஜாதம் மகனைத் தேட...
"அவன் ராத்திரி கரண்டுங்கிறதுன்னாலே.. தண்ணி காட்டனும்னு தோட்டத்திலேயே இருக்கான் அத்தை.." என்றான் சரவணன்...
"இதென்னப்பா புதுக் கதையா இருக்கு..? இத்தனை நாளா ராத்திரி கரண்டு வராமலா இருந்துச்சு..? அப்பல்லாம் இவன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போகல.. இப்ப மட்டும் என்ன வந்துச்சாம்...?"
"என்னைக் கேட்டா.. எனக்கென்ன தெரியும்..?"
பாரிஜாதத்தின் கேள்விக்கு பதில் சொல்லியபடி வெந்நிலாவை ''வென்று பார்த்தான் சரவணன்...
'என்னமா அழகா இருக்கா..! இந்திப்பட ஹீரோயின் போல.. வெள்ளை வெளேர்ன்னு வளுவளுன்னு இருக்காளே.. இப்படியொரு சூப்பர் பிகரை வீட்டில வைச்சுக்கிட்டு மச்சான்.. ராத்திரி நேரத்துல வயக்காட்டைச் சுத்திக்கிட்டு அலையறான்.. எங்க வீட்டுக்கு மட்டும் இவ வந்திருந்தான்னா.. நானு வீட்டை விட்டு வெளியில நகர்ந்திருப்பேனா..? அடை கோழிய போல வீட்டிலயே அடைகாத்திருக்க மாட்டேனா...'
அவன் பார்வையை கண்டு கொள்ளும் நிலையில் வெந்நிலா இல்லை.. அவளைத் தவிர்க்கத்தான் தசரதன் வீட்டுக்கு சாப்பிட வரவில்லையென்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாக புரிந்தது...
இப்ப மட்டும் என்ன வந்துச்சாம் என்ற பாரிஜாதத்தின் கேள்விக்கு.. நான் வந்திருக்கேனே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் வெந்நிலா...
அந்த அளவுக்கு அவன் புறக்கணித்ததில் அவள் மனம் காயப்பட்டது.. பதிலுக்கு அவனை காயப்படுத்த அவளின் உள்ளம் துடித்தது...
"மூணு மணி நேர கரண்டுக்கு.. இவன் ராத்திரி முழுக்க வயக்காட்டிலேயே குடியிருக்கப் போறானா..?" பாரிஜாதம் மகனுக்கான சாப்பாடு அடுக்கைக் கொடுத்தபடி சரவணனிடம் கேட்டாள்...
"யாருக்குத் தெரியும் அத்தை.. நான் பாட்டுக்கு சிவனேன்னு மந்தையில இருந்த பலகாரக் கடையில உக்காந்துக்கிட்டு இருந்தேன்.. இவன் தேடிவந்து சேதி சொல்லிட்டுப் போனான்..."
"இப்ப வயக்காட்டுக்குத்தான போற..?"
"பின்னே..? வரப்பு வரைக்கும் போயிட்டு.. கொண்டு போற சாப்பாட்டை நானே தின்னுட்டு வீட்டுக்கு போயிடுவேன்னு பாக்கறியா...?"
"நீ செஞ்சாலும் செய்வ.. யாரு கண்டா...?"
பாரிஜாதம் கேலியாகச் சொன்னாள்.. வெந்நிலாவின் முன்னால் அவள் அப்படிச் சொன்னதில் சரவணனுக்கு வருத்தம் உண்டானது..
'இந்த அத்தைக்கு கேலி பேச வேற நேரம் கிடைக்கலியா... சென்னைப் பொண்ணு முன்னாலே தான் கேலி பேசணுமா...'
என்னதான் வெந்நிலா உறவு முறையில் அவனுக்கு தங்கையாக இருந்தாலும்.. அவள் முன்னால் கேலிபேசப் படுவதில் அவனுக்கு உடன்பாடில்லை...
"உனக்கு சந்தேகமா இருந்தா நீயும் கூட வந்து பாரு அத்தை..."
"எங்கே வரச் சொல்ற...?"
"வயக்காட்டுக்குத்தான்..."
"ஏன் சரவணா..? உனக்கு எதுக்காக இந்த வன்மம்? வீட்டுக்குள்ளே இருக்கற அத்தைகாரியை ஜாமத்தில வயக்காட்டுக்கு போகச் சொல்றியே.. உன்னயெல்லாம் நம்பி.. எப்படிப்பா நானு பொண்ணு கொடுக்கிறது...?"
அதுவரை பேசாமல் இருந்த சாரதா கோபத்துடன்
"அம்மா.." என்று கத்தி தன் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினாள்..
'இந்தக் குட்டிக் குரங்குக்கு நான் பொருத்த-மில்லையா..?' சரவணனுக்கு கோபம் வந்து விட்டது...
"ஏன்புள்ள.. இப்ப என்னாத்துக்கு அத்தையை சத்தம் போடற...?" என்று கடுகடுத்தான்...
"ஊம்..! எங்கம்மாவ நான் சத்தம் போடறேன்.. உங்களுக்கென்ன வந்துச்சு..." சாரதா அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்..
"என்னத்தைச் சொல்லிச்சு..? நான் உன்னைக் கட்டிக்கிற முறைதானே..? அதத்தானே சொல்லிச்சு..."
"யாரு.. யாரைக் கட்டிக்கிறது..? வெவ்வெவ்வே..."
சாரதா அழகு காட்டி விட்டு.. வீட்டுக்குள் ஓடி விட்டாள்.. பாரிஜாதம் அதை ரசித்துச் சிரித்தாள்...
"கேட்டுக்க மருமகனே.. என் மகளுக்கு உன்னைப் பிடிக்கலியாம்..."
இதை சும்மா விட்டுவிடக் கூடாது என்று சரவணனுக்கு தோன்றி விட்டது.. அது என்ன.. அம்மாவும்.. மகளும் சொல்லி வைத்ததைப் போல.. சென்னை அழகியின் முன்னால் அவனை மட்டம் தட்டுகிறார்கள்..?
"பிடிக்கலைன்னு சொல்லிட்டா ஆச்சா அத்தை..? நான் தூக்கிக்கிட்டுப் போயி தாலி கட்ட மாட்டேனா..?"
"கட்டினா போதுமா..? என் மக இருந்து பிழைக்க வேணாமா..? அப்புறம்.. புளிய மரத்து வீட்டுக்காரன் கதைதான்..."
"இதைச் சொல்லியே.. இந்த ஊரு இளவட்ட பயலுகள பயமுறுத்தி வைச்சுக்கிட்டு இருக்கீங்களா..?"
சரவணன் சாப்பாட்டு அடுக்குடன் போய் விட்ட பின்பு வெந்நிலா பாரிஜாதத்திடம் சந்தேகம் கேட்டாள்...
"அது என்ன ஸ்டோரி ஆண்ட்டி..?"
"எதும்மா..?"
"புளியமரத்து வீட்டுக்காரன் ஸ்டோரின்னு சொன்னீங்களே.. அதான்..."
"அதுவாம்மா.. நம்ம தெருவுக்கு நாலு தெரு தள்ளி புளியமரம் இருக்கு.. அதுக்குப் பக்கத்து வீட்டைத்தான் புளிய மரத்து வீடுன்னு சொல்லுவோம்..."
"நைஸ்..."
"அந்த வீட்டுக்காரனுக்கு கல்யாணம் நடந்துச்சு.. கட்டிக்கிட்டு வந்த பொண்ணுக்கு இவன் மேல இஷ்டமில்ல.."
"உம்..."
"இவன் கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு அது பிறந்த வீட்டுக்குப் போயிருச்சு..."
"அப்புறம்...?"
"அப்புறம் என்ன..? இவன் போய் கெஞ்சிப் பார்த்தான்.. மிஞ்சிப் பார்த்தான்.. எதுக்கும் அந்தப் பொண்ணு மசியல.. இரண்டாம் தாரமா பொண்ணு கட்டலாம்ன்னு நினைச்சா.. மூத்தவ வேண்டாம்ன்னு சொன்ன ஆம்பளய நான் கட்டிக்க மாட்டேன்னு இந்த ஊரு பொண்ணுக சொல்லிட்டாங்க..."
"இன்ட்ரெஸ்டிங்..."
"பக்கத்து ஊருக்குப் போனா.. அங்கேயும் இந்தக் கதை பரவித் தொலைச்சிருந்துச்சு..."
"கடைசியில் என்னதான் ஆச்சு...?"
"அவன் தனிமரமா.. கைக்கஞ்சியை ஆக்கிக் குடிச்சுக்கிட்டு இருக்கான்..."
பாரிஜாதம் எழுந்து போய் விட்டாள்.. அன்று இரவு தூங்காமல் வெந்நிலா யோசித்துக் கொண்டேயிருந்தாள்.. அலமாரியைத் திறந்து பார்த்தாள்.. தசரதனின் மடிப்புக் கலையாத சலவை உடுப்புக்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.. ஒன்றை உருவினாள்.. கசக்கித் தூர எறிந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூமிக்கு வந்த நிலவு -10
பூமிக்கு வந்த நிலவு -10
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s320/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-2ZtIioLKUwE/XXfDs4cqu7I/AAAAAAAAAsE/Fe-ImED8mQ42x3hjf-qHv4FKBiOkt8QSACPcBGAYYCw/s72-c/Boomiku%2Bvantha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy