சொல்லாமலே பூப்பூத்ததே -26

26 எப்படி அடுத்தவரின் வீட்டுக்குள் வந்து சட்டமாக அமர்ந்து கொண்டு அவர்களைப் பற்றியே அவதூறாய் பேச முடிகிறது என்று ஆச்சரியப்பட்டுப் போன...

26


எப்படி அடுத்தவரின் வீட்டுக்குள் வந்து சட்டமாக அமர்ந்து கொண்டு அவர்களைப் பற்றியே அவதூறாய் பேச முடிகிறது என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் நிவேதிதா.. சொர்ணத்தின் மனோ தைரியத்தில் ஏனோ நிவேதிதாவுக்கு அந்த சொர்ணத்தைப் பிடிக்காமல் போய் விட்டது..
பார்வதி அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.. சாவித்திரியை அமைதிப் படுத்தும் விதமாக இமை மூடித் திறந்தவள்.. சொர்ணத்தைப் பார்த்து..
"அரச குளத்தில அவருக்கு என்னடியம்மா வேலை இருக்கப் போகுது..? அதான் உன் புருசன் இப்ப வேற திக்கில தாவிக்கிட்டு இருக்காராமே..? அதனால கூட்டு வண்டியில போனா உன் புருசனை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறது கஷ்டம்ன்னு.. மனுசன் காரைப் போட்டுக்கிட்டு ஊர் ஊராத் தேடிப் போயிருக்கார்.. உன் புருசம் எம்புட்டா உனக்குத் தகவல் சொல்லுவார்.. நீ கவலைப்படாம உன் வீட்டைப் பார்த்துப் போ.." என்று சொர்ணத்தை விட படு இடக்காகப் பதில் சொன்னாள்..
சொர்ணத்தின் முகம் வெளுத்து விட்டது.. அவள் நிவேதிதாவை சங்கடத்துடன் பார்த்தாள்..
'வீட்டுக்கு வாழ வந்திருக்கிற பேரன் பெண்டாட்டி முன்னாலே இந்தக்கிழவி என்னச் சொல்லிக் காட்டுதே..' மனம் காய்ந்தாள்..
"என்னடிம்மா.. பதிலைக் கானோம்..? காலையில பெரியப்பா வீட்டுக்கு வந்தவ சாயங்காலம் வரைக்கும் சீராடிக்கிட்டு இருக்கியே.. உனக்கு வீட்டில வேலை ஏதும் இல்லியா..? அதுசரி.. உனக்கு என்ன வேலை இருக்கப் போகுது..? உன் பொண்ணு காலேஜீகேண்டினே கதின்னு கிடக்குறா... உன் புருசன் இன்னைக்கு ஒரு ஊரு... நாளைக்கு ஒரு ஊருன்னு.. உலகம் சுத்தற வாலிபனா ரங்கராட்டினம் ஆடிக்கிட்டு இருக்காரு.. நீ உன் பங்குக்கு வீடு வீடாப் போய் வம்பிழுத்துக்கிட்டு இருக்கிற.. ம்ஹீம்.. கொடுத்து வைச்ச பிழைப்பு.. போ..."
பார்வதி விட்ட பெருமூச்சில் அந்த சொர்ணம் அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்து விட்டாள்..
"வர்றேன் சாவித்திரி.. வர்றேன் பெரியம்மா.." ஓட்டமும் நடையுமாக அவள் ஓடியே போக..
"வராதே.. அப்படியே போயிடு.." என்று அவள் போன திக்கைப் பார்த்துக் கருவினாள் பார்வதி..
"இவளெல்லாம் ஒரு ஆளுன்னு உக்கார வைச்சுப் பேசிக்கிட்டு இருக்கியே.. உன்னைச் சொல்லனும்.." சாவித்திரியைக் கடிந்து கொண்டாள்...
"என்ன செய்றது அத்தை..? நாத்தனாராப் போயிட்டா.. நான் கொஞ்சமா முகம் மாறிப் பேசினாலும்.. நீங்க இல்லாத சமயத்தில வீட்டுக்கு வந்தேண்ணா.. அண்ணி முகம் கொடுத்துப் பேசலைன்னு உங்க மகன்கிட்ட போட்டுக் கொடுத்துடறா.. அவரு என்கிட்ட முகத்தக் காட்டறாரு.. அதுக்குப் பயந்து உக்காந்து பேச வேண்டியிருக்கு.." சாவித்திரி விளக்கம் சொன்னாள்..
"இங்கேயும் அந்தக் கதைதான்.. அந்த மனுசனப் பத்தி அரசகுளத்துக்கு வண்டியக் கட்டிக்கிட்டுப் போயிட்டாரான்னு நம்மகிட்டக் கேட்டுட்டு.. அவருகிட்டப் போயி.. பெரியப்பா எங்கேன்னு கேட்டா.. அவரு எங்கே வீடு தங்கறாரு.. அரசகுளத்துக்கு வண்டியக் கட்டிக்கிட்டு போயிட்டாருன்னு பெரியம்மா சொல்லுது பெரியப்பான்னு சொல்லி வைப்பா.. இவளயெல்லாம் எதுல சேக்கறது..?" பார்வதி கோபத்துடன் எழுந்து போய் விட்டாள்...
"காபி.. பலகாரம் சாப்பிட வாம்மா.."
சாவித்திரி அன்புடன் அழைக்கவும் நிவேதிதா வாஸந்தியுடன் பேசியபடியே சமையலறைக்குப் போனாள்.. சாவித்திரி கொடுத்த பலகாரத்தையும்... காபியையும் வாங்கிக் கொண்டு இருவரும் வீட்டின் பின்பக்கத்து படிக்கட்டில் அமர்ந்தார்கள்...
"யாரு அவங்க..?" பலகாரத்தை மொக்கியபடி கேட்டாள் நிவேதிதா...
"சொர்ணத்தை..! அப்பாவோட ரெண்டு விட்ட தங்கை.." வாஸந்தி சொன்ன பதிலில் தலையும்.. காலும் நிவேதிதாவுக்குப் புரியவில்லை..
"ரெண்டுவிட்ட தங்கைன்னா..?" அப்பாவியாய் விழிவிரித்தாள்..
"அதாவது அண்ணி.. எங்க தாத்தாவோட.. சித்தப்பா மகனோட பொண்ணுதான் இந்த சொர்ணா அத்தை.. என் தாத்தாவுக்கு ஒன்று விட்ட தம்பியோட மகள்..
என் அப்பாவுக்கு என்னவாகனும்..? ரெண்டு விட்ட தங்கச்சியாகனுமா இல்லியா..?"
"என்னவோ போ.. எனக்கு ஒரு மண்ணும் புரியலை.."
"புரியலைன்னா விட்டுருங்க.. சொர்ணத்தையைப் போல இருக்கிறவங்களைப் புரிஞ்சுக்காம இருக்கிறதே பெட்டர்..."
"அவங்க எதுக்காக வாஸந்தி இப்படியெல்லாம் பேசறாங்க..?"
"வேற என்ன..? பொறாமைதான்.."
"பொறாமையா..? எதுக்கு..? யார் மேல பொறாமை..?"
"வேற யாரு மேல பொறாமை..? எல்லாம் உங்க மேலதான்.."
வாஸந்தி சுவாதீனமாகச் சொல்ல.. நிவேதிதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது..
"என்மேல பொறாமையா..? அது எதுக்கு வாஸந்தி..? நான் அவங்களை என்ன செய்தேன்..?"
"நீங்க ஒன்னும் செய்யலை அண்ணி.. அண்ணன் தான் உங்களைக் கல்யாணம் செய்துகிட்டு இருக்குதே.."
"அதுக்கு எதுக்காக இவங்க கோபப்படனும்..?"
"ஏன்னா.. இவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குதே.. வர்ணான்ன பேரு.. இந்த அத்தை போல இருக்காது.. நல்ல குணம்தான்.. அழகா வேற இருக்கும்.. அதைத்தான் அண்ணன் கல்யாணம் செய்துக்குவார்ன்னு நாங்களே நினைச்சோம்.. திடிர்ன்னு அண்ணன் உங்க போட்டோவோட வந்துச்சு.. அது பிரண்டோட அப்பாவோட பிரண்டோட பொண்ணுன்னு சொல்லுச்சு.. அதுக்கு பிடிச்சிருக்குன்னுச்சு.. கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கிட்டு இருந்த பெரியவங்களும் தலையை ஆட்டிட்டாங்க.. நீங்க அண்ணனுக்கு பெண்டாட்டியா வந்துட்டிங்க.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. அண்ணனும் வர்ணாவும் தோப்பில அடிக்கடி சந்திச்சுக்குவாங்கன்னு இந்த சொர்ணா அத்தையே பலதடவை வீடுதேடி வந்து எங்ககிட்டச் சொல்லியிருக்கு.."
வாஸந்தி சாவித்திரி அழைப்பதாகச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.. நிவேதிதா அசைவற்று அமர்ந்திருந்தாள்.. யாருமற்ற தோப்பும்.. அந்தத் தோப்பு வீட்டின் தனிமையும்.. மாடியறையும்.. முதலாளியைத் தொந்தரவு செய்யாமல் விலகிப் போய் விடும் வேலையாள் களும் அவள் கண்முன் சுழன்றதில் அவளுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது..
வாஸந்தியிடம் அந்த விவரத்தைப் பற்றி ஒரு அளவுக்கு மேல் அவளால் கேட்க முடியவில்லை.. வாஸந்தி வாசுதேவனை விட வயதில் மிக.. மிக.. இளையவள்.. பத்து வயது இடைவெளியில் பிறந்தவள் என்பதினால் அவளிடம் விளையாட்டுத்தனமும்.. குறும்புத்தனமும் அப்படியே இருந்தன...
வாஸந்தியிடம் கேட்க முடியாத நிவேதிதா.. அன்றைய இரவின் தனிமையில் வாசுதேவனிடம் கேட்டாள்..
"வர்ணான்னா யாரு..?"
அவன் சட்டென்று அவளிடமிருந்து விலகினாள்.. அவள் முகம் பார்த்தவனின் முகத்தில் கோபம் இருந்தது..
"அவளைப் பத்தி ஏன் கேட்கிற..? யார் உனக்குச் சொன்னது..?"
அவனது அந்த கோபத்தில் நிவேதிதா பயந்து போனாள்.. தைரியத்தை வரவழைத்துக் கொள்ள மென்று விழுங்கியபடி..
"இல்லை.. இன்னைக்கு சொர்ணாம்மா வந்திருந்தாங்க..." என்று சொன்னாள்..
"ஓ..."
அவன் முகத்தில் கோபம் குறைந்து சிந்தனை பரவியது..
சற்று நேரத்திற்கு மௌனமாக விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தவனைப் பார்த்த நிவேதிதாவின் மனம் வலித்தது...
இந்த அளவிற்கு வாசுதேவன் பாதிக்கப் படுகிறான் என்றால் எந்த அளவிற்கு அந்த வர்ணா அவன் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும்..?
நிவேதிதா மூச்சடக்கி அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.. சற்றுப் பொறுத்து பெருமூச்சுடன் அவள் பக்கம் திரும்பிய வாசுதேவன்..
"அவ சொர்ணத்தையோட பெண்.." என்றான்.. கண்மூடிப் படுத்துத் தூங்கி விட்டான்...
'அவ்வளவுதானா..?' அவள் மனம் விம்மியது...
அதற்குமேல் எதுவுமேயில்லையா..? ஏன் அவளைத் தனிமையில் தோப்பில் சந்தித்தான்...? அங்கே அவர்களுக்குள் என்ன நடந்தது..? இது எதையும் அவன் சொல்ல வேண்டாமா..?
மறுநாள் முழுவதும் நிவேதிதா அவனுடன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.. அவனும் அதை கண்டு கொள்ளாத சிந்தனையுடன் மில்லுக்கு கிளம்பிப் போய் விட்டான்...
அன்று மாலையில் மறுவீட்டு விருந்திற்காக அவர்கள் பெங்களூருக்குக் கிளம்பினார்கள்.. மனதில் உற்சாகமில்லாமல் வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டுக் கிளம்பினாள் நிவேதிதா..
பெங்களூரில் அவள் வீட்டில் உற்சாகமாக அவர்களை வரவேற்றார்கள்.. திருமணத்திற்கு வர முடியாத நண்பர்கள் குடும்பத்துடன் வந்து வாழ்த்திவிட்டுப் போனதில்.. முதல்நாள் முழுவதும் வீடு கலகலப்பும்.. பரபரப்பும் நிறைந்த சூழலில் காணப்பட்டது..
"ஒரு சின்ன ரிசப்சனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.." தயக்கத்துடன் சொன்னார் சுந்தர்..
"அது எதுக்கு தேவையில்லாம..?" முகம் சுருங்கினான் வாசுதேவன்..
'தேவையில்லையென்று இவனுக்கு எப்படித் தெரியும்..?' என்று மனம் கொதித்தாள் நிவேதிதா..
"தொந்தரவுக்கு மன்னிச்சுக்கனும்.. என் ஆபிஸ் ஸ்டாப்பில பாதிப் பேரால மேரேஜில கலந்துக்க முடியலை.. அவங்களுக்காகவும் இந்த ஏரியாவில இருக்கிறவங்களுக் காகவும்தான் இந்த ரிசப்சன்.. தயவுசெய்து நீங்க மறுக்கக் கூடாது.."

மருமகனின் காலில் விழுந்து விடுகிறவரைப் போலக் கெஞ்சினார் சுந்தர்.. அதில் நிவேதிதாவுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை.. போனல் போகிறது என்று இறங்கி வந்தவனாக சம்மதம் சொல்லி வைத்தான் வாசுதேவன்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: சொல்லாமலே பூப்பூத்ததே -26
சொல்லாமலே பூப்பூத்ததே -26
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s320/sollamale%2Bpooputhathu.jpg
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s72-c/sollamale%2Bpooputhathu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/sollaamalepooppooththathe26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/sollaamalepooppooththathe26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy