சொல்லாமலே பூப்பூத்ததே -19

19 அழகான குளக்கரை அது.. குளத்தில் அடர்ந்திருந்த செந்தாமரைப் பூக்கள்.. அதன் படித்துறையில் இறங்கியவள் கால் வழுக்கி விழப் போனபோது தாங்க...


19

அழகான குளக்கரை அது.. குளத்தில் அடர்ந்திருந்த செந்தாமரைப் பூக்கள்.. அதன் படித்துறையில் இறங்கியவள் கால் வழுக்கி விழப் போனபோது தாங்கிப் பிடித்துக் கொண்டான் வாசுதேவன்... அவன் கைவளைவில் அவளும்.. அவள் முகம் பார்த்து அவளும் நின்றிருந்த அந்த மணித்துளிகளில் அவள் அவனுக்கு வேண்டாத மனைவி என்பதே அவனுக்கு மறந்து விட்டது.. அவன் முகம் பார்த்தவளின் விழிகளில் தெரிந்த காதலில் அவன் யோசனையானான்.. மெதுவாக.. மிக மெதுவாக.. அவளை அவன் விடுவித்தபோது விலக மனமில்லாமல் விலகினாள் நிவேதிதா...
"படியில் பாசம் படர்ந்திருக்கும்.. அதனால் காலை அழுத்தி ஊன்றி இறங்கு.. இல்லைன்னா வழுக்கி விட்டிரும்.." என்றான் அவன்...
"வழுக்கி விட்டாத் தாங்கிப் பிடிக்கத்தான் நீங்க இருக்கீங்களே.." உதட்டை மடித்து அழகாக சுழித்தபடி ஓயிலாகச் சொன்னாள் அவள்...
அவன் அவளை ஊன்றிப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் முகம் சிவந்தவளைக் கண்டதும் அவன் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன..
"இது கிராமம்.." கடுகடுத்தான் வாசுதேவன்..
நிவேதிதா அந்தக் கடுகடுப்பைக் கண்டு கொள்ள வில்லை.. ஏனோ அது வலிய இழுத்துக் கொண்ட கடுகடுப்பைப் போல அவளுக்குத் தோன்றியது.. அவளுக்கு அந்த ஊரையும்.. அதன் சூழலையும் மிகவும் பிடித்திருந்தது.. முக்கியமாக அந்த தாமரைக்குளம்.. அந்தக் குளத்தைப் பற்றி வாஸந்தி சொல்லி கொண்டிருந்த போது பார்வதி பாடிக் காட்டிய..
"தாமரைப்பூக் குளத்திலே..
                சாயங்காலப் பொழுதிலே..
     குளிக்க வந்தேன் தன்னாலே..
                கூட வந்தான் பின்னாலே..
     யாரது மாமா..? - அவன்
                பேர் சொல்லலாமா..?"
என்ற பாடலில் அவள் மனம் லயித்திருந்தாள்..
அந்தப் பாடலில் தொனித்த காதலுடன் கூடிய கேலி கலந்த வம்பிழுத்தலை அவள் வெகுவாக ரசித்தாள்.. இது போன்ற பாடல்களை சௌதாமினி பாடிக்காட்டி அவள் கேட்டிருக்கிறாள்.. அதில் ஒளிந்திருக்கும் ரம்யத்தில் அவள் மனம் திளைத்தது.. அதை அவளது மலர்ந்த முகம் பிரதிபலித்ததில் வாசுதேவனுக்கு என்னடா இது என்று ஆகிப் போனது..
அவன் அவளிடம் கடுகடுத்துக் கொண்டிருக்கிறான்.. அதை உணராமல் அவளோ அவன் காதல் மொழிகளைச் சொன்னதைப் போல முகம் ஜ்வலிக்க நிற்கிறாள் என்றால் அவளை எப்படித்தான் அவன் கடிந்து கொள்வது..?
"நீயென்ன செவிடா..?" அவன் முறைத்தான்...
"செவிடுகிட்ட யாராவது நீயென்ன செவிடான்னு கேட்பாங்களா..?" அவள் வாய் பொத்திச் சிரித்தாள்..
'இவளென்ன என்னை சிரித்தே மயக்கிடனும்னு பிளான் பண்ணி வைச்சிருக்காளா..?'
அவன் கோபப் படத்தான் முயன்றான்.. ஆனால் என்னதான் வலிந்து.. வலிந்து கோபத்தை வா.. வா வென்று அழைத்தாலும் அது வருவேனா என்று அடம் பிடித்து ஒளிந்து நின்று கொண்டது.. அதைவிடக் கொடுமையாக வராதே என்று அவன் அதட்டிவைத்த மயக்கம் வந்து சேர்ந்து தொலைத்தது...
முல்லைப்பூ பல்வரிசையுடன்.. கன்னம் குழிய.. மனம் விட்டு அவள் சிரித்தபோது அவளின் கண்களும் கூடச் சேர்ந்து சிரிப்பதை ரசித்துப் பார்க்காமலிருக்க அவனால் முடியவில்லை...
அவளிடம் அவன் மனம் மயங்கியது.. அதை வெளிக் காட்டிக் கொள்ளாத முக இறுக்கத்துடன்..
"கெட்டிக்காரத்தனமாய் பேசுகிறதா நினைப்பு..?" என்று அதட்டினான்...
"இல்லையே.." அவள் சிரிப்புடன் மறுத்தாள்..
"இது கிராமம்ன்னு சொன்னா சிரிச்சு வைக்கிற.. ஏன்..? உனக்கு கிராமம்ன்னா சிரிப்பு.. சிரிப்பா வருமோ..? பெங்களூர்காரியில்ல.. கிராமமன்னா சிரிப்பு வரத்தான் செய்யும்..."
"நான் அதுக்காக ஒன்னும் சிரிக்கலை.."
"பின்னே..?"
"பாட்டி சொன்ன பாட்டைப் பத்தி நினைச்சேன்.. சிரிப்பு வந்தது.. அத்தோட இது கிராமம்ங்கிறதினாலதான் படியிலே பாசம் படர்ந்திருக்கு.."
"திமிரா..?" அவனுக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது..
சுத்தத்தைப் பற்றிய உணர்வில்லாதவர்கள் கிராம மக்கள் என்று அவள் சொல்லுகிறாளா என்ற கொதிப்பில் அவன் முகம் ஜிவுஜிவுத்தது..
"இதில திமிருக்கு என்ன வேலையிருக்கு..? கிராமத்தில உண்மையான பாசத்தை வெளிப்படையாய் காட்டிருவாங்க.. அதனாலதான் படிகள் கூட பாசத்தைக் காட்டி நம்மள இழுக்கப் பாக்குது.. அதைத்தான் நான் சொன்னேன்.."
"கெட்டிக்காரிடி.. நீ சரியா ஒரு விளக்கம் சொல்ற பார்த்தியா..?"
தப்பிக்கும் வித்தை அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்ற ரீதியில் அவன் சொன்னாலும் அவள் உண்மையாகத் தான் அந்த வார்த்தைகளைச் சொல்லுகிறாள் என்பதை அவன் மனம் கண்டு கொண்டது...
அவன் தண்ணீரில் இறங்கி கை கால் கழுவி விட்டு.. அவளுக்கு கை நீட்டினான்.. அவனது வலிய கரத்தை இறுக்கிப் பிடித்தபடி நீரில் இறங்கியவள் கை கால் கழுவியவுடன்.. அவள் படியில் ஏற கை கொடுத்தான்.. அவன் கரத்தை இறுக்கிப் பிடித்தபடி படியேறிய நிவேதிதாவுக்கு உலகமே வண்ணமயமானதாக இருந்தது.. வாய்விட்டுப் பாட வேண்டும் போல தோன்றியதில்..
"மல்லிகைப்பூ முகத்திலே..
                மாம்பழத்து உதட்டிலே..
     பள்ளம் போட வந்தானே..
                பரிசு ஒன்னு தந்தானே..
     அந்த மச்சானா..? - அவன்..
                ஆசை வைச்சானா...?"
என்று பாடி வைத்தாள்..
வாசுதேவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்..  அவள் புருவங்களை ஒயிலாக உயர்த்தி ஏனென்ற கேள்வியை அனுப்பினாள்..
"பெங்களூரில் பிறந்து வளர்ந்த சாப்ட் வேர் இன்ஜினியர் பாடற பாட்டாடி இது..?"
"ஏன்..? பெங்களூரில் பிறந்து வளர்ந்த சாப்ட் வேர் இன்ஜினியர் சாஃப்ட்டான மெலோடிப் பாட்டைப் பாடக் கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா..?"
"அது இல்லைதான்.. ஆனா இது எங்க பாட்டி காலத்துப் பாட்டுடி..."
"உங்க பாட்டிதான் பாடிக் காட்டினாங்க.."
"எப்ப..?"
"இப்பத்தான்.. உங்க பாட்டி கூட பல வருசமா எனக்கு பழக்கமா..? காலையிலதான் அவங்க கூட உட்கார்ந்து பேசவே முடிஞ்சது.. ஹௌ நைஸ் ஷி இஸ்..!"
அவள் ஆங்கிலத்தில் வியந்ததை யோசனையுடன் கேட்டவனுக்கு அவள் மனதில் என்னதான் இருக்கிறது என்ற குழப்பம் ஏற்பட்டது.. கூட்டுக்குடும்பத்தைப் பிடிக்காதவள் அவனுடைய பாட்டியுடன் அரட்டை அடிக்கிறாள்.. அவள் பாடிய பாடலை இவளும் பாடிக் காட்டுகிறாள்...
அவர்கள் இருவரும் மலையடி வாசத்தில் இருந்த கைலாசநாதரின் கோவிலுக்குள் பிரவேசித்தார்கள்.. இயற்கை எழிலுடன் இருந்த கோவிலின் பக்கவாட்டில் இருந்த வில்வ மரத்தில் அவன் இலைகளைப் பறித்தான்..
"வில்வ இலை சிவபெருமானுக்கு பிடித்தமான இலை.. அப்படித்தானே..?" விளக்கம் கேட்டாள் நிவேதிதா..
"ஆமாம்.. ஒரு சிவராத்திரியப்போ.. வில்வ மரத்தடியில பார்வதியும்.. பரமசிவனும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்களாம்.. அப்ப.. மரத்து மேலே இருந்த குரங்கு ஒன்னு தன் போக்கில வில்வ இலைகளைப் பறிச்சு.. பறிச்சு.. சிவபெருமான் மேலே போட்டுக்கிட்டே இருந்துச்சாம்.. விடியற வேளையில சிவபெருமான் அதில மகிழ்ந்து போய்.. அந்தக் குரங்குக்கு மறுபிறவியில் மகாராஜாவாகப் பிறக்கும் வரத்தைக் கொடுத்தாராம்..."
"ஹௌ.. நைஸ்.." நிவேதிதா வியந்து போனாள்..
இவளுக்கு எல்லாமே 'ஹௌ நைஸ்..' தான் என்று நினைத்துக் கொண்டான் வாசுதேவன்..
சிவபெருமானான கைலாச நாதரை வணங்கி.. தீபாதரணையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு.. அம்மனை வணங்கினார்கள்.. கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்த போது கோவிலின் பின்னால் தெரிந்த மலையைப் பார்த்த நிவேதிதா...
"அந்த மலையில் ஏறியிருக்கீங்களா..?" என்று கேட்டாள்...
கோவிலைப் பற்றியும்.. ஊரைப் பற்றியும் அவள் பேசியதால் அவனால் இடக்கு மடக்காக பேச முடிய வில்லை.. இயல்பாகத்தான் பேச வந்தது.. அது எதனால் என்று யோசித்தபடி..
"நிறைய முறை போயிருக்கிறேன்.." என்றான்..
"என்னையும் கூப்பிட்டுக்கிட்டுப் போறீங்களா..? ப்ளீஸ்.. ப்ளீஸ்.." அவள் சிறுமியைப் போன்ற ஆர்வத்துடன் கெஞ்சினாள்...
வாசுதேவனுக்கு வேடிக்கையாக இருந்தது.. இவளைக் கணிப்பது கடினம் என்று அவன் நினைத்துக் கொண்டான்...
"ம்ம்ம்.. பார்க்கலாம்.." அவன் கோவில் மண்டபத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்...
"ஊஹீம்.. பார்க்கலாம்ன்னு சொல்லக் கூடாது.. கட்டாயமாக் கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்னு சொல்லனும்.." அவள் சிணுங்கினாள்..
"சரி.. கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.. போதுமா.. இப்ப உட்கார்ந்துட்டுப் போகனும்.. அதனால நீயும் இப்படி உட்காரு.." பக்கத்தில் கை காட்டினான்..
"நீங்க ஹை ஜம்ப்.. லாங் ஜம்ப்பெல்லாம் கத்து வைச்சிருக்கிறவரு.. ஒரே ஜம்பில் ஏறி உட்கார்ந்துட்டிங்க.. நான் அப்படியா.. இவ்வளவு உயரமான மண்டபத்தில எப்படி ஏறுவேனாம்..?" மலைத்தாள் நிவேதிதா..
"ஒ.. அதுதான் உன் பிரச்னையா..?"
குதித்து இறங்கிய வாசுதேவன்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவள் இடுப்பைப் பற்றித் தூக்கி மண்டபத்தில் அமர வைத்தான்.. ஒரே தாவில் அவளருகில் அமர்ந்து விட்டான்...
"ஹப்பா.."
இரு கன்னத்திலும் கை வைத்து கணவனின் அந்த தீரத்தில் கண்கொட்டினாள் நிவேதிதா..
"நீங்க பெரிய ஆள்தான்.."
"அதனாலதான நீ ஆசையா பார்க்கிற.. இல்லைன்னா உழவர் மகனுக்கு கழுத்தை நீட்ட மாட்டேன்ங்கிற பிடிவாதத்தில நிலையா நின்றிருப்பேல்ல.." ஒரு தினுசான குரலில் அவன் சொன்னான்..
நிவேதிதாவின் முகம் வாடிவிட்டது.. அவள் கீழ்வானில் எழுந்து பவனி வர ஆரம்பித்திருந்த சூரியனை உற்று நோக்கினாள்.. அவளது முகவாட்டத்தில் வாசுதேவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது..
"அந்த சூரியனிடம் ஒன்னு கேட்கனும்.." என்றான்..
'என்ன' என்பதைப் போல அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தாள் நிவேதிதா..

"உன் நிறமும்.. அவன் நிறமும் ஒன்னு போல இருக்கே அது எப்படின்னு கேட்கனும்.." நொடிப் பொழுதில் நிவேதிதாவின் முகம் மலர்ந்து சிவந்தது.. அதில் அவன் மனமும் நிறைந்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: சொல்லாமலே பூப்பூத்ததே -19
சொல்லாமலே பூப்பூத்ததே -19
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s320/sollamale%2Bpooputhathu.jpg
https://1.bp.blogspot.com/-bbC7Gl-8uqU/XURBnK_wjaI/AAAAAAAAArI/7cOdPcIgr1klPibMhs1XdErBM24EgLBMgCPcBGAYYCw/s72-c/sollamale%2Bpooputhathu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/sollaamalepooppooththathe19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/sollaamalepooppooththathe19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy