பொதிகையிலே பூத்தவளே -33

                                    33 உனக்கு நானிருக்கிறேன் என்பது எப்பேற்பட்ட உன்னதங்களை உள்ளடக்கியிருக்கும் வார்த்தை தெரியுமா ? அப்...

                                    33

உனக்கு நானிருக்கிறேன் என்பது எப்பேற்பட்ட உன்னதங்களை உள்ளடக்கியிருக்கும் வார்த்தை தெரியுமா ? அப்பேற்பட்ட வார்த்தை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. அந்த வார்த்தைகளைச் சொல்பவன் ஆளுமை மிக்கவன்.. சக்கரவத்தித் திருமகனைப் போன்றவன்.. குகனிடம் அந்த ராஜாதி ராஜனான ராமன் செழுத்திய  அன்பை சக மனிதனிடம் செழுத்துபவன்.. கன்னியரின் மனம் மயங்கும் கந்தர்வன்.
அவன் சொல்லும் வார்த்தைகளில் மீனாவின் உள்ளம் பூரிக்க வேண்டாமா..? மாறாக கலங்கிப் போனாள்..
'எனக்காக நீயிருப்பாயா..? எதுவரை..?'
அவனது திருமணம்வரை என்று அவள் மனது பதில்  சொல்லியது.. கிட்டாது என்று தெரிந்தும் அலைபாயும் மனதை அடக்க முடியாமல் தவித்தாள் அந்தப் பேதை.. இதோ சற்று முன் கோவிலில் பார்த்தாளே.. ராஜ குடும்பம்.. விழிகளிலே வழியும் நயன பாஷையிலேயே அவளைத் தள்ளி நிறுத்தினார்களே.. அந்தக் குடும்பத்தில் பிறந்திருப்பவனின் நிழலை நெருங்கக்கூட அவளுக்கு அருகதையில்லையே.. அப்படியிருக்க, அவளுக்காக அவன் இருப்பது எவ்வகையில் சாத்தியம்..?
'இன்னும் ஒரு வருசமோ, ரெண்டு வருசமோ.. அப்பாவின் உடம்பு சரியாகும் வரை இங்கிருந்தால் போதும்.. அதுக்குப் பின்னாலே மதுரைக்கு ஓடிரலாம்.. அங்க வீடு, மீனாட்சியம்மன் கோவில்ன்னு மிச்ச காலத்தைக் கடத்திரலாம்..' மௌனப் பெருமூச்சு விட்டாள் மீனா..
அவன் புருவங்களை உயர்த்தி இறக்கினான்.. ஒன்றுமில்லையென்று அவள் தலையாட்டியதில்..
"ஜ கான்ட் பிலிவ்.." என்றான்..
சின்னப் புன்னகையொன்றை அவள் சிந்தினாள்..
"சிரிப்பில் கூட சிக்கனமா..? நல்லாத்தான் சிரியேன்.." கடிந்து கொண்டான்..
நன்றாகச் சிரிப்பதற்கு சிரிப்புக்கு எங்கே போவது..? வலுக்கட்டாயமாக சிரிக்க அவளால் முடியாது .. அது போலித்தனமாக இருக்கும்.. அதை இவனிடம் எப்படிச் சொல்வது..? சொன்னால் புரிந்து கொள்வானா..? அதற்கும் கேலி பேசுவான்..
சடசடவென மழை பொழிய ஆரம்பித்தது..
"இங்கே தும்மறதுக்குள்ள மழை வந்துருது.. தும்மல் நிக்கிறதுக்குள்ள இன்னொரு மழை வந்திருது.." மீனா அலுத்துக் கொண்டாள்..
"ரொம்பவும் அலுத்துக்காதே.. சொட்டு மழை பெய்தால் கூடப் போதும்ன்னு தமிழ்நாடே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்குது.. மழைநீர் ஆண்டவன் நமக்குக் கொடுக்கும் வரம்.. அதன் அருமை தெரிந்து சேமித்து வைத்துக்கலைன்னாலும் பரவாயில்லை. நிறைய பெய்யும் போது அலுத்துக்கக் கூடாது.."
"எங்கே..? பெய்தால் வெள்ளக்காட்டில் மூழ்க வைக்குது.. இல்லேன்னா ஒரு சொட்டைக்கூடக் கண்ணில் காட்டாம வாட்டி வதைக்குது.. எப்படித்தான் ஒரு காலத்திலே மாதம் மும்மாரி பெய்ததோ.. தெரியலை.."
"அப்ப இருந்த ராஜாக்கள் ஆற்று மணலை அள்ளலை.. குளம், கண்மாய், கிணறுன்னு வெட்டி வைச்சாங்க.. ரோட்டோரமா மரங்களை நட்டு வைச்சாங்க.. இப்ப இருக்கிற ராஜாக்கள் அதையெல்லாம் யோசிப்பதே இல்லையே.."
"இப்ப எங்கேங்க ராஜாக்கள் இருக்கிறாங்க..?"
"கவர்ண்மென்ட் யார் கைக்குப் போகுதோ, அவங்கதான் கிங்.."
அவனது பேச்சைக் கேட்டவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.. மனம் விட்டுச் சிரித்தவளை அள்ளிப் பருகுவதைப் போல அவன் கனிவுடன் பார்த்து வைத்தான்.
"ஹப்பா..! இந்தச் சிரிப்பைப் பார்க்க எவ்வளவு பேச்சு பேச வேண்டியிருக்கிறது.. உன் சிரிப்பு இவ்வளவு காஸ்ட்லியா..?"
மீனா ஆமாம் என்பதைப் போலத் தலையை ஆட்டிச் சிரித்தாள்.. கனத்திருந்த மனது லேசாகியிருந்தது.. கோவிலில் நடந்தவைகளை அவள் சுத்தமாக மறந்திருந்தாள்.. குழந்தை போன்ற அவளது சுபாவத்தில் அவன் மனம் கனிந்தான்..
'இவ முசுடு போல வேடம் போடறா..'
அவளை வீட்டில் விட்டு விட்டு விடைபெற்றுப் போய் விட்டான்.. மீனா மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றி மூர்த்தியிடமும், புனிதாவிடமும் வாய் வலிக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள்.. அந்த வாரக் கடைசியில் அவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று முடிவெடுத்தார்கள்..
வாழ்க்கை அழகானதாக மாறியிருந்தது.. காலப்போக்கில் அந்த வாழ்வில் அவர்கள் பொருந்தி விட்டார்கள்.. விதிவிட்ட வழியென்று எளியவாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு, வளமையானதொரு வாழ்வை வாழ விதி வழி விட்டிருந்ததில் சந்தோசம் அடைந்திருந்தார்கள்..
மோகனாவின் பள்ளிக்குச் செல்லும் பஸ் வீட்டு வாசல் வரை வந்து சென்றதில் மோகனா பயமில்லாமல் பள்ளி சென்று வந்தாள்.. அவளை மிரட்டிய கான்வென்ட் படிப்பு மெல்ல அவளுக்கு வசப்பட்டுப் போனது.. புதிய ஊர், புதிய பள்ளி, புதிய கல்வி என்று அஞ்சி நடுங்கியவளுக்கு புதிய தோழிகளும் கிடைத்ததில், அவள் 'கலக்கற மோகனா..' என்று விஷ்வாவே பாராட்டும்படி முதல் மாதத் தேர்விலேயே முதல் மதிப்பெண்களை எடுத்து அசத்தினாள்..
வீட்டுக்கான மளிகை, காய்கறி, மற்ற பொருள்களை வாங்கித் தர லிங்கம்.. வீட்டு வேலைகள் முழுவதையும் செய்து சமையலுக்கும் ஒத்தாசை செய்ய பூவாயி.. செலவளிக்க கை நிறைய பணம்.. வாராவாரம் வீட்டுக்கே வந்து மூர்த்தியை பரிசோதித்து விட்டுச் செல்ல டாக்டர்.. வார இறுதிகளில் லிங்கம் காரை ஓட்ட அருவி, ஆறு, கோவில் என்று காரில் ஊர் சுற்றல்.. பிடித்த உணவு என்று புனிதாவின் வாழ்க்கைமுறை உயர்ந்திருந்ததில் அவள் முன்னிலும் பொழிவுடன் செக்கச் சிவந்திருந்தாள்..
மூர்த்தியின் முகத்திலிருந்த களைப்பு மறைந்து போயிருந்தது.. தெளிவான முகத்துடன் அவர் அந்த உயர் மத்தியதர வாழ்வை அனுபவித்தார்.. காலையில் சூடான காபியுடன் போர்டிகோவை ஒட்டிய வராண்டாவில் இருக்கும் வழவழப்பான திண்ணையில் உட்கார்ந்து புனிதாவுடன் கதை பேசியபடி காபியை ரசித்துக் குடிப்பது.. காலை உணவு முடிந்து மோகனா, பள்ளிக்கும், மீனா வேலைக்கும் போன பின்பு.. இதமான வெயிலில் புனிதாவுடன் பேசியபடி தோட்டத்தில் புல்வெளியில் நடப்பது.. மதிய உணவுக்குப் பின்னால் அயர்ந்து உறங்குவது.. மாலையில் கண்விழித்ததும் மறுபடியும் மனைவியுடன் தோட்டத்தில் உலாவுவது.. மோகனாவும், மீனாவும் வந்தவுடன் அவர்களுடன் கலகலத்துப் பேசியபடி ஹாலில் உட்கார்ந்து டிவி பார்ப்பது.. இரவு உணவையும் டிவி பார்த்தபடியே உண்டு முடிப்பது.. குறித்த நேரத்தில் உறங்கப்போய் விடுவது..
நிம்மதியான, நிச்சிந்தையான வாழ்க்கை.   !
இப்படியொரு வாழ்வை அவரும் புனிதாவும் வாழ்வார்கள் என்று அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை.. நினைக்காததெல்லாம்  நடப்பதுதானே  வாழ்க்கை..?
இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.. விஷ்வா கானாடுகிரியில்தான் இருந்தான்.. அவன் பக்கத்தில் இருக்கும் தைரியத்துடன் மீனா அதிவிரைவாக வேலைகளை கற்றுக் கொண்டாள்.. சம்பளம் வாங்கியவுடன் லட்ச ரூபாயை விஷ்வாவிடம் நீட்ட மட்டும் அவள் மறக்கவில்லை.. அவன் இமைக்காமல் அவளைப் பார்த்தான்.. அதே இமைக்காத பார்வையுடன் அவன் பார்வையை அவள் எதிர் கொண்டாள்..
"சொன்னால் கேட்க மாட்ட.." எரிச்சலுடன் வாங்கிக்  கொண்டாலும்..
"சின்னதா ஜ்வல்ஸ், காஸ்ட்லி டிரஸ்ன்னு எடுத்துக்க மீனா.. மோகனாவுக்கு இதிலெல்லாம் எக்ஸ்பெக்டேசன் இருக்கும்.. உனக்காக இல்லைன்னாலும் உன் வேலைக்குன்னு ஹை டெக் லுக்குடன் இருக்கனுமா வேண்டாமா..?" என்று வலியுறுத்தினான்..
அவன் சொன்னதும் உண்மைதான் என்றாலும் முதல் மாதச் சம்பளத்தில் அள்ளி தெளித்து விடக் கூடாது என்று அமைதிகாத்தாள் மீனா..  வீட்டு வாடகை இல்லை.. காருக்கான பெட்ரோல் செலவும், டிரைவர், வேலையாளுக்கான சம்பளமும் எஸ்டேட் கொடுத்துக் கொண்டிருந்தது.. வாராவாரம் வந்து போகும் டாக்டருக்கான ஃபீஸ் விஷ்வாவைச் சேர்ந்தது.. மோகனாவின் பள்ளிச் செலவுக்கான மூன்று  லட்சம் ஏற்கனெவே விஷ்வாவிடம் வாங்கியிருந்த ஐந்து லட்ச ரூபாயுடன் சேர்ந்து ஏழுலட்ச கடனாக மாறியிருந்தது..
ஆக.. உணவுப் பொருள்களுக்கும், வீட்டுக்கான செலவுக்கும், மூர்த்திக்கான மருந்து மாத்திரைகளுக்கும்  மாதா மாதம் பத்தாயிரத்திற்குள் மட்டுமே செலவானது..
இரண்டாவது மாதம் கையில் ஒரு லட்சத்து எண்பத்திஐயாயிரம் அளவில் பணமிருந்ததில் புனிதாவுடன் ஆலோசித்து.. கையிலிருந்த பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் நகை எடுத்தாள்..
அதிக விலையில் குடும்பத்தினருக்கும் அவளுக்குமான உடைகள்.. புதிய நகைகளில் மோகனாவுக்கும் ஒன்று கிடைத்ததில் அவள் துள்ளிக் குதித்தாள்.. புனிதாவின் காதுகளில் புதிய தோடு.. கழுத்தில் கனத்த தாலிக்கொடி.. கைகளில் பொன் வளையல்கள், எங்கேனும் வெளியில் சென்றால் போட்டுக் கொள்ள கல் அட்டிகை என்று கிடைத்திருந்தன.. மீனாவுக்கு காதுகளுக்கு புது தோடு வகைகள்.. கைகளில் பொன் வளையல்கள்.. கழுத்தில் சின்னச் செயின்.. கல் அட்டிகை..
வீட்டில் இருந்த நகைகளை மூர்த்தியின் வைத்தியச் செலவுக்காக அடகு வைத்திருந்தார்கள்.. அதையும் தாண்டிய ஐந்து லட்சத்தை விஷ்வா கொடுத்திருந்தான்.. கானாடு கிரிக்குக் கிளம்புவதென்று முடிவானதும் கையிருப்பில் இருந்த பணத்தை ஒன்று திரட்டி நகைகளை மீட்டிருந்தாள் மீனா.. புதிதாக அவற்றை மாற்றியும் கொடுத்து விட்டதில் புனிதாவுக்கு சந்தோசம்..
"மேனேஜரம்மாவோட அம்மாவான்னு கேட்டு மரியாதையாப் பாக்கிறவங்க, கை, கழுத்தைப் பார்க்கறப்ப சங்கடமா இருக்கும்.. இப்ப அந்த சங்கடம் இல்லை.."
இந்த வார்த்தைகளை மதுரையில் இருக்கும் போது அவள் சொல்லியிருக்க மாட்டாள் என்பதில் மீனாவுக்குள் பயம் வந்தது.. எளிய நூல் புடவை.. தலையில் சிறு மல்லிகை கீற்று.. மஞ்சள் கயிறில் தினமும் மஞ்சள் தேய்த்துக் குளித்து, புதிய கயிறு போன்ற பொலிவுடன் நெற்றிப் பொட்டும் நேர்வகிட்டில் குங்குமமுமாக பளிச்சென இருப்பவள்.. அதிக விலைப் புடவைகள், நகைகள், ஆடம்பர வாழ்க்கை என்று நினைத்து ஏங்கியதில்லை.. மீனாவின் குடும்பம் முழுவதும் (ஆனந்தனைத் தவிர) அப்படித்தானே இருந்தது.. இப்போது அவர்களின் மனநிலையில் ஏற்பட்டிருந்த திடீர் மாற்றம் மீனாவுக்கு அச்சத்தைக் கொடுத்தது.. இதுபோன்ற உயர் மட்ட மத்தியதர வாழ்வை எத்தனை நாள் வாழ முடியும்..?
'வாழும் வரை வாழழாம்..' மனதை அமைதிப் படுத்திக் கொண்டாள்.. அவளால் அவளது குடும்பம் சந்தோசமாக இருக்கிறது.. அந்த சந்தோசத்தை அவள் ஏன் கெடுக்க வேண்டும்.. கானாடுகிரியில் மீனா சீனியர் மேனேஜராக வேலை பார்க்கும்வரை அந்த வசதிகள் குறைவில்லாமல் அவளது குடும்பத்திற்குக் கிடைக்கும் தானே.. அதற்குப்பின் நடப்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாமே..
மீனா வெகு விரைவில் எஸ்டேட்டையும் விஷ்வாவின் மற்ற தொழில்களையும் அவளுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள்.. வினோத்துடன் அடிக்கடி அவளுக்கு மோதல் வந்தது.. கண்டிப்புடன் அவனை கட்டுக்குள் அடக்கினாள்.. விஷ்வா கானாடுகிரியில் இருந்ததினால் வினோத்தால் வாலாட்ட முடியவில்லை..
மூன்றாம் மாதம் முடிந்து நான்காம் மாதம் ஆரம்பித்தது.. அவளும் விஷ்வாவும் எஸ்டேட்டிலிருந்து கிளம்பும் போதே கனமழை ஆரம்பித்திருந்தது.. பாதை தெரியாத அளவிற்கு இருட்டு.. மழை விடவில்லை.. காட்டின் வழி வரும்போது பாதையின் குறுக்கே மரமொன்று விழுந்து கிடந்தது.. மீனா பயந்து போனாள்..
"பயப்படாதே.. கொஞ்ச தூரத்தில் மலைவாழ் மக்களின் குடியிருப்பு இருக்கிறது.. நான் போய் அவர்களை உதவிக்கு அழைத்துக்கிட்டு வர்றேன்.. நீ காரில் பத்திரமாக இரு.." விஷ்வா கார்க் கதவைத் திறந்து இறங்கப் போனான்..
"தனியா இருக்கிறதா..? நான் மாட்டேன்.." மிரட்சியுடன் மறுத்தாள் மீனா..
"சொன்னாக் கேளு மீனா.. காரில் ஒரு ரெயின் கோட்தான் இருக்கு.."
"நனைந்தாலும் பரவாயில்லை.. நானும் வருவேன்.."
"சரி வா.."
விஷ்வா ரெயின் கோட்டை விரித்து அவளுக்கும் சேர்த்துப் போர்த்தித் தன் கைவளைவுக்குள் அவளை இழுத்துக் கொண்டான்.. மழைக்குளிரும், மலைக் குளிரும் சேர்ந்து கொள்ள, மீனா நடுங்கினாள்.. அதை உணர்ந்தவனாக விஷ்வா அவள்மீது அட்டை போல ஒட்டிக் கொண்டான்.. மீனாவுக்குள் குபீர் என மோகத்தீ பற்றிக் கொண்டதும்.. இளமையும், குளிரும் சேர்ந்து இதமான ஓர் இம்சையை உற்பத்தி பண்ண.. அவள் மோகத்தில் மிதப்பதைப் போன்ற மோன நிலைக்குள் தள்ளப்பட்டாள்..

சில பொழுதுகள் கடக்க முடியாதவை.. பற்றியெறியும் மோகத்தீயின் நாக்குகள் ஆவேசமாக சுழன்றதில் அவள் விஷ்வாவின் மார்பில் ஒடுங்கி ஒன்றினாள்.. அவளது மூச்சுக் காற்றின் அனலில் அவளது உணர்வுகளின் போராட்டத்தை விஷ்வா உணர்ந்து கொண்டான்..


Name

அடுத்தடுத்து,1,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,50,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,67,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,25,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லாமலே பூப்பூத்ததே ..,20,தூங்காத கண்ணென்று உண்டு,6,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,2,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,78,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூவே மயங்காதே,28,பொதிகையிலே பூத்தவளே,36,மகராசி,1,மலர்ந்தும் மலராமல்,39,மூரத்தியின் பக்கங்கள்,10,மைவிழியே மயக்கமென்ன ?,1,மௌனத் திரையின் மறைவினிலே,22,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -33
பொதிகையிலே பூத்தவளே -33
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/pothikaiyllepooththavale-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/pothikaiyllepooththavale-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy