பொதிகையிலே பூத்தவளே -35

35 ஆழிப் பேரலையாய் அடித்துச் சென்ற உணர்வுகள் அலையடங்கி சமன் நிலைக்கு வந்தன.. மீனாவின் புத்தி தெளிந்து விழித்துக் கொண்டது.. இது நானா என...

35

ஆழிப் பேரலையாய் அடித்துச் சென்ற உணர்வுகள் அலையடங்கி சமன் நிலைக்கு வந்தன.. மீனாவின் புத்தி தெளிந்து விழித்துக் கொண்டது.. இது நானா என்று அவள் வெட்கிப் போனாள்.. அவளிடமிருந்து விலகியிருந்த விஷ்வா புரண்டு அவள் மீது படர்ந்தபோது கெஞ்சுதலுடன் அவன் முகம் பார்த்தாள் மீனா..
"எப்பவும் போல இப்ப நானில்ல.. உங்களைத் தள்ளி நிறுத்த என்னால முடியாது.. ஆனா இது தப்புன்னு மட்டும் என் உள் மனசு சொல்லுது.. இந்த நிமிசம் எதையும் நினைக்காம, எதைப் பத்தியும் கவலைப்படாம.. உங்களுடன் வாழ்ந்துவிட என் வெளி மனசு துடிக்குது.. உள் மனசு தடுக்குது.. நான் என்ன செய்யட்டும்..?"
அவனை மறுக்காமல் தன்நிலை உணர்த்திய அந்தப் பொதிகையில் பூத்தவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகி எழுந்தான் விஷ்வா.. உடை கலைந்து, கூந்தல் கலைந்து, முகம் கசங்கியிருந்தவளை கை கொடுத்து எபப்பி விட்டான்.. எழுந்து நின்றவள் அவன் மீது சாய இறுக்கி அணைத்து அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.. அவள் அவனது முதுகில் கரங்களை பரவ விட்டு தன்னுடன் அவனை இறுக்கிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
அடைக்கலமென்று நின்றவளை அரவணைத்தபடி அவன் நிற்பதை கொட்டும் மழை பார்த்துக் கொண்டிருந்தது.. குடிசைக்கு வெளியில் பேச்சுக் குரல்கள் கேட்டதில் இருவரும் அணைப்பிலிருந்து விடுபட்டு தள்ளி  நின்றார்கள்.. விஷ்வா குடிசைக்கு வெளியில் போனான்.. மீனா சுவரிலிருந்து கீழே விழுந்திருந்த போட்டோவை கையில் எடுத்துப் பார்த்தாள்..
அது கண்ணாடி பிரேமில் அடைபடாத பெயிண்டிங் போட்டோ.. அழகான புதுமலர் போல ஒரு இளம் பெண் சிரித்துக் கொண்டிருந்தாள்..
"மரத்தை ஒதுக்கிட்டாங்க.. நாம் போகலாம்.." என்றபடி உள்ளே வந்த விஷ்வா மீனாவின் கையிலிருந்த போட்டோவைப் பார்த்தான்.. அவன் முகம் இறுகியது..
"யார் இது..?" மீனா கேட்டாள்..
விஷ்வா பதில் சொல்லவில்லை..
'ரொம்ப அழகா இருக்கா.. இந்த ஊர் பெண் போல இருக்கு..' மீனா போட்டோவைப் பார்த்தபடி சொன்னாள்..
"இந்த வீட்டுப் பெண்.." விஷ்வாவின் குரல் கரகரத்தது..
மீனா போட்டோவை சுவரிலிருந்த ஆணியில் மாட்டினாள்.. குடிசையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்..
"என்ன..?" விஷ்வா வினவினான்..
"இது ஆளில்லாத வீடு போல தெரியலையே.."
விஷ்வாவின் உடலில் ஓர் அதிர்வு வந்து போனதை அவள் கவனிக்கவில்லை.. தன் போக்கில் கேட்டாள்..
"இப்ப அதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணனுமா..?"
"ஆமாமில்ல.."
மீனா கிளம்பத் தயாராக.. விஷ்வா அவள் முகத்தைப் பற்றி விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. மீனா நிலை குலைந்தாள்.. மிகவும் பிரயாசைப்பட்டு அவள் வெளியில் வந்திருந்த மாயச்சுழல் அவளை மீண்டும் இழுத்ததில் மூச்சுத் திணறினாள்..
"உன்னிடம் நான் காதல் சொன்னது சத்தியம் மீனா.."
"இல்லைன்னு நான் சொல்லலையே.."
"நீ விரும்பாத பல பழக்கங்கள் என்னிடம் இருந்ததுதான்.. எப்போது உன்னை நான் பார்த்தேனோ.. அந்த செகண்டில் இருந்து நான் அப்போதுதான் பிறந்த புது மனிதனைப் போல ஆகிவிட்டேன்னு சொன்னால் நம்புவாயா..?"
"நம்புவேன்.."
"வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழைநீர் போல என்காதல் பரிசுத்தமானது மீனா.. அப்பழுக்கில்லாதது.."
"நீங்க சொல்லனுமா..?"
மீனா விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.. அவளது உச்சந்தலையில் இதழ் பதித்து விலகிய விஷ்வாவுக்கு அங்கிருந்து போகவே மனம் வரவில்லை.. அதையே மீனாவும் சொன்னதில் அவளை மறுபடியும் அணைத்துக் கொண்டான்..
"வீட்டுக்குப் போகவே மனம் வரலை.. இந்தக் குடிசையிலேயே இருந்து விடலாம் போல இருக்கு.."
"இருந்து விடலாமா..?"
"ம்ம்ம்.."
அந்த உரையாடல் அழகான ஒன்றாக இருந்தது.. அவர்கள் ஒர் கணம் அந்தக் குடிசையில் வாழும் வாழ்வைப் பற்றிய கற்பனையில் லயித்தார்கள்.. விஷ்வா மரம் வெட்டி வருகிறான்.. மீனா அடுப்புக் கூட்டித் தினை அரிசி கஞ்சியும் கிழங்கும் சமைக்கிறாள்.. கொட்டும் மழையின் குளிருக்கு இதமாக சுடச்சுடக் கஞ்சியையும் கிழங்கையும் உண்டு விட்டு இருவரும் கம்பளிக்குள் ஐக்கியமாகிறார்கள்..
"மீனா.." கற்பனையில் சூடேறியவனாக அவன் அவளை தாபத்துடன் பார்த்தான்..
"இங்கே இருந்துவிட என்னால் முடியும்.. எளிய வாழ்வு எனக்குப் பழக்கம்தான்.. ஜமீன்தார் சாருக்கு அது பழக்கமா..?"
நடக்காது என்று அறிந்த கற்பனை வாழ்வை விட்டு யதார்த்த வாழ்விற்கு வந்தபடி சோகையாக சிரித்தாள் மீனா..
விஷ்வா பெருமூச்சுடன் விலகினான்.. அவரவர் வாழ்வுக்குப் போக வேண்டும் என்ற சோர்வு அவர்களைக் கவ்வியது.. மௌனமாக அவன் முன்னே நடக்க மீனா பின் தொடர்ந்தாள்.. ஆளில்லாத வீட்டில் கணப்பு எப்படி வந்தது என்ற எண்ணம் வரத் திரும்பிப் பார்த்தாள்.. கணப்பின் செந்நிற ஒளியில் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெண்ணின் புகைப்படம் தெரிந்தது.. ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது..
வெளியில் இருந்தவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.. விஷ்வாவைக் கண்டதும் பேசுவதை நிறுத்தி விட்டு மரியாதையாக ஒதுங்கி வழி விட்டார்கள்..
சிறுபுன்னகையுடன் அவர்களிடமிருந்து விடைபெற்ற விஷ்வா மழையில் நனைந்தபடி காருக்கு விரைந்தான்.. அவனுடைய ரெயின் கோட்டைப் போர்த்தியிருந்த மீனா நனையாமல் குற்ற உணர்வுடன் அவன் பின்னால் ஓடினாள்.. காருக்குள் ஏறும்போது விஷ்வா தொப்பலாக நனைந்திருந்தான்..
"என்னால்தானே.."
கார் கிளம்பியதும் வருத்தத்துடன் மீனா கேட்டாள்..
"உன்னால் எத்தனையோ மாற்றங்கள் எனக்குள் வந்திருக்கிறது.. இப்போது எதை நீ சொல்கிறாய்ன்னு எனக்குத் தெரிந்தால் பெட்டரா இருக்கும்.." காரை ஓட்டியபடி மலைப்பாதையில் பார்வையை பதித்து விஷ்வா கேட்டான்..
"மழையில் நனைந்துட்டிங்களே.."
"போகும் போது நனையவில்லையே.."
விஷ்வா அவளைப் பார்த்துக் குறும்பாக கண்சிமிட்டி விட்டுப் பாதையிலே கவனமானான்.. மீனாவின் கன்னங்கள் சிவந்து விட்டன.. போகும்போது ஒரே ரெயின் கோட்டில் இருவரும் ஒட்டிக் கொண்டு ஒன்றிக் கொண்டு சென்றதை அவன் குறிப்பிடுவதை புரிந்து கொண்டவள் வெட்கம் கொண்டாள்..
"திரும்பும் போது அதைப் போலவே வந்திருந்தா, நான் நனைந்திருக்க மாட்டேன்தான்.. எங்கே..? மலைவாழ் மக்கள் இருந்தாங்க.. அவங்க முன்னாடி ஜெண்டில் மேன் போல ஆக்ட் பண்ண வேண்டியதாகிருச்சே.."
"குளிருதா..?"
கவலையுடன் கேட்டாள்.. காரின் ஏஸியில் குளிரைக் குறைத்து வெப்பத்தை பரப்பி விட்டிருந்தான்.. இருந்தும் பற்கள் கிட்டிப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..
"ஆமாம் கிட்ட வா.. குளிர் ஓடிப் போயிரும்.."
அவன் ஒரு கையை நீட்டி அவளை வளைத்துக் கொண்டான்.. மீனா தன்னை மறந்தாள்.. அவளது வீடு நெருங்கி விட்டதில்..
"மீனா.. ஒரு விசயம்.." என்றான் விஷ்வா..
அவனது குரல் மாறுப்பாட்டில் கலவரமடைந்தாள் மீனா..
"என்ன..?"
"நாளை நான் ஃபாரின் போக வேண்டியிருக்கு.."
"என்னது..?" மிரண்டு விழித்த மீனா..
"என்னிடம் சொல்லவே இல்லையே.." என்றாள் பதட்டத்துடன்..
"சொன்னால் இப்படித்தான் பதட்டமாவாய்.. அதனால் சொல்லலை.. அர்ஜண்டா நான் அஃப்ராடு போயாகனும்.. நானில்லாமல் நீ வேலையைப் பார்க்கப் பழகிக்கனும் மீனா.. தட்'ஸ் இம்பார்ட்டன்ட்.."
மீனா கானாடுகிரியின் கானகத்தில் தொலைந்து விட்ட குழந்தை போல விழித்தாள்..
"இப்படி விழிக்கக் கூடாது மீனா.. திடமா இருக்கனும்.." விஷ்வா அதட்டினான்..
"எனக்கு பயமா இருக்கே.." குழந்தை போலச் சொன்னாள் மீனா..
"எதுக்குப் பயப்படற..? பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை மீட் பண்ணினப்ப தைரியமா பேசின மீனாவா நீ..? நான்தான் உன்னோட பாஸ்ன்னு தெரிந்த பின்னாலும் அந்த நிமிர்வை நீ கைவிடலையே.. அந்த நிமிர்வுதான் என்னை இம்ப்ரெஸ் பண்ணியது.."
"அது மதுரைக்கார பொண்ணுகளோட ரத்தத்தில கலந்த நிமிர்வு.."
"இப்ப அந்த நிமிர்வு எங்கே போனது..?"
"அது மதுரையிலேயே நின்னுருச்சு.. இது மதுரையில்லை.. கானாடுகிரி.. நான் அறியாத ஊர்.. பிறந்து வளர்ந்த மதுரையில்லை.."
"ஊஹீம்..?"
கேலியாக கேட்ட விஷ்வா காரை நிறுத்தினான்.. தன்  கழுத்தில் இருந்த தங்கச் செயினைக் கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டான்.. அதுவரை அவன் என்ன செய்யப் போகிறான் என்று அறியாமல் பார்த்துக் கொண்டிருந்த மீனா பதறி விட்டாள்.. அவசரமாக அந்தத் தங்கச் சங்கிலியைக் கழட்டப் போனாள்..
"நோ.." கண்டிப்புடன் அவளைத் தடுத்தான் விஷ்வா..
"நானில்லாத நேரங்களில் என் சங்கிலி உன்னுடன் இருக்கும்.."
அவன் சொன்ன வார்த்தைகளில் ஈர்க்கப்பட்ட மீனா இமைக்காமல் அவனைப் பார்த்தாள்.. அவன் இமை மூடித் திறந்தான்..
"யெஸ்.. ஐ லவ் யுன்னு நான் சொன்ன வார்த்தை மாறாது மீனா.. அதை உன்னைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சங்கிலி உறுதிப் படுத்தும்.. நான் வாக்கு மாறாதவன்.. உன் நினைவில் இருந்தும் மாற மாட்டேன்.."
மீனா சிறு விம்மலுடன் அவன் தோள்மீது சாய்ந்தாள்.. சந்தோசமா, துக்கமா என்று இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வு பந்து போல் அவளது தொண்டையில் சுருண்டது..
அவளது தோள் தொட்டு அணைத்து சமாதானப் படுத்தினான் விஷ்வா.. மழையிருட்டிலும் மகளுக்காக போர்டிகோ வராண்டாவில் கம்பளி போர்த்திக் காத்திருந்தாள் புனிதா..
"இந்த ரெயின் கோட்டை நீயே வைத்துக்க.."
விஷ்வா காரிலிருந்து இறங்காமல் ரெயின் கோட்டை எடுத்துக் கொடுத்தான்..
அவனையே அள்ளிக் கொள்வதைப் போல ரெயின்கோட்டை அள்ளிக் கொண்டு காரை விட்டு இறங்கினாள் மீனா.. விஷ்வாவின் கார் பறந்து விட்டது..
"முதலாளி எப்பவும் நம்ம வீட்டுக்கு வந்துட்டுத்தான போவாரு..? இன்னைக்கு என்னம்மா அப்படியே போயிட்டாரு..?" புனிதா கேட்டாள்..
"சார், நாளைக்கு ஃபாரின் போகிறாராம்மா.. பேக் பண்ண வேண்டியிருக்காம்.. அதனால் போயிட்டார்.." புனிதாவின் முகம் பார்க்காமல் சொல்லியபடி வீட்டுக்குள் விரைந்தாள் மீனா..
அவளால் புனிதாவின் முகத்தை இயல்பாக பார்க்க முடியவில்லை.. ஏதோ குற்றம் செய்து விட்டதைப் போன்ற குறுகுறுப்பு.. விஷ்வாவும் அதனால்தான் வீட்டுக்குள் வராமல் போய் விட்டான் என்று அவளுக்குப் புரிந்தது.. அதை புனிதாவிடம் அவளால் சொல்ல முடியுமா..?
"அஞ்சு மணிகூட ஆகலை.. ஆனா நடுராத்திரிபோல் இருட்டுக் கட்டிக்கிட்டு மழை பெய்யுது.. நீ வீடு வந்து சேருகிற வரைக்கும் பக்கு பக்குன்னு இருக்கு.." புனிதா என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னாள்.. குற்றமுள்ள மீனாவின் மனதில் அது முள்ளாகத் தைத்தது..
"சீக்கிரமா வரனும்னுதான்ம்மா நினைச்சேன்.. ஆனா வழியில் மழையில மரம் ஒன்னு பாதைக்குக் குறுக்கே விழுந்து கிடந்தது.."
"அய்யய்யோ .. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே.."
"இல்லைம்மா.. எங்களுக்கு ஒன்னுமில்லை.. ஆளுக வந்து மரத்தை வெட்டி வழி ஏற்படுத்திக் கொடுத்த பின்னாலதான் வர முடிஞ்சது.. அதனால லேட்டாகிருச்சு.."
"நீ இத்தனை விளக்கம் சொல்லனுமா..? பொறுப்பான வேலையில இருக்கிறவ, காரணமில்லாம லேட்டா வர மாட்டேன்னு எனக்குத் தெரியாதா..? வயசுப் பொண்ண வேலைக்கு அனுப்புன தாய் மனசு பரிதவிக்கத்தான் செய்யும்.. காலாகாலத்தில பொண்ணு வீட்டுக்கு வரலையேங்கிற கவலையில ஏதோ பேசறதுதான்.. அதை இந்தக் காதில வாங்கி அந்தக் காதில விடாம விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கியே.. வா.. சூடா உழுந்தவடையும் காபியும் இருக்கு.. வயித்தில போட்டுட்டு துணி மாத்தப் போக.."

அவளது வீடு அவளை அரவணைத்துக் கொண்டது.. இரவு உணவுக்குப் பின்னால் படுக்கையில் விழுந்தவளுக்கு விஷ்வாவின் அணைப்பில் உறங்குவதைப் போல இருந்தது.. மழைக்கு ஒதுங்கிய குடிசையின் நினைவுடன்  அவள் தலையணையைக் கட்டிக் கொண்டு உறங்கி விட்டாள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -35
பொதிகையிலே பூத்தவளே -35
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/pothikaiyilepooththavale35.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/pothikaiyilepooththavale35.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy