பூவே மயங்காதே -30

30 கருணாகரனின் அறைக்குள் பாபு எட்டிப் பார்த்தான்.. ஒரு மார்க்கமாய் விழிக்க வேறு செய்தான்.. "ஏண்டா இப்படி ஆடு திருடினவன் போல் வி...

30

கருணாகரனின் அறைக்குள் பாபு எட்டிப் பார்த்தான்.. ஒரு மார்க்கமாய் விழிக்க வேறு செய்தான்..
"ஏண்டா இப்படி ஆடு திருடினவன் போல் விழிக்கிறாய்..?" என்று அதட்டினார் கருணாகரன்..
"இல்லைங்க டாக்டர் சார்.. இன்றைக்கும் உங்களைப் பார்க்க.."
"என்னது..? அந்தப் பெண் வந்திருக்கிறாளா.. திருப்பி அனுப்பு.."
"பொம்பளை இல்லை சார்.. ஆம்பளை.."
"யாருடா அது..? சரி அனுப்பு.."
கபிலன் உள்ளே நுழைந்தான்.. கருணாகரனைப் பார்த்து கரம் குவித்தான்.. கருணாகரன் யோசனையானார்..
"வணக்கம் சார்.."
"வாங்க கபிலன் உட்காருங்கள்.."
"தேங்க்யூ சார்.."
"அப்புறம்.. என்ன இந்தப் பக்கம்..?"
"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.."
"என்னைப் பார்க்கவா..? என்ன விஷயம்..?"
எதுவுமே தெரியாதது போன்று கேள்விகள் வர.. பொறுமையாய் ஆனால் நேரடியாய் பதில் சொன்னான் கபிலன்..
"என்ன சாப்பிடுகிறீர்கள் கபிலன்.."
"நோ.. தேங்க்ஸ் சார்.."
"இப்படிச் சொன்னால் எப்படி..? பாபு.. ஒரு கூல்டிரிங்க் வாங்கிக் கொண்டு வா.. சொல்லுங்கள் கபிலன்.."
கருணாகரன் சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.. கபிலன் நிதானமாய் அவர் முகம் பார்த்தவாறே வார்த்தைகளைக் கோர்த்தான்..
"சார்.. நான் வானதியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.."
நெற்றியடியான கேள்வி.. கருணாகரன் யோசித்தார்..
'எப்படி இவன் மனம் வருந்தாமல் மறுப்பது..'
"என்ன சார் யோசிக்கிறீர்கள்..?"
"கபிலன்.. எனக்கு உங்கள் மேல் மதிப்பு.. மரியாதை எல்லாமே இருக்கிறது.. அதுவேறு.. ஆனால் என் பெண்ணின் திருமணம் என்பது வேறு.. என் பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க என்னால் முடியாது.. ஐ ஆம் வெரி ஸாரி டு ஸே திஸ்.."
"என்னிடம் என்ன குறையென்று நான் கேட்க மாட்டேன் சார்.. நீங்கள் நல்லவர்.. மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்.. எடைபோடக் கூடியவர்.. என்னைப் பற்றிய உங்களது மதிப்பீடு குறைவானதாக இருக்காது.. இருந்தாலும் பெண்ணைக் கொடுக்கத் தயங்குகிறீர்கள்.. உங்கள் மேல் தவறு இல்லை சார்.. என்னுடைய தலைவிதி கோணலாக இருக்கும்போது நான் யாரை நொந்து கொள்ள முடியும்..? என் அப்பா இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கேட்டதும் என் அம்மா ஹார்ட் அட்டாக் வந்து துடிதுடித்து இறந்து போயிட்டாங்க.. அவர்களின் சாம்பலின் தணல் ஆறுவதற்குள் என்னைப் பெற்றவன் தொடர்பு வைத்திருந்தவளை ஊரறிய மனைவியாக்கிக் கொண்டு மாலையும் கழுத்துமாக வீட்டில் வந்து நின்றான்.. அவனுடைய வீட்டில் இருக்கப் பிடிக்காமல்.. அவனுடைய பணத்தில் வாழப் பிடிக்காமல்.. அவனை அப்பா என்று கூப்பிடப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.. இது தவறா..?"
தவறென்று சொல்ல முடியாத கருணாகரன் மௌனித்தார்..
"அன்பழகன் என் கூடப் படித்தவன்.. அவனையும் அவனது தங்கையையும் பார்க்கும் போதெல்லாம் எனக்கு.. என்னையும் கயல்விழியையும் பார்ப்பது போலவே இருக்கும்.. கேன்சர் வந்து செத்துப் போனான்.. சாவதற்கு முன் என் தங்கை அநாதையாய் நிற்கிறாளே என்று கதறினான்.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்தேன்.. அது தவறா..?"
கருணைக்கு பெயர் பெற்ற கரணாகரனால் இதையும் தவறு என்று சொல்ல முடியவில்லை..
"அவளது மனத்தில் விஷம் இருந்திருக்கிறது.. லேடீஸ் ஹாஸ்டலில் இடம் பார்த்துக் கொடுத்தால்.. அவள் அங்கு போக மறுத்து விட்டு என் வீட்டில்தான் இருப்பேனென்று அடம் பிடித்தாள்.. நான் மறுத்தேன்.. நான் இல்லாதபோது அவளுடைய வீட்டை காலி பண்ணிவிட்டு பெட்டியோடு என் வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டாள்.. சமையலுக்கு.. மேல் வேலைக்கு என்று இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி அவளுக்கு துணையாய் வைத்து விட்டு.. வீட்டுக்கு வாட்ச்மேன் ஒருவரையும் காவலுக்கு வைத்து விட்டு.. வீட்டை விட்டு நான் வெளியேறி விட்டேன்.. சாப்பிடுவது தூங்குவது எல்லாம் என் மெக்கானிக் ஷெட்டில்தான்.."
'இதற்காகவா.. இவன் இவ்வளவு பாடுபட்டு சொந்த வீடு கட்டினான்.. இருக்க வீடு இருந்தும்.. வீடில்லாத அநாதை போல் ஷெட்டில் படுத்து எழுந்திருக்கிறானே..!'
கருணாகரனின் மனம் இளக ஆரம்பித்தது..
"அவளுக்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தேன்.. சீர்வரிசை நகை என்று கயல்விழிக்கு செய்வது போல் செய்யத் தயாராக இருந்தேன்.. ஆனால் வந்த மாப்பிள்ளை களை நிராகரித்தாள்.. என் பேக்டரிக்கு வந்தாள்.. அங்கு உரிமை கொண்டாடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.. ஊரெல்லாம்.. நான் அவளுடன் வாழ்வதாக கதை பிணைந்து வைத்திருக்கிறாள்.. கயல்விழி வந்தவுடன் வீட்டில் அவளுக்கென்று எல்லையை விதித்தாள்.. பேக்டரியை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு பேக்டரியில் அவள் கால் வைக்க முடியாமல் செய்தாள்.."
"பரவாயில்லையே.. கயல்விழியை சின்னப் பெண் என்று நினைத்தேன்.. அவள் இவ்வளவு வேலை செய்தாளா..?"
"ஆமாம் சார்.. வானதியை நான் மனதார விரும்பினேன்.. ஆனால் அந்தப் பெண் என்னை மாட்டி வைத்திருக்கும் இக்கட்டான சூழலில் வானதியையும் மாட்டிவிட விருப்பமின்றி என் காதலை சொல்லாமல் மறைத்துத்தான் வந்தேன்.. நானும் மனிதன்தானே சார்.. கல் இல்லையே.. என் மனதை அடக்க முடியவில்லை.. வானதியிடம் என் காதலைச் சொல்லி விட்டேன்.. அவள் கயல்விழியைப் பார்க்கத்தான் என் வீட்டிற்கு வந்தாள்.. அதுவும் கிரிஜாவின் துணையோடு வந்தாள்.. என் வீட்டிலிருந்த பிடாரியின் கண்ணில் பட்டு விட்டாள்.. அவள் வந்து உங்களைப் பார்த்து போட்டுக் கொடுத்து விட்டாள்.."
"அவள் போட்டுக் கொடுக்க வந்தாலும் அது பொய்யில்லையே கபிலன்.. குணவதி மட்டுமில்லை.. கோகிலாவும் வானதியைப் பற்றிப் புகார் கூறுகிறாளே.."
"நான் என் நண்பன் சரவணனின் வீட்டில் வானதியைச் சந்தித்தது உண்மைதான்.. சார்.. நாங்கள் இரண்டு பேரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம்.. எங்கள் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடாதா..?"
"என் மகளின் எதிர்காலத்தில் எனக்குப் பங்கில்லையா..?"
"உங்களிடம் பெண் கேட்காமல் அவளைத் திருமணம் செய்து கொள்வேனா..?"
"பெண் கேட்க வருவது நீங்களாகத்தான் இருக்கிறீர்கள்.. உங்கள் சார்பாய் பெண் கேட்டு வர உங்களைப் பெற்றவரே மறுப்பாரே.."
"அந்த ஆள் சரியென்றாலும் நான் அவனை என் தகப்பன் ஸ்தானத்தில் வைப்பேனா சார்..? எனக்கு தாயும் இல்லை.. தகப்பனும் இல்லை.. ஆனால் உற்ற நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.. என் சார்பாய் சரவணனும்.. கிரிஜாவும் பெண் கேட்டு வருவார்கள்.. போதுமா..?"
"போதாது கபிலன்.. உங்கள் வீட்டிலிருக்கும் பெண் என்னைத் தேடி என் வீட்டிற்கே வருவாள்.. வாசலில் நின்று சத்தம் போடுவாள்.. இது எங்களுக்குத் தேவையா..?"
"சார்.. அவள் சொல்வது பொய்.."
"எனக்கும் அது தெரிகிறது கபிலன்.. ஆனால் அவளை உங்களது வாழ்விலிருந்து விலக்கி வைத்துவிட்டு வந்து பெண் கேளுங்கள்.. நான் யோசிக்கிறேன்.."
"அப்போதும் யோசிக்கத்தான் செய்வீர்களா..?"
"நான் பெண்ணைப் பெற்றவன் கபிலன்.. நான்கையும் யோசிக்க வேண்டும்.."
"அந்த நான்கில் ஒன்று என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா..?"
"கபிலன்.. உங்களுடைய சொத்து வீடும்.. பேக்டரியும் தான்.. இவை இரண்டும் கயல்விழியின் பெயரில் இருக்கின்றனவே.."
"மெக்கானிக் ஷெட் என் பெயரில் இருக்கிறது சார்.."
"அது போதாது கபிலன்.. உங்களுடைய இத்தனை குறைபாடுகளையும் நான் தூக்கி எறிந்து விட்டுப் பெண் கொடுப்பதாக இருந்தால் உங்களுக்கு பணபலம் சொத்து இருக்க வேண்டும்.. அது இப்போது உங்களிடம் இல்லை.."
கபிலன் சொன்னதைக் கேட்ட கிரிஜாவும் சரவணனும் தங்களுக்குள் விவாதித்தனர்..
"தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்.."
"இல்லை கிரிஜா.. அவர் வாதத்திலும் நியாயம் உள்ளது.."
"இதற்கு என்ன வழி இருக்கிறது..?"
கிரிஜாவின் கேள்விக்கு 'இருக்கிறது' என்று பதில் கொடுத்தாள் கயல்விழி..
"என் மேல் உள்ள சொத்தை.. அண்ணி பெயருக்கு மாற்றி எழுது.. எனக்கு சொத்து நீதான்.. வேறு எதுவும் வேண்டாம்.."
தங்கை அல்ல.. தான் கபிலனின் தாய் என்று அந்தக் கணத்தில் நிரூபித்தாள் கயல்விழி.. கபிலனின் கண்கள் கலங்கி விட்டன..

'என்ன தவம் செய்தேன்.. இவளுடன் நான் பிறக்க..'


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூவே மயங்காதே -30
பூவே மயங்காதே -30
https://1.bp.blogspot.com/-aeiCeZa4dzc/XTm8t6BR8nI/AAAAAAAAAq4/1TynPq6jzt4X2bzqWNq6_5lRNoppX5tsgCPcBGAYYCw/s320/poove%2Bmayangathe.jpg
https://1.bp.blogspot.com/-aeiCeZa4dzc/XTm8t6BR8nI/AAAAAAAAAq4/1TynPq6jzt4X2bzqWNq6_5lRNoppX5tsgCPcBGAYYCw/s72-c/poove%2Bmayangathe.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/poovemayangaathe30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/poovemayangaathe30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy