பூவே மயங்காதே -32

32 கிரிஜா.. கூறிய திட்டத்திற்கு வானதி சம்மதம் கொடுத்தாள்.. கபிலனை அந்த மாதிரியான கோலத்தில் பார்த்த பின்னால் அவளால் மறுத்துப் பேச முட...

32


கிரிஜா.. கூறிய திட்டத்திற்கு வானதி சம்மதம் கொடுத்தாள்.. கபிலனை அந்த மாதிரியான கோலத்தில் பார்த்த பின்னால் அவளால் மறுத்துப் பேச முடியவில்லை..
"வானதி.. கயல்விழியிடமிருந்து முழுச் சொத்தையும் நீ வாங்கிக் கொள்ள வேண்டாம்... வீட்டையும்... பேக்டரியையும் உங்கள் இருவரின் பெயருக்கும் மாற்றி எழுதித் தருவதாகக் கபிலன் கூறுகிறார்.."
"கிரிஜா இது சரி வருமா..?"
"ஏன் வராது..? எப்படியும் சொத்தில் அண்ணன் தங்கை இரண்டு பேருக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா..? கபிலன் சொத்தைத்தானே உனக்குக் கொடுக்கிறார்.. கயல்விழியின் பங்கு அவளிடம் தானே இருக்கிறது..?"
"நாளை கயல்விழிக்கு திருமணம் ஆனால்..?"
"சேர்ந்தே இருக்கப் போகிறீர்கள்.. கடல் போல் கபிலனின் வீடு.. உன் குடும்பமும் கயல்விழியின் குடும்பமும் கூட்டுக் குடித்தனமாக இருக்க முடியாதா..?"
"பேக்டரி..?"
"அதே கதைதான் பேக்டரிக்கும்.. வரும் வருமானம் இரண்டு குடும்பத்திற்கும் சரிதானே.."
வானதி கபிலனைப் பார்த்தாள்.. அவன் விழிகள் இறைஞ்சின.. கயல்விழியோ அவளைக் கட்டிக் கொண்டு கெஞ்சினாள்..
"சரி.." என்றாள் வானதி..
"குட்.. ரெஜிஸ்ட்ரார் ஆபிஸிற்கு பத்திரத்தை பதிவு பண்ண மட்டும் நாம் போகவில்லை.."
"பின்னே..?"
"உனக்கும் கபிலனுக்கும் திருமணத்தை பதிவு பண்ண போகிறோம்.."
"கிரிஜா.." வானதி பதறினாள்..
"வேறு வழியில்லை வானதி.. குணவதி எந்த நேரம் எதைச் செய்வாள் என்று தெரியவில்லை.. சட்ட ரீதியாய் அவளது வழியை அடைக்க இதைத் தவிர வேறு வழியில்லை.. திருமணத்தை பதிவுதான் பண்ணுகிறோம்.. மற்றபடி நீ உன் வீட்டிலேயே இருக்கலாம்.. முறைப்படி உன் அப்பா கல்யாணம் பண்ணி வைக்கும் வரை வெயிட் பண்ணலாம்.."
வானதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. கபிலன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது..
முடிவெடுத்து விட்டாள்..
"ஓகே.. கிரிஜா.."
கபிலனின் முகத்தில் வெளிச்சம் பரவியது.. மறுநாள் காலையில் நினைத்ததை முடித்தனர்.. அவர்கள் அனைவரும் ரெஜிஸ்ட்ரார் ஆபிஸில் நிற்க பதிவேட்டில் கையெழுத்திட்டு திருமணப் பதிவு பத்திரத்தைக் கையில் வாங்கிக் கொண்டபோது வானதியின் உடல் புல்லரித்தது..
'இனி அவள் கபிலனின் சொத்து..'
அவனைப் பார்த்தபோது அவனும் அப்போது அவளையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.. அவனது கண்களில் புதிய சொந்தம் தெரிந்தது..
வீட்டிற்குத் திரும்பியதும் கருணாகரனின் அறைக்குள் நுழைந்தாள் வானதி.. சொத்துப் பத்திரத்தையும்.. திருமண பதிவு பத்திரத்தையும் நீட்டினாள்..
"என்னம்மா இது.."
"ஒன்று நீங்கள் கேட்டது.. சொத்து.. கபிலனின் பெயரில் இல்லை.. என் பெயரிலேயே சொத்தை எழுதித் தந்து விட்டார்கள்.. எனக்கும் கயல்விழிக்கும் சரிபாதி இன்னொன்று நீங்கள் கேட்காதது.. என்னுடைய திருமணப் பதிவு பத்திரம்.."
"வானதி.."
"பதற வேண்டாம் அப்பா.. இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு மட்டும்தான்.. நான் சொன்னது போல நீங்களாக என்னை திருமணம் பண்ணி அனுப்பாமல் நான் வீட்டை விட்டுப் போக மாட்டேன்.." வானதி அமைதியாக தன் அறைக்குள் போய் விட்டாள்.. கருணாகரன் அசைவற்று அமர்ந்திருந்தார்..
குணவதியின் முன்னால் இரண்டு பத்திரங்களின் நகல்களை வீசினாள் கயல்விழி..
"பார்த்துக் கொள்.. என் அண்ணனின் திருமணம் முடிந்து விட்டது.. அதற்கான பதிவுச் சான்றிதழ் இது.. சொத்து என் பெயரிலும்.. என் அண்ணி பெயரிலும் பதிவாகி விட்டது.. இப்போது நாங்கள் தான் போலீஸிற்கு போக வேண்டும்.. சட்டப்படி திருமணமான என் அண்ணியை வந்து வாழ விடாமல் நீ வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்று நான் கம்ப்ளெயின்ட் பண்ணவா..?"
குணவதி அடங்கிப் போனாள்.. கபிலனிடம் பேச அவளால் முடியவில்லை.. வேறு வழியின்றி கயல்விழி யிடமே பேசினாள்..
"என் வாழ்க்கைக்கு என்ன வழி.."
"அதைத்தான் நீயே கெடுத்துக் கொண்டாயே.. உன்னைப் பற்றி நீயே தப்புத் தப்பாய் ஊரெல்லாம் சொல்லி வைத்து விட்டு.. இப்போது வாழ்க்கைக்கு என்ன வழியென்று என்னிடம் வந்து கேட்டால் நான் என்ன வழி சொல்ல..? நன்றாக யோசித்துப் பார்.. நீயென்ன எங்களுக்கு சொந்தமா.. பந்தமா..? உன் அண்ணன் கூடப் படித்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. என் அண்ணனை விட உன் அண்ணனுக்கு நெருங்கிய நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஏன் கிரிஜா அக்காவின் கணவர் சரவணன் கூட உன் அண்ணனுக்கு நண்பர் தானே.. இவர்களில் யாராவது ஒருவர் உன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வந்தார்களா..? உன் அண்ணனின் மருத்துவத்திற்கு உதவி பண்ணி.. உனக்கும் இத்தனை மாதங்களாய் இருக்க இடம்.. சாப்பிட சாப்பாடு செலவழிக்க பணம் இவற்றையெல்லாம் கொடுத்து நீ பண்ணிய அட்டூழியங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த என் அண்ணனுக்க நீ காட்டிய நன்றியையும் விசுவாசத்தையும் நினைத்துப் பார்.."
"போனது எல்லாம் போகட்டும் கயல்விழி.. இனியாவது எனக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுங்கள்.."
"வாழ்க்கையை ஒழுங்காக வாழத் தெரியாதவள்.. நீ.. இனிமேல் வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறாய்..?"
"ஏதோ ஆசையினால் மதியிழந்து விட்டேன் கயல்விழி.."
"எந்த ஆசையினால் குணவதி.. என் அண்ணன் மேல் உனக்கிருந்த ஆசையினாலா..?"
குணவதி மௌனம் சாதித்தாள்.. அவள் மனம் உறுத்தியது.. கயல்விழி அவளது விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தாள்..
"உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல் குணவதி.. உனக்கு என் அண்ணன் மேல் உண்மையிலேயே பிரியம் இருந்ததா..? இல்லை குணவதி.. உன் நோக்கமெல்லாம் என் அண்ணனின் சொத்தின் மீதுதான்.. இப்போது சொத்து என் அண்ணன் வசம் இல்லையென்றதும் என் வாழ்க்கைக்கு என்ன வழியென்று கேட்கிறாய் உன் மேல் என் அண்ணனுக்கு துளியளவு கூடப் பிரியம் இல்லை.. இது தெரிந்தும் அவரை நீ தொல்லை செய்தாய்.. என் அண்ணன் அவரது மனதுக்குப் பிடித்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் இடைஞ்சல் செய்தாய்.. இன்று சட்டப்படி அவர் அவருக்குப் பிடித்த பெண்ணை மணந்து கொண்டு விட்டார்.. இனி உன்னால் என்ன செய்ய முடியும்..?"
"என் அண்ணனுக்கு உன் அண்ணன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் கயல்விழி.. அதனால் என்னை நல்ல முறையில் கல்யாணம் செய்து வைத்து அனுப்பி வைக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.."
"சும்மா.. பொறுப்பு.. பருப்பு என்று தலையில் ஏறி உட்காரப் பார்க்காதே.. தன்னாலே ரத்த பாசம் கொண்டவர் களிடமே எல்லோரும் உதார் காட்டிவிட்டு கழன்று கொள்கிறார்கள்.. நீயெல்லாம் ஜூஜூப்பீ.. உனக்கு செய்ய வேண்டுமென்று எங்களுக்கு என்ன அவசியம் இருக்கிறது..? இதுவரை நாங்கள் சொன்னதை நீ காதில் வாங்கியிருக்கிறாயா..? இப்போது மட்டும் நீ சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமா..?"
கயல்விழி குணவதியை நன்றாகக் கலங்கடித்துக் காலில் விழுக வைத்தாள்.. அதன் பின் கபிலனிடம் கூறினாள்..
"வழிக்கு வந்து விட்டாள் அண்ணா.. நீ பார்த்து வைத்திருக்கும் அமெரிக்கா மாப்பிள்ளை எப்படிப்பட்டவன் அண்ணா..? இவளை கடைசி வரைக்கும் வைத்துக் காப்பாற்றுவானா..? குணவதி கெட்டவள்தான்.. ஆனால் அவளும் ஒரு பெண்.. உன்னை நம்பித்தான் அவளுடைய அண்ணன் நிம்மதியாய் கண் மூடினார்.. நாம் அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் அண்ணா.. இவள் வேறு ஊருக்குள் அவள் பெயரை அவளாகவே கெடுத்து வைத்திருக்கிறாள்.. பெண் கேட்டு வருகிறவன் அதை நம்பி இவளை கைவிட்டு விட்டால் என்ன செய்வது..?"
கயல்விழியின் கவலையைக் கண்டதும் கபிலனுக்குப் பெருமையாக இருந்தது.. 'இவள் என் தங்கை..' என்று நினைக்கும் போதே நெஞ்சம் நிமிர்ந்தது.. பகை வருக்கும் இரங்கும் கருணை உள்ளம் கொண்டவளான தங்கையைப் பார்க்கப்.. பார்க்க அவனுக்கு தெவிட்ட வில்லை..
குணவதியிடம் மாட்டிக் கொண்டு கபிலன் விடுபட வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி குணவதியை அடக்கியவளும் கயல்விழிதான்.. இன்று அதே குணவதியின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமே.. என்று கவலைப்படுபவளும் இதே கயல்விழிதான்..
தவறு செய்தால் காளியாக அவதாரம் எடுத்து துஷ்டத் தனத்தை அடக்கி.. சாந்தம் கொண்டால் கருணையே வடிவாய் சிரித்து.. அன்னையாய் அரவணைத்துக் கொள்ளும் சக்தியின் வடிவம் தான் பெண்களே..!
"கவலைப் படாதேம்மா.. இவனும் எங்கள் நண்பன் தான்.. என்னைவிட அன்பழகனுக்கு இவன் நெருங்கிய நண்பன்.. அவன் இறந்து விட்ட செய்தி கேட்டதும் துடித்து விட்டான்.. அன்பழகனின் தங்கை என்பதற்காகவே.. குணவதியை மணம் செய்துகொள்ள சம்மதித்து விட்டான்.. அன்பழகன் இறந்தவுடன் குணவதி பாது காப்பில்லாமல் இருந்தாள்டா.. அதனால் என் வீட்டில் தங்க வைத்தேன்.. அதை மற்றவர்கள் தவறாகப் பேசுகிறார்கள் என்று நான் சொன்னதும்.. சேச்சே.. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதாடா என்று கூறி விட்டான்.. அவனுயை பேரண்ட்ஸ் தான் சீர்வரிசை.. நகையென்று அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.."
"செய்துவிடு அண்ணா.. அவர்கள் எவ்வளவு கேட்டாலும் செய்துவிடு.. உன்னைச் சந்தேகிக்காத மகனைப் பெற்றவர்கள் அவர்கள்.. அத்தோடு குணவதிக்குச் செய்ய வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.."
இந்தியா வந்து இறங்கிய அந்த சம்பத் ஒரு நல்ல நாளில் குணவதியை பெண் பார்க்க பெற்றோருடன் வந்து இறங்கினான்.. ஏற்கனவே பார்த்திருந்தாலும் வெளிநாட்டு வாசத்தில் வெள்ளை வெளேரென்று நிறம் பெற்று கோட்டும் சூட்டுமாய் ராஜ கம்பீரத்தோடு அவன் வந்து அமர்ந்தபோது குணவதி மயங்கிப் போனாள்..
'அமெரிக்க மாப்பிள்ளை.. ஆளும் ஜம்மென்று இருக்கிறான்.. வெளிநாட்டில் குடித்தனம் பண்ணலாம்.. இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் காத்திருக்கும்போது இதை விட்டு விட்டு இந்த முசுட்டு தாடி கபிலனின் பின்னால் போக நினைத்தேனே.. நல்லவேளை பிழைத்தேன்..'
குணவதிக்கு உயர்ந்த ரக பட்டு உடுத்தி வைர நகைகளை பூட்டி சபையில் நிறுத்தியவது சம்பத்தின் பெற்றோர் வாய் கொள்ளா சிரிப்புடன் சம்மதம் சொல்லி விட்டனர்..
குணவதியின் திருமணப் பத்திரிகையை கொடுக்க கபிலனும்.. கயல்விழியும்.. குணவதியும் வானதியின் வீட்டிற்குச் சென்றனர்.. கருணாகரனிடம் தனது திருமணப் பத்திரிகை நீட்டிய குணவதி..
"என் கல்யாணத்திற்கு கட்டாயம் நீங்கள் வர வேண்டும் அங்கிள்.. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.." என்று கூறினாள்..
வியப்பில் விழி தெறிக்க பத்திரிகையை வாங்கிக் கொண்ட கருணாகரன் மனதிற்குள் வானதியின் செய்கையை மெச்சிக் கொண்டார்..
வானதி மட்டும் கபிலனை பதிவுத் திருமணம் பண்ணிக் கொண்டிருக்காவிட்டால் குணவதியை இவ்வளவு எளிதாக கபிலனின் பாதையை விட்டு அகற்றியிருக்க முடியாது..
குணவதி திருமணம் முடிந்து கணவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விட்டாள்.. கபிலனும் கயல்விழியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூவே மயங்காதே -32
பூவே மயங்காதே -32
https://1.bp.blogspot.com/-aeiCeZa4dzc/XTm8t6BR8nI/AAAAAAAAAq4/1TynPq6jzt4X2bzqWNq6_5lRNoppX5tsgCPcBGAYYCw/s320/poove%2Bmayangathe.jpg
https://1.bp.blogspot.com/-aeiCeZa4dzc/XTm8t6BR8nI/AAAAAAAAAq4/1TynPq6jzt4X2bzqWNq6_5lRNoppX5tsgCPcBGAYYCw/s72-c/poove%2Bmayangathe.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/poovemayangaathe-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/poovemayangaathe-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy