பூவே மயங்காதே -27

27 கருணாகரனின் அறைக்குள் வந்த அவரது உதவியாளன் பாபு "சார்.. உங்களைப் பார்க்க குணவதி என்ற பெண் ஒருத்தங்க வந்திருக்காங்க சார்" ...

27

கருணாகரனின் அறைக்குள் வந்த அவரது உதவியாளன் பாபு "சார்.. உங்களைப் பார்க்க குணவதி என்ற பெண் ஒருத்தங்க வந்திருக்காங்க சார்" என்றான்..
"என்ன விஷயமாம்..?"
"குடும்ப விஷயம்ங்கிறாங்க.."
"அதைப் பேச கிளினிக்கிற்கு எதற்கு வர வேண்டும்..? வீட்டுக்கு வரச் சொல்.."
"அவங்க உங்களிடம் தான் பேச வேண்டுமாம்.."
"என்னிடமா.. என்னவாக இருக்கும்.." என்று யோசித்தவர்,
"சரி வரச்சொல்.." என்றார்..
குணவதி உள்ளே வந்தாள்.. வெகு அடக்கமாக கைகூப்பி..
"வணக்கம் சார்.." என்றாள்.. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.. சேலை கட்டியிருந்தவள் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அடிக்கடி முந்தானையால் கண்களை நாசுக்காய் துடைத்துக் கொண்டிருந்தாள்..
தடித்த தங்க பிரேமிட்ட கண்ணாடி வழியே குணவதியை ஊடுருவிப் பார்த்த கருணாகரனுக்கு 'இந்தப் பெண் எதற்கு வந்திருக்கிறாள்..' என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை..
"என்னம்மா விஷயம்..?"
"சார்.. நான் உங்களிடம் வாழ்க்கைப் பிச்சை கேட்க வந்திருக்கிறேன்.."
கருணாகரனுக்கு தூக்கி வாரிப் போட்டது..
'என்னடா இது.. இந்தப் பெண் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாள்..? காலம் போன கடைசியில் எனக்கு இது தேவைதான்..?' என்று அரண்டு போனவராய்..
"ஏம்மா.. உனக்கு என்ன பிரச்னை..? ஏன் என்னவெல்லாமோ பேசுகிறாய்..? நீ யாரம்மா..?" என்று விசாரித்தார்..
"சார் என் பெயர் குணவதி.."
"இருக்கட்டும்.."
"எனக்கு அப்பா அம்மா இல்லை.."
"ஐயோ பாவம்.."
"எனக்கென்று இருந்தது என் அண்ணன் மட்டும் தான்.."
"இருந்தது என்றால்..?"
"அவரும் இப்போது உயிருடன் இல்லை.."
"நல்ல வரம் வாங்கிப் பிறந்திருக்கிறாய் அம்மா.."
"என் அண்ணன் இறக்கும்போது என் கையைப் பிடித்து நான் விரும்பியவரின் கையில் கொடுத்து.. என்னை அவரிடம் ஒப்படைத்தார்.."
'என்னடா.. இது.. இந்தப் பெண் சினிமாக் கதை போல் சொல்கிறாளே..?' சுவராஸ்யமாய் கதை கேட்க ஆரம்பித்து விட்டார் கருணாகரன்..
கன்னத்தில் கையை வைத்துத் தாங்கிக் கொண்டு,
"அப்புறம்.. என்ன ஆனது..?" என்று வினவினார்..
"அவர் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார். அவரும் நானும் ஒரே வீட்டில் இந்த ஒரு வருடமாய் சேர்ந்து வாழ்கிறோம்.."
'சுத்த அசிங்கம் பிடித்த பெண்ணாக இருப்பாள் போல இருக்கே..' கருணாகரன் கதை கேட்பதை நிறுத்தி விட்டார்..
"ஏம்மா.. உன் கதையைச் சொல்லவா.. என்னைத் தேடி வந்தாய்..?"
"இல்லைங்க.. என் கதையுடன் உங்கள் பெண்ணின் கதையும் கலந்து வந்து விட்டதே.. அதனால் தான் உங்களிடம் நியாயம் கேட்க வந்தேன்.."
"என் பெண்ணின் கதையா..?" கருணாகரனின் பார்வை கூர்மையானது..
"ஆமாம்.. வானதி உங்கள் மகள்தானே.."
"அவளை உனக்கு எப்படித் தெரியும்.." கருணாகரன் முகம் சுளித்தார்.. இப்படிப்பட்ட பெண்ணோடு வானதிக்கு பழக்கம் இருக்காதே..
"அவளைத்தேடி நான் போகலைங்க.. என்னைத் தேடித்தான் நான் வாழும் வீட்டிற்கு உங்கள் பெண் வந்திருக்கிறாள்.."
கருணாகரன் அதிர்ந்து நிமிர்ந்தார்..
"என்னது..? என் பெண் நீயிருக்கும் வீட்டிற்கு வந்தாளா..?"
"ஆமாம்.. இந்நேரம் வரை அங்குதான் இருந்தாள்.. திரும்பவும் சாயந்திரம் வந்துவிடுவதாக என்னவரிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்.."
"உன்னவர்..? ஓ.. உன்னுடன் ஓரே வீட்டில் வாழும் அந்த அயோக்கிய சிகாமணியா..? அவனிடம் எதற்கு என் பெண் சொல்லிக் கொண்டு போனாள்..?"
"என்னைக் கேட்டால்..? உங்கள் பெண்ணைக் கேளுங்கள்.. நான்தான் தாய் தகப்பனில்லாத அநாதை.. கூடப்பிறந்த பிறப்பை பறிகொடுத்த துரதிர்ஷ்டசாலி.. அதனால் அவரை நம்பிக் கெட்டேன்.. உங்கள் பெண்ணைத் தட்டிக் கேட்க பெற்றவர் நீங்கள் இல்லையா..? கூடப் பிறந்த அண்ணன் இல்லையா..? உங்கள் வீட்டுப் பெண்ணின் மேல் தண்ணீர் தெளித்து விட்டு விட்டீர்களா..?"
கருணாகரனுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது..
'இந்தப் பெண்ணிற்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னிடம் வந்து இப்படிப் பேசுவாள்..?'
"எழுந்திரும்மா.. அட எழுந்திருன்னு சொல் கிறேனில்ல.. யாரிடம் வந்து என்ன பேச்சுப் பேசுகிறாய்..? என் பெண்ணைப் பற்றி எனக்குத் தெரியும்.. நீ என்னிடமே வந்து அவளைப் பற்றி அபாண்டமாய் பேசுகிறாய்..? நீ சொல்லியெல்லாம்.. என் பெண்ணை நான் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.. முதலில் இடத்தைக் காலி பண்ணு.."
குணவதி கோபமாய் நகைத்தாள்..
"அதுதானே பார்த்தேன்.. உங்கள் சப்போர்ட் இல்லாமல் உங்கள் பெண் ஆடுவாளா..? கபிலனின் பணத்தில் மயங்கி அவரை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறாள் உங்கள் பெண்.. இதை நான் சும்மா விட மாட்டேன்.."
"என்ன பெயர் சொன்னாய் கபிலனா..?"
"ஆமாம்.."
"கபிலனா.. நீ சொல்லிய உன்னவர்..?"
"ஆமாம்.."
கருணாகரன் யோசனையோடு தாடையைத் தடவினார்.. கபிலன் மேல் மகளுக்கு இருந்த மதிப்பு அவருக்குத் தெரியும்..
'வானதிக்கு கபிலனின் மேல் நாட்டம் இருக்கிறதா..?'
கருணாகரன் மௌனத்தில் தைரியம் வரப் பெற்ற குணவதி எழுந்து நாடக பாணியில் அவர் முன் கை நீட்டி நின்றாள்..
"ஐயா.. உங்களை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன்.. உங்கள் பெண்ணிற்கு ஆயிரம் மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள்.. ஆனால் எனக்கு..? கபிலன்தான் என் வாழ்க்கை.. நான் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. தயவு செய்து என் வாழ்க்கையில் உங்கள் மகள் குறுக்கே வரவேண்டாம் என்று சொல்லுங்கள்.. எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுங்கள்.."
உள்ளே பலத்த பேச்சுக் குரல் கேட்டு எட்டிப் பார்த்த பாபு குணவதி பேசிய கடைசி வார்த்தைகளைக் கேட்டதும்.
"ஏம்மா.. பிச்சையெடுக்கத்தான் நீ டாக்டரைப் பார்க்கனும்னு உள்ள வந்தாயா..? நல்ல கதையாய் இருக்கே.. வெளியே போம்மா.." என்று சத்தம் போட்டான்.
"நீ நினைக்கிறது மாதிரி பிச்சை இல்லைப்பா இது.. வேறு மாதிரியான பிச்சை.." என்றாள் குணவதி அவசரமாக.
"பிச்சை எடுப்பதில் கூட மாடல் இருக்கிறதா.. வெளியே போம்மா.."
பாபு எகிற.. கருணகாகரன் 'வெளியே போ..' என்ற பாவனையில் கையை அசைத்தார்.. குணவதி தயங்கி நின்றாள்..
"ஐயா.. நான் சொன்னது.."
"என் மகள் யார் வாழ்க்கையையும் கெடுக்க மாட்டாள்.."
"எனக்கு இது போதும்ங்க.."
குணவதி சந்தோசமாக வெளியேறினாள்.. அன்று மாலை கபிலனும்.. கயல்விழியும் சீக்கிரமே வீடு வந்து விட்டனர்..
"அம்மா.. டிபன் பண்ணிட்டிங்களா..? என்ன டிபன்.." என்றவாறே சமையலறைக்கு வந்த கயல்விழி.. காலியாக இருந்த பாத்திரங்களைப் பார்த்து விட்டு,
"என்னங்கம்மா.. ஒன்றும் தயார் பண்ணவில்லையா..?" என்று ஆச்சர்யமாய் வினவினாள்..
"இல்லைங்கம்மா.."
"ஏன்..?"
"அது வந்து.. அது வந்து.." அன்னபூரணி தயங்க..
"அதை நான் சொல்கிறேன்.." என்றபடி குணவதி அங்கு வந்து நின்றாள்.
"நீ என்ன சொல்லப் போகிறாய்..?"
"வராத விருந்தாளிக்கு எதற்கு வீணாய் விருந்து சமைக்கிறாய் என்று நான்தான் அன்னபூரணியிடம் சொன்னேன்.."
"வராத விருந்தாளியா..?"
கயல்விழியின் பார்வை கபிலனின் மேல் விழுந்தது.. அவன் அவசரமாய் அவளருகே வந்தான்..
"அண்ணா.. இவள் என்ன தேவையில்லாமல் பேசுகிறாள்.."
"எல்லாம் தேவையோடுதான் பேசுகிறேன்.. இன்று உன் அண்ணி வரமாட்டாள்.. இன்று மட்டுமில்லை.. என்றுமே.."
"என்ன உளருகிறாய்..?"
"உளறல் இல்லை இது.. உண்மை.."
கபிலனின் விழிகள் யோசனைக்குப் போயின.. குணவதியை கூர்ந்து கவனித்தான்.. அவள் முகத்தில் வெற்றியின் சாயல் தென்பட்டது..
"என்ன உண்மையைக் கண்டு விட்டாய்..?" என்று கேட்டான்..
"கருணாகரன் அவரது மகளை கண்டித்து வைப்பார் என்ற உண்மையைக் கண்டு விட்டேன்.."

கபிலனின் முகம் மாறியது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பூவே மயங்காதே -27
பூவே மயங்காதே -27
https://1.bp.blogspot.com/-aeiCeZa4dzc/XTm8t6BR8nI/AAAAAAAAAq4/1TynPq6jzt4X2bzqWNq6_5lRNoppX5tsgCPcBGAYYCw/s320/poove%2Bmayangathe.jpg
https://1.bp.blogspot.com/-aeiCeZa4dzc/XTm8t6BR8nI/AAAAAAAAAq4/1TynPq6jzt4X2bzqWNq6_5lRNoppX5tsgCPcBGAYYCw/s72-c/poove%2Bmayangathe.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/poovemayangaathe-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/poovemayangaathe-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy