இது நீரோடு செல்கின்ற ஓடம் -56

56 காதலென்பது.. முள்ளான மனதிலும்.. பூப்பூக்க வைப்பது.. காதலர்களை உலகமே காதலிக்கும்தான்.. ஆனால் விக்ரம் காதலிப்பானா.. ? காதல் என்...

56
காதலென்பது.. முள்ளான மனதிலும்..
பூப்பூக்க வைப்பது..

காதலர்களை உலகமே காதலிக்கும்தான்.. ஆனால் விக்ரம் காதலிப்பானா..?
காதல் என்ற பெயரில் அவன் வாழ்வில் வந்த நீபா ஆடிய ஆட்டங்களைப் பார்த்தவனுக்கு காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே வெறி பிடித்து விடாதா..?
"இப்படியாப்பட்ட பொஞ்சாதி வாய்ச்சா கூறாம சன்யாசம் வாங்கிக் கிட்டு ஓடிப் போயிரனும் சாந்தா.."
"ஐய்யே.. இதை ஏன்ய்யா என்கிட்ட வந்து சொல்லுற..?"
"சும்மா.. ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்.. ஹி..ஹி.."
"இளிக்காதே... பல்லு சுளிக்கிக்க போகுது... பேச்சுக்கெல்லாம் பேசறத என் கிட்டப் பேசாதே.. நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்.."
"எந்த நேரத்திலும் நம்ம ஐயாவோட பொஞ்சாதியப் போல இருக்க மாட்ட சாந்தா.. அது நிச்சயமா எனக்குத் தெரியும்.."
சாந்தாவுடன் இப்படிப்பட்ட உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறான் திலகர்.. அவள் அந்த உரையாடலின் முடிவில் அவனைப் பார்த்து ரகசியச் சிரிப்பொன்றை சிந்தி விட்டுப் போயிருக்கிறாள்.. அவளை திலகர் மாதர் குல மாணிக்கமெனச் சொல்லிவிட்ட சந்தோசம் அவளுக்கு..
அவளுக்கு என்ன தெரியும்.. திலகர் அவளைப் பேயைப் போல இல்லையென்றுதான் சொன்னான்.. மாதர்குல மாணிக்கமென்று ஒருபோதும் சொல்லவில்லை..
அது புரியாமல் அவள் மகிழ்ந்து போய் விட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தவனுக்கு அந்த 'ஐயா' தான் இந்த 'ஐயா'வா என்ற ஐயம் மனதில் எழுந்தது..
மிருதுளா கையில் பிரம்பு இல்லாத குறையாக வருணை அதட்டிக் கொண்டிருந்தாள்..
"நேத்து ஈவனிங்கே என்ன சொன்னேன்..?"
"என்ன சொன்னீங்க மிஸ்..?"
"என்கிட்டயே கேக்கறியா..? உன்னை ஹோம் வொர்க்கை முடிச்சுட்டுத்தான் படுக்கனும்னு சொன்னேனா இல்லையா..?"
"யெஸ் மிஸ்.."
"ஏன் முடிக்கலை..?"
"முடிக்கலை மிஸ்.."
"அதைத்தான் நானும் கேக்கறேண்டா.. ஏன் முடிக்கலை..?"
"முடிக்கலை மிஸ்.."
அந்த வாழைப்பழ போராட்டத்தில் மிருதுளாவே ஓய்ந்து விட்டாள்..
"டேய்.. நிஜமாவே முடியலைடா.. கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுடா.." என்று வருணிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்..
அதைப் பார்த்தபடி பேப்பரில் உள்ள செய்திகளை மேய்ந்து கொண்டிருந்த சபாபதிக்கு சிரிப்பு வந்தது..
"என்னம்மா.. இந்த பொடியன் இந்த வயசிலயே உன்னை தலையாலே தண்ணி குடிக்க வைக்கிறான்..?"
"இவனா பொடியன்..? இவன் சரியான தடியன்ப்பா.. பாருங்களேன்.. நேத்து ஈவினிங்கே தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. ஹோம் வொர்க்கை முடிச்சிட்டுத்தான் தூங்கனும்னு இவன் தெனாவெட்டா படுத்து தூங்கிட்டு இப்ப வந்து என் தலையை கிறுகிறுக்க வைக்கிறான் பாருங்களேன்.."
மிருதுளாவின் கோபத்திற்கு யாதொரு பலனும் இருக்கவில்லை.. உமா பாலை ஆற்றியபடியே வந்து பிள்ளைகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.. வருண் அவள் மீது சாய்ந்து கைவிரல்களை விரித்து.. விரல் முனையில் தலையணையில் அழுந்தி வீக்கம் வந்து விட்டதாகவும்.. அதனால் ஏற்பட்ட வலியில் அவனால் வீட்டுப் பாடங்களை செய்ய முடியவில்லையென்றும்.. அதைப் புரிந்து கொள்ளாமல் மிருதுளா அவனைக் கோபித்துக் கொள்கிறாளென்றும்.. பாட்டியான உமாதான் அதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் விண்ணப்பித்தாள்..
"விடுடி.. பச்சப்புள்ள.." உமா உடனடியாக பரிந்துரை செய்தாள்..
"நான் விட்டிருவேன்.. இவங்கப்பா என்னை விடனுமே.." சலித்துக் கொண்டபடி வருணின் வீட்டுப் பாடங்கள் என்ன என்னவென்பதை கவனிக்க ஆரம்பித்தாள் மிருதுளா..
சபாபதி துணுக்குற்றார்.. அவர் கைகளில் இருந்த செய்தித்தாள் அவர் மடிக்கு இடம் பெயர்ந்தது.. தாடையைத் தடவியபடியே மிருதுளாவை யோசனையுடன் பார்த்தார்.. அந்த வார்த்தையை உமா அடிக்கடி பிரயோகிப்பதை அவர் கேட்டிருக்கிறார்..
"இவங்கப்பா கோவிச்சுக்குவார்.."
"இவங்கப்பா ஆர்டர் போட்டிருக்கார்.."
"இவங்கப்பா செல்லம்.."
"இவங்கப்பாதான் சொன்னார்.."
"இவங்கப்பா விடனுமே.."
இவங்கப்பா.. இவங்கப்பா.. என்று மிருதுளாவை கை காட்டி உமா சொல்வது சபாபதியை..
அப்படியிருக்க.. உமாவைப் போலவே வருணைக் காட்டி மிருதுளா உரிமையுடன் இவங்கப்பா என்று சொல்கிறாளே.. இதன் பொருள் என்ன..?
குழந்தைகளுக்கு பாலை ஆற்றிக் கொடுத்து குடிக்க வைத்துக் கொண்டிருந்த உமாவை பார்த்தார்.. அவரின் துணுக்குற்ற பார்வையை கண்டு கொண்டவள் புருவங்களை உயர்த்தி ஏனென்று சமிக்ஞை செய்தாள்..
மிருதுளா புத்தகங்களைப் புரட்டியபடியே வருணைப் பார்த்தாள்.. உமாவின் மீது சாய்ந்து செல்லம் கொஞ்சி கொண்டிருந்தவனின் விழிகளில் தெரிந்த பாசம்.. அவன் உமாவில் சுபாவைக் காண்பதை அவளுக்கு உணர்த்தி விட்டது..
'பாவம்..' அவள் மனம் இரக்கப் பட்டது..
வைசாலியால் சுபாவின் தாயன்பை மறக்க முடிந்திருக்கிறது.. ஒரு வயதுக் குழந்தைக்கு சுபாவின் தாயன்பை மறப்பது சுலபமான ஒன்றுதான்.. ஆனால் வருண்..? அவன் பிறந்ததும் தாயாக பார்த்தது சுபாவின் முகத்தையல்லவா.. பாட்டியின் கைகளிலும்.. மடியிலும் வளர்ந்தவனுக்கு உமாவை பார்த்தால் அவனுடைய பாட்டியின் நினைவு வருவது இயற்கைதானே..
வருணுக்கு உமாவிடம் பகிர்ந்து கொள்ள ஆயிரம் விவரங்கள் இருக்கும்.. பள்ளி விட்டு வந்தவுடன் அவன் உமாவைத்தான் தேடி வருவான்.. அவன் டிராயிங் வரைந்தது முதல்.. பி.யி.டி நேரத்தில் ஓடிப் பிடித்து விளையாடியது வரை அனைத்தையும் அவளிடம் ஒப்பித்து விடுவான்..
அதைப் பரிவுடன் கேட்கும் உமாவின் கண்களில் வாஞ்சை பொங்கும்..
வருண் உமாவிடம் அதிகமாக ஒட்டிக் கொள்வான்..
வைசாலி அப்படியல்ல.. அவள் மிருதுளாவைத்தான் தேடுவாள்.. பள்ளியில் முதன் முதலாக அவளைக் கண்டதும் குனிந்து தூக்கி அணைத்துக் கொண்ட மிருதுளாவிடம்தான் அவள் முதன் முதலாக தாயன்பை உணர்ந்தாள்..
சாந்தா அவளையும்.. வருணையும் கவனித்துக் கொள்கிறாள்தான்.. ஆனால் அவளிடம் ஒரு பரபரப்பு இருக்கும்.. குழந்தைகளிடம் உட்கார்ந்து பேசமாட்டாள்.. ஓடிக் கொண்டே இருப்பாள்..
எழுந்திரு.. குளி.. யூனிஃபார்ம போட்டுக்க.. சாப்பிடு.. அவ்வளவுதான்.. அவளின் காலை வேலை முடிந்தது..
மாலையில் பள்ளி விட்டு வருகிற குழந்தைகளிடம் அதே உத்தரவுகளைத்தான் பிறப்பிப்பாள்..
வந்துட்டியா.. யூனிஃபார்ம மாத்து.. குளி.. வேற டிரஸ் போட்டுக்க.. பாலைக்குடி.. அவ்வளவுதான்.. மாலை வேலை முடிந்தது என்று திலகரிடம் வாய் வளர்க்கப் போய் விடுவாள்..
இரவு வந்ததும் வருவாள்.. சாப்பிடு.. பாலைக்குடி.. தூங்கப் போ.. அவ்வளவுதான்.. இரவு வேலை முடிந்தது என்று குழந்தைகளை படுக்க வைத்து விட்டு அதே அறையில் இருக்கும் அவளின் கட்டிலில் படுத்து அவர்களுக்கு முன்னால் அவள் தூங்கி விடுவாள்..
சாந்தா செய்வது வேலை.. மிருதுளா காட்டுவது தாய்மை.. இரண்டுக்குமான வித்தியாசத்தை அந்தப் பூந்தளிர் கண்டு கொண்டதுதான் விந்தையிலும் விந்தை..
வைசாலிக்கு மிருதுளாவின் அருகாமை தேவைப் பட்டது.. டியுசன் படிக்க வரும்போது அவள் மெல்ல.. மெல்ல நகர்ந்து மிருதுளாவின் மடிமீது சாய்ந்து கொள்வாள்.. அதைக் கவனிக்காமல் தன்னிச்சையாக மிருதுளா அவளை மடியில் தூக்கிவைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுப்பாள்.. டியுசன் முடியும் வரை வைசாலியை மடியை விட்டு இறக்க மாட்டாள்..
முயல் குட்டியைப் போல அவளின் மடியில் ஒன்றிக் கொள்ளும் வைசாலி மிருதுளாவை நேசித்தாள்.. எந்த நேரமும் மிருதுளா அவளுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.. பள்ளி விட்டு வந்ததும் குடுகுடுவென தோட்ட வீட்டுக்கு ஓடி வந்து விடுவாள்..
"ஐய்யே..! இது என்ன வைசாலிக் குட்டி டிரஸ் சேன்ஜ் பண்ணிக்காம அப்படியே வந்திருக்கு..? சாந்தா உன்னைக் கவனிக்கலையா.. வா.. போயி அவ முதுகில நாலு போடு போடலாம்..."
மிருதுளா அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசுவதற்கு சம்மதமாக தலையை வேறு ஆட்டுவாள்..
"பாத்தீங்களாம்மா.. இந்தப் பாப்பா செய்றத..? பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே இங்க ஓடி வந்திருச்சும்மா.. இது பின்னாலேயே துரத்திக் கிட்டு நானு வந்தா இது என் முதுகில நாலு மொத்து மொத்த வழி வக சொல்லுது.."
வைசாலியின் பின்னாலேயே ஓடி வரும் சாந்தா அங்கலாய்ப்பாள்.. வாய்க்குள் கட்டை விரலை வைத்தபடி மிருதுளாவின் தோளில் தலைசாய்த்துக் கொள்ளும் வைசாலியின் தேடுதலில் மிருதுளாவின் தாய்மனம் பூரிக்கும்.. அவள் குனிந்து குழந்தையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவாள்..
"குட்டிப்பாப்பா.. ஸ்கூல் விட்டு வந்ததும் இங்கே ஓடியாந்திருச்சா.. போடா செல்லம்.. போயி குளிச்சு.. டிரஸ் மாத்திக்கிட்டு இங்கேவா.. நாம தூங்கறவரைக்கும் இங்கேயே இருக்கலாம்.. என்ன..?"
வைசாலி சமர்த்தாக தலையை ஆட்டுவாள்.. சாந்தா அதிசயித்துப் போவாள்..
"இந்தப் பாப்பா நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குதேம்மா.. என்ன சொக்குப் பொடிம்மா போட்டிருக்கீங்க..?"
'இவளுக்கு நான் சொக்குப்பொடி போடல.. இவங்கப் பாதான் எனக்கு சொக்குப் பொடி போட்டிருக்கார்..'
மிருதுளா சாந்தாவின் கேள்விக்கு மர்மப் புன்னகையை பதிலாகத் தருவாள்..
வருணும்.. வைசாலியும்.. காலையிலும்.. மாலையிலும்.. டியுசன் என்ற பெயரில் மிருதுளாவின் வீட்டில்தான் குடியிருந்தார்கள்..
அதில் சபாபதிக்கும்.. உமாவுக்கும் சந்தோசம்தான்.. உயர்ந்த பதவியும்.. குடியிருக்க வீடும்.. கனவிலும் நினைக்காத சம்பளத்தையும் கொடுக்கும் முதலாளியின் வீட்டுப் பிள்ளைகளை அரவணைப்பதை அவர்களின் பாக்கியமாகத்தான் அவர்கள் நினைத்தார்கள்.. அதிலும் அந்தக் குழந்தைகள் தாயில்லாத குழந்தைகள்.. மிருதுளாவிடம் டியுசன் படிப்பவர்கள்..
மூவராக இருந்த அந்தக் குடும்பம் ஐவராக மாறியதில் சபாபதிக்கு யாதொரு ஆட்சேபணையும் இல்லைதான்..
ஆனால் அந்த ஐவரோடு அறுவராக விக்ரம் அந்தக் குடும்பத்துக்குள் உள் நுழைவதை அவர் ஆட்சேபித்தார்..
"உமா.. ஸ்பெசலா எந்த அயிட்டம் சமைச்சாலும் குழந்தைகளை இங்கேயே சாப்பிட வைத்து அனுப்பி வை.. அவங்க வீட்டுக்கு குடுத்து விடுகிற வேலையெல்லாம் வேணாம்..."
"ஏங்க..? அதிகமாத்தான் செஞ்சிருக்கேன்.."
"அளவா செஞ்சு பழகு.. அவங்க வீட்டில இல்லாத வசதியா..? நினைச்சா.. நினைச்ச பலகாரத்த உடனே செய்து கொடுக்க அவங்க வீட்டில வேலையாளுக இருக்காங்க.. போதாக்குறைக்கு ஹோட்டல் இருக்கு.. நம்மளப் போல அவங்க இல்ல.. புரிஞ்சதா..?"
"அதில்லங்க.. பக்கத்திலே குடியிருக்கோம்.."
"அதனாலதான் சொல்றேன்.. பார்த்துத்தான் பழகனும்.. குழந்தைக நம்ம வீட்டுக்கு வந்தா.. வீட்டில இருக்கிறதைக் கொடுத்துச் சாப்பிட வை.. வேணாம்ன்னு சொல்லலை.. அதுக குழந்தைக.. அதிலயும் தாயில்லாக் குழந்தைக.. ஆனா.. அவங்க வீட்டில இருக்கிறவரு.. நம்ம முதலாளி.. குழந்தையில்ல.. வாட்ட சாட்டமான ஆம்பளை இருக்கிற வீட்டுக்கு பொண்ணப் பெத்த நாம பலகாரம் கொடுத்து அனுப்பக் கூடாது.. அவங்க வீட்டுக்குப் போறது வெறும் பலகாரமில்ல உமா.. அதை நாம நினப்பில வைச்சுக்கனும்.. குழந்தைக வந்து போகட்டும்.. நாம தள்ளி நிப்போம்.. அதான் நம்ம குடும்பத்துக்கும் நல்லது.. நம்ம பொண்ணுக்கும் நல்லது.."
சபாபதி சொல்வதில் உள்ள அர்த்தம் உமாவுக்குப் புரிந்தது.. அவள் அதை கடைபிடித்தாள்.. என்ன நாள் நட்சத்திரமாக இருந்தாலும் சாந்தாவையும் குழந்தைகளையும் தோட்ட வீட்டிற்கு வரச்சொல்லி பரிமாறுவாளே தவிர.. அவற்றைப் பாத்திரத்தில் போட்டு விக்ரமின் வீட்டுக்கு அவள் கொடுத்து அனுப்பியது இல்லை..
அதைப் போல.. சபாபதியின் முன்னிலையில் விக்ரமால் மிருதுளாவுடன் பேச முடிந்ததே இல்லை.. மறைந்து.. மறைந்து தோட்டத்தில் சந்தித்துக் கொண்டாலும்.. சில சமயங்களில் அவர்கள் சபாபதியின் பார்வையில் பட்டு விடுவார்கள்..
"மிருதுளா.."
உடனடியாக அந்த இடத்துக்கு வந்து விடுவார் சபாபதி.. மகளுடன் பேசிக் கொண்டிருப்பது அவளுடைய முதலாளி என்ற எண்ணமே அவருக்கு இருக்காது.. கடுமை போர்த்திய முகத்துடன் விக்ரமை அறிமுகமற்ற பார்வை பார்க்க அவரால் முடியும்.. அதைக் குறித்து பலமுறை மிருதுளாவிடம் வியந்து பேசியிருக்கிறான் விக்ரம்..
"எங்கே இருந்துடி இப்படி ஒரு மாமனார் வந்து எனக்கு வாய்ச்சாரு..?"
"ஏனாம்..? எங்க அப்பாவுக்கு என்ன குறையாம்..?"
"ஏண்டி.. அவருக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி நானு.. என்னையே 'யாரடா நீ'ன்னு பார்த்து வைக்கிறாரு.. உன் அப்பாவா போயிட்டாரு.. இல்லேன்னா நடக்கிறதே வேற.."
"ஹலோ..! என்ன..? என்கிட்டயே என் அப்பாவைப் பத்தி மிரட்டிப் பேசறிங்களா..? எங்க அப்பா யாரு தெரியுமா..?"
"யாரு..? மிஸ்டர் சபாபதிதான..?"
"சிங்கம்.."
"சிங்கம் ஒன்னா.. இல்ல சிங்கம் 'டூ' வா..?"
"கிண்டலா..? இப்படியெல்லாம் பேசினா அவர்தான் உங்ககூட டூ விட்டிருவாரு.. ஜாக்கிரதை..."
"நீயென்னடி அவருக்கு மேல மிரட்டற.. டாட்டர் ஆஃப் சிங்கம்ங்கிற தெனாவெட்டா..?"
"ஆமாங்க.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..?"
இப்படியெல்லாம் விக்ரமையும் மிருதுளாவையும் செல்லச் சண்டை போட்டுக் கொள்ள வைக்கும் சபாபதி.. விக்ரமின் விசயத்தில் மிருதுளாவுக்கு கொஞ்சம் கூட செல்லம் கொடுக்க மாட்டார்..
"இங்கே என்ன பண்ற..?"
"இல்லேப்பா.. சார் வந்து.. பிள்ளைகள் எப்படிப் படிக்கிறாங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாரு.."
"அதை ஸ்கூலில் கேட்கலாமே.. சார்தானே உங்க ஸ்கூல் கரெஸ்பாண்டென்ட்.."
"அங்கே சார் அதிகமா வர மாட்டாருப்பா.."
"ஓஹோ.. சார்.. உங்க பிள்ளைக அருமையான பிள்ளைக... நல்லாப் படிக்கிறாங்க.. இனிமே அவங்க படிப்பைப் பத்தி எது கேக்கிறதா இருந்தாலும் என்கிட்டக் கேளுங்க.. நான் சொல்றேன்.. நீ போம்மா.."
மிருதுளாவை வீட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு சபாபதி நிற்க..
'யோவ்.. உங்கிட்ட நான் என்னத்தய்யா பேச..?' என்று நொந்து போவான் விக்ரம்..
இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள முடியாதே.. மகளை அனுப்பி விட்டு நிற்கும் சபாபதியிடம் மரியாதைக்காவது நாலைந்து வார்த்தைகளைப் பேச வேண்டுமே..
"மனுசராடி உங்க அப்பா..? எதையாவது பேசனுமேன்னு நாட்டு நிலவரத்தைப் பத்தி இரண்டு வார்த்தை பேசினா.. மைக் இல்லாமலே ரம்பம் போட்டு என் காதில குருதிப் புனலக் கொட்ட வைச்சிட்டாரு.. உன்னைக் காதலிக்கிறதுக்காக நான் என்னவெல்லாம் இம்சைகளை அனுபவிக்க வேண்டியிருக்கு.."
மறுநாள் மிருதுளாவை பூங்காவில் சந்தித்த விக்ரம் பிடிபிடியென்று பிடித்து விட்டான்..
அப்படி சீனத்துப் பெருஞ்சுவராக விக்ரமுக்கும்.. மிருதுளாவுக்கும் இடையில் நிற்கும் சபாபதி.. வருணைப் பார்த்து உரிமையுடன் 'இவங்கப்பா..' என்று மிருதுளா சொல்வதை இயல்பாக எடுத்துக் கொள்வாரா என்ன..?
"இதென்ன பழக்கம் உமா..?"
"ஐயே.. இதுக்குத்தான் இந்த முழி முழிச்சுக்கிட்டு.. ரகசியம் பேச 'வா'ன்னு தோட்டத்துப் பக்கம் கூப்பிட்டுக் கிட்டு வந்தீங்களா..? ஏங்க.. வருணோட அப்பாவ.. இவங்கப்பான்னு சொல்லாம அவ வேற எப்படிச் சொல்லுவா..? இது ஒரு பேச்சுன்னு பேச வந்திட்டிங்க.."

உமா இலகுவாக சொல்லி விட்டுப் போய் விட்டாலும்.. சபாபதி அதை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.. அவர் நெஞ்சில் ஒரு நெருஞ்சிமுள் நிரடிக் கொண்டே இருந்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -56
இது நீரோடு செல்கின்ற ஓடம் -56
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/ithuneeroduselkinraodam56.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/ithuneeroduselkinraodam56.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy