எண்ணியிருந்தது ஈடேற -57

57 வெளிப்பார்வைக்குச் சிரிப்பும் , கலகலப்புமாக இருக்கும் நந்தினி மனதளவில் வெகு மென்மையானவள்.. மிருதுவான குணம் படைத்தவள்.. குழந்தையின் ...

57

வெளிப்பார்வைக்குச் சிரிப்பும், கலகலப்புமாக இருக்கும் நந்தினி மனதளவில் வெகு மென்மையானவள்.. மிருதுவான குணம் படைத்தவள்.. குழந்தையின் இயல்பைக் கொண்டவள்.. உணர்ச்சி பூர்வமானவள்.. சிறு துன்பத்திற்கும் மனதில் நோவை ஏற்கும் குணத்தைக் கொண்டவள்..
அவள் போன்ற குணாதிசியங்களைக் கொண்ட பெண்களைப் பார்ப்பது அரிது.. அதை.. நன்கு உணர்ந்திருந்தான் ரவிச்சந்திரன்.. கனவுப் பார்வையுடன் அவனைப் பார்த்த நந்தினியை கேள்வியாக பார்த்தவன்..
"உனக்கு பம்பாய் படம் பிடிக்குமா..?" என்று கேட்டான்..
"பிடிக்கும்.. அதைவிட 'உயிரே' ங்கிற பாட்டை ரொம்பப் பிடிக்கும்.. அதைப் பத்தி நினைச்சாக்கூட உருகிருவேன்.."
அதை அவள் மனதின் பலவீனம் என்று ரவிச்சந்திரனால் நினைக்க முடியவில்லை.. உணர்வு பூர்வமானவள் என்றுதான் நினைக்கத் தோன்றியது..
"சுல்தான் பத்தேரியில் இருக்கும் ஜைனர் கோவில் அழகா இருக்கும்.."
பேச்சை மாற்றுவதை அவள் உணராத வண்ணம் பேச்சை மாற்றினான்.. அவளும் கேரளத்தின் முக்கிய இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பேகல் போர்ட் கோட்டையை மறந்து விட்டாள்..
"ஓர்நாள் சுல்தான் பத்தேரியை சுத்திப் பார்க்க வரலாம்.. ஓங்கி உயர்ந்திருக்கும் பாறைகளுக்கு இடையில் ஒருவர் மட்டும் நடக்கும் அளவுக்கான குறுகிய இடைவெளியையெல்லாம் நீ பார்த்தா அசந்து போயிருவ.."
"உங்க கேரளத்தில எல்லா இடங்களும் அசந்து போகிற மாதிரிதான் இருக்கு.. வயநாடு இத்தனை அழகான இடமா இருக்கும்ன்னு நான் நினைத்தே பார்க்கலை.."
"எங்க வயநாட்டைக் 'கேரளாவின் கடவுளின் தோட்டம்'ன்னு சொல்லுவாங்க.."
"கரெக்டாத்தான் சொல்லியிருக்காங்க.."
பச்சைக் கம்பளம் விரித்ததைப் போன்ற கேரளத்தின் பசுமை நிறந்த அழகைக் கண்களால் அள்ளிப் படுகியபடி சொன்னாள் நந்தினி.. அவனுடைய ஊரை அவள் புகழ்ந்ததில் அவளை நட்புடன் பார்த்து வைத்த ரவிச்சந்திரன்..
"இது மலை பிரதேச மாவட்டம்.." என்றான்..
"ஓ.." இதழ் குவித்து அவனை ஈர்த்தாள் நந்தினி..
"சிரபுஞ்சிக்கு அடுத்ததா அதிகமா மழை கொட்டற இடம் வயநாடுதான்.." அவள் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றினான்..
"உத்ரா இதைப் பத்திச் சொல்லியிருக்கா.." கவலையானாள் நந்தினி..
"எதுக்கு இந்தக் கவலை..?"
"எனக்கு ஜலதோசம் பிடித்துக்கிட்டா சட்டுன்னு விட்டுத் தொலைக்காது.. விடாது கருப்புங்கிறதைப் போல பாடாப் படுத்தி எடுத்து விடும்.."
"கஷ்டம்தான்.. இங்கே வருசத்தில் ஆறுமாதங்கள் மழை பெய்துகிட்டே இருக்கும்.. ஜலதோசம் பிடிக்காம பார்த்துக்கனும்.. பிடித்தா விட்டு விலக சில பல மாதங்கள் கூட ஆகலாம்.."
"என்ன பாஸ்.. பயமுறுத்தறீங்க..?"
பயந்து போனாள் நந்தினி.. இவளையும் பயத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என ரசனையுடன் நினைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்... அச்சம் கூடச் சில பெண்களுக்கு அழகுதான்.. நந்தினி மருள விழிக்கும் போது அவளது அழகு பன்மடங்கு பெருகித் தெரிந்தது..
"இதுக்கெல்லாம் பயப்படறதை வெளியில் சொல்லிராதே.."
"ஏன் பாஸ்..?"
"சிரித்துருவாங்க.. கேரளாவுக்கு டூரிஸ்ட் வர்றவங்க இந்த கிளை மேட்டை ரசித்து என்ஜாய் பண்ணிட்டுப் போறாங்க.. நீ என்னடான்னா வராத ஜலதோசத்தை நினைத்து இந்த பயம் பயப்படற.. எப்பேற்பட்ட ஆள் எனக்கு வேலைக்கு கிடைச்சிருக்குன்னு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்னு உன் பிரண்டோட வுட் பி வினீத் கிட்டச் சொல்லியே ஆகனும்.."
நந்தினிக்கு வெட்கமாகி விட்டது.. அவள் உதட்டை மடித்துக் கடித்தபடி சாலையை வேடிக்கை பார்த்தாள்.. வயநாட்டின் இயற்கையழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.. மிதமான வெயில்.. முகத்தைத் தொட்டுப் போகும் குளிர் காற்று.. சுற்றிலும் பச்சைப் பசேல்ன்னு செடி கொடிகள்.. பனிப்புகை படர்ந்த மலை முகடுகள்..
என பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகோடு வயநாடு அவளை வரவேற்றது.. மெல்ல வயநாட்டின் அழகில் நந்தினியின் மனம் லயிக்க ஆரம்பித்தது.. இயற்கையை அதன்போக்கிலேயே விட்டு விடுவதுதான் அழகாக இருக்கும்.. வயநாட்டில் வசித்தவர்கள் அதை உணர்ந்தவர்களாக இருந்தார்கள்.. செடி கொடி புல்வெளிகளை அதன் போக்கிலேயே இடம் மாற்றாமல் வளர விட்டு அவற்றின் நடுவில் வீடுகளைக் கட்டிக் குடியிருந்தார்கள்..
தொலைவில் அரண்மனை போன்ற பங்களா ஒன்று தென்பட்டது.. வயநாட்டின் பசுமையான மரம் செடிகளுக்கு நடுவே சீனப் பெருச்சுவர் போல எழும்பி நின்ற அதன் காம்பவுண்டு சுவர் நந்தினியை பிரமிக்க வைத்தது.. மேட்டுப் பகுதியில் இருந்த அரண்மனைக்குப் போகும் மலைப்பாதை சரிவில் இருந்து பங்களாவை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது..
"அந்த அரண்மனை அழகாய் இருக்கில்ல.."  ரவிச்சந்திரனுக்கு அதைச் சுட்டிக் காட்டினாள்..
அவன் முகத்தில் ஏதோ ஒன்று வந்தது.. அது என்ன வென்று புரியாமல் 'இவன் ஒருத்தன்.. எதுக்கெடுத்தாலும் முகத்தை மர்மமாகவே வைத்துக்குவான்..' என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் நந்தினி..
"எதை வைத்து அதை அரண்மனைன்னு சொல்கிற..?"
"ஏன் பாஸ்..? இதுவே வயநாடு.. மலைப்பிரதேசம்.. அந்த அரண்மனை ஏற்றத்திலே இருக்கு.. இங்கேயிருந்து பார்த்தா உயரத்திலே வியுவெல்லாம் பிரமாதமா தெரியுது.. கோட்டை மதில் போல அதோட காம்பவுண்டு சுவர் சுத்தி வளைத்து நிற்கிறது அப்படியே டயாக்ரம் மாதிரி நம்ம கண் முன்னாலே தெரியுதே.."
"இதை வைத்து அதை அரண்மனைன்னு டிசைட் பண்ணிட்டியாக்கும்.. புத்திசாலிதான்.." சிலாகித்தான் ரவிச்சந்திரன்..
"உங்களுக்கு பொறாமை பாஸ்.." என்றாள் நந்தினி.
"எதை வைச்சு இந்த முடிவுக்கு வந்த..?"
"வேற எதை வைச்சு முடிவுக்கு வருவேனாம்..? கேரளாவிலேயே நீங்க பெரிய ஆள்ன்னா இந்த வயநாட்டில நம்பர் ஒன் பணக்காரரா நீங்கதானே இருப்பீங்க..
உங்க வீட்டைத்தான் அரண்மனை போல இருக்கும்ன்னு மத்தவங்க சொல்லனும்னு நினைப்பீங்க.. வேற ஒரு அரண்மனையை அரண்மனைன்னு சொன்னதை உங்களாலே தாங்கிக்க முடியலை.."
"நீ சொன்னதும்தான் தெரியுது.. அந்த அரண்மனை அழகுன்னு நீ சொன்னதைத் தாங்கிக்க முடியாம எனக்கு நெஞ்சுவலி வந்திருச்சுன்னு.."
அவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வலிப்பதைப் போல நடித்ததில் நந்தினிக்கு கோபம் வந்து விட்டது.. அது என்ன.. அவள் எதைச் சொன்னாலும் சின்னப் பப்பா சொன்னதைப் போல அவன் கேலி பண்ணுவது..?
'போடா' என்று உதட்டைச் சுழித்து விட்டு மேட்டுப் பகுதியில் தெரிந்த அந்த அரண்மனையைப் பார்த்தாள்.. அதன் அழகு அவளை மயக்கி ஈர்த்தது.. ''வென வாய் பிளந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதே கார் அந்த வீட்டை நெருங்கி விட்டது.. கோட்டைச் சுவரின் மையத்தில் அந்தச் சுவருக்கு இணையான உயரத்தில் அகன்ற பெரிய இரும்பு கேட் கரும் பச்சை வண்ணத்தில் பளபளத்தது.. கேட்டின் மேற்பகுதி குத்தூட்டிகளைப் போன்ற கூர்மையான முனைகளுடன் வடிவமைக்கப் பட்டிருந்தது.. அந்த ஈட்டி முனைகள் தங்க முலாமுடன் தகதகத்தன..
"என்னமா தகதகக்குது.. நிஜத் தங்கமாய் இருக்குமோ..?"
ரவிச்சந்திரனிடம் 'டூ' விட்டிருப்பதை மறந்து சந்தேகம் கேட்டாள் நந்தினி..
"இருந்தாலும் இருக்கலாம்.. யாருக்குத் தெரியும்..?" அவனைப் போலவே வியப்புடன் முகத்தை வைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"நீங்க இந்த ஊர்க்காரர்தானே.."
"எஸ்டேட்டே இருக்கு.. நீயென்ன இத்தனை சந்தேகமா கேட்கிற..?"
"உங்களுக்கு இந்த அரண்மனையைப் பற்றித் தெரியாதா..?"
"அடுத்த வீட்டைப் பத்தி நமக்கென்ன வந்தது..?"
அசுவராஸ்யமாக சூள் கொட்டினான் ரவிச்சந்திரன்.. அவனை வெட்டும் பார்வை பார்த்து நொடித்து நந்தினி..
"உங்களுக்கென்ன வந்ததுன்னு சொல்லுங்க.. என்னையும் உங்களுடன் கூட்டுச் சேர்த்துக்காதீங்க.." என்றாள்..
"அடேங்கப்பா.. உனக்கு வேலை கொடுத்திருக்கிற பாஸை விட இந்த வீடு உனக்கு அத்தனை உயர்வாக ஆகி விட்டதா..?"
"இல்லையா பின்னே..? இவ்வளவு பெரிய அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை நான் பார்த்ததே இல்லை தெரியுமா.."
"அப்படிங்கறே..?"
"ஆமாம்ங்கிறேன்.."
"நீ இத்தனை ஆசைப்படறதாலே ஒன்னு செய்யலாம்.."
"என்ன..?"
"பேசாமல் இந்த வீட்டுக்குள்ளே போய் எப்படித்தான் இந்த வீடு இருக்குன்னு சுற்றிப் பார்த்துட்டு வந்துரலாம்.."
"ஹை.. நிஜமாவா சொல்கிறீங்க..?"
"நிஜமேதான்.."
காரை அந்தக் கேட்டின் முன்னால் நிறுத்தி ஹாரனை அழுத்தினான் ரவிச்சந்திரன்.. கேட்டிற்குப் பக்கத்தில் காவலாளிக்கென கட்டப்பட்டிருந்த கூண்டு போன்ற கண்ணாடி ஜன்னல் கதவுகளைக் கொண்ட சிறிய அறையில் அமர்ந்திருந்த காவலாளி ஹாரன் சப்தத்தைக் கேடடதும் எட்டிப் பார்த்தான்.. ரவிச்சந்திரனின் காரைக் கண்டதும் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்..
"என்ன பாஸ்.. உங்க காரைப் பார்த்ததும் இந்த வீட்டின் செக்யூரிட்டி இப்படி ஓடி வர்றான்..?" நந்தினி வியந்தாள்..
"இப்பவாவது ஒப்புக்கறியா..? இந்த ஊரோட வி.ஜ.பி. நான்தான்னு.." ரவிச்சந்திரன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்..
நந்தினி உதட்டைப் பிதுக்கி வலது கையின் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து வளையமாக்கி பாராட்டினாள்..
"இதுக்கு நீ அட்மைர் பண்ணாம சும்மாவே இருந்திருக்கலாம்.." என்றான் ரவிச்சந்திரன்..
காவலாளி கேட்டைத் திறந்து விட்டான்.. நந்தினிக்கு அரண்மனையின் கோட்டைக் கதவுகள் திறந்ததைப் போல இருந்தது.. எங்கேயோ தொலைதூரத்தில்..
'ராஜாதிராஜ, ராஜ பராக்கிரம, ராஜ கம்பீர ரவிச்சந்திர சக்கரவர்த்தி வருகிறார்.. பராக்.. பராக்.. பராக்..' என்ற சப்தம் கேட்பதைப் போல இருந்தது..
'இவன் சக்கரவர்த்தின்னா கூட வருகிற நான் யார்..? இளவரசியா..?' நந்தினிக்குள் சுகமான கற்பனை எழுந்தது..
'தஞ்சையின் இளவரசி..' மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.. கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது... அதை ரவிச்சந்திரன் ஒப்புக் கொள்ள வேண்டுமே..
'இவனைக் கேட்டா இவனுக்கு நான் சேடிப் பெண்ணுன்னு சொல்வான்..'
ரவிச்சந்திரனை விரோதமாக பார்த்தாள்.. அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளது முறைப்பில்..
"இப்ப என்ன்ன்..ன..?" என்றான்..
"ஒன்றுமில்லை.." வாயை இறுக மூடிக் கொண்டாள் நந்தினி..
மனதில் இருப்பதைச் சொல்லி விட்டு அவனுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் யார் ஆளாவது..? அவனே அவளைக் கேலி செய்ய சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாரு, வாரு என வாரி விடுகிறானே..
'இவனுக்கு இத்தனூண்டு சான்ஸைக் கூடக் குடுத்து விடக் கூடாது.. யாரு இவன்..?'
அந்த இவன் தான் பெரிய கில்லாடி என்பதைப் போல அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தி இறக்கிக் கிறங்கடித்தான்..
'மன்மதன்..!' அவளுக்குள் மயக்கம் வந்தது..
கோட்டைச் சுவர் போன்ற காம்பவுண்டுக்கும் அரண்மனை போன்ற அந்த பங்களாவிற்கும் இடையே நீண்டிருந்த பாதையில் மெரூன் வண்ண சிமிண்டுக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.. பாதையின் இருபக்கமும் அணை கட்டியதைப் போல சிறிய அளவிலான தடுப்புச் சுவரிருக்க.. சுவருக்கு அப்பால் பாத்தி கட்டியது போல குரோட்டன்ஸ் செடிகளும் பூச்செடிகளும் வரிசை கட்டி நின்றிருந்தன.. செடிகளுக்கு இடையே சீரான இடைவெளியில் மெர்க்குரி விளக்குகளின் கம்பங்கள் தங்க நிறத்தில் தகதகத்தன..
"கேட்டிலும் தங்கம்.. இங்கேயும் தங்கமா..?" நந்தினி தெரியாத்தனமாக வாய் விட்டு விட...
"அறிவு ஜீவிதான்.. எங்கேயாவது விளக்குக் கம்பங்களை தங்கத்தில் செய்திருப்பாங்களா..?" என்று ஷொட்டு வைத்தான் ரவிச்சந்திரன்..
'இவனிடம் பல்ப் வாங்கறதே பொழைப்பாய் ஆகிருச்சு..'
மூக்கின் நுனியை தடவிக் கொண்ட நந்தினி இரவில் அந்த விளக்குகளின் பிரகாசத்தில் அந்தப் பாதையின் அழகு எப்பேற்பட்டதாக இருக்கும் என்று பார்த்து விட வேண்டும் என்று ஆர்வம் கொண்டாள்..
"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.."
"எதுக்கு இத்தனை ப்ளீஸ்..?"
"நைட்ல ஒரு டைம் இந்தப் பக்கமா வந்து போகலாமா..?"
"வயநாட்டில நைட்ல வெளியே வருவியா.. குளிரில உடம்பு விறைச்சுரும்.. உங்க தஞ்சாவூரைப் போலன்னு நினைத்தியா..?"
"ஸ்வெட்டர் போட்டுக் காருக்குள்ளேயே உட்கார்ந்துக்கலாமே.."
"இத்தனை மெனக்கெட்டு இங்கே எதுக்காக வரணும்னு நினைக்கிற..? வி.ஜ.பிங்கிறதுக்காக ஒரு தரம் வீட்டைச் சுற்றிப் பார்க்க வரலாம்.. இன்னொரு தரமும் வந்தா நல்லாவா இருக்கும்..?"
"நைட் டயத்தில இந்த லைட்டுகள் எரியறப்ப இந்த பாதை எப்படியிருக்கும்ன்னு பார்க்க ஆசையாய் இருக்கு.."
குழந்தையாக கெஞ்சியவளை அதே மர்மப் பார்வை பார்த்து வைத்தான் அவன்.. அவனிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வெகு நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த தோட்டத்தை ஆவலுடன் பார்த்தாள் நந்தினி..
அது தோட்டம் போலவே இல்லை.. வயநாட்டின் அழகிய பூங்காவைப் போலவே இருந்தது.. கொடிகளால் அமைக்கப்பட்டிருந்த வளைவுகளும், புல்வெளிகளின் ஓரமாக ஆங்காங்கே போடப்பட்டிருந்த வேலைப்பாடுகள் மிகுந்த சாய்வான மர பெஞ்சுகளும், பல வண்ண மலர்ச்செடிகளும் என்று தோட்டம் ஒரு அழகான ராஜகுமாரியைப் போலக் கண்களைச் சிமிட்டி அவளைக் கவர முயன்றது..
தோட்டத்திற்கு இந்தப் பக்கம் ஓங்கி வளர்ந்திருந்த செடிகளுக்கு மத்தியில் ஓவல் வடிவில் அமைந்திருந்த நீச்சல் குளத்தைச் சுற்றி விளக்குக் கம்பங்களும்
சாய்வான நாற்காலிகளும் காணப்பட்டன.. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் ரவிச்சந்திரனைக் கண்டதும்..

"எந்தா ரவிச்சந்திரா.. என்ட கொச்சு மோனே.. வரியோ.." என்றவாறு எழுந்து வந்தார்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -57
எண்ணியிருந்தது ஈடேற -57
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/enniyirunthathueedera57.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/enniyirunthathueedera57.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy