எண்ணியிருந்தது ஈடேற -53

53 மலைப் பாதைக்கே உரித்தான சில்லென்ற பூங்காற்று அவர்களின் முகங்களின் மீது முட்டி மோதித் தழுவியது.. எதிர் காற்றில் அவன்முடி அலை பாய்ந...

53


மலைப் பாதைக்கே உரித்தான சில்லென்ற பூங்காற்று அவர்களின் முகங்களின் மீது முட்டி மோதித் தழுவியது.. எதிர் காற்றில் அவன்முடி அலை பாய்ந்தது..
பேச முடியாத பேச்சுக்கள் தேவையில்லாத மௌனம் காருக்குள் நிலவியது.. நந்தினியின் மனம் நிரம்பியிருந்தது.. அது எதனால் என்று அவளுக்குத் தெரியவில்லை.. என்னை விட்டுப் போய் விடுவாயா என்று எதற்காக அவன் கேட்டான் என்று தெரியாவிட்டாலும் அந்தக் கேள்வியில் ஏதோ ஒரு வகையில் அவளது மனம் குளிர்வதை வியப்புடன் உணர்ந்தாள் நந்தினி..
அவன் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை.. அதை அவன் பொருட்படுத்தவும் இல்லை.. புரியாத புதிர் போன்ற பார்வையோடு அவளிடமிருந்து விடை பெற்றுத் தூங்கப் போய் விட்டான்..
அவளது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிப் படுக்கையில் விழுந்த நந்தினிக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது.. மனம் முழுவதும் திருப்தியுடன் எந்தவிதக் கவலையுமில்லாமல் நிச்சிந்தையாக உறங்கி விட்டாள்.. பதினொரு மணியளவில்..
"ஹேய்.. தூங்கு மூஞ்சி.. இப்பவாவது எழுந்துக்கப் போறியா.. இல்லை.. இன்னைக்கு முழுவதும் தூங்கப் போறியா..? வருசம் பிறந்திருக்கிற இந்த முதல்நாளில
நாள் முழுக்கத் தூங்கினா நல்லாத்தான் இருக்கும்.." என்ற ரவிச்சந்திரனின் குரல் செல்போனில் ஒலித்து அவளது தூக்கத்தை விரட்டி விட்டது..
"குட் மார்னிங்.." விழுந்தடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்..
"குட் ஆப்டர் நூன்னு சொல்கிற நேரம் நெருங்கிக்கிட்டு இருக்கு.. கமான்.. க்விக்.. பேக் அப்.."
"நானென்ன குதிரையா..?"
"ஹா.. ஹா.. ரேஸ் குதிரை மாதிரித்தான் நாம் ஓடியாகனும்.."
"எங்கே..?"
"வயநாட்டுக்கு.."
அங்குதான் அவனது எஸ்டேட் இருக்கிறது என்ற நினைவில் அவள் கையை உதறினாள்.. வயநாட்டு சேரளம் எஸ்டேட்டில் வேலை பார்க்கத்தான் அவள் வந்திருக்கிறாள் என்பதை எப்படி அவள் மறந்தாள்..?
"இப்பவே போயாகனுமா..?"
"குளித்து ரெடியாகி பிரேக் பாஸ்ட் சாப்பிட்ட பின்னாலே போகலாம்.. நீ ரூமை வெகேட் பண்ணத் தோதா உன் திங்ஸை பேக் பண்ணிரு.."
'இப்படின்னு தெரிந்திருந்தா டிரஸ்ஸையும் திங்ஸையும் பேக் பண்ணினதைப் போல அப்படியே இருக்கட்டும்ன்னு விட்டிருப்பேன்.. இப்ப ரெட்டை வேலை..'
மனதுக்குள் அலுத்துக் கொண்டபடி வெளியே..
"யெஸ் பாஸ்.." என்றாள் நந்தினி..
"பாஸ்..?"
கேள்வியுடன் போனை வைத்து விட்டான்.. அவள் திணறிப் போனாள்..
'நீ எனக்குப் பாஸ்தானே..?'
அப்படியே கண்மூடி அமர்ந்து விட்டாள்.. இரவில் ஆடிய நடனம் அவள் மனதில் ஆடியது.. அவனது பேச்சு, பார்வை, தொடுகை என்று அத்தனையும் மனதில் சுழன்று அவளை அலைக்கழித்தது.. புரியாத புதிரான அவனது பார்வையை நினைத்தபடியே உட்கார்ந்திருந்தவள் ஒரு பெருமூச்சுடன் எழுந்து சுவர் அலமாரியைத் திறந்தாள்.. காலிங் பெல் ஒலித்தது.. திறந்த அலமாரிக் கதவை மூடிவிட்டு அறையின் கதவைத் திறந்தாள்.. ஒரு கையில் காபிக் கோப்பையும் மறு கையில் சக்கரம் வைத்து நீண்ட இரும்புக் கைப்பிடியுடன் இருந்த பெட்டியுமாக ரூம் பாய் நின்றிருந்தான்..
"என்ன இது..?"
"பெட்டியானு.."
"யார் கொடுத்து விட்டது..?"
"சாரானு.."
அதற்கு மேலும் அவனை 'னு' போட விடாமல் பெட்டியை வாங்கிக் கொண்டாள்.. முதல்நாள் இரவில் லிப்டில் சேதாரமான அவளது லெதர் பேக்கிற்குப் பதிலாக புதிய பெட்டியை வாங்கி அனுப்பி வைத்திருக்கும் அவனது அக்கறையில் அவள் மனதில் தென்றலடித்தது..
'பார்த்துப் பார்த்துச் செய்யறான்..'
பெட்டியை வருடினாள்.. அவனையே வருடுவதைப் போல அவள் மனம் இதமானது.. அலமாரியைத் திறந்து துணிகளை பெட்டியில் அடுக்கினாள்.. பெரிய பெட்டியென்பதால் அவள் கொண்டு வந்திருந்த துணிகள் அதில் கால்வாசிதான் நிரம்பியது..
'போகுது போ..' உதட்டைச் சுழித்துத் தனக்குத் தானே அழகு காட்டி விட்டு குளிக்கப் போனாள்.. பச்சை வண்ணச் சுரிதாருக்கு மாறியவள் ஒப்பனைகளை முடித்தவுடன் டிரஸ்ஸிங் டேபிள் முதல்.. பாத்ரூம் வரை.. அவள் பரத்திப் போட்டிருந்த அனைத்துப் பொருள்களையும் சேகரித்து ஒரு பையில் போட்டு பெட்டிக்குள் போட்டு மூடினாள்..
'இது ரொம்பவும் கம்பர்டபிள்.. அத்தனையையும் ஒரே பெட்டியில் போட்டு மூடிரலாம்..'
ஹேண்ட்பேகுடன் ரோலர் சக்கரம் பதித்த பெட்டியின் கைபிடியை பிடித்து உருட்டியபடி அவள் கிளம்பிய போது ரூம் பாய் வந்து பெட்டியைக் கைப்பற்றி உருட்டிக் கொண்டு போனான்.. நந்தினி ஹாயாக ஹேண்ட் பேகை மட்டும் தோளில் மாட்டிக் கொண்டு கை வீசியபடி டைனிங் ஹாலுக்குப் போனாள்.. அங்கே காத்திருந்த ரவிச்சந்திரனின் ஆழ்ந்த பார்வையில் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.. முகம் சிவக்கத் தலை குனிந்தபடி அவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள்.. துளைக்கும் பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்..
'இப்படிப் பார்க்காதே..' தவித்துப் போனாள் நந்தினி..
அவளது விரல்களின் நடுக்கத்தில் லேசான புன்சிரிப்புடன் பார்வையை விலக்கிக் கொண்டு அவள் பக்கமாக உணவு வகைகளை நகர்த்தி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்..
'அப்பாடி..' என்று தோன்றிய போதும் அவளால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை..
நொடிக்கொரு முறை புதிர் போடும் பார்வையுடன் அவளைத் துளைப்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருப்பவனை முன்னால் வைத்துக் கொண்டு எப்படி இயல்பாக அவள் சாப்பிடுவாள்..?
சங்கடத்துடன் உணவைக் கொறித்தவளிடம் வெகு அக்கறையாக..
"பசிக்கலையா..? ஃபுட் அப்படியே இருக்கே..?" என்று விசாரித்தான்..
'நீ சாப்பிட விட்டால்தானே..' நந்தினி பெருமூச்சு விட்டாள்..
"வாட் ஹேப்பன்..? எனி திங் ராங்..?" அதற்கும் கேள்வி வந்தது..
'என்ன ஆச்சா..? நீ பார்க்கிற பார்வையிலே எனக்கு என்னென்னவோ ஆகித் தொலைக்குதுடா.. நீ ரைட் பெர்சனா இல்லை ராங் பெர்சனான்னு முடிவெடுக்க முடியாம தலை முடியைப் பிய்த்துக்கலாம் போல இருக்கு..'
அதை அவனிடம் சொல்லியிருந்தால்..
'ஆல்ரெடி உன்முடி பிய்ந்துதான் தொங்குது..' என்று சொல்லியிருப்பான்..
அந்த லட்சணத்தில் அவள் தலையை வாரிப் பின்னல் போட்டிருந்தாள்.. முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டபடி திருட்டுப் பூனை போல அவனை கள்ளப் பார்வை பார்த்தாள்..
அவனைப் பார்ப்பதும்.. அவன் பார்த்து விட்டால் பதறிப் போய் உணவைப் பார்ப்பதுமாக இருந்தவளின் சேட்டையைத் தாங்க முடியாமல் அவன் அவள் தலையில் ஒரு கொட்டை வைத்து..
"சைட்டைக் கூட ஒழுங்காய் அடிக்கத் தெரியலை.. வாய் மட்டும் இந்தியாவைத் தாண்டி எல்லா நாட்டுக்கும் கேட்கிறதைப் போல கிழியுது.." என்றான்..
"யார் யாரை சைட் அடித்தது..?"
"நீ என்னை சைட் அடித்த.."
"இல்லை.."
"இல்லையா..? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லு.."
அவன் சவால்விட்டான்.. அவனது அறை கூவலை ஏற்று அவன் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ரோசத்துடன் நந்தினி விழிகளை உயர்த்தத்தான் செய்தாள்.. அவன் விழிகளைச் சந்தித்ததும் ஜிவ்வென்ற மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானவள் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவி பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்..
"என்ன்ன்...ன..? முடியலையா..?" அவன் குரலில் வெற்றிக் களிப்பிருந்தது..
"இப்படி மிரட்டினீங்கன்னா நான் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸைப் பிடித்து சென்னைக்கு ஓடிருவேன்.." தாள முடியாமல் அவள் எகிறினாள்..
"ஓடறதிலேயே குறியாய் இரு.." அவன் முகம் கடினமானது..
நந்தினி உதட்டைக் கடித்துக் கொண்டாள்... முதல்நாள் இரவில் அவள் சென்னைக்கு கிளம்ப முயன்றதை அவன் விரும்பவில்லையென்பதில் ஒரு பக்கம் சந்தோசமாகவும் மறுபக்கம் குற்றவுணர்வாகவும் இருந்தது..
'இவன்தானே நான் கிளம்பிப் போயிடலாம்ன்னு நினைக்கிற அளவுக்குத் திட்டினான்.. கிளம்பினா மட்டும் கோவிச்சுக்கிறான்..' அவளுக்குத் துயரமாக இருந்தது..
சிறு குழந்தை போல அழுதவளை அணைத்து அவன் சமாதானப் படுத்தியதை நினைத்துக் கொண்டவளுக்கு..
'அடிக்கிற கைதான் அணைக்கும்..' என்ற பாட்டி சொன்ன பழமொழி நினைவுக்கு வந்து அரட்டியது..
'எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறேன்.. இவன் என் பாஸ்.. நான் இவனிடம் வேலை பார்க்க வந்தவள்..'
நெட்டுரு போல மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.. ஹோட்டலை விட்டுக் கிளம்பும் போது அண்ணாந்து அந்த பலமாடிக் கட்டிடத்தைப் பார்த்தாள்.. அதனுள் நிரம்பியிருந்த நினைவலைகளில் இருந்து மீளவே முடியாது போலத் தோன்றியது.. இருந்திருந்து ஒரு ஹோட்டல்.. ஒரு வாரம் அங்கே தங்கியிருக்கிறாள்.. அதைத் தவிர்த்து அதற்கும் நந்தினிக்கும் இடையே யாதொரு பந்தமுமில்லை.. இருந்தும் ஏன் புதிரான ஒரு சோகம் அவள் மனதைப் பிழிந்து கசக்குகிறது..?
கனத்த மனதுடன் காரில் ஏறியவளைப் பார்த்த ரவிச்சந்திரனின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்றில் நந்தினியின் மனம் அசைந்தது.. இதுபோன்ற ஏதோ ஒன்றினால் ஏற்படும் 'ஓர் இது' புதிதான புதிராக இப்போதுதான் அச்சுறுத்துகிறது.. இதற்கு முன்னர்
இது போன்ற புதிர் உணர்வுகள் நந்தினியின் மனதை ஆக்ரமித்ததே இல்லை..
சென்னையில் படித்துக் கொண்டிருந்தவரை நிம்மதியாக இருந்தாள்.. நந்தினியின் அழகிலும், மேகநாதனின் வசதியிலும் ஈர்க்கப்பட்ட முறை மாப்பிள்ளைகளை வைத்திருக்கும் உறவினர்கள் நந்தினியைப் பெண் கேட்டு மேகநாதனின் வீட்டை முற்றுகையிட்டபோது.. சென்னையில் அவள் படித்துக் கொண்டிருந்த படிப்புத்தான் அவளைக் காப்பாற்றியது..
"பொண்ணு படிச்சுக்கிட்டு இருக்கு.. படிப்பு முடியட்டும்.."
மந்திர உச்சாடனம் போல இந்த வார்த்தைகளை ஒப்பித்து முறை மாப்பிள்ளைகளை வைத்திருக்கும் உறவினர்களை காத்திருப்புக் கணக்கில் வைத்தார் மேகநாதன்..
"வெயிட்டிங் லிஸ்டோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.. போகிற போக்கைப் பார்த்தா உனக்கு சுயம் வரத்தை அனௌன்ஸ் பண்ணி நடத்த வேணும் போல இருக்கு.. உன் கூடத்தான் நானும் பிறந்திருக்கேன்.. எனக்குப் பெண் கொடுக்கறேன்னு எவனாவது வர்றானான்னு பாரு.." நந்தகுமார் ஏகத்துக்கும் பொறாமைப் படுவான்..
அப்படியொரு சுயம்வரம் நடக்கவேயில்லையே.. அவளுக்குப் பிடித்த மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் உரிமை அவளுக்கு மறுக்கப்பட்டு விட்டதே.. எவனோ ஒரு பெல்ட் மன்னனை, அவள் கண்ணில் கூடக் காட்டாமல் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து விட்டார்களே..
"நீயெல்லாம் சீரியஸா திங் பண்ண ஆரம்பிச்சுட்டா இந்த உலகம் என்னத்துக்கு ஆகிறது..?"
ரவிச்சந்திரனின் கிண்டலில் சிந்தனை கலைந்தவளாக அவனைப் பார்த்தாள் நந்தினி.. அவள் பார்வையை கவ்வியது அவன் பார்வை.. புரிபடாத உணர்வுகளுக்குள் மூழ்கடிக்கும் அப்பார்வையிலே இருந்த தூண்டிலில் மாட்டிக் கொள்ளாமல் பார்வையை விலக்கிக் கொண்டாள் நந்தினி.. அவள் மனம் படபடத்தது..
வளைந்து நெளிந்து சென்ற மலைப்பாதை பச்சைப் பசேலென்ற செடி கொடிகளின் நடுவே அவர்களை அழைத்துச் சென்றது.. நந்தினியின் மனதில் ரம்யம் நிம்பியது.. பசுமையின் சூழலில் லயித்த அவள் மனதில் பாரம் கொஞ்சம் இறங்கியதைப் போல இருந்தது..
விழிகளில் சன்னமான சோகத்தோடு கதவோரமாக தலையைச் சரித்து சாய்ந்து கேரளத்தின் இயற்கையழகில் லயித்திருப்பவளைப் பார்த்தபடி மலைப்பாதையில் அவன் காரை ஓட்டியதில் அவள் கிளர்ச்சியடைந்தாள்.. அவனிடம் இயல்பாக பேசிவிட்டால் மனதில் உள்ள குறுகுறுப்பு மறைந்து விடுமோ என்ற எண்ணத்தில்..
"இது மலைப்பாதை சாரே.. ஒருகையில் காரை ஓட்டி வித்தை காண்பிக்க இது ஒன்னும் சர்க்கஸ் இல்லா.. மனசிலாயி..?" என்றாள்..
அவன் அப்போது காரில் ஏதாவது பாடலை ஒலிக்க விடும் எண்ணத்தில் ஒரு கையால் காரை ஓட்டியபடி மறுகையால் டேஷ் போர்டை திறந்து சி.டிக்களை புரட்டிக் கொண்டிருந்தான்.. அவளது சீண்டலில் விழிகளை உயர்த்தி அவளை குறுகுறுவெனப் பார்த்து வைத்தான்.. வெட்கத்தில் சிவந்த முகத்துடன் லஜ்ஜை மிகுந்தவளாக உதட்டை மடித்துக் கடித்தாள்..
அவன் வேண்டுமென்றே காரை ஒடித்து வளைத்து குலுங்க வைக்க.. அலறியடித்துக் கொண்டு அவன் மேல் பசை போடாமல் ஒட்டிக் கொண்டாள்..
உராய்ந்த உடல்களில் உணர்வுகளின் தீ பற்றிக் கொண்டது.. நந்தினியின் மனதில் முதல் நாள் இரவின் நினைவுகள் மையம் கொண்டன.. தவிப்புடன் விலகிக் கொண்டவள்..
"எந்தா சாரே.. கார் ஓட்டத் தெரியுமில்லா..?" என்று கேட்டு வைத்தாள்..
"ஏய் அரட்டை.. வாயை மூடிக்கிட்டு வா.. இல்லேன்னா மலைப்பாதையில் உருட்டி விட்டிருவேன்.."
அவன் மறுபடியும் காரை ஒடித்து வளைத்துக் குலுங்க வைக்க அவள் கண்களை இறுக மூடி சீட்டில் குப்புற விழுந்து விட்டாள்..
"வெறும் வாய்தான்.."

கேலி போல அவன் பார்த்த பார்வையில் அவள் நெஞ்சம் தட்டுத் தடுமாறியது.. புரிபடாத உணர்வுகளை அவளுக்குள் விதைத்த அவன் பார்வையுடன் அவள் பார்வை பிணைந்து இறுகி மருகியது.. இது என்ன புது பந்தம் என்று அவள் மனம் திகைத்து மருண்டது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -53
எண்ணியிருந்தது ஈடேற -53
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/enniyirunthathueedera53.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/08/enniyirunthathueedera53.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy