உயிரே உனைத்தேடி -10

10 ' இன்று விருந்தில் ஆர்த்தி பாடிய பாடலின் ஏதோ அர்த்தம் பொதிந்துள்ளதை நான் உணர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஓர் ரகசிய வலையை எ...

10
'இன்று விருந்தில் ஆர்த்தி பாடிய பாடலின் ஏதோ அர்த்தம் பொதிந்துள்ளதை நான் உணர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஓர் ரகசிய வலையை என்னையும் அவளையும் சுற்றி அவள் பின்னிக் கொண்டு இருக்கிறாள் என்பது எனக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. அவளது மர்மமான பார்வைகளுக்கும் புன் முறுவல் களுக்கும் பின்னணி என்ன..? 'என் பார்வை உனக்கு ரகசியமா..?' என்று பாடுகிறாள் என்றால் என் ஐயத்தை அவள் அறிந்து வைத்திருக்கிறாள்.. ஆனால் ஒன்றே ஒன்றுதான் எனக்குள் இடறுகிறது. அவள் காதலாய் பார்க்கவில்லை. செய்கைகளால் காதலை உணர்த்தவும் இல்லை. பின் ஏன் 'உன் வானத்திற்கு நானொரு நிலவில்லையா..?' என்று கேட்கிறாள்.. 'உன் வாசல் தேடி வரவில்லையா..?' என்றும் வினவுகிறாள். சென்னையைச் சேர்ந்தவள் பெங்களூருக்கு வந்தது வேலையின் நிமித்தமா..? இல்லை என்னைச் சந்திக்கும் நிமித்தமா..? வினாக்களை எழுப்பி விட்டாள் அவள். விடைகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்..!'
கிரிதரன் டைரியில் எழுதியவற்றை மீண்டும் மீண்டும் படித்தான். ஒரு வழியாய் படுத்து கண் மூடித் தூங்கி விட்டான்.
காலையில் காபியுடன் வந்து உமா கதவைத் தட்டு தட்டு என்று வெகு நேரம் தட்ட ஒரு வழியாய் தூக்கம் கலைந்து எழுந்து கதவைத் திறந்தான் கிரிதரன்.
"என்னடா கிரி.. இவ்வளவு நேரமா கதவைத் திறக்க..? அடித்துப் போட்டது போல் அப்படி என்ன தூக்கம் தூங்குகிறாய்..?" கடிந்து கொண்ட உமா கட்டிலின் மேல் விரிந்து கிடந்த அவனது டைரியை எடுத்துப் பார்த்தாள்.
"விடிய விடிய புத்தகம் படித்தால் ஏற்றுக் கொள்ளலாம். டைரியைப் படித்தால் என்னன்னு சொல்வது..? அதுவும் நீ எழுதிய டைரியை நீயே விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாயா..?"
"அதில் என்ன எழுதியிருக்கிறேன்னு படித்து விட்டுச் சொல்லுங்கள் அம்மா.. கேட்டுக் கொள்கிறேன்.."
"போடா.. உன் டைரியை நான் படிப்பதா..?"
"ஏன் படித்தால் என்ன..? நான் உங்கள் மகன்தானே.."
"பெற்ற மகனாக இருந்தாலும் உன் டைரியை நான் படிக்கக் கூடாது.."
"ஏம்மா.. நீங்க வேறு.. நானிருக்கும் நிலைமை தெரியாமல் நியாயம் பேசிக்கிட்டு இருக்கீங்க.."
அப்போதுதான் மகனின் முகத்தைப் பார்த்தாள் உமா மகேஸ்வரி. தூக்கமில்லாத கண்கள் சிவந்திருந்தன இமைகள் வீங்கி தலை கலைந்து பார்க்கச் சகிக்காத கோலத்தில் இருந்தான் கிரிதரன்.
"என்னடா கிரி.. இப்படி இருக்கிற... இன்றைக்கு என்னடா ஆச்சு..?"
"நீங்கள் அந்த டைரியில் நேற்று எழுதியிருப்பதை மட்டுமாவது படித்துப் பாருங்கள் புரியும்.."
"சரி.. நான் படிக்கிறேன்.. நீ முதலில் காபியைக் குடி."
மகன் காபியை அருந்திக் கொண்டிருக்க முதல் நாளிரவு அவன் எழுதியிருந்ததைப் படித்து முடித்த உமா மகேஸ்வரி யோசனையுடன் மகனைப் பார்த்தாள்.
"கிரி.. நன்றாக நினைவு படுத்திக் கூறு... நீ காலேஜ் டேஸில் யாரையாவது காதலித்தாயா.. அம்மா சந்தேகப் பட்டுக் கேட்கவில்லையடா.. புரிந்து கொள்.."
"இல்லைம்மா.. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் உங்களிடம் சொல்லி இருக்க மாட்டேனா...?"
"உன்னை யாராவது ஒரு தலையாய் காதலித்தார்களா..?"
"ம்ம்.. என்னிடம் காதல் சொன்னவர்களை மறுத்திருக்கிறேன். அவர்கள் யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நாகரிகமாய் விலகிப் போய் விட்டார்கள்.. இப்போது ஆபிஸில் ரிஷப்சனிஸ்ட் சரளா கொஞ்சம் உருகுவது போல் உணர்கிறேன். அதனாலேயே அவளிடம் நின்று கூட பேசமாட்டேன்.."
"ஏன் நின்று பேசி உன் மனதைப் புரிய வைக்கலாமே."
"நானாகப் போய் ஏன் அதைச் சொல்ல வேண்டும் அம்மா..? அவள் சொல்லும் போது பதில் சொன்னால் போகிறது."
"அதை விடு.. இப்போது இந்தப் பெண் ஆர்த்தியின் கதைக்கு வருவோம்.. அவள் உன்னைத் தேடித்தான் இத்ந ஊருக்கு வந்திருக்கிறாள் என்று எனக்கும் தோன்றுகிறது.."
"அப்படியா சொல்கிறீங்க அம்மா.. நிச்சயமாய் சொல்கிறீங்களா..?"
"ஆமாம் கிரி.. அவள் முதன் முதலாய் பாடிய பாடலில் என்ன கூறினாள். நினைவிருக்கிறதா..?"
"ம்ம்.. அன்று சென்றதும் மறந்தாய் உறவை.. இன்று வந்ததே புதிய பறவையென்று பாடினாள்."
"பாடுவதற்கு முன்னால் உன்னிடம் 'என்னை புதிய பறவையென்று கூறுகிறீர்கள்' என்று சொல்லியிருக்கிறாள்.."
"ஆமாம் அம்மா..."
"அதாவது அவள்தான் புதிய பறவையென்று உன் மனதில் பதிய வைத்திருக்கிறாள். அதன்பின் பாடலையும் பாடியிருக்கிறாள்."
"அப்படியேதான் அம்மா.."
"இப்போது 'உன் வாசல் தேடி வரவில்லையா' யென்று பாடியிருக்கிறாள்.. ஸோ... இவள் உன்னை நன்கு அறிந்தவள். உன்னைத் தேடியே பெங்களூருக்கு வந்திருக்கிறாள். இதில் சந்தேகமே இல்லை.."
"ஆனால் எனக்கு அவள் யாரென்று தெரியவில்லையே.."
"அந்தக் கோபத்தில்தான் அவள் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'யென்றும் பாடியிருக்கிறாள்."
"எனக்கு அவளைப் பார்த்த ஞாபகமே இல்லையே அம்மா.."
"நிச்சயம் நீ அவளைப் பார்த்திருக்கிறாய்.."
"என்னங்கம்மா இது.. நான் அறியாமலா அவளைப் பார்த்திருப்பேன்..?"
"ஆமாம் கிரி.. நீ அறியாமலே பார்த்திருப்பாய்.. ஒன்று செய்.."
"என்னம்மா..?"
"அவள் சர்வீஸ் பைலில் அவளது பயோ டேட்டாவை பதிவு பண்ணி வைத்திருப்பீர்கள்தானே.."
"ஆமாம்..."
"இன்றைக்கு ஆபிஸ் போனதும் முதல் வேலையாய் அவளது பயோ டேட்டாவை ஆராய்ந்து பார்.. ஏதாவது விடை கிடைக்கும்.."
"சர்வீஸ் பைலைப் பார்க்காமலே எனக்கு அவளது பயோடேட்டா தெரியுமே.. சென்னை வாசி.. பி.ஈ.சிவில்.."
"பொறுடா.. நான் அவள் படிப்பையும் ஊரையும் கேட்கவில்லை.. அவளுடைய பெற்றவர்களின் பெயரையும் ஊரையும் கேட்டேன்.."
"அதைப் பார்த்தால் என்ன தெரியும்..?"
"அவளது வேர் எதுவென்று தெரியும். விடையும் நமக்குக் கிடைக்கும்.."
சிந்தனையுடன் கூறினாள் உமாமகேஸ்வரி. அவள் முகத்தில் பலவித உணர்ச்சிகளின் கலவை தெரிந்தது.
"நீங்கள் எதையோ யூகிக்கிறீர்கள் போல இருக்கிறதே.."
"ஆமாம் கிரி... ஆனால் என் யூகம் நிச்சயமாகும் வரை நான் வெளியில் சொல்ல முடியாது.. நான் யூகிப்பதுதான் உண்மையென்றால் இவள் அவளாகத்தான் இருக்க வேண்டும்.."
"எவளாக இருக்க வேண்டும்...?"
"நிச்சயமாய் எனக்குத் தெரிந்த பின்னால் அதைக் கூறுகிறேனே.. இப்போது குளித்துவிட்டுக் கீழே வா.. நான் போய் டிபனை ரெடி பண்ணுகிறேன்.."
உமாமகேஸ்வரி கீழே இறங்கிச் சென்று விட்டாள்.. கிரிதரன் ஆச்சரியத்துடன் தாய் சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மனம் லேசாகி இருந்தது.. சிக்கலான கணக்கிற்கு விடை கண்டுபிடிக்க ஃபார்முலாவைத் தெரிந்து கொண்டது போல் உணர்ந்தான். ஓர் துப்பறியும் வேலையைச் செய்யப் போகும் உற்சாகத்தோடு குளித்து விட்டு வந்தான். உடை மாற்றிக் கீழே உணவு உண்ண வரும்போது சன்னமாய் விசில் கூட அடித்தான்.
"என்னடா இன்றைக்கு விசில் தூள் பறக்குது.. நேற்று விருந்து நல்ல மஜாவாக இருந்ததோ..." செல்வநாயகம் மகனிடம் கேட்டார்..
"அதையேன் கேட்கறீங்க அப்பா.. வழக்கத்தைவிட இப்ப களை கட்டுதில்ல.. அடித்துக் தூள் பரப்பிக் கொண்டி ருக்கிறோம் தெரியுமா..?" பெருமையடித்துக் கொண்டே தட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் கிரிதரன்.
"அம்மா இன்னைக்கு என்ன டிபன்..?"
"இது என்னடா புதுக்கேள்வி. முதல் நாள் ஹெவியாய் சாப்பிட்டால் மறுநாள் டிபன் இட்லிதான் செய்வாள் உன் அம்மா.. உடம்பில் சேர்ந்த எண்ணெயையும் கொழுப் பையும் ஈக்குவல் பண்ண வேண்டும் என்பாளே.. ம்ஹூம்... எல்லாவற்றையும் ஈக்குவல் பண்ண மாட்டேன் என்கிறாள்.." பெருமூச்சு விட்டார் செல்வநாயகம்..
உமாமகேஸ்வரி கணவரை நிமிர்ந்து எரிக்கும் பார்வை  பார்த்தாள். 'பிள்ளையின் முன்னால் என்ன பேசுவது என்ற விவஸ்தை இல்லையா..?' என்பதே அந்தப் பார்வையின் அர்த்தம்.
செல்வநாயகத்திற்கு மட்டும் அது தெரியாதா என்ன? எக்குத் தப்பாய் இப்படிப் பேசி வைத்தால் தானே எரிப்பது போலவாவது ஒரு பார்வை பார்ப்பாள்.. என்பதால் அடிக்கடி இப்படிப் பேசி வைப்பார்..
இந்தச் சாதுர்யத்தை அறிந்திருந்த கிரிதரன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அப்பாவின் காதல் வேலைகளைக் கண்டும் காணாதவன் போல் சாப்பிட்டு முடித்துக் கிளம்பினான்.
"கிரி.. உன்னுடைய லன்ச் கேரியர்..." என்றபடி வந்து மதிய உணவு அடங்கிய செல்லோ கேரியரைக் கொடுத்த உமாமகேஸ்வரி கணவனுக்கு கேட்காமல் தாழ்ந்த குரலில்.
"மறந்து விடாதே.. ஆபிஸ் போனதும் முதல் வேலையாய் அவளது சர்வீஸ் பைலைப் பார்.." என்று மகனிடம் நினைவு படுத்தினாள்.
"கண்டிப்பாய்... ஆபிஸ் போனவுடன் அதுதான் என் முதல் வேலை அம்மா.."
மகனுக்கு கை ஆட்டிவிட்டு உள்ளே வந்த உமா மகேஸ்வரி சமையலறைப் பக்கம் செல்லத் திரும்ப செல்வநாயகம் மனைவியைப் பார்த்தபடி,
"மகனிடம் ரகசியம் பேசுகிறார்கள்.. என்னிடம் பேச மாட்டேன் என்கிறார்கள்.. பேச்சுத் துணைக்குக் கூட ஓர் துணை வரமாட்டேன் என்றால் என்ன நியாயம்..?" என்று வம்புக்கு இழுத்தார்.

யாரோ யாரிடமோ பேசுவது போன்ற பாவனையுடன் அதைத் காதில் வாங்கிக் கொள்ளாமல் கணவனைக் கடந்து சென்றாள் உமாமகேஸ்வரி. செல்வநாயகம் விட்ட பெருமூச்சில் அவர் எதிரே இருந்த கிண்ணத்திலிருந்த ஆறிய சாம்பார் சூடாகிக் கொதித்தது.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -10
உயிரே உனைத்தேடி -10
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaththedi10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaththedi10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy