உயிரே உனைத்தேடி -5

5 கிரிதரனுக்கு தலையைவலிப்பது போல் இருந்தது. இன்டர்காமை எடுத்து அழைத்தான்.. "யெஸ் சார்.." என்றது மறுமுனையில் ஷீலாவின் குரல்...

5

கிரிதரனுக்கு தலையைவலிப்பது போல் இருந்தது. இன்டர்காமை எடுத்து அழைத்தான்..
"யெஸ் சார்.." என்றது மறுமுனையில் ஷீலாவின் குரல்.
"ஒரு கப் காபி..."
"ஓகே சார்..."
ஒரே நிமிடத்தில் கதவு மெலிதாகக் தட்டப்பட்டது..
"யெஸ் கமின்.."
ஷீலா காபி கோப்பையுடன் வந்தாள்..
"தேங்க்ஸ்..." என்றபடி காபியை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான்..
"இட்ஸ் ஆல்ரைட் சார்.." ஷீலா வெளியேறினாள்..
கிரிதரன் காபியைக் குடித்தபடி யோசித்தான். அவன் திருமணத்தை மறுத்ததற்கு என்ன காரணம்? பதினான்கு வருடத்திற்கு முன்பு நடந்த 'பால்ய விவாகம்' தான் காரணமா..? இரட்டைப் பின்னலுடன் குண்டுக் கன்னங்களுடன் வட்டப் பெரிய விழிகளை அகல விரித்துக் கொண்டு அவன் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட அந்த எட்டு வயதுச் சிறுமியின் பெயர் தான் என்ன..? சிறுவயதில் அவளை 'அம்மு' என்றுதான் உமா அழைப்பாள்.
"அம்மு.. இங்கே பார்.. அத்தையைப் பார்.." என்று கொஞ்சுவாள்..
நான்கு வயதான 'அம்மு' வை பிரிந்து சென்ற கிரிதரன் அவளின் எட்டாவது வயதில் தான் திரும்பவும் பார்த்தான். தஞ்சாவூருக்கு அருகேயிருந்த கிராமத்தில் அவர்கள் தங்கியிருந்த நாள்களிலும் அவளை எல்லோரும் 'அம்மு' என்றுதான் அழைத்தார்கள். அந்த அம்மு இப்போது எப்படியிருப்பாள்..?
இன்டர்காம் ஒலித்தது. எடுத்தான்.
"சார்.. இன்னைக்கு ஜாயின் பண்ணுவதாய் இருந்த நியூ ஜே.ஈ. ஜாயின் பண்ண வந்திருக்காங்க.." ஷீலா கூறினாள்..
"ஓ.கே. ஜாயினிங் ரிப்போர்ட் வாங்கிய பின் என்னைப் பார்க்க அனுப்புங்க.." என்று கூறினான் கிரிதரன்.
சற்று நேரத்தில் அறைக் கதவைத் தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு அந்தப் பெண் உள்ளே வந்து அவன் முன் நின்றாள். ஒடிசலாய், உயரமாய், சிவந்த நிறத்துடன் இருந்தாள். அவள் முகத்தில் பார்த்ததும் ஈர்த்தது அவளது பெரிய கரிய விழிகள். வட்ட முகம்.. பிங்க் கலரில் பிரிண்ட் சில்க் சேலை உடுத்தியிருந்தாள். கரிய நிற அடர்ந்த கூந்தலை பின்னலிட்டிருந்தாள்.
"சார்.. ஐ ஆம் ஆர்த்தி.. இன்றையிலிருந்து 'டால்பின் கன்ஸ்ட்ரக்ஷன்'ல் ஜே.ஈ. ஆக ஜாயின் பண்ணுகிறேன்.." பேசும்போது படபடத்த விழிகளில் மேல் இமைகள் கவிழ்ந்து பிரிந்தது பட்டாம் பூச்சி சிறகடிப்பது போல இருந்தது.
"டேக் யுவர் சீட்.." அவளைப் பார்வையால் அளவெடுத்தான் கிரிதரன்..
"ஏன் லேட்..? முதல் நாளே லேட்டாக வந்தால் இனிவரும் நாள்களில் எப்படி வருவீங்க..?"
"சார்.. இன்று காலையில்தான் பெங்களூருக்கு வந்தேன்.. காலை நான்கு மணிக்கே வரவேண்டிய டிரெயின் எட்டு மணிக்குத்தான் வந்தது. ஊடே மழையின் காரணமாய் தண்டவாளத்தில் ரிப்பேர்ன்னு ஆள் அரவ மில்லாத நடுக்காட்டில் டிரெய்னை நிறுத்தி விட்டார்கள். இரவு நேரம்.. நடுக்காடு.. நான் இறங்கி பஸ் பிடித்து வர வழியில்லாமல் மாட்டிக் கொண்டேன். காலை எட்டு மணிக்கு வந்ததும் எனக்கு இடம் கிடைத்திருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போய் என் ரூமைத் தெரிந்து கொண்டு, கொண்டுபோன திங்க்ஸை வைத்துவிட்டு குளித்துக் கிளம்பி வர லேட்டாகி விட்டது. இதுதான் நான் இன்று தாமதமாய் வந்து ஜாயின் பண்ணியதற்கான காரணம்.. இனியும் இப்படி லேட்டாக வருவாயா...?ன்னு கேட்டீங்க.. இனி இப்படி நேராது.. ஏனென்றால் நான் தங்கியிருக்கும் லேடிஸ் ஹாஸ்டல் நமது கம்பெனியிலிருந்து ஐந்து நிமிட நேரத்தில் நடந்து செல்லும் தொலைவுதான். ஸோ... இன்று லேட்டாக வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் இனி நான் லேட்டாக வரும் நிலைமை வரவே வராது.." அவள் நீளமாய் பேசியபோது மாறிய முகபாவங்களைக் கவனித்துக் கொண்டிருந்த கிரிதரனுக்கு சிரிப்பு வந்தது.
ஒரே வார்த்தையில் 'ஸாரி சார் டிரெய்ன் லேட்..' என்று சொல்வதை விட்டுவிட்டு இவ்வளவு தூரம் விளக்கம் சொல்ல வேண்டுமா..? நினைத்ததை வாய்விட்டுக்
கேட்டான்.
"முதல் கோணல் முற்றிலும் கோணல்னு தமிழில் சொல்வாங்க சார்.. பர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஷன்னு இங்கிலீஸில் சொல்வாங்க சார்.. முதன் முதலாய் ஒருவர் மேல் கசப்பான அபிப்ராயம் விழுந்து விட்டால் அது மாறவே மாறாது. அதனால் எத்தனை துன்பங்கள் வரும் என்பதை அனுபவப் பூர்வமாய் நிறைய உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் இந்த நீண்ட விளக்கம்.."
"தட்ஸ் குட். பை தி வே மிஸ் ஆர்த்தி. நீங்கள் சென்னை யில் படித்தவர்கள். சென்னைதான் உங்கள் சொந்த ஊரா..?"
கிரிதரன் எந்தப் பெண்ணிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை.. இந்தப் பெண் கூறிய விளக்கமும் பொன்மொழியும் எதையோ அவனக்கு உணர்த்தியது. தன் சொந்த வாழ்வில் தகப்பனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட முதல் மோதல் எப்படித் தங்கள் வாழ்வில் விளையாடி விட்டது என்று மனம் வருந்தியது. இதைக் கூறியவளிடம் சிறிது நேரம் பேசும் ஆசை எழுந்தது.
அவளது அகன்ற விழிகளால் அவனை ஒரு கணம் ஊன்றிப் பார்த்தவள்,
"ஆமாம் சார்.. சென்னை தான் நாங்கள் வசிக்கும் ஊர்.." என்றாள்..
"ஐ..ஸீ.. அப்பா, அம்மா என்ன செய்கிறாங்க..?"
"அப்பா ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்.. அம்மா ஹவுஸ் வொய்ப்.."
"வெல்.. இன்றிலிருந்து இந்தக் கம்பெனியில் நீங்களும் ஒருவராகி விட்டீங்க.. திறமையாகவும், உண்மையாகவும் உழைத்தால் முன்னேற்றம் உங்களைத் தேடி வரும்.."
"தேங்க் யூ சார்.. நான் சின்சியராய் வேலை பார்ப்பேன்.." எழுந்து கொண்டவள் சுவரில் மாட்டியிருந்த ராதாகிருஷ்ணன் ஓவியத்தைப் பார்த்தாள். அவள் புருவங்கள் கேள்வியாய் உயர்ந்தன.. அந்த ஓவியத்தின் அருகே சென்று ஆழ்ந்து பார்த்தாள்.. கிரிதரன் வியந்தான்.
"ஓவியத்தின் அழகில் ஈர்க்கப்பட்டு விட்டீங்க போல இருக்கே மிஸ். ஆர்த்தி.."
"ஓவியம் அழகாய்த்தான் இருக்கிறது சார்.. ராதை காதலின் அடையாளம். ஆனால் திருமணம்ன்னு வரும்போது கிருஷ்ணன் மணந்து கொண்ட ருக்மிணியைத் தானே.. எல்லோரும் கூறுகிறார்கள்.." எங்கோ பார்த்தவாறு கூறினாள் அவள்.
"ஏன் அப்படிச் சொல்கிறீங்க..? ராதாகிருஷ்ணனின் தெய்வீகக் காதலை உலகமே அறியுமே.. அப்படியிருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீங்களே.."
அவள் கசப்புடன் சிரித்தாள்.
"தெய்வீகக் காதல்தான்.. கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தில் அவன் கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் இருந்தபோது கூட ஆடிப்பாட ராதை தேவைப்பட்டாள். மதுராபுரியை வென்று அதன் அரசனாகி விட்ட பின்னால் மணந்து கொள்ள ருக்மிணிதானே தேவைப்பட்டாள்..?"
அவள் கதவைத் திறந்து சென்று விட்டாள். கிரிதரன் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. மாடர்ன் ஆர்ட்ஸ்தான் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதில் ஒவ்வொரு வித அர்த்தத்தை தோற்றுவிக்கும் என்றால் பாரம்பர்யம் மிக்க ராதாகிருஷ்ணனின் ஓவியம் கூடவா வெவ்வேறு மனிதனின் மனதில் வெவ்வேறு உணர்வு களைத் தோற்றுவிக்கும்..? விந்தைதான் இது..!
அன்றைய இரவு உணவின்போது உணவு பரிமாறிக் கொண்டிருந்த உமாமகேஸ்வரியிடம் இந்தச் சம்பவத்தைக் கூறினான் கிரிதரன்.
"இதுவரை நான் யோசிக்காத கோணம் அம்மா இது. அந்தப் பெண் ஓவியத்தைப் பார்த்ததும் பட்டென்று இப்படிச் சொல்லி விட்டாள்.."
"பார்வைகள் பலவிதம் கிரி.. பார்ப்பவர்களின் சிந்தனைகளும் பலவிதம்.." உமா சப்பாத்தியை மகனின் தட்டில் வைத்துக் கொண்டே கூறினாள்.
"பறவைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்ன்னு பாட்டுத்தான் கேட்டிருக்கிறேன். உன் அம்மா புதிதாய் பார்வைகள் பலவிதம் என்கிறாளே.." என்று மனைவியை வம்புக்கு இழுத்தார் செல்வநாயகம்.
கணவரின் பேச்சுக்கு மறுமொழி கூறாமல் மௌனமாக அவர் தட்டில் சப்பாத்திகளை வைத்த உமா குருமாக்கிண்ணத்தை எடுத்தாள்.
"நீ பேசினால் உன் கூட மட்டும் கலந்துரையாடுகிறாள். நான் பேசினால் மட்டும் மௌன சாமியராகி விடுகிறாள். நான் பேசினால் பதில் பேச மாட்டாளா உன் அம்மா..?"
எரிச்சலுடன் கூறினார் செல்வநாயகம். கிரிதரன் தாயின் முகம் பார்த்தான். அது பாறை போல் இறுகி இருந்தது. பெற்றவர்களாக இருந்தாலும் கணவன் மனைவிக்கு இடையே அவன் பேசலாமா..?
மௌனமாக சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து சாப்பிட ஆரம்பித்தான். "ஏண்டா.. அவள்தான் பேசா மடந்தையாகி என் உயிரை வாங்குகிறாள் என்றால் நீயுமா வாயை மூடிக் கொள்ள வேண்டும்..?" செல்வநாயகம் மனத்தாங்கலுடன் சொன்னார்..
"வாயை மூடிக் கொண்டால் எப்படி அப்பா சாப்பிட முடியும்..?" ஜோக் அடித்தான் மகன்.
செல்வநாயகத்தின் முகம் மலர்ந்தது.
"சாப்பிடத்தான் வாய் திறப்பாய்.. பேச வாய் திறக்க மாட்டாய்.. அப்படித்தானே..."
"அம்மா செய்திருக்கும் சப்பாத்தி குருமாவின் ருசி அப்படி அப்பா.. நானும் எத்தனையோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன். இவ்வளவு சாஃப்ட்டான சப்பாத்தியை சாப்பிட்டதே இல்லை. என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட்.. வாய்க்குள் போட்டவுடன் கரைந்து போய் விடுகிறதே.. அம்மாவின் கைப்பக்குவத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை அப்பா.." கிரிதரன் தாயைப் பார்த்துப் புகழ்ந்தான்.
"போடா அரட்டை.. என்னை கேலி பண்ணா விட்டால் உனக்கு சாப்பாடு செல்லாது.. பேசாமல் வாயை மூடிக் கொண்டு சாப்பிடு.." உமா சிரித்தாள்.
"என்னம்மா இது.. கணவரும் மனைவியும் ஒன்று போல் பேசுகிறீங்க.. வாயை மூடிக் கொண்டால் எப்படிச் சாப்பிடுவதுன்னு இப்போதுதான் அப்பா கிட்ட கேட்டேன். நீங்களுமா..?" கிரிதரன் தந்தையைப் பார்த்துச் சிரித்தான்.
உமாமகேஸ்வரி மீண்டும் மௌனியாகி விட செல்வ நாயகத்தின் முகத்தில் மென்மை படர்ந்தது. மகனை அன்போடு பார்த்தார்.
"நானும் அவளும் என்றுமே ஒன்றுதானடா.. அவள் தான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.."
உமா குருமாவை எடுப்பதுபோல் சமையலறைக்குள் சென்று விட்டாள். மனைவியைப் பின் தொடர்ந்த செல்வநாயகத்தின் பார்வையில் ஏமாற்றம் தோன்றியது. பெருமூச்சு விட்டவர் மகனைப் பார்த்தார்.
"அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று சொன்னாய் கிரி..?"
"நான் சொல்லவேயில்லை அப்பா.."
"ஜோக்..? ஹாஹாஹா.. போதுமா இப்போது சொல்லு.."
"அவள் பெயர் ஆர்த்தி. படிப்பு பி.ஈ. எங்கள் ஆபிஸில் ஜூனியர் என்ஜினியராக ஜாயின் பண்ணியிருக்கிறாள்.."
"பெயரைக் கேட்டால் பயோ டேட்டாவையே சொல்லுகிறாயே..?"
"அடுத்து நீங்கள் அதையும் கேட்பீர்களே.."
"பலே.. ரொம்ப அலர்ட்டாக இருக்கிறாயே.."
"உங்கள் மகனாச்சே..."
மனைவியின் முகம் திருப்புதலில் மனம் நொந்திருந்த செல்வநாயகத்தின் முகம் கிரிதரன் எதிர்பார்த்தது போல் மலர்ந்தது. தந்தையின் முகத்தை ஜாடையாய் பார்த்துக் கெண்ட கிரிதரனின் உள்ளம் நெகிழ்ந்தது.

எத்தனை கோடி பணமிருந்தாலும் அன்பை அள்ளி வழங்க ஒருவர் வேண்டும். அன்பில்லாமல் வெறும் பணம் மட்டும் இருந்தால் அவன் மாடி வீட்டு ஏழைதான். காதலை உணர்த்தி மனைவியின் காதலைப் பெற முடியாமல் கடமையைக் காட்டி அவளைக் கட்டுப்படுத்தி வைத்து விட்டு இப்போது மனைவியின் பாராமுகத்தைக் கண்டு தவிக்கிறாரே..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -5
உயிரே உனைத்தேடி -5
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy