உயிரே உனைத்தேடி -19

                                    19 அது ஒரு இதமான முன்னிரவுப் பொழுது. கோடை காலத்தின் வெப்பம் தாக்காத குளிர் கொடுக்கும் பெங்களூரின் ...

                                    19

அது ஒரு இதமான முன்னிரவுப் பொழுது. கோடை காலத்தின் வெப்பம் தாக்காத குளிர் கொடுக்கும் பெங்களூரின் தட்பவெப்ப நிலை தாலாட்டியது. ஓர் ஆணின் அருகா மையை முதன் முதலாய் உணர்ந்த ஆர்த்தி மூச்சுத் திணறினாள். தன் அத்தை மகனின் கைகளைத் தடுக்கும் வகையறிந்தும் செயல் இழந்தவளாய் இன்பத் தவிப்பில் ஆழ்ந்தாள். எத்தனையோ வருடங்களாய் முகம் பார்க்கத் துடித்த மாமன் மகள் தந்த மயக்கத்தில் விலக இயலாமல் அவளைக் கட்டியணைத்தான்.
ஒருவர் மீது ஒருவர் கொண்ட தாபமும், மோகமும் தீயென பற்றிக் கொள்ள இருவருமே அதிலிருந்து விடுபட வழியின்றி அதில் ஆழ்ந்தனர். ஹாரன் சத்தத்துடன் ஒரு கார் அவர்களைக் கடந்து செல்ல மீள முடியாத, மீள விரும்பாத ஓர் உலகத்தில் பிரவேசித்து இருந்தவர்கள் நொடிப் பொழுதில் தம் நிலையுணர்ந்து விலகி அமர்ந்தனர்.
ஆர்த்திக்கு அப்படியே காரிலிருந்து இறங்கி விலகி ஓடி விடலாமா என்று இருந்தது. கிரிதரனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க இயலாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.
'நல்லவேளை.. இருளில் இருக்கிறோம்.. வெளிச் சமாக இருந்தால் எப்படி இவன் முகம் பார்ப்பது..'
இருளை விரும்பாத ஆர்த்தி முதன் முறையாக இருளில் இருப்பதை நிம்மதியாக உணர்ந்தாள். ஜன்னல் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டு தீவிரமாய் நகம் கடிக்க ஆரம்பித்தாள்.
கிரிதரன் சன்னமாய் விசிலடித்தான். மெல்ல அவள் கரம் தொட்டான். அவள் கரத்தை உறுவிக் கொண்டாள்.
"ஏன்..?" காரணம் அறிந்தும் அறியாதவன் போல் கேட்டான்.
"ச்சு.. இது ரோடு.." எரிச்சலுடன் கூறினாள்.
"ஆமாம் ரோடுதான்.." வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான்.
"கார்கள் எல்லாம் போய் கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன.."
"ரோடென்றால் கார்கள் போய் வரத்தான் இருக்கும்.."
"ஐயோ.. டென்சன் பண்ணாதீர்கள் அத்தான்.." அவள் முகம் சிவந்தது அந்த மெலிதான வெளிச்சத்திலும் தெரிந்தது.
கிரிதரன் பலமாக சிரித்தான். ஆர்த்திக்கு கோபம் வந்தது.
'இந்த ஆண்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான். சிரிப்புத்தான்..'
"இப்போது எதற்குச் சிரிக்கிறீர்கள்..?"
"இப்போது எதற்கு நீ கோபப்படுகிறாய்.."
"உங்களுக்குத் தெரியாதா...?"
"தெரியாமல்தானே.. உன்னைக் கேட்கிறேன்.."
ஆர்த்தி சினத்துடன் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்க முயன்றாள்.
"ஏய்ய்.. இப்போது எதுக்குடி காரை விட்டு இறங்குகிறாய்.."
"தெரிந்தும் தெரியாதது போல் பாவ்லா காட்டினால் வேறு என்ன செய்வதாம்.."
"இப்ப என்ன செய்ய வேண்டுமென்கிறாய்.." கிரிதரனின் குரலில் குறும்பு கொப்பளித்தது.
"ம்ம்.. எதையும் செய்யாமல் கையை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறேன்.." ஆர்த்தி கறாரான குரலில் கூறினாள்.
"அது எப்படி முடியும்.." கிரிதரன் அவள் தோளோடு அணைத்தான். மீண்டும் அவன் அருகாமையில் உடல் நெகிழ சிரமப்பட்டு தன்னை விடுவித்துக் கொண்டாள் ஆர்த்தி.
"ப்ளீஸ்.. கன்ட்ரோல் யுவர் செல்ஃப்.." அவள் குரலில் கெஞ்சல் இருந்தது..
"எதற்காக என்னை நானே கன்ட்ரோல் பண்ணிக்கனும்..? நீ என் மனைவி.. என்னுடையவள்.. ஐ லவ் யூ ஆர்த்தி.. ஐ லவ் யூ ஸோ மச்.."
"அதற்காக நடு ரோட்டில் காரை நிறுத்தி காதல் பண்ண வேண்டுமா அத்தான்."
"இப்போதுதானேடி.. தனிமை கிடைத்தது.." அவன் அவள் அருகே குனிந்து காதில் கிசுகிசுத்தான். வெப்பக் காற்று கன்னத்தில் சூடேற்ற ஆர்த்தி தன் வசமிழக்கத் தொடங்கினாள்.
'ஊஹூம்.. இது கூடாது.. இப்படியே விட்டால் இவன் நினைத்ததை நடத்தி முடிப்பான்..' அவள் விலகிக் கொண்டாள்.
"ஆர்த்தி.. ப்ளீஸ்..." அவன் கெஞ்சினான்.
"இல்லை.. அத்தான்.. இதை நான் விரும்பவில்லை."
"என்னடி சொன்னாய்.. என்னை நீ விரும்ப வில்லையா..?"
"ஐயோ.. அத்தான். உங்களை விரும்புகிறேன். ஐ லவ் யூ.."
"அப்புறம் என்ன..?" அவன் மீண்டும் நெருங்கினான்.
"அத்தான்.. ப்ளீஸ்.." இப்போது அவள் கெஞ்சினாள்.
"ஆர்த்தி ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்.. நான் உன் கணவன்.."
"யார் இல்லையென்று சொன்னார்களாம்..?"
"அப்புறம்.. ஏன் தடுக்கிறாய்..?"
"இது உங்கள் வீடு இல்லை அத்தான்..."
"என் வீடா..?" அவன் சினத்துடன் வினவினான்.
"ஓ.. தப்பு.. தப்பு.. நம் வீடு சரிதானே..." அவள் குழைந்தாள்.
"மறந்தும் கூட இனி உன் வீடு, என் வீடுன்னு பிரிச்சுப் பேசினே.. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. சரி.. அதை விடு.. இப்போது நீ என்னதான் சொல்கிறாய்.. நம் வீட்டில் இருந்தால் தான் என்னைக் கிட்ட நெருங்க விடுவாயா..?" அவன் அவளது கைவிரல்களைப் பற்றி விளையாடினான்.
"ஒரு வகையில் அப்படித்தான் அத்தான். முதலில் நான் கேட்பதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.."
"கேளுங்கள் மகாராணி.."
"இந்த மகாராணியைத்தான் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களே.. அப்புறம் ஏன் இந்த மகாராஜா இத்தனை நாளா வெயிட் பண்ணிராம்.. சும்மாவும் வெயிட் பண்ணாமல் என் டார்ச்சர் பண்ணினராம்.."
"இதையே நான் திருப்பிக் கேட்கக் கூடாதா..? நீ தான் என்னைக் கண்டுபிடித்து விட்டாயே.. நேரே வந்து நான் இன்னார் என்று கூற வேண்டியதுதானே.. ஏன் மோகினி வேடம் போட்டாய்..?"
"உங்களைக் கண்டுபிடித்து விட்டேன். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இப்போதுதானே கண்டுபிடித்தேன்.."
"அன்று சைட்டில் என் மனதிலிருப்பதை உன்னிடம் சொன்னேனே.. அப்போதே நான் தான் 'உன் அம்மு' வென்று நீ சொல்லி இருக்கலாமே.. மீண்டும் ஏன் கண்ணாமூச்சி ஆடினாய்..?"
"அத்தான். நான்தான் உங்கள் அம்முவென்று அப்போதே சொல்ல என் மனம் துடித்தது. ஆனால் உங்களை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டே  னென்று எனக்கு மனதுக்குக் கஷ்டமாகப் போய் விட்டது. வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. அதனால் நான் ஹாஸ்டலுக்குப் போய்விட வேண்டும்ன்னு தான் நினைத்தேன்.."
"ஹாஸ்டலில் போய் அழுதாயா..?"
"ஆமாம்.. அழுதேன்.. என் ரூம் மேட் வந்து என்னைத் திட்டினாள்."
"ஆறுதல் சொல்லாமல் திட்டினாளா..? நல்ல ரூம் மேட் தான் போ.."
"அவள் நல்ல ரூம் மேட் தான்.. ஸ்கூல் டேபிளிலிருந்து அவளும் நானும் பெஸ்ட் பிரண்ட்ஸ். அவள் இங்கே இருப்பதால்தான் அம்மா என்னை இங்கே வேலைக்கு அனுப்பவே ஒப்புக் கொண்டார்கள்.."
"அப்படிப்பட்ட பெஸ்ட் பிரண்ட் நீ அழுதால் சமாதனப்படுத்தாமல் ஏன் திட்டினாள்..?"
"அது ஒரு கதை அத்தான்... நான் சும்மா அழுகாமல் அவள் பெயரைச் சொல்லிச் சொல்லி அழுது தொலைத்தேன்.. பக்கத்து ரூமில் இருந்த பெண் அவளுக்கென்ன ஆச்சுன்னு வந்து விசாரித்து விட்டுப் போய் விட்டாள்."
கிரிதரனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
"உன்னை மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க அவள் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்.. ஹாஹாஹா.."
"பல் சுளுக்கிக்கப் போகிறது அத்தான். மறுநாள் கிளம்பி ஆபீஸுக்கு எவ்வளவு ஆசை ஆசையா வந்தேன் தெரியுமா.. நீங்கள்தான் என்னைக் கடித்துக் குதறினீர்களே.. அன்று மட்டுமா.. இன்றைக்கு சாயந்திரம் வரை என்னை வேட்டைக்காரன் மாதிரி துரத்தி விட்டு இப்போது என்ன கொஞ்சல் வேண்டிக் கிடக்கு.. நகர்ந்து உட்காருங்கள்.."
"ஊஹூம்.. வேண்டாம்.. நீ தாங்க மாட்டாய்.."
"அதெல்லாம் தாங்கிக் கொள்வேன். இத்தனை நாள் தாங்கவில்லையா.."
"அப்போச்சரி.. நீயே சொல்லி விட்டாய்.. நான் நகர்ந்து உட்காருகிறேன்.."
கிரிதரன் ஆர்த்தியின் பக்கம் நகர்ந்து அவள் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அதை எதிர்பார்க்காத ஆர்த்தி கூவினாள்.
"ஐயோ அத்தான்.. என்ன வேலை செய்கிறீர்கள்.. முதலில் நகருங்கள்.."
"இனியும் நகர்ந்தால் கார் கதவைத் தாண்டி கீழே தான் விழுவோம்.."
ஆர்த்தி அவன் முதுகில் அறைந்து தள்ளி விட்டாள். அவன் சிரித்துக் கொண்டே பக்கத்தில் விலகி அமர்ந்தான்.
"தாங்கிக் கொள்வேன்னு சொல்லிவிட்டு அடிக்கி றாயே.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆர்த்தி.. இரு.. இரு.. உன்னை என் அப்பாவிடமும், அம்மாவிடமும் சொல்கிறேன்.." கிரிதரன் விளையாட்டாய் கூறினாள்.
"அதைச் செய்யுங்கள் முதலில்.." ஆர்த்தி தீவிரமான குரலில் கூறினாள்.
அவள் குரலின் பேதத்தை உணர்ந்த கிரிதரன் விளையாடுவதை நிறுத்தினான்.
"என்ன சொல்லச் சொல்கிறாய் ஆர்த்தி..?"
"நான்தான் நீங்கள் தாலி கட்டிய 'அம்மு'வென்று போய் சொல்லுங்கள். காலகாலத்தில் நமக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுங்கள்.."
"கல்யாணம் ஆனவர்களுக்கே கல்யாணமா..?"
"சட்டப்படி நமது கல்யாணம் செல்லாது அத்தான்.. அது குழந்தைத் திருமணம்ன்னுதான் சொல்வாங்க.. ஊரறிய நம் கல்யாணம் சட்டப்படி நடக்கணும்..
அதுவும் உங்க பேரன்ட்ஸ், என் பேரன்ட்ஸ் முன்னால் நடக்கணும்.."
"இவ்வளவுதானே.. நீ ஆசைப்பட்டபடி இது கண்டிப்பாய் நடக்கும்.."
"அதுவரை..." ஆர்த்தி கெஞ்சுதலாய் இழுத்தாள்.
"அதுவரை..?" கிரிதரன் கோபமான குரலில் கேட்டான்.
"அத்தான்.. ப்ளீஸ்.. என்iப் புரிந்து கொள்ள மாட்டீர்களா..?"
"இதோ பார்.. உன் பேச்சிற்கு ஓரளவுதான் என்னால் கட்டுப்பட முடியும்.."
"இப்படிச் சொன்னால் எப்படி.. உங்கள் வீட்டில் முதலிலே என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாமா..?"
"அம்மா உனக்காகத்தானே காத்திருக்கிறார்கள்.. அப்பாதான்.. உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. நீதான் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.."
"நானா.. என்னால் எப்படி முடியும்..?"

அவளால் எப்படி முடியும் என்பதை கிரிதரன் எடுத்துக் கூறினான். அதில் அவனது அன்னை தந்தையின் நலனும் இருப்பதை ஆர்த்தி அறிந்தாள்..

  

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -19
உயிரே உனைத்தேடி -19
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy