உயிரே உனைத்தேடி -17

17 "குட்மார்னிங் சார்" வழக்கத்துக்கு மாறாக எழுந்து கிரிதரனின் அருகே வந்து கூறினாள் சரளா.. "குட்மார்னிங்.." எதற்க...

17

"குட்மார்னிங் சார்" வழக்கத்துக்கு மாறாக எழுந்து கிரிதரனின் அருகே வந்து கூறினாள் சரளா..
"குட்மார்னிங்.." எதற்கு அருகே வந்திருக்கிறாள் என்ற குழப்பத்துடன் தயங்கி நின்று பதில் கூறினான் கிரிதரன்.
"ஜெனிபர் சொன்னாள் சார்.. உங்களுக்கு மேரேஜ் ஆகிவிட்டதாமே.." சரளா ஜெனிபர் பக்கம் பார்வையைச் செலுத்த அவள் எழுந்து அருகே வந்தாள்.
"ஆமாம்.." கிரிதரன் அவள் முகத்தைப் பார்த்துப் பதில் கூறினான். சரளாவின் விழிகளில் வேதனை இருந்தாலும் அதையும் தாண்டிய ஓர் தெளிவு இருந்தது. கிரிதரனுக்கு அதுதானே வேண்டும்.
கிடைக்கும் என்று இருந்தால் ஏங்கலாம்.. கிட்டா தாயின் வெட்டென மறந்து விடுவதுதானே நல்லது.. எட்டாக்கனிக்கு யாரும் ஏங்க மாட்டார்களே..
எனவேதான் கிரிதரன் தான் திருமணமானவன் என்று ஜெனிஃபரிடம் கூறி வைத்தான். அவளிடமிருந்து செய்தி சரளாவிற்குப் போய் விடும் என்ற அவனது கணக்கு பிசகவில்லை..
"எங்களை சிஸ்டர்ஸ் என்று சொன்னீர்களாம்.. தேங்க்ஸ்.. சிஸ்டராக இல்லாவிட்டாலும் ஒரு நல்ல பிரண்ட் ஆக இருந்து நீங்கள் பார்ட்டி கொடுக்கும்போது முன்னே நின்று வேலை பார்ப்பேன் சார்..." சரளாவின் கண்கள் கலங்கியது.
"தேங்க்யூ.. நீங்கள் உங்களை என் பிரண்ட் ஆக நினைத்தாலும் நான் உங்களை என் சிஸ்டர் ஆகத்தான் நினைக்கிறேன். ஓ.கே.. வேலையைப் பாருங்கள்.." கிரிதரன் போய் விட்டான்.
இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை தூர அமர்ந்திருந்த ஆர்த்தி கவனித்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்து கொண்டிருந்த கிரிதரன் அவள் பார்வையைச் சந்தித்தான்.
சிறிது விளையாடிப் பார்த்தால் என்ன.. என்று அவனுக்குத் தேன்றி விட்டது. அதற்கு ஏற்றாற்போல் எதிரே வந்த மகேஷ் கேட்டான்.
"என்னடா ஆபீஸ் வாசலில் மாநாடு போட்டுக் கொண்டிருந்தாயே என்ன விஷயம்..?"
கிரிதரன் ஓரக் கண்ணால் ஆர்த்தியைக் கவனித்தான். அவள் தன் பதிலுக்காக காதைத் தீட்டிக் கொண்டு காத்திருப்பது புரியவும் சரடைத் திரித்து விட்டான்.
"சரளாவுக்கு என் மேல் ஓர் அபெக்ஷன். அதை வழி மறித்துச் சொன்னாள்.. ஜெனிஃபர் வேறு சப்போர்ட் பண்ணினாங்க.. இட்ஸ் ஓ.கே.ன்னு சொல்லி விட்டேன்.."
"இதைப் பாருடா.. ஊமை மாதிரி இருந்து கொண்டு என்ன வேலை பண்ணுகிறான்னு.. ஏன்டா உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்.. கடைசியில் நீயும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானா..?"
"என்னடா இது நானும் மனிதன்தானே.. எனக்கும் பாசம் வராதா...? சரளாவின் மேல் எனக்குப் பாசம் வந்து விட்டது..."
"அடிச்சுத் தூள் கிளப்பு.. இதையே நான் சொன்னால் என்னை மோசம் என்பாய்.. நீ சொன்னால் அது பாசம் ஆகிவிடுகிறது."
"ஒவ்வொருவர் முகராசி அப்படி..."
மகேஷ் கிரிதரனின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு அலுவலக விசயம் பேசியவாறு கிரிதரனின் அறைக்குள் அவனடன் நுழைந்தான்.
நண்பன் பேசுவதற்கு 'ம்' போட்டுக் கொண்டிருந்த கிரிதரன் "ஒரு நிமிடம்" என்று கூறிவிட்டு அறைக் கதவைச் சிறிது திறந்து அதன் இடைவெளியில் வெளியே பார்த்தான்.
ஆர்த்தி எழுந்து ஜெனிஃபரின் இருக்கையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
கிரிதரனின் உதடுகளில் புன்முறுவல் உதித்தது. அவனின் தோள் வழியே எட்டிப் பார்த்த மகnஷ்,
"ஆர்த்தியை ஏன் பார்க்கிறாய்.." என்று புரியாமல் கேட்டான்.
"ஏனோ..." கிரிதரன் கண் சிமிட்டிச் சிரித்தான்.
"அடப்பாவி.. நீ அப்படி ரூட் போடுகிறாயா..? சரளாவிடம் பேசியதைச் சொன்னால் இவளின் பொறாமையைத் தூண்டிவிடலாம்கிற கணக்கா.. கிரி.. நான் உன்னை 'என்னமோ'யென்று நினைத்தேன்.. நீ என்னையே தூக்கிச் சாப்பிட்டு விடுவாய் போல..."
"போடா.. போய் வேலையைப் பாரு..."
"நீ ஆர்த்தியைப் பார்க்கப் போகிறாயா..."
"நான் ஏன் அவளைப் பார்க்கப் போகவேண்டும்..? அவளே என்னைத் தேடி வருவாள் பார்.."
கிரிதரன் சொல்லி வாய் மூடு முன் அறைக்கதவு மெலிதாக தட்டப்பட்டது. கிரிதரன் 'பார்த்தாயா..' என்று புருவம் உயர்த்தி மகேஷிடம் ஜாடை காண்பித்தான்.
"யெஸ் கமின்.." கிரிதரன் குரல் கொடுக்கவும் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஆர்த்தி.
மகேஷின் விழிகள் வியப்பில் விரிந்தன. ஆச்சர்யமாய் நண்பனைப் பார்த்தான். ஆர்த்தி அறியாமல் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் கிரிதரன்.
ஆர்த்தி கோபத்துடன் இருந்தாள். அவள் ஜெனிஃபரிடம் போய் ஏதோ வேலை விஷயமாக பேசிவிட்டு தான் வந்த வேலையை ஆரம்பித்தாள்.
"ஜென்னி.. நீயும் சரளாவும் சி.ஈ.யிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்கள் போல.."
"யெஸ் ஆர்த்தி.. சரளா கூறியதை ஒரு வழியாய் சி.ஈ. ஏற்றுக் கொண்டார். சி.ஈ. சொன்னதை சரளாவும் கேட்டுக் கொண்டாள்."
"ஈஸிட்.. சரளாவின் அன்பை சி.ஈ. ஏற்றுக் கொண்டாரா..?"
"அது...." போன் மணி அடிக்க ஜெனிஃபர் எடுத்து பேசிவிட்டு வைத்தாள். ஆர்த்தியை நிமிர்ந்து பார்த்தவள் வேலை மும்முரத்தில் "சரளாவின் பாசத்தை அவர் புரிந்து கொண்டார்" என்று கூறிவிட்டுப் போனை கையில் எடுத்துப் பேச ஆரம்பித்து விட்டாள்.
ஆர்த்திக்கு கோபம் தலைக்கேறியது. நேரில் கேட்டு விடலாம் என்று கிரிதரனின் அறைக்கே சென்றாள்.
மகேஷ் பட்சி போல் பார்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
கோப மூச்சுக்களை விட்டுக் கொண்டு எதிரே நின்று கொண்டிருந்த ஆர்த்தியைப் பார்த்து,
"வாட் இஸ் தி மேட்டர் மிஸ் ஆர்த்தி" என்றான் கிரிதரன். ஒன்றும் அறியாத அப்பாவிக் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.
ஆர்த்தியின் பார்வையில் அனல் பொறி பறந்தது.
"சரளாவிடம் என்ன சொன்னீங்க.."
"எத்தனையோ சொல்லியிருப்பேன்.. இட் இஸ் மை பெர்ஸனல்.."
"அவள் மேல் காதல் பொங்கி வழிகிறதுன்னு சொன்னீங்களா..?"
"ம்ம்.. பாசம் பொங்கி வழியுதுன்னு சொன்னேன்.."
"இரண்டும் ஒன்றுதானே..?"
"என்னைக் கேட்டால்.. என்க்கென்ன தெரியும்..?"
"நீங்கள் சரளாவின் அன்பை ஏற்றுக் கொண்டதாக ஜென்னி கூறினாளே.."
"ஹூ இஸ் ஜென்னி..?" கிரிதரன் புருவம் உயர்த்தினான்.
"ஜெனிஃபர்..." ஆர்த்தி பல்லைக் கடித்தாள்.
"ஓ.. ஐ.. ஸீ.. இதுபோல சார்ட் நேமையெல்லாம் என்னிடம் சொன்னால் எனக்கு எப்படி விளங்கும்.. கொஞ்சலாய் பெயரைச் சுருக்கி என்னிடம் சொல்லக் கூடாது. முழுப் பெயரையும் சொல்லி இனிமேலாவது பழகிக் கொள்.." கிரிதரன் உண்மையிலேயே எரிந்து விழுந்தான்.
அவன் பட்டபாடு அவனுக்குத்தானே தெரியும்..? ஆர்த்தியை 'அம்மு' என்று சுருக்கி அழைத்ததினால் கட்டியவளின் பெயர் தெரியாமல் அவள் பாடும் பாட்டைக் கேட்டு விழித்துக் கொண்டு நின்றது அவன்தானே.. அவளுக்கென்ன.. குற்றம் சாட்ட மட்டும் குதித்துக் கொண்டு வந்து நின்று விடுவாள்.. கொஞ்சமாவது அவன் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா..?
"ஐ ஆம் ஸாரி சார்.. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன்.." ஆர்த்தி மென்று விழுங்கினாள்.
"ஆமாம்.. எல்லாவற்றையும் நான்தானே புரிந்து கொள்ள வேண்டும்..?" அவன் இடக்காகக் கேட்டான்.
"இப்போது இது பிரச்னை இல்லை..."
"எனக்கு எதுவுமே பிரச்னை இல்லை.."
"அதுதான் தெள்ளத் தெளிவாய் தெரிகிறதே..."
"தெரிந்து விட்டதல்லவா..? போய் வேலையைப் பாருங்கள்.."
"அப்படியானால் எனக்கு பதில் சொல்ல மாட்டீங்க..?"
"இங்கு நான்தான் சி.ஈ. நீங்கள் நேற்று வந்த ஜே.ஈ. மைன்ட் இட்.."
"இங்கு கேள்வி கேட்பது ஆர்த்தி.. ஜே.ஈ.இல்லை."
"ஆபிஸிற்குள் நுழைந்து விட்டால் நீங்கள் ஜே.ஈ. தான். ஆர்த்தி என்ற தனி நபர் இல்லை. யு ஆர் தி ஒன் ஆஃப் தி மெம்பர் ஆப் டால்பின் கன்ஸ்ட்ரக்ஷன்... அன்டர் ஸ்டாண்ட்...?"
"புரிகிறது.." ஆர்த்தியின் கண்கள் கலங்கி விட்டன.
"புரிகிறது இல்லையா.. போய் வேலையைப் பாருங்கள்.." கிரிதரன் அவளது கண்ணீரைக் கவனிக்கா தவன் போல் அவளை அதட்டினான்.
ஆர்த்தி முகம் வாடிச் சென்று விட்டாள். கிரிதரனுக்கு அவளது கண்ணீர் கண்டு மனம் பொறுக்கவில்லை. பாவம்.. அவன் கட்டிய தாலியை மதித்து அவனைத் தேடி ஊர் விட்டு ஊர் வந்தவளை நோகடிப்பது தர்மமா..? என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
ஆர்த்தியின் விழிகள் அழுது சிவந்தன.. இதற்காகவா ஆசை ஆசையாய் அவனைத் தேடி வந்தோம் என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள்.

மறுநாள் அந்த மாத இறுதி வந்தது. இறுதி நாளில் விருந்தும் நடைபெற்றது. காலையில் இருந்தே ஆர்த்தி சோர்வாக இருந்தாள். தன்னவன் தனக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்று அறிந்ததும் குதூகலம் கொண் டவள் மறுநாளில் இருந்து அவன் வாட்டியதால் வாடிய மலராக இருந்தாள். அந்த வாட்டத்துடனே விருந்தில் கலந்து கொண்டாள்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -17
உயிரே உனைத்தேடி -17
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy