உயிரே உனைத்தேடி -16

                              16 இன்டர்காமை எடுத்து ஆர்த்தியை அழைத்தான் கிரிதரன். "யெஸ் சார்.." என்று எதிரே வந்து நின்றாள்...

                              16

இன்டர்காமை எடுத்து ஆர்த்தியை அழைத்தான் கிரிதரன்.
"யெஸ் சார்.." என்று எதிரே வந்து நின்றாள் அவள்.
"உங்களுடைய வேலை முடிந்து சாவியை ஒப்படைத்து விடும் வரை ஆபீஸ் பக்கம் வரக்கூடாதுன்னு எதுவும் கொள்கை வைத்திருக்கிறீர்களா.." கிரிதரன் கடுமையாய் வினவினான்.
ஆர்த்தி திகைத்துப் போனாள்.. அவள் என்ன தவறு செய்தோமென்று இவன் இப்போது கோபித்துக் கொள்கி றான்..? வேலையில் ஈடுபாட்டுடன் இருப்பது ஓர் தவறா..?
"சார்.. சொன்ன தேதியில் கட்டிடத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென்றால் நான் அங்கு இருக்க வேண்டியது அவசியம் சார்.. அதற்காக ஆபீஸில் ரிப்போர்ட் பண்ணாமல் நேரே சைட்டிற்கு நான் ஒரு நாளும் போனதில்லை.."
"அப்படியானால் என்னிடம் வந்து ஓர் குட்மார்னிங் போட்டு விட்டு கட்டிட நிலவரத்தை சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே.. அதில் என்ன கஷ்டம் உங்களுக்கு..? சீனியர் ஆபீஸருக்கு குட்மார்னிங் என்ன வேண்டியிருக்கிறது என்று நினைத்து விட்டீர்களா..?"
"நான் எதுவும் நினைக்கவில்லை.. நீங்கள்தான் நான் நினைக்காததை எல்லாம் நினைத்தாகக் கூறுகிறீர்கள்.."
"ஆமாம் காலையிலேயே உங்களுடன் வம்பு வளர்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை பாருங்கள்.. பேச்சுக்கு பேச்சு எதிர் பேச்சு பேச எங்கு கற்றுக் கொண்டீர்கள்..?"
ஆர்த்திக்கு மனம் வலித்தது. ஆசை ஆசையாய் அவன் முகம் பார்க்க ஓடி வந்தால் மேலே விழுந்து பிடுங்குகிறானே. அவள் பொறுமை இழந்தாள்.
"இதற்கென்று காலேஜ் எதுவும் நடத்துகிறார்களா என்ன..? எனக்குத் தெரியவில்லை சார்.. ஒரு வேளை உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கலாம்.."
"ஷட் அப்.. உங்கள் சீஃப் என்ஜினியரிடம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும்.."
"எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்குத்தான் மறந்து விட்டது.." துக்கம் தொண்டையை அடைக்க அவள் கூறினாள்.
கிரிதரனுக்கு அவள் சொல்வது புரிந்தது. புரியாதவன் போல் அவன் அதட்டினான். முகத்தை இன்னும் கடுமை யாக்கிக் கொண்டான்.
"இப்படி பூடகமாய் பேசும் விளையாட்டை விட்டு விட்டு வேலையைப் பார்க்கப் பழகுங்கள்.. காலேஜ் முடித்தவுடன் வேலைக்கு வர வேண்டுமென்று ஆசைப் பட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் வேலையையும் பார்க்க வேண்டும்.. மைன்ட் இட்.."
ஆர்த்தி பதில் சொல்லாமல் நின்றாள். அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
"பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்.. இவன் கேட்பதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற ஆணவமா..?"
"பதில் பேசினால் பேச்சுக்கு பேச்சு எதிர் பேச்சா என்று நீங்கள்தானே இப்போது சொன்னீர்கள்..?"
"அதற்காக பதில் சொல்லாமலே காலம் தள்ளி விடலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறீர்களா..? கெட்டிக்காரத்தனத்தை வேலையில் மட்டும் காட்டுங்கள்.. மற்ற செயல்களில் வேண்டாம்.."
"ஓகே சார்.."
"இப்போது எதற்கு ஓ.கே. போட்டீர்கள்..?"
"நீங்கள் சொன்னதற்கு.."
"நான் என்ன சொன்னேன்..?"
"சொன்னவர் நீங்கள்.. உங்களுக்கே நினை வில்லையா..?"
"கேட்டது நீங்கள்தானே.. என்ன கேட்டீர்கள்ன்னு சொல்லுங்கள்.."
ஆர்த்தி அலுப்புடன் 'ச்சு' என்றாள். இந்த மடம் இல்லாவிட்டால் வேறு சந்த மடம் என்று போய் விடலாம். வேலை மட்டுமே அவளது தேவையாக இருந்தால்.. ஆனால் அவளது தேவை அவன் ஆகிப் போனானே..
"என்ன மேடம் 'ச்சு' கொட்டுகிறீர்கள்.."
"நேற்று வரை ஆர்த்தியாக இருந்தேன். இன்று மேடம் ஆகி விட்டேனா..?" தாங்க மாட்டாமல் அவள் கேட்டாள் அவன் விட்டேற்றியாய் பதில் கூறினான்.
"இப்போது அதுதானே நம் முக்கியப் பிரச்னை...? வேலைக்கு அதற்காகத்தானே வந்திருக்கிறோம்.. சம்பளம் அதற்காகத்தானே வாங்குகிறோம்.."
"காட்..! உங்களுடன் பேச முடியாது சார். இப்போது நான் என்ன தவறு செய்தேன்னு சொல்லி விட்டு அதற்கான பனிஷ்மென்டையும் சொல்லி விடுங்கள்.. நான் வேலையைப் பார்க்கப் போகிறேன்."
"என்ன தவறு செய்தீர்கள் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறீர்கள் பாருங்கள். அதுதான் பெரிய தவறு.."
"ஓ.கே. ஐ அக்ரி.. வாட் கேன் ஐ டூ ஃபார் தட்..?"
"பேச்சை கட் பண்ணுவதிலேயே குறியாக இருக்கி றீர்களே.. உங்களால் என்ன செய்ய முடியுமென்று இப்படிக் கேட்கிறீர்கள்.."
அன்று அவன் அறையை விட்டு வெளியே வரும் போது ஆர்த்தி சோர்ந்து போய் விட்டாள். அடுத்து வந்த தினங்களில் அவன் தேடித் தேடி அவளிடம் குற்றம் கண்டு பிடித்தான். அவள் வேலை பார்த்த கட்டிடத்திற்குப் போய் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொள்ளாத குறையாய் கூர்ந்து நோக்கி குறைகளைத் தேடினான். அவள் நின்றால் குற்றம் உட்கார்ந்தால் அதைவிடக் குற்றமென்று கொட்டம் அடித்தான்.
அவனது நண்பன் மகேஷ் கூட ஆச்சரியப்பட்டுப் போனான்.
"என்ன ஆச்சுடா உனக்கு..? வந்த புதிதில் நீதானே அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினாய்..? இப்போது நீயே அவளை லெப்ட் அன்ட் ரைட் வாங்குகிறாயே.. உங்கள் இருவருக்குள்ளும் ஏதும் பிரச்னையா..? என்ன பிரச்னை..?"
"அது பெரிய பிரச்னை.. இன்றைக்குள்ளே தீராது.."
"அப்படி எத்தனை நாளாய் பிரச்னைடா..?"
"எத்தனை வருசமான்னு கேளுடா.."
"வருசமா.. ஏண்டா அவள் இந்த ஆபீஸூக்கு வந்தே மூன்று மாதம் தான் ஆகப் போகிறது.."
"இந்த உலகத்துக்கு வந்து இருபத்தி இரண்டு வருசம் ஆகுதே..."
"என்னடா சொல்றே..."
"அவ பிறந்தப்போ ஆரம்பித்த பிரச்னைடா இது.. அவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுமா..? இல்லை முடியத் தான் விடலாமா..?"
"நீ என்ன சொல்கிறேன்னு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.."
"புரியாமல் இருப்பதுதான் நல்லது.."
"என்னவோ போ.. மோதலுக்கு அப்புறம் காதல் என்பார்கள்.. அதற்காக எதுவும் டிரை பண்ணுகிறாயோ..."
"அடப்போடா.. இங்கே காதலுக்கு அப்புறம்தான் மோதலே வந்திருக்கு... இவன் வேற புதிதாய் கணக்குப் போடுகிறான்.."
"அடிச்சக்கை.. கதை அப்படிப் போகுதா.."
"இதுவரை அப்படித்தான் போகுது.. இனிமேல்தான் கதையை நான் மாத்தனும்.."
"எப்போது மாத்தப் போகிறாய்.."
"கூடிய சீக்கிரம் மாத்திக் காட்டுகிறேன்.."
"என்னமோ போ.. துப்பறியும் கதை போல ஏதோ சொல்கிறாய்.. என்ன நடக்கப் போகுதுன்னு நானும் பார்க்கத்தானே போகிறேன்.."
"பார் பார்.. நன்றாகப் பார்..."
"கிரி.. என்கிட்ட மட்டும் காதோடு சொல்லு.. அது என்னடா இருபத்தி இரண்டு வருசக் கதை..."
"சொல்ல வேண்டிய நேரம் வரும்போது சொல்லுகிறேன்."
"நீ கல்லுளி மங்கன்டா.. உன் பெர்ஸனல் பத்தி ஒரு வார்த்தை கூட உன்கிட்ட இருந்து பெயராதே.. நான் தான் லூஸ் மாதிரி சைட் அடித்ததில் இருந்து லவ்ஸ் விட்டது வரை எல்லாவற்றையும் உன்னிடம் உளறிக் கொட்டுகிறேன்.."
"ஆமாம் சைட் அடித்தது ஒருத்தியை.. லவ்ஸ் விட்டது ஒருத்தியை.. கல்யாணம் பண்ணிக்கொண்டது பாவம் ஒரு அப்பாவிப் பெண்ணை..."
"என் வொய்ஃபா அப்பாவி..? அவளுக்குக் கோபம் வந்ததுன்னு வை அவள் படுபாவி.. நான் தான் பெரும் பாவி."
"இது ஒன்றை எல்லோரும் சொல்லி விடுவீர்கள்.. வொய்புக்கு கோபம் வருகிறது போல ஏன்டா நடந்து கொள்ளுகிறீங்க... எதையாவது ஏடாகூடமய் செய்வது.. அப்புறம் வொய்ஃபிடம் மாட்டிக் கொண்டால் அவள் படுபாவி என்கிறது.. போடா.. போய் வேலையைப் பார்.."
"நல்லாச் சொல்கிறடோ மச்சான் நியாயத்தை.. நீ கல்யாணம் என்ற ஒன்றைப் பண்ணிப் பார்.. அப்புறம் தெரியும் ஹஸ்பெண்ட் என்கிறவன் படும்பாடு.."
"இனிமேலா புதிதாய் படனும்..?"
கிரிதரன் சிரித்தான். மகேஷ் புரியாமலேயே சென்று விட்டான். ஆர்த்தி மனதுக்குள் மறுகிக் கொண்டே அவள் பொறுப்பில் விடப்பட்ட கட்டிட வேலையை முடித்து விட்டாள். வீட்டுச் சொந்தக்காரரிடம் குறித்த தினத்திற்கு ஐந்து நாள்கள் முன்னதாகவே சாவியை ஒப்படைத்து விட்டார்கள்.. கிரிதரன் மனதுக்குள் ஆர்த்தியின் திறமையை மெச்சினான். வெளியே கடுகடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டான்.
"ஆர்த்தி மேடம்.. வெற்றி என்பது நிலையானதுன்னு நினைத்து விடாதீங்க.. முதலில் எடுத்துக் கொண்ட வேலையை வெற்றியாய் முடித்து விட்டோம்ன்னு அந்த வெற்றியிலேயே அமிழ்ந்து விடாதீர்கள்.. அது தலைக் கனத்திற்கு வழி வகுக்கும்.. அடுத்த வேலையை ஆரம்பியுங்கள்.."

கலைஞருக்கு பாராட்டு அவசியம். பாராட்டே அவர்களை உற்சாகப்படுத்தும். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை அனைவரும் பாராட்ட கிரிதரன் மட்டும் வாய் திறந்து ஓர் வார்த்தைகூடச் சொல்லவில்லை. ஆர்த்தியின் மனம் சிணுங்கியது. அவனின் அன்பிற்காக ஏங்கியது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -16
உயிரே உனைத்தேடி -16
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy