உயிரே உனைத்தேடி -12

12 "என்ன கேட்டீங்க.. ?" கிரிதரனின் விழிகளில் கோபம் தெரிந்தது. "சரளாவின் நினைவான்னு கேட்டேன்.." ஆர்த்தியின் பதி...

12


"என்ன கேட்டீங்க..?" கிரிதரனின் விழிகளில் கோபம் தெரிந்தது.
"சரளாவின் நினைவான்னு கேட்டேன்.." ஆர்த்தியின் பதிலில் அலட்சியம் தெரிந்தது. 'இந்தப் பெண்ணிற்கு எத்தனை தைரியமிருந்தால் ஆமாம் அப்படித் தான் கேட்டேன் என்று பதில் சொல்லுவாள்..?' கிரிதரன் பல்லைக் கடித்துக் கொண்டான். அவன் முகம் இறுகியது. இல்லை இவளை இப்படியே விட்டு விடக் கூடாது. இவள் யார் அவனது சொந்த விசயங்களைக் கேள்வி கேட்க..?
"எதனால் அப்படிக் கேட்டீங்க..?"
"நான் பலமுறை 'சார் சார்' ன்னு உங்களை அழைத்து விட்டேன்.. நீங்கள் பலத்த யோசனையில் இருந்தீங்க.. அதனால் யாரைப் பற்றியாவது யோசித்துக் கொண்டிருப்பீங்கன்னு எனக்குத் தோன்றியது. யாராக இருக்கும்..? ஒரு வேளை சரளாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பீர்களோன்னு கேட்டேன்.."
"நான் ஏன் சரளாவைப் பற்றி யோசிக்க வேண்டும்..?"
ஆர்த்தியின் விழிகள் மின்னின.. அப்படியா..? சரளாவின் காதல் ஒருதலைக் காதலா..?
சரளாவின் விழிகளில் கிரிதரனைக் கண்டதும் தோன்றும் காதலை அறிந்த பின் ஆர்த்தியால் பொறுமை காக்க முடியவில்லை. அவளது இயல்பிற்கு மாறாக சரளாவின் தோழி ஜெனிஃபரின் வாயைக் கிளறினாள். உண்மையை அறிய வேறு வழி எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை.
ஆர்த்தியின் இயல்பான பேச்சில் கவரப்பட்ட ஜெனிஃபர் யதார்த்தமாய் சரளாவிற்கு கிரிதரன் மேல் இருந்த காதலைக் கூறிவிட்டாள்.
"இவளுக்கு சீஃப் என்ஜினியர் மேல் பைத்தியம்.."
"அவருக்கு..?" ஆர்த்தி யோசனையுடன் கேட்டாள்.
"யாருக்குத் தெரியும்.. இவள்தான் உருகித் தவிக்கிறாள்.. அவர் மனதில் என்ன இருக்கிறதுன்னு யாருக்கும் தெரியவில்லையே.."
'தெரிந்து கொண்டால் போயிற்று' முடிவெடுத்துக் கொண்டாள் ஆர்த்தி.. தெரிந்துகொள்ளத் தனிமையான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. இன்று கிடைத்ததும் பயன் படுத்திக் கொண்டாள். கேள்விக் கணையை தொடுத்து விட்டாள்.. அவன் கோபப்பட்டால் அவளுக்கு என்ன..? கோபப்படாமல் சிரித்த முகமாய் இருந்தாலும் அவளுக் கென்ன..? அவளுக்குத் தேவை அவனது பதில்..
"ஏனென்றால் அவள் உங்களைப் பற்றியேதான் யோசிக்கிறாளாம் சார்..?"
"யோசிக்கிறாளாம்ன்னு சொன்னால் யாரோ உங்களிடம் இதைச் சொல்லியிருக்க வேண்டும். யார் இதைச் சொன்னது..?"
"ஜெனிஃபர்.. சரளாவின் பிரண்ட்..."
"அவள் ஏன் உங்களைத் தேடிப் பிடித்து இதைச் சொல்ல வேண்டும்..?"
"அவள் என்னைத் தேடிப் பிடிக்கவில்லை.. நான் அவளைத் தேடிப் பிடித்துக் கேட்டேன்.."
"வாட்...?" கிரிதரனின் விழிகளில் நெருப்புக் பொறி பறந்தது.
"நீங்கள் யார் என்னைத் துப்பறிய...?"
"நான் யார்ன்னுதான் உங்களுக்குத் தெரிய வில்லையே.. தெரியும்போது ஏன் நான் துப்பறிந்தேன் என்பதும் உங்களுக்குத் தெரிய வரும்.."
கிரிதரனின் கோபம் பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தவுடன் அது அடங்குவது போல் இந்த வார்த்தை களைக் கேட்டதும் அடங்கிப் போனது.
ஆர்த்தியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.
"என்னைப் பார்ப்பது இருக்கட்டும் சார்.. என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே.."
ஆர்த்தியின் துடுக்கான பேச்சில் கிரிதரனின் மனதில் ஏதோ மயிலிறகு வருடியது. இவள் யாராக இருந்தாலும் இந்த வினாடி இவளுடன் வார்த்தையாடுவதில் ஓர் சுகம் பிறப்பதை உணர்ந்தான் அவன்.
"கட்டாயம் பதில் சொல்லத்தான் வேண்டுமா..?"
"ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.."
"சரளா என்னைக் காதலித்தால் நான் பதிலுக்கு அவளைக் காதலித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்கிறதா..?"
"புரியும்படிப் பேச மாட்டீர்களா..?"
"நீங்கள் புரியும்படித்தான் பேசுகிறீர்களா..? இல்லை பாடுகிறீர்களா..? புதிர் போட்டுப் பேச உங்களுக்குத்தான் தெரியுமா..?"
கிரிதரன் சிரித்துக் கொண்டே வெளியே செல்லத் திரும்ப ஆர்த்தி பரபரப்படைந்தாள். இந்தக் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் இன்று இரவு அவள் உறங்குவது எப்படி..? அவசரமாய் அறை வாயிலுக்கு ஓடி இரு கைகளை யும் விரித்து அவன் வழியை மறைத்தாள். கிரிதரன் திகைத்துப் போனான்.
"ஆர்த்தி இது என்ன விளையாட்டு..? நாம் என்ஜினியர்கள். இங்கே வேலை செய்பவர்கள் யாரேனும் பார்த்து விட்டால் நம்மை தவறாய் நினைத்து விட வாய்ப்புக் கொடுக்கலாமா..? வழியை விடுங்கள்.."
"நீங்கள் பதில் சொல்லாமல் வழி விட மாட்டேன்..."
"என்ன பிடிவாதம் இது ஆர்த்தி..? எதற்காக இந்தப் பிடிவாதம்..?"
"அதைத் தெரிந்து கொள்ளும்போது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.."
"அப்போதே நீயும் இதைத் தெரிந்து கொள்..."
"இல்லை.. எனக்கு இப்போதே இதற்கு விடை தெரிய வேண்டும்.."
"அது சரி.. விடை தெரியாத பல கேள்விகளை எழுப்பி விட்டு ஒன்றும் அறியாதவள் போல் இருப்பவள் நீ.. நான் மட்டும் உன் கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமா..?"
"ஆமாம்.. கண்டிப்பாய் சொல்லித்தான் ஆக வேண்டும்.."
"இதைத் தெரிந்து உனக்கு ஆகப் போவது என்ன? நான் சரளாவைப்  காதலித்தால் உனக்கு என்ன..? இல்லை வேறு யாராவது ஒருத்தியை காதலித்தால் உனக்கு என்ன.?"
"எனக்கு என்னவா...? எனக்கு எதுவுமே இல்லையா..? நீங்கள் யாரோ நான் யாரோவா..? எனக்கு அதைத் தெரிந்து கொள்ள உரிமை இல்லையா...?"
"இங்கே பார் ஆர்த்தி.. இதைத்தான் உன் பார்வையில் சொல்லுகிறாய்.. பாடலிலும் சொல்லுகிறாய்.. நீ யார்.. நான் யார்.. உன்னை இந்த இரண்டரை மாத கால அளவில் மட்டும்தான் எனக்குத் தெரியும்.. எங்கிருந்தோ வந்தாய்.. என்னைப் பாடாய் படுத்துகிறாய்.. சொல் யார் நீ.."
"அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே..."
"என்ன சொன்னேன்..?"
"நான் எங்கிருந்தோ வந்தவள் என்று.."
ஆர்த்தியின் விழிகளில் எல்லையற்ற துக்கம் தெரிந்தது. கிரிதரன் தவித்துப் போனான். மற்ற பெண் களிடம் அவனால் காட்ட முடிந்த புறக்கணிப்பை இந்தப் பெண்ணிடம் ஏன் அவனால் காட்ட முடியவில்லை.. கண் களால் அவனைக் கட்டிப் போடும் இந்தப் பெண் யார்..?
அவள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த நொடி அவள் படும் துக்கத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்று ஆகிவிட கிரிதரன் கூறினான்.
"நான் சரளாவை மட்டுமல்ல எந்தப் பெண்ணையும் காதலிக்கவில்லை ஆர்த்தி.. போதுமா.. இப்போது வழியை விடுகிறாயா..?"
ஆர்த்தியின் விழிகளில் இருந்த துக்கம் யாரோ மந்திரக்கோலைச் சுழற்றியது போல் மறைந்தது. விழிகளில் சுடர் ஏற்றவள் அவனுக்கு வழியை விட்டு விலகினாள். இயல்புக்குத் திரும்பினாள்.
"இன்னும் பத்து தினங்களில் ஹவுஸ் ஓனரிடம் சாவியை ஒப்படைத்து விடலாம் சார். இன்ட்டீரியர் டெக்கரேசன் உட்பட எல்லா சேவைகளும் பத்தே தினங்களில் முடிந்து விடும்."
"வெரிகுட்.. நீ வழியை மறைப்பதில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் கெட்டிக்காரிதான், அப்பா... பூமா தேவி கெட்டாள் போ.. என்னமாய் போர்க்கொடி தூக்குகிறாய்.."
அப்போதுதான் இருவருக்கும் ஒன்று உறைத்துது. கிரிதரன் அவளை 'வா, போ' என்று ஏக வசனத்தில்
அழைத்துப் பேசினான். கிரிதரன் அர்த்தத்துடன் புன்னகைத்தான்.
"என் மேல் குற்றமில்லை ஆர்த்தி.. நீ வழியை மறைக்கும் போது என் வார்த்தையையும் வழி மறித்து விட்டாய்.. 'நீங்கள்' என்பது 'நீ' என்று வந்து விட்டது. இனித் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.."
"எதற்கு சார் வீண் வேலை..? இந்த முயற்சியை வேறு ஏதாவது கண்டுபிடிப்பகளில் காட்டுங்களேன். நான் உங்களை விட எட்டு வயது சிறியவள்.. தாராளமாய் 'வா போ' என்று பேசலாமே..."
'எட்டு வயது' விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். வழக்கமான மர்மப் பார்வை அவள் விழிகளில் வந்து இறங்கியிருந்தது.
"ஆரம்பித்து விட்டாயா..?"
"எதை...?"
"உன் கண்ணாமூச்சி விளையாட்டை...?"
"கண்டுபிடிக்க முயலாமல் என்னைக் குற்றம் சொன்னால் எப்படி..?"
"எதைக் கண்டுபிடிக்க..?"
"ஒளிந்து கிடக்கும் உண்மைகளை..."
கிரிதரன் அவள் விழிகளுள் விழிகளைச் செலுத்து வது போல் ஆழமாய் ஓர் பார்வை பார்த்தான். முதன் முறையாய் அவள் விழிகளை விலக்கிக் கொண்டாள். அவள் முகத்தில் வெட்கச் சிவப்பு வந்தது. கிரிதரன் தாளமாட்டாமல் தலையை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பயத்தனித்தான்.
"ஒரு நிமிடம் சார்..." ஆர்த்தி தடுத்தாள்..
"சொல்லு..." கிரிதரன் ஜன்னல் வழி வானத்தைப் பார்த்தான். அவள் விழிகளைப் பார்க்கக் கூடாது. ஆபத்து...
"ஏன் நீங்கள் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.."
"என்ன...?" அவன் வேறு வழியின்றி அவளைப் பார்த்தான்.
"இன்று என்ன கேள்வியின் நாயகி போல் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு மிரள வைக்கிறாய்..? இந்தக் கேள்விக்கும் கட்டாயம் பதில் வேண்டுமா..?"
அவள் 'ஆமாம்' என்பதாய் தலை அசைத்தாள்.
"எனக்குக் கல்யாணம் ஆகவில்லைன்னு யார் சொன்னது...?"
அவளது விழிகளில் ஒரு கோடி தீபங்கள் எரிந்தன..
"ஆபீஸில் சொன்னார்கள்.."
"அவர்களுக்குத் தெரியாது.. ஏன் என் கூடப் படித்த நண்பர்கள் யாருக்குமே தெரியாது. எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது." கிரிதரன் இதைக் கூறும்போது அவளது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
அவன் மட்டும் அந்நேரத்தில் அவளது முகத்தைப் பார்த்திருந்தால் அவள் உதடுகள் துடிப்பதைப் பார்த்திருப் பான். அவள் முகத்தில் பரவசம் உதித்ததைப் பார்த்திருப் பான். அவள் இமைகள் படபடவென்று பட்டாம் பூச்சி போல் அடித்துக் கொள்வதைப் பார்த்திருப்பான் துடிக்கும் கரங்களை அழுந்த மூடிக் கொண்டு அவனை அவள் நேசப் பார்வை பார்த்ததைப் பார்த்திருப்பான்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -12
உயிரே உனைத்தேடி -12
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy