உயிரே உனைத்தேடி -11

11 "பெட்ரூமிற்கு கடல் நீலத்தில் பெயிண்ட் அடியுங்கள்.." "ஏன் மேடம் பிங்க் கலர் அடிக்கலாமே..." "வேண்டாம்......

11

"பெட்ரூமிற்கு கடல் நீலத்தில் பெயிண்ட் அடியுங்கள்.."
"ஏன் மேடம் பிங்க் கலர் அடிக்கலாமே..."
"வேண்டாம்..."
"இல்லை மேடம்.. வந்து.. இது பெட்ரூம்.."
"அதனால்..? ஏனென்றால் பிங்க் கலர் காதலின் குறியீடு.. பெட்ரூம் என்றால் காதலைத் தேடி மட்டும் தான் வரவேண்டுமா..? இது ஓய்வெடுக்கும் இடம். ஒரு நாளின் பாதியை இந்த ரூமில்தான் கழிக்கிறோம்.. கடல் நீலம் மனதிற்கு அமைதியைக் கொடுக்கக் கூடிய நிறம். உடல் ஓய்வெடுத்தால் மட்டும் போதாது.. மனமும் ஓய்வெடுக்க வேண்டும். அதற்கு மன அமைதி மிகவும் முக்கியம். மனம் அமைதியாய் இருந்தால்தானே காதல் நுழைய முடியும்..? அமைதியிழந்த அலையடிக்கும் மனதில் காதல் நுழைய முடியுமா..?" ஆர்த்தி வினவ அந்த பெயிண்ட் அடிக்கும் இளைஞன் சிரித்தான். ஆர்த்தியை மதிப்புடன் பார்த்தான்.
அவனது பார்வையில் மரியாதையுடன் பிரமிப்பு கலந்திருந்தது.. 'வயது குறைவாக இருக்கும்போல இருக்கிறதே. இந்த வயதில் இப்படி ஒரு ஞானமா..?' அந்த இளைஞனின் வயது இருபத்தி ஆறு.
"அப்புறம் ஹால்.. இதற்கு லைட்டான சந்தான நிறத்தில்.. கிரிம் கலர் கலந்த மஞ்சள் கலர் பொருத்தமாக இருக்கும்.."
"இது ஏன் மேடம்..?" அந்த இளைஞன் ஆவலாய் வினவினான்.
"இங்கே ரிச் லுக் வேண்டும் செல்வம்.. ஹால் என்பது நிறைய விருந்தினர்கள் வந்து போகும் இடம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களைத் தவிர மற்றவர்கள் ஹாலைத் தாண்டி வீட்டினுள் வரமாட்டார்கள்.. எனவே இங்கு அலங்கார விளக்குகளின் ஒளியில் ஆடம்பரமாய் தெரியும் நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும். அடுத்த டைனிங் ஹாலிலும் இதே நிறத்தில் பெயின்ட் அடியுங்கள்.."
"டைனிங் ஹாலிலும் அதே கலர்தானா...?"
"ஆமாம்.. சில விருந்தினர்கள் சாப்பிட அழைக்கப் படுவார்கள்.."
"ஆக மற்றவர்களுக்காக ஆடம்பரம்.. நமக்காக அமைதி.."
"நிச்சயமாய்.. நாம் அலுவலகத்திற்கு ஸ்மார்ட்டாய் உடையணிந்து போகிறோம்.. அதுவே கல்யாணம் மற்றைய பார்ட்டிகளுக்கு கண்ணைக் கவரும் விதமாய் ஆடம்பரமாய் உடையணிகிறோம்.. வீட்டிற்கு வந்து பெட்ரூமிற்குள் நுழைந்து விட்டால் என்ன செய்கிறோம்..? நமது அனைத்து அலங்காரங்களையும் கலைத்து விட்டு உடலை உறுத்தாத நைட்டியை பெண்களும் லுங்கி, பனியனை ஆண்களும் அணிகிறோம்.. அதைப்போல நமது முகமூடிகளைக் கலைத்துவிட்டு பொய் முகங்கள் இல்லாமல் இயல்பான உண்மை முகத்தோடு நாம் இருக்கக் கூடிய ஒரே இடம் வீடு.. அதிலும் முக்கியமாய் நமது பெட்ரூம்.. ஆம் ஐ கரெக்ட்..?"
"யெஸ் மேடம்..." என்றான் செல்வம்..
"பூஜையறையில் வெண்மை நிற பெயிண்ட்.."
"இதற்கும் விளக்கம் உண்டா மேடம்..?"
"சொல்லாமல் இருப்பேனா..? வெண்மை தூய்மையின் அடையாளம். இறைவனின் இருப்பிடம் தூய்மையானது. மனதிற்கு நிம்மதியை அளிப்பது. நமது துன்பங்களை தீர்ப்பது. நமக்கு அடைக்கலம் தருவது. அதனால் பூஜையறையில் வெண்மை நிறம் தான் அடிக்க வேண்டும்..."
"சமையலறையில் என்ன கலர் பெயிண்ட்.."
"திக்கான கலர் அடிக்க வேண்டும். சமைக்கும் இடத்தில் புகை வராமல் இருக்காது. அது தெரியாத வகையில் அதன் ஆவி படிந்து சீக்கிரம் கலர் மங்காத விதத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும்."
"புகை போக பேன் இருக்கிறதே..."
"இருந்தாலும் தொண்ணூறு பெர்சென்டேஜ் தானே புகை வெளியேறும்..? மீதி பத்து பெர்சென்டேஜ் உள்ளே படிந்து விடுமல்லவா...?"
"மற்ற இடங்களில் என்ன கலர் அடிக்க.."
"பால்கனிக்கு நீங்கள் விரும்பிய பிங்க் கலர்.."
"ஏனென்றால்.. பால்கனியில் உட்கார்ந்து பேசும் போது ரொமான்டிக் மூடில் இருப்பார்கள்.. அதற்கு பிங்க் பொருத்தமான கலர்.. சரிதானே மேடம்.."
"சரி..." ஆர்த்தி சிரித்துக் கொண்டாள்.
செல்வத்திற்கு இந்த இளம் பெண் என்ஜினியரை மிகவும் பிடித்திருந்தது. அவளின் சுறுசுறுப்பும், தொழில் அறிவும், தொழிலாளர்களை மதித்து அவர்களுடன் சரிக்கு சரியாய் சமமாய் பழகும் தன்மையும் அவனைக் கவர்ந்தன.
'இந்த குணாதிசயங்களுடன் மற்ற என்ஜினியர்களும் இருந்தால் எப்படி இருக்கும்..'என்று நினைத்துக் கொண்டான்.
எல்லாத் தொழில்களிலும் வெற்றி பெற இந்தக் குணங்கள் அவசியம். ஆர்த்தியிடம் அவை எல்லாமே இருந்தன. மதிய உணவை வேலை நடந்த கட்டிடத் திலேயே முடித்துக் கொண்டாள். அன்று பெயிண்டிங் வேலைதான் நடந்து கொண்டிருந்தது. மற்ற கட்டிடத் தொழிலாளர்கள் 'டால்பின்' நிறுவனம் கட்டிக் கொண்டி ருந்த மற்ற கட்டிடங்களுக்கு சென்று விட்டார்கள்.
ஆர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த அறை வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். கிரிதரன் நின்று கொண்டிருந்தான். ஆர்த்தி அவசரமாய் எழுந்தாள்.
கிரிதரன் அலுவலகத்திற்கள் சென்றவுடன் அவனுக்கு முக்கியமான வேலைகள் காத்திருந்தன.. அவசர வேலைகளை முடிக்கும் அவசரத்தில் ஆர்த்தியின் சர்வீஸ் பைலைப் பார்க்க மறந்து விட்டான். நகரின் மையத்தில் கட்டப்பட்டுக் கொண்டு இருந்த 'ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்' ஒன்றைப் பார்வையிடச் சென்றவன் ஆர்த்தியின் பொறுப்பில் கட்டப்பட்டுக் கொண்டு இருந்த வீட்டின் வழியாகத் திரும்பினான்.
'வீட்டின் உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்க இன்னும் பதினைந்து தினங்கள் தான் இருக்கின்றன. வீடு முடிவடைந்து விட்டதா..?' என்ற யோசனையுடன் அதையும் பார்வையிட்டு விடலாம் என்று காரை நிறுத்தி விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றான்.
பெயிண்டர் செல்வம் எதிர்பட்டான். கிரிதரனைக் கண்டதும் அவசரமாய் வணக்கம் சொன்னான்.
"என்ன செல்வம் வேலை எந்த அளவில் நடக்குது..?"
"ஜரூராய் நடக்குது சார்.. ஆர்த்தி மேடம் கையில் குச்சி ஒன்று தான் இல்லை.. விரட்டுவது தெரியாமல் பிரண்ட் லியாய் பேசி வேலையை வாங்கி விடுகிறார்கள்.."
செல்வத்தின் கண்கள் மின்ன அவன் பேசியதைக் கவனித்தான் கிரிதரன்.
'இந்த இளைஞனுக்கு ஆர்த்தியின் மேல் ஈடுபாடு தோன்றியிருக்கிறது' மனதில் எழுந்த இந்த நினைவு கிரிதரனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. 'இது ஏன்..?' என்று தன் மனதை தானே அதட்டிக் கொண்டவனாய் செல்வத்திடம் கேட்டான்.
"எல்லா ரூமிற்கும் பெயிண்ட் கலர் என்ன என்று செலக்ட் பண்ணி விட்டீர்களா..?"
"அதையேன் கேட்கிறீர்கள் சார்.. மேடம் அக்கு
வேறு ஆணி வேறாய் அலசி கலர் சொல்லிட்டாங்க.." செல்வத்தின் விழிகள் விரிந்தன.
"அப்படி என்ன சொன்னாங்க..?"
செல்வம் கூறினான். கிரிதரனுக்கு வியப்பாய் இருந்தது. இந்தப் பெண்ணின் மனதில் இத்தனை ரசனைகளா..? ஒவ்வொன்றையும் யோசித்துக் செயல்படும் அவளது திறமை அவனை ஈர்த்தது.
"அவங்க எங்கே..?"
"மாடி ரூமில் சாப்பிட்டுக் கொண்டு இருக்காங்க.."
"சாப்பாடு வாங்கிக் கொடுத்தீங்களா..?"
"கேட்டேன் சார்.. ஹாஸ்டலில் இருந்து கொண்டு வந்து விட்டதாய் சொன்னாங்க.. வேறு எதுவும் தேவைப் பட்டால் நான் வாங்கிக் கொடுத்து விடுவேன் சார்.."
'நீ சொல்லியா நான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்..' என்ற தொனியில் செல்வம் பேச கிரிதரன் எரிச்சலுற்றான்.
"சரி.. வேலையைப் பாருங்க.."
மாடியேறிச் சென்றான். மாடிப்படியின் கைப்பிடி அழகுற அமைக்கப்பட்டு இருந்தது. நிச்சயம் இந்த வீட்டைப் பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டு மழையைப் பொழியப் போகிறார்கள். எனக்கு, உனக்கு என்று வீட்டைக் கட்டிக் கொடுக்கக் சொல்லி 'டால்பின்' நிறுவனத்திற்கு படை எடுக்கப் போகிறார்கள்.
'இந்தப் பெண் நிச்சயம் திறமைசாலிதான்..' மெச்சுதலுடன் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அறை வாசலில் நின்றான் அவன். ஆர்த்தி அவசரமாய் எழுந்தாள்.
"வெயிட்.. எதற்குப் பதட்டம்..? சாப்பிட்டு முடித்து விட்டீர்களா..?"
"முடித்து விட்டேன் சார்.. ஒன் மினிட் ப்ளீஸ்..."
அவள் கைகழுவி தன் கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு வந்தாள். உணவருந்திய பாத்திரம் கழுவப்பட்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. ஈரம் உலர்ந்த பின் கைப் பையில் வைத்துக் கொள்வாள் போல.. சிறு விஷயத்தில் கூட எத்தனை கவனமாய் இருக்கிறாள் இவள்..?
"பெயிண்டிங் வேலை இன்னும் ஐந்து நாளில் முடிந்து விடும் சார்.."
"பார்த்தேன்.. கலர் நீங்களே செலக்ட் பண்ணி விட்டீர்களா..? ஹவுஸ் ஓனரிடம் ஒப்பினியன் எதுவும் கேட்க வில்லையா..?"
"பர்ஸ்ட் அதைத்தான் செய்தேன் சார்.. கட்டுவது நாமாக இருந்தாலும், வீடு அவருடையது. நமது ரசனையை விட அவருடைய வீடு அவரது ரசனைப் பிரகாரம்தான் இருக்க வேண்டும். பட்.. அவர்.. பெயிண்டிங் உட்பட இன்டிரியர் டெகரேசன் எல்லாவற்றையும் நமது முடிவில் விட்டு விட்டார்.. நீங்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுகிறேன்.. கம்ப்ளீட் ஹவுஸாக என்னிடம் ஒப்படை யுங்கள் என்று சொல்லி விட்டார்.."
ஐ.ஸீ. இது உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு ஆர்த்தி..
"ஐ நோ இட் சார்.. என் மேல் வைத்த நம்பிக்கையை நானும் காப்பாற்றுவேன்.."
"அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே.. சாப்பாடு ஹாஸ்டலில் இருந்து கொண்டு வந்து விட்டீர்களா..?"
"எப்போதுமே அதுதான் வழக்கம் சார்.."
"ஆபிஸ் வந்துதானே இங்கே வந்தீர்கள்.. எல்லா இடத்திற்கும் சாப்பாட்டை சுமக்க வேண்டுமா..? சிரமம் இல்லியா..?"
"என்ன சிரமம்.. டிபன் பாக்ஸ் ஹேண்ட் பேகில் இருக்கிறது. ஹேண்ட் பேகை எங்கே போனாலும் தோளில் போட்டுக் கொண்டுதான் போகிறேன். மினரல் வாட்டர் இங்கே வேலை செய்கிறவர்களுக்காக வாங்கி வைத்திருக் கிறோம். தட்ஸ் ஆல்.. "
எல்லாமே இலகுதான் இந்தப் பெண்ணிற்கு. எங்கேயோ பிறந்து வளர்ந்து பெங்களூருக்கு அவனைத் தேடி வந்து... ஏன் வந்தாள்.. எதற்காக வந்தாள்.. என்று அவனை தலை முடியைப் பிய்த்துக் கொள்ள வைத்து.. ரகசியப் பார்வைகளை வீசி.. என் பார்வை உனக்கும் ரகசியமா..? என்று பாடி அவனைக் கலங்கடித்து.. எல்லா வற்றையும் இலகுவாகச் செய்கிறாள் இவள்.
"என்ன சார் யாரைப் பற்றி யோசிக்கிறீங்க..? சரளாவைப் பற்றியா..?"
கிரிதரனுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவளுக்கு உடம்பெல்லாம் கண்கள் என்று

 தோன்றும்போதே கோபமும் கூடவே வந்தது



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிரே உனைத்தேடி -11
உயிரே உனைத்தேடி -11
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s320/IMG-20190615-WA0002.jpg
https://1.bp.blogspot.com/-zSefudvV7is/XRbp4re0ByI/AAAAAAAAApY/Hw4XJTNoJikyQNdiG279r3Z4VsGPmjQIwCPcBGAYYCw/s72-c/IMG-20190615-WA0002.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/uyireunaiththedi-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy