உன்னோடு நான் -8

நரேந்திரனின் டைரிக் குறிப்பு : அவள் சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.. அவள் பாதச் சுவடுகளைப் பின்பற்றி நான் நடந்து கொண்டிருந்தேன். நடக்கும...

நரேந்திரனின் டைரிக் குறிப்பு :
அவள் சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.. அவள் பாதச் சுவடுகளைப் பின்பற்றி நான் நடந்து கொண்டிருந்தேன். நடக்கும்போது சுழலும் அவளது பின்னலசைவில் சிக்கித் தவித்தது என் இதயம்.. பாதையோரத்தில் இருந்த கிழவி அவளிடம் காசு கேட்டாள். என்னவள் நின்றாள். பர்ஸைத் திறந்து.. ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து கிழவியின் கையில் கொடுத்து விட்டு மேலே நடந்தாள். கூட நடந்து கொண்டிருந்த அவளுடைய அக்கா அவளைக் கடிந்து கொண்டாள். இவள் சொன்ன விளக்கம் என் நெஞ்சைத் தொட்டது. அந்தக் கிழவி மிக வயதானவளாம். அவளால் உழைத்துப் பிழைக்க முடியாத தள்ளாமையுடன் இருப்பவளிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் போதுமா..? என்று கேட்டாள். ஐம்பது ரூபாயில் குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்காவது அவளுக்கு ஒரு வேளை பசியாற முடியாதா என்ற கேள்வியை வைத்தாள். ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்துடன் இலவசமாக சர்வருக்கு டிப்ஸ் கொடுக்கிறோமே.. அதற்கு கணக்குப் பார்க்கிறோமா என்று வினவினாள். கேள்வியே கேட்காமல் செலவளிக்கும் தொகையைப் பற்றிய விவரங்களைச் சொன்னாள். தங்கையைத் திருத்த முடியாது என்று அவளுடைய அக்கா தலையில் அடித்துக் கொண்டாள்.
நான் அந்தக் கிழவிக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்து.. சில நூறு ரூபாய்களைக் கையில் கொடுத்து.. ஆதரவற்ற முதியோரின் இல்லத்தில் சேர்த்து விட்டேன்.
அவளது கடைக்கண் பார்வை பட்ட முதியவளை.. அடுத்து நான் ரோட்டில் பார்ப்பதா..? அவளிடம் யாசகம் வாங்கிய அந்த முதியவளின் கைகள்.. வேறொருவரிடம் யாசகம் கேட்பதா..?

8

கம்பெனிக்குள் நுழைந்தபோது ஹரிணியிடம் எப்போதும் இருக்கும் அந்த நிமிர்வு காணாமல் போயிருந்தது..
சூர்யாவின் கால்களில் விழ வேண்டுமே.. என்று துக்கமாக இருந்தது. கால்கள் பின்ன கம்பெனியின் தரைத்தளத்தில் நடந்து லிப்டிற்குள் நுழைந்தாள்.
லிப்டிலிருந்து வெளிப்பட்டு.. வெளியே நடந்த போது.. எதிரே வந்த தீபக்.. அவளைக் கண்டதும் நின்றான்.
'இனி இவன் 'ஹாய்' சொல்வான். நான் காது கேட்காததைப் போல நடந்து தொலைக்க வேண்டும்.. வாழ்நாள் பூராவும் இப்படி எத்தனை நட்புகளை நான் தவிர்க்க வேண்டி வருமோ..?'
அவனைப் பார்க்காமல் அவள் கடக்க முனைந்தபோது அவன் 'ஹாய்' சொல்லாமல் 'ஸாரி' சொன்னான்.
'இவன் எதுக்கு இப்ப 'ஸாரி' சொல்கிறான். சூர்யா ஏதாவது மண்டகப்படியை கொடுத்திருப்பானோ..'
காரணமே இல்லாமல் பேச்சு வாங்கி விட்டானே என்ற இரக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
'இவன் எதுக்கு என்னை 'ஐயோ பாவம்'ங்கிறதைப் போல பார்த்து வைக்கிறான்...?'
ஹரிணிக்குப் புரியவில்லை. புருவங்கள் முடிச்சிட தீபக்கை கேள்வியாகப் பார்த்தாள்.
"நீங்க இன்னைக்கு வேலைக்கு வரமாட்டிங்கன்னு நினைத்தோம்.."
"ஏன்...?"
"இப்படி ஆகும்ன்னு யாருமே எதிர்பார்க்கலை.."
"எதைச் சொல்கிறீங்க...?"
"உங்களுக்கு விசயமே தெரியாதா...?"
"என்ன விசயம்...?"
"மை காட்.. ஹரிணி.. சூர்யாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு.. அவன் ஹாஸ்பிட்டலில் ஐ.ஸி.யுவில் இருந்தான்.."
இது எப்போ...
கேட்டுக் கொண்டிருக்கும் செய்தியை நம்ப முடியாதவளாக உறைந்து போய் நின்றாள் ஹரிணி.
"இருந்தான்னா...?"
அவள் விழிகளின் அதிர்வை சங்கடத்துடன் பார்த்தபடி தீபக் சொன்னான்.
"ஹி இஸ் நோ மோர்..."
'போய் விட்டானா..? அவன் போய் விட்டானா..? இதற்கா இத்தனை ஆட்டம் ஆடினான்...?'
ஹரிணி தலையைப் பிடித்துக் கொண்டாள். கண்கள் இருட்டிக் கொண்டு வர.. அப்படியே மயங்கிச் சரிந்தாள்..
"ஹரிணி..."
அவளது காதருகே பல குரல்களின் கலவையொலி கேட்டது.. காலடிச் சப்தங்கள் அவளருகே ஓடி வந்தன.. அவள் முகத்தில் சுள்ளென்று தண்ணீர் அடிக்கப்பட்டு.. நீர்திவலைகள் அவள் முகம் முழுவதும் பரவிப் படர்ந்தன..
அவளால் கண் விழிக்க முடியவில்லை. அந்தகாரத்தின் அடி ஆழத்தில்.. உள்ளே... உள்ளே.. அவள் அமிழ்ந்து கொண்டிருந்தாள்.
அவள் காதருகே அந்தக் குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது..
உன்னோடு நான்... இருக்கிறேன்.. பயப்படாதே..
விழிகளைத் திறக்க முடியாத மயக்க நிலையில் போராடிக் கொண்டிருந்தவள்.. மனதிற்குள் அரற்றினாள்.

என்னோடு இருக்கும் நீ யார்...?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் -8
உன்னோடு நான் -8
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy