உன்னோடு நான் -6

நரேந்திரனின் டைரிக் குறிப்பு : சினிமாவுக்குப் போயிருந்தேன்... யதேச்சையாகப் பார்த்தால் எனக்கு முன் வரிசையில் அவள் அமர்ந்திருக்கிறாள்.. கூ...

நரேந்திரனின் டைரிக் குறிப்பு :
சினிமாவுக்குப் போயிருந்தேன்... யதேச்சையாகப் பார்த்தால் எனக்கு முன் வரிசையில் அவள் அமர்ந்திருக்கிறாள்.. கூட இருந்தது அவளது அக்காவாம்.. அவள் பேச்சிலிருந்து அது தெரிந்தது.. காலேஜில் இருந்ததைவிட. இங்கே வேறு விதமாகத் தெரிந்தாள். படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ரசித்து பார்த்தாள். ஊடே அவளுடைய அக்காவிடம் மெல்லிய குரலில் பேசினாள். படத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்க.. அவளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தின் மெல்லிய வெளிச்சத்தில் அவள் தேவதையைப் போல இருந்தாள். அவளின் கூந்தலில் இருந்து வந்த மல்லிகையின் நறுமணத்தில் நான் மயங்கிப் போனேன். இப்படியொரு பேரானந்தம் எனக்குத் தினமும் கிடைக்குமா..? கடவுளிடம் கேட்டேன்.

6

கிருஷ்ணனின் முகத்தில் அதுவரை கண்டறியாத கடுமையினை ஹரிணி கண்டாள்.
"நீ உன் மனதில் என்ன நினைத்துக்கிட்டு இருக்க..?"
"அப்பா..."
"பேசாதே.. வலை போட்டுத் தேடினாலும்.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்குமா..? தானாய் அமைந்திருக்கிற அருமையான சம்பந்தம் இது.. இதை உன் வறட்டுப் பிடிவாதத்தால் கெடுக்கப்பார்க்கிற..."
"இல்லைப்பா..."
"என்ன நொல்லைப்பா.. ஒரு மாதிரியான ஆளுகிட்ட அளவாய் பேசுன்னு மாப்பிள்ளை சொன்னாராம். அதுக்கு நீ முகத்தை திருப்பிக் கிட்டியாமே.."
எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டு இது..! ஒரு மாதிரியான ஆள் யார்..? சூர்யாவா..? தீபக்கா..? இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா..? சூர்யா என்ன மாதிரியான கேள்விகளைக் கேட்டானென்று இவர்களிடம் சொல்லி விட முடியுமா..? சொன்னால்தான் நம்புவார்களா...?
அவள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே -
"அவர் பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்.." என்று செர்டிபிகேட் கொடுத்தார் கிருஷ்ணன்.
தங்கையின் கன்றிப்போன முகத்தை யோசனையுடன் பார்த்தான் கார்த்திக்..
"அவரை ஒரேயடியாய் அப்படிச் சொல்லிட முடியாதுப்பா..."
"ஏண்டா அப்படிச் சொல்கிற..? அவர்கிட்ட ஒரு கெட்டபழக்கமாவது இருக்கா.. சிகரெட்..? தண்ணி..? ஊஹும்.."
"சிகரெட் பிடிக்காதவனும்.. தண்ணியடிக்காதவனும் தான் ஜென்டில் மேனா..? ப்ளீஸ்ப்பா.. ஹரிணி சைடிலயும் என்ன நடந்ததுன்னு கேளுங்க..."
"நான் கேட்டேனா இல்லையா...? இவள் பதில் சொல்லாமல் இருக்கிறதைப் பார்த்தா.. மாப்பிள்ளை சொல்கிறது உண்மையாய் இருக்குமோன்னுதானே தோணுகிறது...?"
ஹரிணி சட்டென்று எழுந்து அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்.
அவளுக்கு எங்கேயாவது ஓடிவிட வேண்டும்போல இருந்தது.
கண்காணாத தூரத்துக்கு ஓடிவிட வேண்டும்..
சூர்யாவின் கண் காணாத தூரத்துக்கு தப்பி ஓடிவிட வேண்டும்..
கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவள்.. அறைக் கதவு தட்டப்படவும்.. எழுந்து திறந்தாள்..
"அழுதியா...?"
ஹரிணி பதில் சொல்லவில்லை..
"இதோ பார் ஹரிணி.. நிச்சயம் பண்ணின கல்யாணம் நின்னு போனா.. மாப்பிள்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெண்ணுக்குத்தான் எல்லாமும்.."
"அதுக்காக என்னை என்ன பண்ணச் சொல்கிறீங்கம்மா.. அந்த சூர்யாவின் காலில் விழச் சொல்கிறீங்களா...?"
"தப்பில்லை..." என்றாள் சரளா..
"அம்மா...?" அதிர்ந்து விழித்த மகளை இரக்கத்துடன் பார்த்தவள்..
"காலம் காலமாய் பெண்கள் செய்கிற வேலைதானேம்மா இது.." என்று கேட்டாள்..
"எனக்குன்னு ஒரு மனசு இல்லையாம்மா...?"
"அதை நிச்சயத்துக்கு முன்னாலேயே நீ சொல்லியிருக்கணும்.."
"அப்போ அவர் குணம் இப்படியிருக்கும்ன்னு எனக்குத் தெரியாதேம்மா.."
"அதுக்கு என்ன செய்ய..? மெல்ல மெல்ல.. நீதான் மாத்தணும்.."
"அதுக்குள்ளே நான் தொலைந்து போவேன்ம்மா.."
"ஆம்பளைக கொஞ்சம் முன்னபின்னதான் இருப்பாங்க.."
"பெண்கள் மட்டும்.. ஒரே நேர் கோட்டில் இருக்கணும்.. அப்படித்தானேம்மா.. இது என்னம்மா நியாயம்..?"
"நாமதான் விட்டுப் பிடிக்கணும்...!"
"அதாவது.. விட்டுக் கொடுக்கணும்..?"
"இதுவே கல்யாணமாகியிருந்தா என்ன செய்வே..?"
"எதுவுமே செய்ய முடியாதாம்மா..? இல்லை.. எதுவுமே  செய்யக் கூடாதா..?"
"அப்பா வருத்தப்படறார்.. வியாபார சங்கத்தில் முக்கியமான பதவியில் இருக்கிறவர்.. கல்யாணம் நின்னு போனால் அது அப்பாவுக்கு பெருத்த அவமானம்ன்னு சொல்கிறார்.. அதனால..."
"அதனால...?"
"நீ நாளைக்கே மாப்பிள்ளையிடம் பேசி.. சமாதானமாகி விடு..."
சரளா கல்லைத் தூக்கி ஹரிணியின் தலையில் போட்டாள்




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் -6
உன்னோடு நான் -6
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy