உன்னோடு நான் -4

நரேந்திரனின் டைரிக் குறிப்பு :   என்னவோ தெரியவில்லை. அவள் வாடித் தெரிந்தாள்.. அவளுடைய வகுப்பு மாணவியை அழைத்து விசாரித்தேன். மனோகர் அவள...


நரேந்திரனின் டைரிக் குறிப்பு :  
என்னவோ தெரியவில்லை. அவள் வாடித் தெரிந்தாள்.. அவளுடைய வகுப்பு மாணவியை அழைத்து விசாரித்தேன். மனோகர் அவளைத் தொந்தரவு செய்ததாக கூறினாள்.. எனக்கு வெறி பிடித்தது. அந்த மனோகரிடம் நேருக்கு நேராக மோதினேன். 'அவள் என் காதலி'யென்று சொன்னேன். 'அதற்கு என்ன' என்கிறான் அவன். அவனுக்கு அவளைக் காதலிக்கும் உத்தேச மில்லையாம். 'வேறு எதற்காக அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்கிறாய்' என்று கேட்டால்.. 'அவளை ஒரு நாள் மனைவியாக்கிக் கொள்ளும் உத்தேசம்' என்று என்னிடமே சொல்கிறான். அவனை அடித்து துவைத்து விட்டேன். குற்றுயிராய் கிடந்தவனை.. அவனுடைய ஆள்கள் வந்து அள்ளிக் கொண்டு போனார்கள். 'அரசியல்வாதியின் மகன். உனக்கெதற்கு வம்பு' என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். எதற்கு வம்பு என்று.. என்னவள் அவமானப்படுவதை நான் பார்த்து நிற்பதா....?

4

இப்படியாகப் பட்ட ஒரு உறவு - ஹரிணிக்கும் ஒரு அமானுஷ்ய வடிவத்துக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வந்தது.. நாளடைவில் அதைப் பற்றிய யோசனைகளை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு.. வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து விட்டாள் ஹரிணி..
படிப்பை முடித்தாள்.. காத்திருந்த 'கேம்பஸ் இன்டர்வியூ' வேலைக்குப் போனாள். போன இடத்தில் சூர்யாவின் கண்ணில் பட்டுத் தொலைத்தாள். அவன் காதல் சொல்லி.. அது கல்யாணம் வரை போய் நின்று.. நிச்சயதார்த்தமும் ஆனது..
அதுவரை.. ஊடும்.. பாடும்.. கண்ணுக்கு தட்டுப்பட்டு விட்டு 'அது' மறைந்து விடும்.
ஹரிணியும்.. அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வேலைகளில் ஆழ்ந்து விடுவாள்..
ஆனால்.. அவளின் அப்போதைய அனுபவத்தில் அவள் ஆடிப் போயிருந்தாள்.
அவளது செவிகளில் ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்து.. அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டது யாரென்று தெரியாமல் அவள் மனம் அலை பாய்ந்தது...
'நிச்சயம் இது கனவில்லை...' அவள் நெஞ்சம் நடுங்கியது.
அதே நினைவோடு.. அவள் உறக்கமில்லாமல் அந்த இரவைக் கடந்தாள்.
"இமையெல்லாம் வீங்கியிருக்கே.. என்னாச்சும்மா..?"
சரளாதான் மகளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை முதலில் கண்டுபிடித்தார்..
"நத்திங்ம்மா..." ஹரிணி முணுமுணுத்தாள்.
"என்ன நத்திங்...? படித்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. கண் விழிச்சுப் படித்தேன்னு சொல்லாம். இப்ப வேலைக்கு போய்கிட்டிருக்கிற ஸ்டேஜில இப்படிக் கண் வீங்கிக் கிடந்தா.. இட்ஸ் நாட் நத்திங்... இட்ஸ் ஹேவ் சம்திங்.. சொல்லு.. என்ன ஆச்சு..."
"ஒண்ணுமே ஆகலைப்பா.. நைட் புக் படிச்சேன்.. தூங்க லேட்டாயிடுச்சு.."
"என்ன புக்...?"
"பொன்னியின் செல்வன்.."
"ஏம்மா.. அதைத் தொட்டால் கீழே வைக்கவே முடியாது. அதை விடியவிடிய படிச்சுட்டு.. இப்படி கண்ணை வீங்க வைச்சிட்டயே..."
"படிக்கணும்னு தோணுச்சுப்பா.. ஆரம்பிச்சேன்.. நீங்க சொன்னதைப்போல.. கீழே வைக்க முடியலை..."
"நல்ல பொண்ணு போ..."
வீட்டில் எளிதாக சமாதானமடைந்து விட்டார்கள். ஹரிணி மனதின் பயத்தை வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு.. கம்பெனிக்கு கிளம்பினாள்..
"ஹாய் ஹரிணி..."
தீபக் சிரித்தபோது.. அவனைப் புறக்கணிக்க நினைத்த ஹரிணி - இறுகிய முகத்துடன்.. அவள் என்ன செய்யப் போகிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவை கவனித்தாள். நிதானித்தாள்...
அவனைக் கடுப்படிக்கும் ஆசை அவளுக்குள் கிளர்ந்தது...
'ஆர்டரா போடுகிறாய்...? உன் கண் முன்னால் நான் யாருக்கும் ஹாய் சொல்லக் கூடாதா...?'
"ஹாய் தீபக்.." வாய் நிறைய சிரித்தாள் ஹரிணி.
அவளது சிரிப்பை எதிர்பார்த்திராத தீபக் திக்குமுக்காடிப் போய் விட்டான்.
"யு லுக் வெரி பியுட்டி டுடே.." அவன் வழிய...
"ஈஸிட்...? தேங்க்யு வெரிமச்..." என்று அலட்டிக் கொள்ளாமல் அவனது பாராட்டை அங்கீகரித்தாள் ஹரிணி.
சூர்யாவின் முகம் கருத்து விட்டது.. அதை வெகு சந்தோஷத்துடன் பார்த்தபடி.. அவனைக் கடந்து போனாள் அவள்..

'என்னையா டார்ச்சர் பண்ணுகிறாய்..?' அவள் முகம் இறுகியது.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் -4
உன்னோடு நான் -4
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy