உன்னோடு நான் --2

நரேந்திரனின் டைரிக் குறிப்பு : அவள் கூந்தலில் ஒற்றை ரோஜா இருந்தது.. அடர்த்தியான கரும் நிறத்துடன் அலைபாயும் கூந்தலை.. நீளமாகப் பின்னலிட...

நரேந்திரனின் டைரிக் குறிப்பு :

அவள் கூந்தலில் ஒற்றை ரோஜா இருந்தது.. அடர்த்தியான கரும் நிறத்துடன் அலைபாயும் கூந்தலை.. நீளமாகப் பின்னலிட்டிருந்தாள். அந்த ஒற்றைப் பின்னலும்.. காதோரமாகச் செருகியிருந்த ஒற்றை ரோஜாவும் என்னை அலைக்கழித்தது.. அவளுடன் பேச நான் ஆசைப்பட்டேன்.. அவளது அழகும் மென்மையும் ததும்பும் இயல்பில் நான் வசீகரிக்கப்படுவதை உணர்த்தி விடத் துடித்தேன்.. ஏனோ... என்னால் அது முடியவில்லை.. எது என்னிடமிருந்து அவளை விலகி நிற்க வைத்தது..? ரௌடியைப் போன்ற என் தோற்றமா..? இல்லை.. ரௌடியாக நான் இந்த என்ஜினியரிங் காலேஜில் அறியப்படுகிறேன் என்பதினாலா..? நேற்று வரை, என்னைக் கண்டதும் மற்றவர்களின் கண்களில் தோன்றும் பயம் எனக்குள் ரகசிய சந்தோஷத்தை உற்பத்தி செய்தது.. இன்று அப்படியில்லை.. இந்த ரௌடியின் மனதிலும் காதல் வரும்.. அது அவளிடம் மட்டும் மையம் கொள்ளும்.. அவளை அணைத்து.. முகம் முழுதும் முத்தம் பதித்து.. ஆண்டு விடத் துடிக்கும் என்பதை இன்றுதானே நான் கண்டு கொண்டேன்...?
என்று அவள் கண்டு கொள்வாள்...?

2

அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் உச்சியில் நியான் விளக்கின் வெளிச்சத்தைப் போல.. கரும் பச்சை நிற கிரானைட் கற்களின் மத்தியிலே.. பொன்னிறத்தில் 'தாம்ஸன் சாஃப்ட்வேர் சொலுஷன்..' என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன.. அதன் முன்னாலிருந்த அகன்ற மைதானத்தின் மத்தியில் செயற்கை நீரூற்று பீறிட்டு மேலே எழுந்து.. அதன் வட்டத்துக்குள்ளேயே விழுந்து மறைந்தது..
அந்த வளாகத்தினுள் காரைச் செழுத்தினாள் ஹரிணி.
"ஹாய் ஹரிணி..."
எதிரே வந்த தீபக்கின் முகத்தில் வெளிச்சம் தெரிந்தது..
"ஹாய்.." புன்சிரிப்புடன் அவனைக் கடந்தாள் ஹரிணி..
கண்ணாடிக் கதவின் அருகே நின்று கொண்டிருந்த சூர்யாவின் முகத்தில் கடுமை தெரிந்தது.
அவனைக் கண்டதும் "ஹாய்.." சொன்ன ஹரிணி.. அவனின் கடுமைக்கான காரணம் புரியாமல் திகைத்தாள்..
"வாட் ஹேப்பன் சூர்யா...?"
"அவனிடம் என்ன பேசின...?"
"எவனிடம்...?"
"தீபக்கிடம்...?"
"ஹாய் சொன்னான். பதிலுக்கு ஹாய் சொன்னேன்.."
"அதையும்தான் ஏன் சொல்கிற...?"
"அவன் சொன்னால் பதிலுக்கு சொல்ல வேணாமா..?"
"வேண்டாம்..."
"ஏன்...?"
"நோ மோர் கொஸ்டின்.. சொல்லாதேன்னா சொல்லாதே.. ஐ டோன்ட் லைக் இட்.."
'உனக்கு எதுதான் பிடிக்கிறது...?'
மனதிற்குள் பொருமினாள் ஹரிணி.
அவளையே அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் எப்போதையும் போல.. அப்போதும் அவள் மனதை அரிக்க ஆரம்பித்தது.
அவனது நடையுடை பாவனைகளும், முகமும் உணர்த்தும் 'கண்ணியவான்' என்ற பிம்பம்..
பொய்மை யான ஒன்றென அவள் அறிந்து வெகு நாள்களாகின்றது..
அவளுடன் அறிமுகமான போது அவன் காட்டிய பிம்பம்.. இப்போது அவனிடம் இல்லை..
எதனால் அது நிகழ்ந்தது என்று அவளால் அனுமானிக்க முடியவில்லை..
'ஒரு வேளை.. 'மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. இனி இவளால் என்ன பண்ண முடியும்'ன்னு இவன் நினைக்கிறானோ..'
அவள் உதடுகளைக் கடித்துக் கொண்டு மௌனமாக அவனை ஏறிட்டாள். அழகிய அவனின் முகத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் 'வக்கிர முகம்' அவளுக்கு மட்டுமே புலப்பட்டது.
ஏனோ.. அன்று காலையில்.. சரளாவைப் பார்த்து இமை சிமிட்டிய கிருஷ்ணனின் முகம் அவள் மனதில் வந்து போனது...
அப்படியொரு வாழ்க்கை அவளுக்கு சாத்தியப் படக்கூடும் என்ற நம்பிக்கையை சமீப காலமாக அவள் இழந்து கொண்டிருந்தாள்.
ஒருவேளை அவள் நினைவு பலித்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கலாம்.
"அங்கே உட்காரலாமா...?"
மாலை  நேரத்தில் மட்டும் இயங்கும் அந்த கார்டன் ரெஸ்டாரெண்ட்டின் புல்வெளி அவளை மயக்க.. அந்தப் புல்வெளியின் மையத்தில் இருந்த நாற்காலிகளை அவள் காட்டினாள்.
"எதுக்கு அந்த டேபிளை சூஸ் பண்ணின..?" அவன் குரலில் கடுமை இருந்தது.
"அதுக்குப் பக்கத்திலே பாருங்களேன்.."
வெண்மை நிறத்தில் நீண்ட காதுகளோடு குதித்து ஓடிய முயல் குட்டிகளை ரசித்தபடி கூறினாள் ஹரிணி.
"நினைச்சேன்.. அவனுகளை நீ பார்க்க.. அந்த இடம்தான் தோதுன்னு.."
அவன் பேச்சில் அதிர்ந்து போனாள் ஹரிணி.
'எவனுகளைப் பார்க்க...?'
அவன் பார்வை போன திக்கில்.. அவளும் பார்வையைப் போகவிட்டாள்.. அங்கே இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நான்கு இளைஞர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
'எவ்வளவு கேவலமாக என்னை இவன் எடை போட்டிருக்கிறான்..'
அவளுக்கு 'சுரீர்' என்று மனம் வலித்தது. அந்தச் சூழ்நிலையால் மனதுக்குள் ஏற்பட்ட உற்சாகம் நொடிப் பொழுதில் காற்றில் கரைந்து விட்ட கற்பூரத்தைப் போல மறைந்துவிட்டது.
அவள் சட்டென்று திரும்பி.. காருக்குள் ஏறி ஸ்டார்ட் பண்ணி விட்டாள். அவன் தடுக்கவில்லை. புயல் வேகத்தில் கிளம்பிப் போன அவளின் காரையே உறுத்துப் பார்த்த படி அசையாமல் நின்றிருந்தான்.
இது போன மாதம் நிகழ்ந்த நிகழ்வு..
"இந்த ஸ்டட் புதிதா...?"
"ம்ம்ம்.. அழகாயிருக்கா...?"
அவள் ஆர்வத்துடன் வினவியதற்கு சூர்யா பதில் சொல்லவில்லை. மாறாக.. அவளது கழுத்திலிருந்த அட்டிகை போன்ற அமைப்புடைய நகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்..
"இந்த செயினும் இதோட சேர்ந்த செட்டா...?"
"யெஸ்.. மேட்சா இருக்கில்ல..."
அவளின் அழகை அவன் ரசிக்கிறான் என்ற நினைவில் இயல்பாக அவள் கேட்டாள்.
"எவனை மயக்க இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்திருக்கிற...?"
அவன் நிறுத்தி நிதானமாக.. கூர்மையாகக் கேட்டான். அவன் விழிகளில் குரூரம் மின்னியது. அதன் கொடூர வெளிப்பாட்டில் துடித்துப் போனாள் ஹரிணி.
"சூர்யா..!"
"எதுக்கு சத்தமாப் பேசற..? உன் மனசை நான் கண்டுபிடித்து விட்டேன்கிற ஆத்திரமா...?"
அவன் உமிழ்ந்த வார்த்தைகளால்.. அவனை உமிழ் நீரைப் பார்ப்பதைப் போல.. அருவெறுப்புடன் பார்த்தாள் ஹரிணி.
'இவன் மனசில்தான் எத்தனை அழுக்கிருக்கு..'
"என்ன பார்க்கிற..? அந்த வர்மாப் பயலை மயக்கத்தானே இந்த அலங்காரம்...?"
வர்மாப்பயல் என்று சூர்யாவினால் அழைக்கப்படுகின்ற 'வர்மா'வாகப்பட்டவர் அந்தக் கம்பெனியின் எம்.டி.
அவரின் ஜெனரல் மேனேஜராக வேலை பார்க்கும் சூர்யா... அவர் முன் காட்டும் அடக்கமும்.. மரியாதையும் உயர்வானதாக இருக்கும்..
அவரின் முன்னால் பவ்யம் காட்டிவிட்டு.. ஹரிணியிடம் 'அந்தப் பயல்' என்று சொல்லும் அவனின் தன்மை ஹரிணியைச் சுட்டது..
இந்தப் பேச்சை அவள் ரசிக்கவில்லை.
"சூர்யா.. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.."
"ஐ டோன்ட்மைண்ட்.. வாட் கேன் யு டு..?"
'என்ன செய்வாய்...?' என்று அவன் கேட்கிறான்.. 'என்ன செய்து விட முடியும் உன்னால்..?' என்ற ஆணவமும்.. அகங்காரமும் அவன் வார்த்தைகளில் வெளிப்பகின்றன.
அவளால் என்ன செய்ய முடியும்...?
அவனது விகாரமான மனத்தை வெளிப்படுத்தும் முகத்தைப் பார்க்கப் பார்க்க.. எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆக்ரோஷம் அவள் மனதில் பீறிட்டது.
திருமணத்திற்கு இன்னும் அறுபது நாட்கள்தான் பாக்கி இருந்தன.. திருமண நிச்சயதார்த்தத்தை ஊரும்.. உறவும் அறிய இரு வீட்டாரும் நடத்தி முடித்து விட்டிருந்தார்கள்.
நன்றாக யோசிக்கும்போது.. திருமணம் உறுதியாக.. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பின்னால்தான் சூர்யா தன் சுயரூபத்தைக் காட்டுகிறான் என்பதை ஹரிணியால் புரிந்து கொள்ள முடிந்தது.
எதையும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் அன்று அவள் வீடு திரும்பினாள்.
சோர்ந்திருந்த மனதின் துயரத்தில் அவளுக்கு பசிக்கவில்லை.. ஆனாலும்.. சரளாவின் கோபத்திற்குப் பயந்து.. சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிவிட்டு உறங்கப் போனாள்.
எப்படிப்பட்ட இழிவான வாழ்க்கை அவளுக்கு காத்திருக்கிறது என்ற நினைவில் கண்ணீர் பொங்கியது.
கன்னங்களை நனைத்த கண்ணீருடன் அவள் தூங்கிப் போன நள்ளிரவில்தான் அது நிகழ்ந்தது.
"அழாதே ஹரிணி....!"
அவளது காதுகளில் கிசுகிசுப்பான அந்தக் குரல் ஒலித்தது. வலிமையான ஆண் கரம் ஒன்று அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டது... ஹரிணி அலறிக் கண் விழித்தாள். அறையில் யாருமே இல்லை.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் --2
உன்னோடு நான் --2
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy