உன்னோடு நான் -11

நரேந்திரனின் டைரிக் குறிப்பு : லைப்ரரியின் முன்னால் இருந்த திடலில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கடந்து போகும் பாவனையில் நான் எதிரே...

நரேந்திரனின் டைரிக் குறிப்பு :
லைப்ரரியின் முன்னால் இருந்த திடலில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கடந்து போகும் பாவனையில் நான் எதிரே சென்றேன். என் காலடிச் சப்தத்தில் நிமிர்ந்தவள் சிரித்தாள். நான் நின்றேன். பேசிக் கொண்டிருந்தோம். அவள் கைகயிலிருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். சரத் சந்திரரின் புத்தகம்.
'என்ஜினியரிங்குக்கும்.. சரத் சந்திரருக்கும் என்ன சம்பந்த?' மென்று கேட்டேன்..
'கம்யூட்டர் படித்தால்... இலக்கிய ஆர்வம் இருக்கக்கூடாதா..?' என்று கேட்டாள்.
'சரத் சந்திரர் சோகமான முடிவுகளைத் தரும் கதைகளை எழுதியிருக்கிறவர் ஆயிற்றே' என்றேன்.
அவள் விழிகளில் மின்னல் வந்தது.. எனக்கான இலக்கிய அறிவைக் குறித்த தன் வியப்பை தெரிவித்தாள். நாங்கள் இலக்கியம் பேசினோம். அது குறித்த ஆர்வம் என்பது ஒரு போதை போன்றது என்று சொன்னாள். அது குறித்த தேடலில் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்காவிட்டால் தனிமைப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது என்றாள். அவளின் பேச்சில்.. அந்த தனிமை தெரிந்தது.. ஒவ்வொரு முறை பேசும் போதும் புதிதான ஒரு இயல்பை உணர்த்திக் கொண்டிருக்கும் அவள் மீதான எனது காதல் பொங்கித் ததும்பியது..
அவளுக்குத் தெரியாது.. அவளை அறிவதற்காகவே.. நான் இலக்கியத்தை அறிய ஆரம்பித்தேன் என்பது...

11

விக்ரமின் பார்வையில் வேட்டையாடும் புலியின் வேட்கை தெரிந்தது. எப்படி இவன் அப்பட்டமாக தன் இயல்பை உணர்த்துகிறான் என்று ஹரிணி யோசித்தாள்.
"ஹி இஸ் டேஞ்சரஸ் ஃபெல்லோ.. ஜாக்கிரதையாய் இரு..." என்றாள் ஸ்டெல்லா..
அவள் கண்களில் தோற்று விட்ட சோகம் தெரிய.. ஹரிணி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தாள்..
"உனக்கெப்படித் தெரியும் ஸ்டெல்லா..?"
"பட்டுத் தெரிந்து கொண்டேன்.."
"வாட் டு யு மீன்...?"
"ஐ மீன்.. வாட் ஐ ஸே.. ஒரு காலத்தில் இவன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான்.."
"ஓ..."
"பட்.. வேலை முடிந்ததும் கழண்டு கொண்டான்.."
இந்த ஆண்கள் பெண்களை வீழ்த்த.. காதல் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று வெறுப்புடன் அவள் நினைத்துக் கொண்டாள்..
அந்த நாள் முதல்.. இந்த நாள் வரை.. பெண்கள் வேட்டைப் பொருளாகவும், ஆண்கள் வேட்டைக் காரர்களாகவும் இருப்பதற்கான தாத்பர்யம் என்ன என்று அவளுக்குப் புரியவில்லை.
இரண்டு நபர் சம்பந்தப்பட்ட ஒரு சந்தோசமான அனுபவத்தில்.. பெண்ணுக்கு மட்டும் அவச் சொல்லும்.. அவதூறும் சொந்தமாக -- ஆணுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் போவதற்கான அடிப்படைக் காரணத்தை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒருவருக்கு துக்கமும்.. ஒருவருக்கு கர்வமும் ஒரே நிகழ்வு கொடுக்குமென்றால், அந்த நிகழ்வை என்னவென்று சொல்வது...?
"நீ அவனிடம் கேட்டாயா..?"
"கேட்டேன்..."
"என்ன சொன்னான்...?"
"காதலிக்கிறவங்களையெல்லாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால்.. அவன் ஒரு அரண்மனையைக் கட்டி.. அதில் அந்தப்புரத்தைக் கட்ட வேண்டுமென்றான்.."
என்ன ஒரு ஆணவமான பதில்...?
"அதுக்குப் பின்னாலேதான் தெரிந்தது.. என்னைப் போல அனுபவப்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்ன்னு.."
"உனக்கு இதில் ஒரு பெருமையா..? இல்லை திருப்தியா..?"
சுள்ளென்று கேட்டாள் ஹரிணி..
'யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்..' என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறாள். யான் பெற்ற துன்பம் பெறுக இந்த பெண்குலம் என்பதைப் போல ஸ்டெல்லா பேசுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறாள்..
ஸ்டெல்லா அடிபட்ட பார்வை பார்த்தாள்..
"ஐ ஆம் ஸாரி ஸ்டெல்லா.. எனக்கு கொதிக்குது.. அதுதான்.."
ஹரிணி அவளைக் காயப்படுத்தி விட்ட குற்ற உணர்வுடன் சொன்னாள்..
"இட்ஸ் ஓகே.. நான் தப்பாய் எடுத்துக்கலை.. என்னுடைய முட்டாள் தனத்திற்கு... இதுபோன்ற பேச்சுக்கள் தேவைதான்.."
"லீவ் இட்..."
"ம்ம்ம்.."
அதற்கு மேல் அவர்கள் அதைப்பற்றி பேசவில்லை.
ஹரிணி வளரும்முன் எதையும் வெட்டி விட வேண்டும் என்று நினைத்தாள்.. மனோஜை தயக்கத்துடன் அணுகினாள்..
"இஃப் யு டோன்ட் மைன்ட்.. என்னை வேறு டீமுக்கு மாற்ற முடியுமா..?"
மனோஜ் அவளுடன் ஒரே டீமில் இருப்பவன்.. அவளது அருகாமை அகல்கிறதே என்ற தவிப்பு அவனுக்கு..
"ஏன் ஹரிணி..? இந்த டீமுக்கு என்ன..?"
அவனிடம் அதற்கு மேல் வெளிப்படையாகப் பேச ஹரிணிக்கு யோசனையாக இருந்தது..
'இந்த டீமின் லீடர் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன். அதனால், வேறு டீமுக்கு மாற்றி விடு என்று ஒரு அந்நிய ஆணிடம் எப்படிச் சொல்வது...?'
சற்றுத் தயக்கத்துக்குப் பின் பதிலே சொல்லாமல் மௌனமாக வெளியேறும் ஹரிணியைப் பார்த்து வியப்புடன் கல்லாய்ச் சமைந்தான் மனோஜ்.
"அண்ணா...."
கார்த்திக் தனியாக.. போர்டிகோவில் நின்று கொண்டிருந்தபோது அவனை நெருங்கினாள் ஹரிணி.
"என்னம்மா..? ஏதும் பிரச்சினையா..?"
"ம்ம்ம்..."
"என்ன..? எதுவாக இருந்தாலும் மனோஜிடம் சொல்லியிருக்கலாமே.. ஹி இஸ் எ வெரிகுட் பெர்ஸன். அந்த சூர்யாவைப் போல இல்லை. மனோஜிடம் பழகிப் பார்.. உனக்கே புரியும்.."
கார்த்திக் மறைமுகமாக தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்டான்.
இது வேறா..? என்றிருந்தது ஹரிணிக்கு..
"இப்போதைக்கு என் மனசில் எந்த நினைப்பும் இல்லண்ணா, ஐ நீட் பீஸ் ஆஃப் மைண்ட்.."
"ஓ.கே.. அதைப் பத்தி இப்ப பேச வேணாம். ஆனா.. அந்த நினைவிலிருந்து நீ வெளியில் வந்த பின்னாலே மனோஜைப் பத்தி யோசி.."
"ம்ம்ம்.."
"இப்ப என்ன பிரச்சினைன்னு சொல்லு.."
"மனோஜிடம் சொல்ல முடியாத பிரச்னை.."
"ஏன்...?"
"அவர் எனக்கு அண்ணனில்லையே.."
கார்த்திக்கின் புருவங்கள் முடிச்சிட்டன.. ஹரிணி.. பிரச்சினையைக் கூறினாள். அவன் முகம் மாறி விட்டது.. தீவிரம் குடி கொண்டது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் -11
உன்னோடு நான் -11
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodunaan11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy