உன்னோடு நான் -10

நரேந்திரனின் டைரிக் குறிப்பு : இப்போதெல்லாம் அவள் என்னைக் கண்டு பயப்படுவதில்லை. நின்று பேசுகிறாள். திரும்பவும் எனக்கு அவள் நன்றி சொன்ன...

நரேந்திரனின் டைரிக் குறிப்பு :

இப்போதெல்லாம் அவள் என்னைக் கண்டு பயப்படுவதில்லை. நின்று பேசுகிறாள். திரும்பவும் எனக்கு அவள் நன்றி சொன்னபோது.. 'வெறும் நன்றி மட்டும் தானா..?' என்று கேட்டேன். அவள் புரியாத பார்வையுடன் 'வேறென்ன வேண்டும்..?' என்று கேட்டாள். 'ஒரு கப் காப்பி வாங்கித்தர முடியுமா..?' என்று முகத்தை சோர்வுடன் வைத்துக் கொண்டு கேட்டேன். சிரிக்கும் என் கண்கள் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டன. வாய்விட்டு ரசித்துச் சிரித்தாள். காபி ஷாப்பிற்குப் போனோம்... இயல்பாகப் பேசினாள். எந்த வித உரிமையும் கொடுக்காமல் அதேசமயம் என்னைத் தள்ளியும் நிறுத்தாமல், ஒருவித தோழமையுடன் அவள் பேச்சு இருந்தது. என்னைக் கண்டு பயந்தாளாம்.. ஏன் என்று கேட்டேன். மற்றவர்கள் அப்படிச் சொன்னதாகச் சொன்னாள். மற்றவர்களின் சொல்லைக் கேட்டுத்தான் ஒருவரை எடைபோடுவீர்களா..? என்றேன். அவள் வியந்தாள். என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள். 'முரட்டுத் தோற்றத்திலும் கண்ணியவான்கள் இருக்கிறார்கள். வொயிட்காலர் சர்ட்டிலும் அயோக்கியர்கள் ஒளிந்திருக்கிறார்கள்' என்று சொன்னேன். அவளது ஆச்சரியம் அதிகரித்தது. சுற்றியுள்ள உலகம் அவளுக்கு கற்பித்துக் கொண்டு இருக்கிறது என்றாள். என்னிடம் அவள் கற்ற பாடம் இதுவென்றாள். இறுதிவரை எனது இந்த வார்த்தைகளை மறக்க மாட்டேன் என்றாள். அவளை நான் இறுதி கடந்தும் மறக்க மாட்டேன்.. இதைத் தெரிந்து கொள்ளாமலே போய்விட்டாள்.

10

ஹரிணி தப்பித்தாள் என்று கிருஷ்ணன் ஆறுதல்பட்டார்.. இதை சூர்யா உயிரோடிருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பாரா என்று எண்ணிக் கொண்டாள் ஹரிணி..
அளவுக்கு அதிகமான போதையுடன் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் தான் சூர்யா இறந்து விட்டான் என்பதால் ஹரிணியின் மனதிலிருந்த குற்ற உணர்வு அகன்று விட்டது..
"அந்தக் கம்பெனிக்கு நீ போக வேண்டாம்..." என்றான் கார்த்திக்..
"ஏண்டா...?"
"பழைய நினைப்பில இவ அழுதிருவாப்பா.. அந்த நினைவுகளுக்குக்கூட அவன் லாயக்கானவனில்ல. ராஸ்கல்.. ஜென்டில்மேன் வேசம் போட்டு நம்மை நம்ப வச்சிருக்கான்..."
"அதைச் சொல்லு..."
"என்ன அதைச் சொல்லுன்னு நீங்களும் இசைப்பாட்டு பாடறீங்க..? நீங்கதானே அவனை ஆஹா.. ஓஹோன்னு புகழ்ந்திங்க.. சிகரெட் பழக்கம் கூட இல்லைன்னீங்க.. கடைசியில் பார்த்தால் அவன் டிரக்ட்-அடிக்ட்.."
"என்னையே குற்றம் சொன்னால் எப்படிடா..? நீயும் இவளுக்கு அண்ணன்தானே.. பொறுப்பாய் விசாரிச்சிருக்க வேண்டியதுதானே.. யாரு உன் கையைப் பிடிச்சது..?"
"எங்கே விசாரிக்கிறது...? எவனைக் கேட்டாலும் அவன் நல்லவன்னு செர்டிபிகேட்டைக் கொடுத்தான். அப்பவே நான் சந்தேகப்பட்டேன். மனுசன்னு இருந்தா ஒண்ணு ரெண்டு குறைகள் இல்லாம இருக்காதான்னு.. இவன் இப்படி ஓவரா நல்லவன் வேசம் போடுகிறானே.. நடிக்கிறானோன்னு நினைச்சேன்.. என் நினைப்பு சரியாகப் போய்விட்டது.."
"சொல்லாதே கார்த்திக்.. பயமாயிருக்கு.. பெண்கள் விசயத்தில் படுமோசமானவனாமே..."
"அன்னைக்கும் அதுமாதிரி இடத்துக்குத்தான் போய் விட்டு வந்து கொண்டிருந்தானாம்.."
"இதை யாருடா சொன்னது...?"
"அவன் கூட காரில் இருந்தவனுக சொன்னாங்க.."
"அதெப்படிடா கார்த்திக்.. அவனுக ஐந்து பேர் காரில் இருந்திருக்கானுங்க.. காரும் மரத்தில் மோதியிருக்கு.. இவன் மட்டும் போய் சேர்ந்துட்டான். மத்த நாலு பேருக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லாம தப்பிச்சிருக்கானுகளே..."
ஹரிணியின் உடலில் அதிர்வு வர..
"என்னம்மா..." என்று கவலையுடன் அவளைப் பார்த்தார் கிருஷ்ணன்.
கார்த்திக் யோசனையுடன் தங்கையைப் பார்த்தான்.. சூர்யாவைப் பற்றிய பேச்சைத் தொடர வேண்டாம் என்று மற்றவர்களுக்கு கண் சமிக்ஞை செய்தான்.
"அப்ப.. ஹரிணி வீட்டிலிருக்கட்டும்ன்னு சொல்றியா..?" கிருஷ்ணன் பேச்சை மாற்றினார்.
"நோ.. நோ.. நான் அப்படிச் சொல்லலை.. இவ டேலன்ட் பெர்ஸன். இவ எதுக்கு வீட்டிலிருக்கணும்..? அந்தக் கம்பெனி இல்லைன்னா வேற ஒண்ணு.."
ஹரிணி கார்த்திக்கின் நண்பன் வேலை பார்த்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள்...
"வேலை பிடிச்சிருக்கா....?"
இதமாக வினவிய மனோஜின் கண்களில் எதுவோ இருந்தது..
"பிடிச்சிருக்கு..?" என்றாள் ஹரிணி..
"எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. எந்த உதவியா இருந்தாலும் என்கிட்டக் கேளுங்க.. நீங்க கார்த்திக்கின் தங்கை.. உங்களுக்கு உதவி செய்கிறது என் கடமை.."
அவன் விழிகளில் கடமையைத் தாண்டிய ரசனையிருக்க.. ஹரிணி பார்வையை விலக்கிக் கொண்டாள்..
"தேங்க்யு சார்.. தேவைப்பட்டால் கேட்கிறேன்.."
அவளுக்கு தேவையிருக்கவில்லை. ஆனாலும் அவன் அவள் முன்னால் வந்துநின்றான். அவளது புரொஜெக்ட்டில் உதவிகளைச் செய்தான். அவள் கேட்காமலே அவளது வேலைகளை முடித்துக் கொடுத்தான்.
"வெட்டியாய் சம்பளம் வாங்க வைக்கறீங்களே.."
அவள் ஜாடையாக தடுத்துப் பார்த்தாள்.. அவன் கேட்கவில்லை.
"ஸோ வாட்...? உங்களின் பொன்னான கைகள் புண்ணாகக் கூடாது..."
"இது பழைய பாட்டாச்சே..."
"ஹி.. ஹி.. கேட்டிருக்கிங்களா...?"
"நீங்களே கேட்டிருக்கும்போது.. நான் கேட்டிருக்க மாட்டேனா...?"
மனோஜின் வழிசலில் விரசமில்லாமல் இருந்தது.. அவனின் ஆர்வத்தில் குற்றம்.. குறை எதுவும் இல்லாததால் ஹரிணி புன்னகையோடு அவனைப் பொறுத்துக் கொண்டாள்..
அப்போதுதான் அவர்களின் டீம் லீடரான விக்ரம் அவளை சந்தித்தான்.
"நான் ஒரு புரொஜெக்ட் விசயமா யு.எஸ்.ஏ. போயிருந்தேன்.. திரும்பி வந்து பார்த்தா.. என் டீமே களை கட்டுதே..."
அவன் விழிகளில் தெரிந்த ஆர்வம்.. மனோஜின் ஆர்வத்தைப் போல பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை..
அவன் பார்வையாலேயே அவளை மேய்ந்தான்.. ஹரிணி உடல் கூசிப்போனாள்..
சட்டென்று எழுந்து கொள்ளவும் முடியவில்லை.. அவனைத் தவிர்த்து அவளால் வேலை செய்ய முடியாது.. அவன் அவளுடைய டீம் லீடர்.

இயல்பாகத் தொடுவதைப்போல.. அவன் அவள் தோள் தொட்டு விலகினான்.. அவனது கைகள் பட்டவிதத்தில் அவள் அதிர்ச்சியடைந்தபோது அவன் எதுவுமே நடக்காததைப் போல அவள் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் -10
உன்னோடு நான் -10
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApk/c3GWLciN9rgufo7W8jvw4MnTFWCZ0RjYQCPcBGAYYCw/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodonaan10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/unnodonaan10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy