பொதிகையிலே பூத்தவளே -32

32 ரப்பர் பேக்டரியின் மேனேஜரும் கிரியைப் போல இளம் வயதுதான்.. ஆனால் கிரியைப் போல கண்ணியமாக சகோதரப் பாசத்துடன் கூடிய பார்வையை அவனது விழி...

32

ரப்பர் பேக்டரியின் மேனேஜரும் கிரியைப் போல இளம் வயதுதான்.. ஆனால் கிரியைப் போல கண்ணியமாக சகோதரப் பாசத்துடன் கூடிய பார்வையை அவனது விழிகள் பிரதிபலிக்கவில்லை.. மீனாவைக் கண்டதும் அவனையுமறியாமல் 'வாவ்..' என்று வாய் விட்டு விட்டு, அவள் பின்னால் வந்த விஷ்வாவின் கடுமையான முக பாவனையில் வாயை மூடிக் கொண்டான்..
மீனாவின் நெருப்புப் பார்வையில் அவனது முகம் மாறியது.. விஷ்வாவுக்கு அது திருப்தியாக இருந்தது.. பேக்டரியைச் சுற்றிப் பார்த்து விட்டு மீனா கணக்குகளை பார்க்க வேண்டுமென்றாள்..
"வாட் ஃபார்..?" வினோத் என்ற நாமகரணம் கொண்ட அந்த இளைஞன் அதட்டினான்..
"கண்ட்ரோல் யுவர் டங் வினோத்.." விஷ்வா அவனைவிட அந்த சப்தமாக அதட்டினான்..
"ஐ ஆம் ஹியர்.. மைண்ட் இட்.."
"ஸாரி சார்.. அக்கவுண்ட்ஸை நீங்க பார்க்கனும்னு கேட்டிருந்தா அப்ஜெக்ட் பண்ணியிருக்க மாட்டேன்.."
"ஓ..! அதையும் செய்வியா..? ஆப்டர் ஆல்.. யு ஆர் எ மேனேஜர் ஆஃப் திஸ் பேக்டரி.. ரிமம்பர் மேன்.. ஐ அம் த ஓனர் ஆஃப் திஸ் பேக்டரி.."
"ஸாரி சார்.."
"மீனா இஸ் தி சீனியர் மேனேஜர்.. கானாடு கிரியில் இருக்கும் என்னுடைய அத்தனை பிஸினெஸ்ஸீம் இவங்க கண்ட்ரோலுக்கு கீழேதான் ரன் ஆகனும்.. இவங்க எப்ப இங்கே விசிட் கொடுத்தாலும் நீ மரியாதையா ரிஸீவ் பண்ணி, இவங்க கேட்கிற டீடெயில்ஸை கொடுத்தாகனும்.. சப்போஸ் உன் வொர்க்கில இவங்க ஏதாவது ஃபால்ட் கண்டுபிடிச்சா - இம்மீடியட்டா டிஸ்மிஸ் பண்ணும் பவர் இவங்களுக்கு இருக்கு.."
"வாட்..?"
"யெஸ் வினோத்.. என்னால் எப்போதும் கானாடுகிரியிலேயே இருக்க முடியாது.. மத்த பிஸினெஸ்களையும் நான் பார்த்தாகனும்.. இங்கே நான் இல்லாத நாள்களில் என்னவெல்லாம் நடக்குதுன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..?"
"ஐ ஆம் இன்னொஸென்ட் சார்.."
"ஷட் அப் மேன்.. யாரைக் கேட்டு அந்த ஃபாரின் காண்ட்ராக்டில் சைன் பண்ணின..? அதற்கான அத்தாரிட்டி நான்.. யு ஆர் ஒன்லி எ மேனஜேர்.."
"சார்.. உங்க அண்ணன்தான் சைன் பண்ணச் சொன்னார்.."
"வினோத்.. இது என்னுடைய பேக்டரி.. நான்தான் உன் பாஸ்.."
"உங்க அண்ணன் அப்படிச் சொல்லலையே சார்.. நீங்க வேறு அவர் வேறுன்னு இல்லைன்னு சொன்னாரே .."
பணிவுடன் பேசினாலும் அந்த வினோத்தின் விழிகளில் கள்ளமும் கபடமும் அப்பட்டமாக மின்னின.. விஷ்வாவின் விழிகள் கோபத்தில் மின்னின.. அதில் அந்த வினோத் பயம் கொண்டான்..
திரும்பி வரும்போது விஷ்வா இறுக்கமான முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.. மீனாவுக்கு ஆறுதலாக எதையாவது பேச வேண்டும் போல இருந்தது.. என்ன பேசுவது..? அவனுடைய அண்ணன் விஷ்வாவிற்கு தொந்தரவு கொடுப்பது புரிந்தாலும் அதைப் பற்றி வெளிப்படையாக அவள் கேட்க முடியுமா..?
'எப்படி பேச்சை மாற்றுவது..?'
யோசனையுடன் பார்த்தவளின் பார்வையில் தொலைவில் தெரிந்த நான்கு கோபுரங்கள் பட்டன..
"மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களைப் போலவே இருக்கே.." வியப்புடன் சொன்னாள்..
விஷ்வாவின் புருவச் சுளிப்பு மாறியது.. அவளை எப்போதும் பார்க்கும் கள்ளப் பார்வை பார்த்தபடி..
"அது மீனாட்சியம்மன் கோவில்தான்.." என்றான்..
"நிஜமாவா..?" மீனா துள்ளிக் குதிக்காத குறையாக கேட்டாள்.
"நிஜம்தான்.. எங்க குலதெய்வம் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும்தான்.. இது உனக்குத் தெரியாதா..?"
"ஏன் தெரியாது..? அதுதான் உங்களோட புகழ் பரப்பும் மேனேஜர் ஆறுமுகம் சார் இருக்கிறாரே.. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிடி மண் எடுத்து வந்து அச்சு அசல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் போலவே நான்கு கோபுரங்களோட கோவில் கட்டி வைச்சிருக்கீங்கன்னு சொன்னாரே.."
"நான் கட்டலை.. என் முன்னோர்கள் கட்டி வைச்சிருக்காங்க.."
"நானும் உங்களை மட்டும் மீன் பண்ணிச் சொல்லலை சாரே.."
விஷ்வா சட்டென அவளைப் பார்த்த பார்வையில் அவள் குறுகுறுத்தாள்..
'இப்போ எதுக்காக இப்படிப் பார்க்கிறானாம்..? இங்க என்னாத்தைக் கண்டுட்டானாம்..' கேள்வி எழுந்தாலும் மனது அவனது அந்த பார்வையை விரும்பியது..
"எத்தனை நாளாச்சு இதைக் கேட்டு.."
"எதை..?"
"சாரே.." அவளைப் போலவே சொல்லிக் காட்டியவன்..
'இதை..' என்று கண் சிமிட்டினான்..
மீனாவுக்குள் எதுவோ நிகழ்ந்தது.. மொட்டு விரித்து மணம் பரப்பும் கன்னிப் பருவத்தின் நூதன உணர்வலைகள் நெய்யும் வினோதங்கள் கிறுகிறுக்க வைப்பவை..
'ஊஹீம்.. இது கூடாது.. இவனை ரசிக்க ஆரம்பித்தா அது வில்லங்கத்தில்தான் முடியும்..' மனதை இழுத்துப் பிடித்தபடி..
"அம்மா, அப்பா, மோகனாவோடு இந்தக் கோவிலுக்கு வரனும்.. இங்கேயும் நான்கு கோபுரத்தோடு மீனாட்சியம்மன் கோவில் இருக்குன்னு தெரிஞ்சா அவங்க சந்தோசப்பட்டுப் போவாங்க.." என்று அவனது கண்சிமிட்டலைக் கவனிக்காததைப் போலச் சொன்னாள்..
"அவங்களுடன் அப்புறமா  வா .. என்னுடன் இப்போது வா.."
விஷ்வா கோவிலுக்குச் செல்லும் பாதையில் காரைத் திருப்பினான்.. வழுக்கிக் கொண்டு பான தார் ரோடு கோவிலில் சென்று நின்றது.. கோவில் கோபுரங்களை அண்ணாந்து பார்த்த மீனா கண்களில் நீர் மல்க கன்னத்தில் போட்டுக் கொண்டாள்..
"மீனாட்சி.."
வாய்விட்டுச் சொன்னவளின் பக்தியில் கட்டுண்டவனாக அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஷ்வா..
கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் இருக்கும் அன்புக் கயிறு வலிமையானது.. எவராலும் அறுக்க இயலாத திண்மை கொண்டது.. பக்தர்கள்  அழைக்கும் குரலுக்கு கடவுள் ஓடோடி வருவார்.. தெய்வத்தின் மீது அன்பு வைத்தால் அனைத்தும் தெய்வமாக மனம் விட்டுப்பேசத் தோன்றும்.. ஒப்பிக்கத் தோன்றும்..
மீனாவும் அந்த நிலையில்தான் இருந்தாள்..
"உன் நிழலை விட்டு வந்துட்டேன்னு மருகினேனே.. இங்கேயும் உனக்கு நானிருக்கேன்னு கூப்பிட்டிருக்கியா..?"
கரகரவென அழுதவளின் தோள்மீது கைபோட்டு..
"ஏய்ய்.. பைத்தியம்.." என்று சிரித்தான் விஷ்வா..
"நான் பைத்தியம்தான்.. மீனாட்சி பைத்தியம்.." மீனா வெட்கத்துடன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
"என்னைப் பைத்தியமாக்கற பேரழகின்னு நினைச்சுக்கிட்டு இருந்தா நீ மீனாட்சி பைத்தியமா இருக்கிற.."
அவளை ஊன்றிப் பார்த்தபடி விஷ்வா சொல்ல.. மீனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
"என்னது..?" அவள் அதிர்ச்சியுடன் திரும்ப..
"ஒன்றுமில்லையே.." என்று சாதாரணமாகச் சொல்லியபடி காரை விட்டு இறங்கி விட்டான் விஷ்வா..
"இல்லை.. நீங்க இப்ப எதையோ சொன்னீங்க.."
"எதையோ ஏதோ நினைவில் சொல்லியிருப்பேன் மீனா.. காரை விட்டு இறங்கு.. கோவில் நடை சாத்தறதுக்குள்ள வணங்கிட்டு வந்துவிடலாம்.."
வேறுவழியின்றி காரை விட்டு இறங்கினாள் மீனா.. அவனுடன் சேர்ந்து கோவிலுக்குள் நடந்தபோது நன்றாக இருந்தது.. மனதுக்குள் மோகனா சொன்ன.
'இவரே மாமாவா வந்தா நல்லா இருக்கும்க்கா..' என்ற வார்த்தைகள் ஒலித்தன..
ஏக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.. உயரமாய், கம்பீரமாய், அழகாய் இருந்தவனின் தோற்றம் அவளை ஈர்க்க அவசரமாகத் திரும்பிக் கொண்டாள்..
'இவன் மத்தவங்களைப் பைத்தியமாக்குவான்.. இவனை நான் பைத்தியமாக்கறேனாம்.. இதை நம்பினா என்னைவிட பைத்தியக்காரி யாருமில்லை..' விரக்தியுடன் விலகி நடந்தாள்..
"ப்ம்ச்.." அதை ஆட்சேபித்து அதட்டினான் விஷ்வா.
'ரொம்பத்தான்..' உதட்டைச் சுழித்து அவள் அழகு காட்ட..
"பெண்டாஸ்டிக்.." என்று ரசித்து வைத்தான்..
மீனாட்சியம்மன், சொக்கநாதரை வணங்கிக் கொண்டிருந்தபோது மீனா தன்னையுமறியாமல் பாடினாள்.. அம்மனின் அலங்காரத் தோற்றம் மெய்சிலிர்த்து பாட வைத்தது..
"கொண்டைமுடி அலங்கரித்து..
              கொஞ்சும் கிளி கையில் வைத்து..
     அஞ்சுக மொழி உமையாள்
              வீற்றிருந்தாள்.. அந்த
     அழகிய மாநகர் மதுரையிலே..
              மதுரையிலே.. மதுரையிலே.. மதுரையிலே.."
தேனினும் இனிய குரலில் அவள் பாடியதில் அங்கே அமைதி நிலவியது.. அவள் பாடி முடித்த பின்னால்தான் அர்ச்சகர் ஆராதனை நடத்தினார்..
"இந்தப் பெண்தான்.. புதிதாக வந்திருக்கும் சீனியர் மேனேஜரா விஷ்வா..?." என்ற பெண் குரலில் ஏறிட்டுப் பார்த்தாள்..
பார்த்தவுடன் ராணி என்று சொல்லி விடலாம்.. ஜெயபிரதாவைப் போன்ற காவிய அழகு.. அழகிய வேலைப்பாடுகளுடன் ஒளிர்ந்த வைர நகைகள்.. உயர்ரகப் பட்டுப்புடவை.. கண்களில் ஓர் ஒளியென்று தனித்துப் பிரகாசித்தாள் அந்தப் பெண்மணி.. பக்கத்தில் குடும்பத்தார்..
"ஆமாம் அம்மா.."
விஷ்வா பதிலளித்ததில் மிரண்டு போனவளாக அணிச்சையாக நகர்ந்து அவன் பின்னால் மறைவாக நின்று கொண்டாள் மீனா..
விஷ்வாவின் அம்மா நித்ய கோகில வாணியின் நெற்றி சுருங்கியது.. அவள் பக்கத்தில் உயரமாக, ஓங்கு தாங்காக ஆச்சிமரம் போல கம்பீரமாக நின்றிருந்த ஜமீன்தார் கோபிநாதனும் புருவங்களைச் சுருக்கினார்.. சற்றுத் தள்ளி நின்று மீனாவை இகழ்ச்சியும் குரோதமுமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வாவின் அண்ணன் ரங்கநாதன்.. அவனருகில் அழகே உருவாக நின்றிருந்த அவனது மனைவி அனுபமா தேவியின் விழிகளில் துளிக்கூட நட்பில்லை.. மிடுக்கும், கர்வமும், நீயெல்லாம் எனக்கு நிகரா என்ற ஆணவமும் செருக்கும்தான் இருந்தன.. அவள் கையில் இருந்த இரண்டு வயது ராமநாதன்..
"சித்தப்பா.." என்று விஷ்வாவிடம் தாவ யத்தனித்தான்..
"ராம்.." அனுபமா மகனை அதட்டினாள்..
"ஹாய்.." அழகின் திருவுருவமாக தேவதையைப் போல நின்றிருந்த ரூபிணி மட்டும்தான் மீனாவிடம் கை நீட்டினாள்..
"என் தங்கை ரூபிணி.." பெருமையுடன் அறிமுகப் படுத்தி வைத்தான் விஷ்வா..
மூச்சு முட்டுவதைப் போன்ற அந்த இறுக்கமான சூழ்நிலையில் சிறு விடுதலையுணர்வைத் தந்த ரூபிணியை நன்றியுடன் பார்த்தாள் மீனா.. அவள் பேச வாய் திறப்பதற்குள் ரங்கநாதனின் குரல் கோபமாக ஒலித்தது ...
"குட்..! உன்னிடம் வேலை செய்பவர்களை லிமிட்டைக் கிராஸ் பண்ண விடுகிறாய் விஷ்வா.. எம்ப்ளாயீஸிக்கும் நம் ஃபேமிலிக்கும் என்ன சம்பந்தம்..? முதலில் இந்தப் பெண்ணுடன் சேர்ந்து நீ கோவிலுக்கு வரலாமா..?"
அவமானத்தில் மீனாவின் முகம் சிறுத்து விட்டது.. அவளா விஷ்வாவுடன் கோவிலுக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டாள்..?
"போனவாரம் இந்தப் பெண்ணுடன் இவள் தங்கையையும் அழைத்துக் கொண்டு குன்னூர் கான்வெண்டிற்குப் போயிருக்கிறாய்.. அங்கே இந்தப் பெண்ணின் தங்கைக்கு அட்மிசன் போட்டிருக்கிறாய்.. என்ன விஷ்வா இது..? யார் இவள்..?"
ரங்கநாதனின் உரத்த குரலில் மீனா கூனிக் குறுக.. விஷ்வா..
"உஸ்ஸ்.." என்று ஒற்றை விரலை வாயில் வைத்து எச்சரித்தான்..
"யார் இவள்ன்னு அம்மா, அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன் அண்ணா.. அவங்களிடம் கேட்டுக் கொள்ளுங்க.. தேவையில்லாமல் என்னைத் துப்பறிய வேண்டாம்.. அது என்ன..? உங்க எஸ்டேட், பேக்டரிக்களை விட்டு விட்டு என்னுடைய எஸ்டேட், பேக்டரிக்கள் மீதே கண்வைப்பது..? அங்கே யார் புதிதாக வேலைக்கு வந்தாலும் ஃபுல் இன்பர்மேசனை கேதர் பண்ணி விடறீங்களே.. ஏன்..? நான் உங்களைத் துப்பறிகிறேனா..?"
"அது.. அது.."
விஷ்வா நேரடிக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனான் ரங்கநாதன்.. நித்ய கோகிலவாணி இளைய மகனை ஓர் மௌனப் பார்வை பார்த்து விட்டு நடந்து விட்டாள்..
குடும்பத்தினருடன் போகாமல் மீனாவைப் பார்த்த விஷ்வா..
"போகலாமா..?" என்று கனிவுடன் கேட்டபோது மீனாவுக்கு மலையளவு ஆறுதல் மனதில் வந்தது..
காரிருள் நிரம்பிய கானகத்தில் வழி தவறியவளுக்கு விளக்கின் ஒளியோடு வழிகாட்டி அழைத்துச் செல்லும் தேவனாக விஷ்வா அவளது கண்களுக்குத் தோன்றினான்..
"ஏன் உங்க அண்ணா இன்சல்ட்டா பேசறார்..?" காரில் போகும்போது குழந்தை போலக் கேட்டாள்..
"அதுவா..? உனக்குத் தெரியாதது என் அண்ணனுக்குத் தெரிந்திருக்கிறது.." பூடகமாகப் பதில் சொல்லிவிட்டு விழிகளைச் சிமிட்டிச் சிரித்தான் விஷ்வா..
எப்போதும் கோபப்படுத்தும் அவனது கண்சிமிட்டலும் சிரிப்பும் அப்போது அவளைக் கோபப் படுத்தவில்லை.. பதிலுக்கு மென்மையாகச் சிரித்தவளைப் பரிவுடன் பார்த்த விஷ்வா..
"டோன்ட் வொர்ரி.. உனக்கு நானிருக்கிறேன்.." என்றான்..



Name

அகல்விளக்கு,20,அடுத்தடுத்து,1,அழகான ராட்சசியே,3,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,100,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,283,என்னவென்று நான் சொல்ல ?,117,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,24,நிலாக்கால நினைவுகள்,28,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,108,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,40,மகராசி,1,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -32
பொதிகையிலே பூத்தவளே -32
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy