பொதிகையிலே பூத்தவளே -30

                                   30 மீனா பதில் சொல்லாததில் விஷ்வாவின் இதழ்களில் இளநகை அரும்பியது.. அதைக் கண்ட மீனா வெகுண்டாள்.. &q...

                                   30

மீனா பதில் சொல்லாததில் விஷ்வாவின் இதழ்களில் இளநகை அரும்பியது.. அதைக் கண்ட மீனா வெகுண்டாள்..
"பயம் காட்டத்தான் கானாடுகிரிக்கு டிரான்ஸ்பர் கொடுத்தீங்களா..?" என்று சண்டைக்குப் போனாள்..
"நீ பயப்படுகிற ஆள்தான்.." எளிதாக அவளது கோபத்தை புறம் தள்ளியபடி காரை விட்டு இறங்கினான் விஷ்வா..
"வாங்க.. வாங்க.."
மோகனா தகவல் சொல்லியதில் பதறியடித்து ஓடிவந்த புனிதா கை குவித்து விஷ்வாவை வரவேற்றாள்.. மீனா இவ்வளவு பதட்டம் எதற்கு என்ற நினைவுடன் புனிதாவை விழிகளால் அதட்டினாள்.. எதற்காக மகள் கடிந்து கொள்கிறாள் என்று புரியாமால் ஜாடையில் என்னவென்று வினவினாள் புனிதா.. ஒன்றுமில்லையென்ற பாவனையில் தலையை அசைத்து விட்டு உள்ளே போய் விட்டாள் மீனா.. அங்கே கைகட்டி வாய் பொத்தாத குறையாக நின்றிருந்த பூவாயியைப் பார்த்த விஷ்வா..
"டிக்கியில் இருக்கிற திங்ஸை எடுத்துக்கொண்டு வா.." என்று கட்டளையிட்டான்..
"இதோங்கய்யா.." பூவாயி ஓடினாள்..
நின்ற இடத்திலிருந்து சாவியை இயக்கி டிக்கியைத் திறந்து விட்டான் விஷ்வா.. அவசரமாக உள்ளேயிருந்த பொருள்களை எடுத்து வராண்டாவில் கடை பரப்பி விட்டு டிக்கியை மூடினாள் பூவாயி.. சாவியை இயக்கி டிக்கியை பூட்டி விட்டு விஷ்வா உள்ளே போனான்.. ஹாலில் இருந்த மூர்த்தி, விஷ்வாவைக் கண்டதும் எழுந்து கொள்ள முயன்றார்..
"நோ.. நோ.." அதை மறுத்த விஷ்வா, அவரருகே உட்கார்ந்து..
"இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க..?" என்று ஆதரவாக வினவினான்..
"ஒரு பிராப்ளமும் இல்லை.. உடம்பும் மனசும் லேசா இருக்கு.." நன்றியுடன் சொன்னார் மூர்த்தி..
"இதுதான் வேண்டும்.. நிம்மதியா இருங்க.. எவரி திங் வில் பி ஓகே.." என்றான் விஷ்வா..
'அப்படியா..? எல்லாமே சரியாகி விடுமா..?' உள்ளறையிலிருந்து அவனைப் பார்த்த மீனா மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்..
அலைபாயும் முடியைக் கையால் தள்ளி விட்டபடி வரிசைப் பற்கள் தெரிய சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த விஷ்வாவின் அழகில் மனம் மயங்கியது.. அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்ததில் திடுக்கிட்டுப் போனாள் மீனா..
'எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடாதே..' மனதை அதட்டினாள்..
கன்னியர் மனம் படறத் துடிக்கும் கொடியைப் போன்றது.. ஆறுதலாகப் பேசும் அழகனிடம் படர்ந்து விடுகிறது..
பூவாயி கொண்டு வந்த பொருள்களைப் பார்த்த மூர்த்தி வியப்புடன்.
"இதெல்லாம் என்ன..?" என்றார்..
அதற்கான பதிலை விஷ்வாவை சொல்ல விடுவது நாகரிகமாக இருக்காது என்ற நினைவுடன் அறையை விட்டு வெளியே வந்த மீனா..
"மலைவாழ் மக்கள் தயாரிக்கிற கைவினைப் பொருள்கள் உற்பத்தி பண்ற பேக்டரிக்குப் போயிருந்தோம்ப்பா.. அந்த பேக்டரியோட மேனேஜரோட வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.. அவங்க மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவங்க.. அங்கேதான் அவங்க ஊர் இருக்கு.. அவங்கம்மா மலையில கிடைக்கிற அத்தனை அயிட்டங்களையும் மூட்டை கட்டி அனுப்பி வைச்சிருக்காங்க.." என்று சொன்னாள்..
"வீடே நிறைஞ்சிருச்சு.." ஆச்சரியத்துடன் சொன்னபடி காபி டிபனுடன் வந்தாள் புனிதா..
சுடச்சுட பஜ்ஜி.. காபி..! விஷ்வா விரும்பிச் சாப்பிட்டான்.. அதைப் பார்த்த மீனாவுக்கு நிறைவாக இருந்தது..
"பஜ்ஜியும் காபியும் படு டேஸ்ட்.." புனிதாவைப் பாராட்டினான்..
"அம்மாவோட கைப்பக்குவம் அப்படி.." பெருமையாகச் சொன்னாள் மீனா..
"இவ அப்படித்தான் சொல்லுவா.." கூச்சத்துடன் சிரித்தாள் புனிதா..
அவர்கள் இருவரும் மாற்றாந்தாய், மூத்ததாரத்தின் மகள் என்று சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான் விஷ்வா.. பெற்ற தாயும், மகளும் போல அப்படியொரு பாசப்பிணைப்பு.. பேச்சுக்குக்கூட புனிதா தனது சிற்றன்னை என்று மீனா சொன்னதில்லை.. ஆறுமுகத்தின் மூலம் அவளது குடும்ப விவரங்களைத் தெரிந்து வைத்திருந்த விஷ்வாவுக்கு அந்தத் தாய், மகளின் பாசப் பிணைப்பு ஆச்சரியத்தைத் தந்தது..
இவ்வுலகில், உண்மையான பாசமும், பிரியமும் அற்றுப் போய் விட்டதென்று யார் சொன்னது..?
இதோ.. தான் பெற்ற மகள் வேறு, மூத்த தாரத்தின் மகள் வேறு என்று நினைக்காமல் இருவரையும் தன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளைகளைப் போலப் பாவிக்கிறாளே ஒருதாய் இவளுக்கு இணையுண்டா..?
மாற்றாந்தாயை, பெற்ற தாயைப் போல நேசித்து, குடும்பத்திற்காக ஊர் விட்டு ஊர் மாறவும் யோசிக்காத மகளாக ஒருத்தி நிற்கிறாளே.. இவளது அன்புக்கு நிகருண்டா..?
அந்தக் குடும்பத்தில் இருந்த அன்பும், பாசமும், ஒற்றுமையும் விஷ்வாவை ஈர்த்தன.. ஒருவருக்கு அடிபட்டால் மற்றவர்களுக்கு வலிக்கிறது.. ஒருவரின் சந்தோசம் ஒட்டு மொத்தக் குடும்பத்திலும் பரவுகிறது.. இதுபோன்ற குடும்பச் சூழலில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
விஷ்வா தன் அரண்மனையை நினைத்துப் பார்த்தான்.. அவனுடைய பெற்றோர் அவனிடம் பாசம் கொண்டவர்கள்தான்.. ஆனால் மூர்த்தியும் புனிதாவும் அதை வெளிக்காட்டுவதைப் போல வெளிக்காட்ட மாட்டார்கள்..  அவன் பிறந்ததிலிருந்தே அப்படித்தான்.. அளவாகப் பேசிச் சிரிக்கும் மேல்தட்டு மக்கள் அவர்கள்.. பிள்ளைகள் மூவரையும் வளர்க்க வேலையாள்கள் இருந்தார்கள்.. விஷ்வா, அவனது அண்ணன், தங்கை என்று மூவருமே தனித்தனி அறைகளில், தனித்தனி ஆயாக்களின் பொறுப்பில் வளர்ந்தவர்கள்தான்.. தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் வயது வரும் போது ஆயாக்கள் வேலையை விட்டு நிறுத்தப் பட்டார்கள்.. அவர்களுக்கு கை நிறைய பணம், வீடு, சொத்து என்று வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் வசதிகளுடன்தான் அனுப்பப் படுவார்கள் என்றாலும் ஒரு நிபந்தனை விதிக்கப்படும்.. அது, அவர்கள் என்றுமே அரண்மனைப் பக்கம் வரக்கூடாது.. அவர்கள் வளர்த்த பிள்ளைகளின் நிழலைக்கூட நெருங்க நினைக்கக் கூடாது என்பது.. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதினால் எவரும் இதுவரை அக்கட்டளைகளை மீறத் துணிந்ததில்லை.. அவர்களுக்கு அளிக்கப்படும் வீடுகளும் வெகு தொலைவில் உள்ள ஊர்களில்தான் அளிக்கப்படும்.
இப்படித் தாங்களும் பாசம் காட்டாமல், பாசம் காட்ட முனைபவர்களையும் துரத்தி விடும் அரண்மனை அவனது அரண்மனை..!
மோகனா அவன் முகத்தையே பயபக்தியுடன் பார்த்தபடி நின்றிருந்தாள்.. சிந்தனை கலைந்தவனாக அவளைப் பார்த்து புன்னகைத்தான் விஷ்வா.. சூப்பர் ஸ்டாரே சிரித்து விட்டதைப் போல பிரமிப்புடன் மகிழ்ந்து போனாள் மோகனா..
"எப்படி..? கானாடு கிரி பிடிச்சிருக்கா..?" கனிவுடன் கேட்டான்..
"பிடிக்காம போகுமா..? கொடைக்கானல், ஊட்டியெல்லாம் இது பக்கத்தில கூட நிற்க முடியாது சார்.. எம்புட்டு அழகா இருக்கு தெரியுமா..? இங்கதான் இருக்கப் போகிறோம்ன்னு அக்கா சொன்னதை இன்னும் என்னால நம்ப முடியல சார்.." கைகளை விரித்து, இரு கன்னங்களிலும் வைத்துக் கண்களை விரித்து, உதடுகளைக் குவித்து உலக அழகி பட்டம் வாங்கியவளைப் போல அபிநயித்தாள் மோகனா..
என்னதான் உம்மென்று முகத்தை வைத்துக் கொள்ள முயன்றாலும் தங்கையின் குழந்தைத்தனத்தில் தன்னை மறந்தவளாக வாய் விட்டுச் சிரித்தாள் மீனா..
"இந்தச் சிரிப்பில் கொஞ்சத்தையாவது கிள்ளி அப்பப்போ என் பக்கமும் அனுப்பலாமில்லையா..?" என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்தான் விஷ்வா ..
ஸ்விட்ச் போட்டதைப் போல மீனாவின் சிரிப்பு நின்று விட்டது.. பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தாள்.. விஷ்வா மெலிதாக தோளைக் குலுக்கியதில் அவளது முறைப்பு பறந்தோடி விட்டது..
"ஊர் எங்கேயும் ஓடிவிடாது.. இங்கேதான் இருக்கும்.. லீவு நாள்களில் ஊரைச் சுற்றிப்பார்.. அதுதான் கார் இருக்கு.. டிரைவர் இருக்கிறார்.. வேறு என்ன..? லிங்கம் இங்கே பிறந்து வளர்ந்தவர்.. ஊர்க்காரர்.. ஒரு இடம்கூட விட்டுப் போகாம சுற்றிக் காட்டுவார்.. ஸோ.. நீ ஊர் சுற்றிப் பார்க்கிறதைத் தள்ளிப் போட்டு விட்டு நாளைக்குக் காலையில் ஸ்கூலில் ஜாயின் பண்ண ரெடியா இரு.." மோகனாவிடம் சொன்னான் விஷ்வா..
"என்னது..? ஸ்கூலுக்குப் போகனுமா..?" மோகனா பயத்துடன் கேட்டாள்..
"பின்னே..? ஸ்கூலுக்குப் போகாம, இப்படியே ஜாலியா ஊர் சுற்றிப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்ன்னு நினைத்தியா..?" கண்களை உருட்டி விழித்தான் விஷ்வா..
மோகனா பயந்து தமக்கையிடம் ஒன்றிக் கொண்டாள்.. தங்கையை அரவணைத்துக் கொண்ட மீனா..
"பயமுறுத்தாதீங்க சார்.." என்றாள்..
"உன் தங்கையைப் பார்த்தால் ஸ்மார்ட் கேர்ள் போல தெரிகிறது.. ஸ்கூல் போக பயப்படுகிறாளே.." குறும்புடன் சொன்னான் விஷ்வா..
"எனக்கு ஸ்கூலுக்குப் போக ஒன்னும் பயமில்லை சார்.. நான் கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் வாங்கற ஸ்டூடண்ட்டாக்கும்.." ரோசத்துடன் சொன்னாள் மோகனா..
"தட்'ஸ் குட்.." பாராட்டுதலாக விஷ்வா சொன்னதில் அவள் முகம் மலர்ந்து விட்டது..
"கானாடுகிரியில ஸ்கூல் இருக்குங்களா சார்..?" தயக்கத்துடன் கேட்டாள் புனிதா..
"இருக்கு.. மலைவாழ் மக்களுக்காக கவர்ண்மென்ட் ஆரம்பித்திருக்கும் ஸ்கூல்.. டென்த் வரைக்கும் கிளாஸஸ் உண்டு.. டீச்சர்தான் நிலையா இருக்க மாட்டாங்க.. யாரை இங்கே போஸ்டிங் போட்டாலும் அடுத்த மாதமே டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு ஓடி விடுவாங்க.. ஒட்டு மொத்த கிளாஸிற்கும் ஒரேயொரு டீச்சர் இருக்கிற மாதிரி ஆகி விடும்.. சிலநாள் அந்த ஒற்றை டீச்சரும் இருக்க மாட்டாங்க.."
"கடவுளே..! அப்படின்னா பிள்ளைகள் எப்படிப் படிப்பாங்க..?"
கவலையுடன் கேட்டாள் மீனா.. அவளது கவலையில் கவரப்பட்டான் விஷ்வா.. எனக்கென்ன என்று இருக்காமல் மலைவாழ் ஜனங்களைப் பற்றிக் கவலைப்படுபவள் அந்த மலைப்பகுதியில் பிறந்தவளல்ல.. மதுரையில் பிறந்து வளர்ந்தவள்..
"அந்த ஸ்கூலில் படிச்சவன்தான் கிரி.. மனதிருந்தா எந்த சிச்சுவேசனிலும் படிக்கலாம்.. டீச்சரில்லாத குறையப் போக்க.. இவன் வாலன்டியர்ஸா சிலரை வேலை செய்ய வைப்பான்.. இவனும் கிளாஸ் எடுப்பான்.. அவனோட ஜனங்கள் முன்னேற எது வேண்டுமானாலும் செய்வான்.."
"அந்த ஜனங்கள் முன்னேற நீங்க எதுவும் செய்யவில்லையா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டாள் மீனா.. விஷ்வாவுக்கு பொறியில் அடித்ததைப் போல இருந்தது.. இப்படியொரு கேள்வியை கிரிகூட அவனிடம் கேட்டதில்லை..
"அவர்களுக்காகத்தான் ஒன்றுக்கு இரண்டு பேக்டரிகள் ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறேன்.. அது வேலை செய்யும் இடம் மட்டுமல்ல.. தொழிற்கல்வி கற்றுக் கொள்ளும் இடமும்தான்.. மலைவாழ் இன பெண்களின் முன்னேற்றத்துக்காக அவங்க இருக்கும் பகுதியிலேயே பேக்டரி கட்டியிருக்கிறேன்.."
"இது வாழ்க்கைக்கு.. நான் கேட்பது அடிப்படைக் கல்வியை.. அவங்க மேம்பாட்டுக்காக நீங்க ஏன் சார் ஒரு ஸ்கூலை ஆரம்பிக்கலை..? வரும் தலைமுறைக்கு கல்வி அவசியமாச்சே.."
"யோசிக்கிறேன்.."
மீனாவின் கண்களையே உற்றுப் பார்த்த வண்ணம் சொன்னான் விஷ்வா.. அவன் சொன்னதைச் செய்பவன் என்று மீனாவுக்குத் தெரியும்.. அவன் நிச்சயம் யோசிப்பான் என்ற நம்பிக்கையுடன்..
"மோகனாவை எந்த ஸ்கூலில் சேர்ப்பது..?" என்று கேட்டாள் மீனா..
"குன்னூர் கான்வெண்டில் கிரி சீட் வாங்கி வைத்திருக்கிறான்.. ஸ்கூல் பஸ் வீட்டு வாசலுக்கே வரும்.. பயமில்லாமல் அனுப்பலாம்.." என்று சொன்ன விஷ்வா, மோகனாவிடம்..
"நாளைக் காலையில் ரெடியா இரு.. ஸ்கூலில் சேரனும்.." என்று மறுபடியும் கண்களை உருட்டி விழித்தான்..
"கான்வெண்டா..?" மோகனா மிரண்டு விழித்தாள்..
"கான்வெண்ட்தான்.. கொஞ்சநாள் சிரமப்படுவாய்.. அதற்குப் பின்னால் பிக்-அப் பண்ணி விடுவாய்.. படிப்பதில் பயம் எதற்கு..?"
விஷ்வா கண்டிப்புடன் பேசுவதைப் போல இருந்தாலும்.. அவனது பேச்சில் அக்கறை மட்டுமே நிறைந்திருந்ததில் மீனாவின் மனம் நன்றியுடன் நெகிழ்ந்தது..



Name

அடுத்தடுத்து,1,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,72,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,255,என்னவென்று நான் சொல்ல ?,89,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தூங்காத கண்ணென்று உண்டு,28,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,100,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூமிக்கு வந்த நிலவு,7,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,37,மகராசி,1,மலர்ந்தும் மலராமல்,39,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,மௌனத் திரையின் மறைவினிலே,22,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -30
பொதிகையிலே பூத்தவளே -30
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy