பொதிகையிலே பூத்தவளே -28

28      " மலையோரம் நிலமிருக்கு..                 கொட்டுகிற அருவியிருக்கு..      வான் பொழியும் மழையிருக்கு..                ...

28

     "மலையோரம் நிலமிருக்கு..
                கொட்டுகிற அருவியிருக்கு..
     வான் பொழியும் மழையிருக்கு..
                விளைகின்ற பயிரிருக்கு..
     தேயிலையில் வாழ்விருக்கு..
                கிழங்கினிலே ருசியிருக்கு..
     தேனோடு தினைமாவும்
                இருக்கையிலே கவலையெதுக்கு..?"
பாடிக்கொண்டே காரை ஓட்டினான் கிரி.. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய பசுமையும், செழுமையும், ஈர்க்க.. சிலுசிலுவென வீசும் மலைக்காற்றில் பறக்கும் முடியைக் கைகளால் தள்ளி விட்டபடி கிரி பாடும் பாடலை ஆழ்ந்து ரசித்தாள் மீனா..
"இன்றைக்கு கிரியின் கண்ட்ரோலில் இருக்கும் பேக்டரியையும் கம்பெனியையும் பார்த்து விடலாமா..?" என்று விஷ்வா கேட்டதும் தலையசைத்துக் கூட வந்திருந்தாள்..
கிரியின் ஜீப்பில் முன்பக்கம் அவனும் விஷ்வாவும் உட்கார்ந்திருக்கப் பின்பக்க சீட்டில் மீனா உட்கார்ந்திருந்தாள்.. அவளைப் பார்ப்பதற்கு வாகாக ஒரு பக்கமாக திரும்பி அமர்ந்திருந்தான் விஷ்வா..
"பாட்டு நல்லாயிருக்கு.." பாராட்டுதலாகச் சொன்னாள் மீனா..
"சும்மா வாய்க்கு வந்ததைப் பாடறேங்க அம்மணி.. இதெல்லாம் என்ன பாட்டு..? தேயிலை பறிக்கறப்ப எங்க மக்கள் பாடற பாட்டை நீங்க கேட்கனும்.. ஆச்சரியப்பட்டுப் போவிங்க.."
காற்றில் முன்னுச்சி முடி பறக்க மலைப்பாதையில் கவனமாகப் பதில் சொன்னான் கிரி..
"கிரி.. உன் பேக்டரிக்குத்தான் வரப் போறோம்.." என்று விஷ்வா போன் பண்ணியவுடன் வீட்டுக்குப் போக இருந்தவன் பேக்டரிக்கு வந்து விட்டானாம்..
விஷ்வாவின் காரில் மீனாவும் விஷ்வாவும் போய் இறங்கிய போது வாசலிலேயே காத்திருந்தான்.. பேக்டரியைச் சுற்றிக் காட்டினான்.. ஆண்களும் பெண்களுமாக அங்கே வேலை செய்து கொண்டிருந்தாலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.. கிரியிடம் அதைக் கேட்ட போது தலையாட்டி ஆமோதித்தான்..
"ஆமாங்க அம்மணி.. நுணுக்கமான வேலைகள் எல்லாம் எங்க மலைஜாதி பெண்களுக்கு அத்துபடி.. அஞ்சே நிமிசத்தில வர்ணம் தீட்டிருவாங்க.. ஆண்கள் முரட்டுத்தனமான வேலைகளைச் செய்யத்தான் பிரியப்படுவாங்க.."
"ஓ..."
"சின்ன ஜமீன்தாரய்யா ஆரம்பிச்சிருக்கிற பேக்டரி என்கிறதாலதான் எங்க மலைஜாதி பெண்கள் பயமில்லாம வேலைக்கு வர்றாங்க.. மத்தவங்க பேக்டரின்னா வர மாட்டாங்க.."
ஏன் அப்படி என்று மீனா கேட்கவில்லை.. அமைதியாக இருந்தாள்.. ஆறுமுகம் இருந்ததினால்தானே அவளே வேலைக்குப் போனாள்.. மதுரை மாநகரிலேயே அப்படியெனும் போது கானாடுகிரி மலைநகரம்.. இங்கே மலைவாழ்இனப் பெண்கள் அவர்களது கட்டுப்பாடுகளை மீறி வேலைக்கு வருவதாக இருந்தால் அவர்கள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டுமல்லவா..?
'இவன் நம்பிக்கைக்கு உரியவனா..?'
விஷ்வாவை நம்பி அவ்வளவு தொலைவு வந்து விட்டுத் தனக்குள் இப்படியொரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள மீனாவால் மட்டுமே முடியும்.. அவன் மீதான நம்பிக்கை அவளுக்குக் கேள்விக்கு உரியதாகவே இருந்தது.
'இவனே காலையிலே மேகி.. மதியத்திலே மோகி.. ராத்திரிக்கு மாகின்னு, நேரத்துக்கொரு பொம்பளை கூட அலையறவன்.. இவனை எப்படி இவங்க நம்பிக்கை உரியவனா நினைக்கிறாங்க..?'
மீனா அருகில் நின்றிருந்த விஷ்வாவை காக்காய் பார்வை பார்க்க.. அவன் புருவங்களை உயர்த்திப் பார்வையிலே ஏனன்று கேட்டு அவளை வசீகரித்து இம்சித்தான்..
'இவனோட பெருத்த இம்சை.. ஆள் மயக்கி..'
மீனா அவனுக்கு மட்டும் தெரியும்படி உதட்டைச் சுழித்து அழகுகாட்டினாள்..
அவன் கள்ளுண்ட வண்டாகி, கண்களில் பல்பை எரிய விட்டான்..
'இது அதைவிடப் பெருத்த இம்சை..'
அவசரமாக வேலை செய்யும் பெண்களின் மத்தியில் நகர்ந்து அவர்களை விசாரிப்பதைப் போலத் தப்பிப் பிழைத்தாள் மீனா..
அடுத்து கம்பளி, ஸ்வெட்டர் தயாரிக்கும் பேக்டரி.. இங்கேயும் மலைவாழ் மக்கள்தான்.. கலைப்பொருள் தயாரிப்பபைப்போல இல்லாமல் இங்கே ஆண்களும், பெண்களும் சம எண்ணிக்கையில் வேலை பார்த்தார்கள்..
கணக்கு வழக்குகள் கம்யூட்டரில் ஏற்றப் பட்டிருந்தன.. புள்ளி விவரங்கள் மிகச்சரியாக பதிவாகியிருந்தன.. அவற்றை எப்படிப் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தான் கிரி.. கணக்குகளில் எப்படியெல்லாம் குளறுபடி பண்ணுவார்கள் என்பதையும் விளக்கினான்..
"இந்த பேக்டரிகள் போக சின்ன ஜமீன்தாருக்கு சாக்லெட் தயாரிக்கும் பேக்டரி.. தேயிலை, காபித்தூள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பெரிய கம்பெனிகள்ன்னு இருக்குதுங்க அம்மணி.. அங்க கணக்கு வழக்குகளை சரிபார்க்கிறது கஷ்டம்ங்க.."
"ஏன் அப்படி..?"
"அது அப்படித்தாங்க.. போகப் போக புரிஞ்சுக்குவீங்க.."
"இவ்வளவு எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க.. நீங்களே சீனியர் மேனேஜர் போஸ்ட்டில் இருந்திருக்கலாமே.."
மீனாவின் கேள்விக்கு விஷ்வா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.. கிரி பிரியத்துடன் சிரித்தான்..
"நீங்க இந்தப் பக்கத்த சேர்ந்தவங்க இல்லயில்ல.. அதான்.. எங்க பக்க நடப்பு தெரியல.. நான் சீனியர் மேனேஜரா இருந்து தப்புக்களைக் கண்டுபுடிச்சா தகராறு வரும்.. எனக்கு ஒன்னுன்னா எங்க ஆளுக கத்தி, கபடான்னு கையில கிடச்சதத் தூக்கிக்கிட்டு கூட்டம் கூடிருவாங்க.. அது ஜாதிச் சண்டையா மாறிப் போயிரும்.. அதனாலதான் எங்க ஆளுக வேலை பாக்கிற பேக்டரிகளோட பொறுப்பை மட்டும் பார்த்துக்கிட்டு ஒதுங்கி நின்னுக்கிட்டேன்.. சின்ன ஜமீன்தாருக்காக உயிரையும் கொடுப்பேன்.. ஆனா.. என் ஆளுகளோட நிம்மதி.., அதைக் கெடுக்க எனக்கு உரிமையில்லைங்க அம்மணி.."
மீனா உதட்டைக் கடித்தபடி விஷ்வாவைப் பார்த்தாள்.. 'புரிந்ததா..' என்பதைப் போன்ற இளநகை அவனது இதழ்களில் தவழ்ந்தது..
'ஏற்கனெவே என்னை 'பப்பா'ன்னு நினைப்பான்.. இப்ப இது வேற..' மீனாவுக்கு லஜ்ஜையாக இருந்தது..
மதிய உணவு நேரம் தாண்டி விட்டதில் பசியெடுத்தது.. மலைக் காற்றுக்கு இயல்பாகவே பசியெடுக்கும்.. இதில் ஊர் சுற்றல் வேறு.. பசி வயிற்றைக் கிள்ளியது.. முதல் நாள் வேலை.. பசிப்பதை எப்படிச் சொல்வது என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தாள் மீனா.. காலையில் அவள் கிளம்பும் போதே புனிதா கேட்டாள்..
"மதியச் சாப்பாட்ட கேரியரில போட்டுக் கொடுத்திரவா மீனா..?"
இவள்தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.. மதுரையிலே வேறு விதம்.. இரண்டு பஸ் மாறிப் போய் வர வேண்டும்.. மதிய உணவுக்கு வீடு வந்து போக முடியாது.. அது மதுரை.. அவள் பிறந்து வளர்ந்த சொந்த ஊர்.. மாலில் இருந்தது மேனேஜர் ஆறுமுகம்..
இங்கே அப்படியில்லையே.. அறியாத மலைப் பிரதேசத்தில் காலையில் வீட்டை விட்டுப் போய் மாலையில் வீடு திரும்ப மீனாவுக்கு பயமாக இருந்தது.. அதுதான் போகவர ஜீப்காரை கொடுத்து அதற்கு ஒரு டிரைவரையும் கொடுத்திருக்கிறார்களே.. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து செல்வதே சாலச்சிறந்தது..
"வேண்டாம்மா.. மதியச்சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடறேன்.."
உணக்கையாக சொல்லி விட்டு வந்து விட்டாள்.. இப்போது மதியத்தையும் தாண்டி விட்டது.. வீட்டுக்குப் போய்வர முடியவில்லை..
மீனாவின் செல்போன் ஒலித்தது..
'அம்மாவாத்தான் இருக்கும்.. ஏன் சாப்பிட வரலைன்னு கேக்கப் போறாங்க.. நான் வாயை வைச்சுக்கிட்டுச் சும்மா இருந்திருக்கலாம்.. பெரிய இவ மாதிரி.. மதியச்சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. சொன்னதைச் செய்ய முடியுதா..?'
போனைப் பார்த்தாள்.. புனிதாதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.. பக்கத்தில் விஷ்வாவையும் கிரியையும் வைத்துக்கொண்டு என்ன சால்ஜாப்பைச் சொல்வது..?
விஷ்வா அவளை விசித்திரமாக பார்த்து வைத்தான்..
"போன் ரிங் ஆகுதில்ல..? எடுத்துப் பேச வேண்டியதுதானே..?"
'என்னத்தைடா பேசச் சொல்ற..?'
"வேண்டாத போன் காலா..?"
மௌன விரதத்தைக் கண்டினியூ பண்ண முடியாமல்..
"இல்லையில்லை.. அம்மாவின் போன் கால்தான்.." என்றாள்..
"அம்மாவோட போன் காலையா அட்டெண்ட் பண்ணாம இருக்க..?"
'ஆமாண்டா ஆமாம்..'
"அவங்க என்னவோ ஏதோன்னு பயந்து விடப் போறாங்க.. போனை அட்டெண்ட் பண்ணு.."
'விட்டுத் தொலைக்க மாட்டோனே.. இம்சை..'
மனதுக்குள் அவனை வண்டை வண்டையாகத் திட்டியபடி போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தாள்..
"அம்மா.."
"என்ன மீனா.. இன்னும் சாப்பிட வரலை..?"
"வேலைம்மா.. பேக்டரிக்கு விசிட் வந்திருக்கேன்.."
"அப்பச் சாப்பாடு..? இதுக்குத்தான் கேரியரில சாப்பாடு கொடுத்து விடறேன்னு காலையிலேயே சொன்னேன்.. கேட்டியா..?"
"பரவாயில்லைம்மா.. நான் சமாளிச்சுக்கிறேன்.."
"என்னத்தைச் சமாளிப்ப..? இது என்ன மதுரையா..? மலைங்காடு.. காபித்தண்ணிக்கே வழியிருக்காது.. இதில ஹோட்டலுக்கு எங்க போவ..?"
"ஸ்ஸ்.. அம்மா.. பக்கத்தில முதலாளி இருக்கார்.. அப்புறமாய் பேசறேன்.." மீனா போனை அனைத்து விட்டாள்..
"லன்ச்சுக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தியா..?" விஷ்வா குறுக்கு விசாரணை செய்தான்..
"ம்ம்ம்.." கூச்சத்துடன் முணுமுணுத்தாள் மீனா..
"சார்.. உங்களுக்கும் அம்மணிக்கும் எங்க வீட்டில விருந்து தயாரா இருக்கு.." என்றான் கிரி..
"உங்க வீட்டில சாப்பிடறதா..?" மீனா தயங்கினாள்..
"எங்க பகுதிக்கு வந்துட்டு எங்க வீட்டில சாப்பிடாமப் போவீங்களா..? நல்லா இருக்கே.." கிரி உரிமையுடன் கோபித்துக் கொண்டான்..
கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பேக்டரியும் ஸ்வெட்டர், கம்பளி தயாரிக்கும் பேக்டரியும் மலைவாழ் இன மக்கள் வாழும் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.. அவர்கள் இனப்பெண்கள் வந்து போக வசதியாக இருக்கும் என்று விஷ்வா அங்கே கட்டினானாம்..
"தூரமா இருந்தா அதையே சாக்காச் சொல்லி எங்க மக்கள் பெண்களை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க.." வெள்ளையாகச் சிரித்தான் கிரி..
விஷ்வாவை மலைவாழ் இன மக்கள் கொண்டாடு வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று போல என்று நினைத்துக் கொண்டாள் மீனா..
"கார் இங்கேயே இருக்கட்டும்.. உன் ஜீப்பில் போய் விட்டு வந்து விடலாம்.." விஷ்வா சொன்னதை கிரி ஆமோதித்தான்..
மலைப்பாதையில்.. இருபுறமும் அடர்ந்த காட்டுக்குள் ஜீப் பயணித்தது.. ஆதவனின் கதிர் நுழைய முடியாத பசும் இருட்டு.. பகலை இரவாக்கிக் காட்டும் கானகத்தின் அடர்த்தி.. தனித்துப் பயணம் செய்ய நேர்ந்திருந்தால் மீனா நடுங்கியிருப்பாள்..
கிரி தன் போக்கில் பாடியபடி ஜீப்பை ஓட்டினான்.. சடசடவென மழைத் துளிகள் இறங்க.. மீனா சிலிர்த்துப் போனாள்.. ஊசித் தூறல்கள் அவளது உடலில் இறங்க.. விஷ்வாவும் கிரியும் அதைச் சாதாரணமாய் எடுத்துக் கொண்டார்கள்..
"மழை பெய்யுதே.." மீனா வெடவெடத்தாள்..
"இங்கே அப்படித்தான்.. எந்த நிமிசமும் மழை பெய்யும்.." பேசியபடி திரும்பிப் பார்த்த விஷ்வா.. குளிரிலும், மழையிலும் நடுங்கிக் கொண்டிருந்த மீனாவைப் பார்த்ததும..
"ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு வரலையா..?" என்று அதட்டினான்..
"இல்லை.. எனக்குத் தெரியாது.." பற்கள் கிடுகிடுக்கச் சொன்னாள் மீனா..
"வீட்டில் வேறு யாருக்கும் ஸ்வெட்டர் வாங்கலையா..?"
"ஊஹீம்.. ஸ்வெட்டர் வாங்கனும்னு நீங்க சொல்லலையே.."
"ஹில் ஸ்டேசனுக்கு வருகிறவ இதையெல்லாம் யோசித்துப் பர்ச்சேஸ் பண்ணியிருப்பன்னு நான் நினைத்து விட்டேன்.. நீ இவ்வளவு பெரிய இண்டலிஜென்ட்டுன்னு இப்பத்தானே தெரியுது.."
கிரியை வைத்துக்கொண்டு அவன் இடக்குப் பேசியதில் மீனா சங்கடம் கொண்டாள்.. கிரி வேறு உரக்கச் சிரித்து வைத்தான்..
"இந்தா.. இப்போதைக்கு இதைப் போட்டுக்க.."
விஷ்வா தன் ஜெர்கின் கோட்டைக் கழட்டிக் கொடுத்தான்.. அவன் போட்டிருந்த கோட்டைத் தான் போடுவதா என்று தடுமாறினாலும் குளிர் உடலைத் துளைத்ததால் வாயை மூடிக்கொண்டு வாங்கி அணிந்து கொண்டாள்..
கிரியின் வீடு வந்து விட்டது.. வரிசையாக தகரக் கூரையுடன் இருந்த வீடுகளில் இவனது வீடு மட்டுமே கட்டிடமாக மாடியுடன் இருந்தது.. குளிரில் மீனா நடுங்கிக் கொண்டிருந்ததால் கிரி அவர்களை மாடிக்குப் போகச் சொன்னான்..
"மாடி ரூமில் ஹீட்டர் இருக்கு சார்.. அம்மணியோட குளிர் குறைஞ்சதும் சாப்பிட வாங்க.."

மாடியறையின் ஹீட்டரிலும் மீனாவுக்கு குளிர் குறையவில்லை.. நடுநடுங்கியவளை விஷ்வா இழுத்து அணைத்துக் கொண்டபோது விலகத் தோன்றவில்லை.. அவனது உடலின் வெப்பம் அந்த நொடியில் அவளுக்குத் தேவையாக இருந்தது.. விஷ்வாவும் எல்லை மீறவில்லை.. அவளது அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கவில்லை.. அவளை அனைத்துத் தன் உடலின் உஷ்ணத்தைக் கொடுத்தவன்.. அவளது உள்ளங்கைகளைத் தேய்த்து விட்டு சூடேற்றினான்.. மெல் இயல்பு நிலைக்குத் திரும்பிய மீனா அவனிடமிருந்து அவசரமாக விலகி நின்றாள்.. அவனது முகத்தைப் பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது..


Name

அடுத்தடுத்து,1,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,50,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,67,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,25,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லாமலே பூப்பூத்ததே ..,20,தூங்காத கண்ணென்று உண்டு,6,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,2,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,78,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூவே மயங்காதே,28,பொதிகையிலே பூத்தவளே,36,மகராசி,1,மலர்ந்தும் மலராமல்,39,மூரத்தியின் பக்கங்கள்,10,மைவிழியே மயக்கமென்ன ?,1,மௌனத் திரையின் மறைவினிலே,22,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -28
பொதிகையிலே பூத்தவளே -28
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy