பொதிகையிலே பூத்தவளே -31

                                      31 வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்ற பரபரப்பு இல்லாமல் விச்ராந்தியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிரு...

                                      31

வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்ற பரபரப்பு இல்லாமல் விச்ராந்தியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தன் விஷ்வா.. முதலாளி என்ற தோரணையோ, ஜமீன்தார் என்ற பந்தாவோ இல்லாமல், உறவினனைப் போல அவன் அக்கறையுடன் பேசியதில் புனிதாவிற்கு கண்கள் கலங்கி விட்டன..
மூர்த்தியின் உடல்நிலையைப் பரிசோதிக்க வாரா வாரம் வீட்டிற்கே டாக்டர் வருவார் என்று சொன்னான் விஷ்வா..
"வீட்டுக்கே டாக்டர் வருவாரா..?" மூர்த்தி ஆச்சரியமானார்..
"யெஸ்.. எங்க ஃபேமிலி டாக்டர்தான்.. அப்பாவின் ஹெல்த்தை செக் பண்ண வீக்லி ஒன்ஸ் அரண்மனைக்கு வந்து போவார்.. போகும் வழியில் உங்களையும் செக் பண்ணச் சொல்லிக் கேட்டேன்.. ஓகேன்னு சொல்லியிருக்கிறார்.."
"எங்களால் உங்களுக்கு நிறைய சிரமம்.."
"என்ன சிரமம்..? என்னை நம்பி ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறிங்க.. கவனமாப் பார்த்துக்கிறது என் கடமையில்லையா..?"
இந்த வார்த்தைகளை மூர்த்தியைப் பார்த்துச் சொல்லாமல் மீனாவைப் பார்த்துச் சொல்லி கடுப்பை கிளப்பி விட்டான் விஷ்வா.. மீனா அவனை முறைத்தாள்.. அவன் என்னவென்று புருவங்களை உயர்த்தி அவளை பயமுறுத்தினான்.. அரண்டு போனவள் அவன் பக்கமே பார்வையைத் திருப்பவில்லை.. இருட்டி விட்டதில் மூர்த்தி அவனுக்கு இரவு உணவைக் கொண்டு வரச் சொன்னார்..
புனிதா சுடச்சுட டிபன் கொண்டு வந்து கொடுத்தாள்.. விஷ்வா மறுக்காமல் ரசித்துச் சாப்பிட்டதை நெகிழ்வுடன் பார்த்தாள் மீனா.. அவளது மனம் பாகாக உருகியது..
அவன் இருப்பது அரண்மனை.. அறுச்சுவை விருந்து அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.. அவனோ ஏழை வீட்டு டிபனை விரும்பி உண்கிறான்..
'எதற்காக..? எனக்காகவா..?'
மீனாவுக்கு அழுகை வரப் பார்த்தது.. மேகியுடன் அவன் காரில் இருந்து இறங்கிய நிகழ்வை நினைவு படுத்திக் கொள்ள முயன்றாள்.. அவனை வெறுத்து விடலாம் என்று நினைத்தாள்.. எதுவும் முடியவில்லை.. மனம் சண்டிக் குதிரையாக அடம் பிடித்தது..
அவன் கிளம்பியபோது அதற்குள் கிளம்புகிறானா என்று தவித்துப் போனாள் மீனா.. அவளது தவிப்பு விழிகளில் தெரிந்ததில் அவன் தேங்கி நின்றான்.. அவளுக்காக அவன் அங்கேயே இருந்துவிட முடியுமா என்ற நிதரிசனத்தில்..
"கிளம்புங்க சார்.." என்றாள் மீனா மெல்லிய குரலில்..
"விரட்டுகிறாயா..?" அவனும் சன்னக்குரலில்தான் கேட்டான்..
"இது உங்க வீடு சார்.. நாங்க அடைக்கலமாய் வந்தவங்க.. நீங்க எங்களை விரட்டாமலிருந்தால் சரி.." வேதனையுடன் சொன்னாள் மீனா..
"ம்ப்த்.. என்ன பேச்சு இது.." விஷ்வா உரிமையுடன் அதட்டியது அவளது மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதைப போல இருந்தது..
கார்வரை வந்து மீனாவின் குடும்பம் அவனை வழியனுப்பி வைத்தது.. பூவாயி கிரியின் அம்மா கொடுத்தனுப்பியிருந்த பொருள்களைப் பிரித்தாள்.. புனிதா  அவைகளைத் தகுந்த சில்வர் டப்பாக்களில் போட்டு மூடினாள்..
"வர்றேனுங்க அம்மணி.." பூவாயி போய் விட்டாள்..
"இதைக் கவனிக்கலையே.." புனிதா துணி மூட்டையைத் தூக்கி  டீப்பாயில் வைத்தாள்..
"என்னக்கா இது..?" மோகனா ஆர்வத்துடன் கேட்டாள்..
"எனக்குத் தெரியலைடி.." என்றாள் மீனா..
"நான் ஓபன் பண்றேன்.. நான் ஒபன் பண்றேன்.." குதியாய் குதித்த மோகனா துணி மூட்டையை அவிழ்த்தாள்..
உள்ளே பல வண்ணங்களில், பல அளவுகளில் உயர்வகை ஸ்வெட்டர்களும், சால்வைகளும் இருந்தன.. வீட்டில் இருந்த கம்பளிகளைப் போர்த்திக் கொண்டிருந்த அந்தக் குடும்பம் சந்தோசப்பட்டுப் போனது..
"மதுரையில இருந்து கிளம்பறப்ப மலையில இருக்கிற ஊருக்குப் போறோம்.. அங்க குளிருமேன்னு தோணவே இல்லை.. முன்ன பின்ன கொடைக்கானல், ஊட்டின்னு போயிருந்தாத்தான குளிரைப் பத்தித் தெரியப் போகுது..?"
இயல்பாகத்தான் சொன்னாள் புனிதா.. மூர்த்தி வருந்தினார்..
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதில நீ என்ன சுகத்தைக் கண்ட..? நாலு சுவத்துக்குள்ள வேலைக்காரியா வைச்சிருந்தேனே.."
"போதுமே.. பிள்ளைகளைப் பக்கத்தில வைச்சுக்கிட்டு என்ன பேச்சு இது..? ஸ்வெட்டர் வாங்கனுமுன்னு தெரியாம மலைக்குக் கிளம்பி வந்துட்டோம்ன்னு சொன்னா, அதுக்கு இம்புட்டு தூரத்துக்கு வருத்தப்படுவீங்களா..?"
"மனசுக்கு கஷ்டமா இருக்கு.."
"சும்மா எதையாச்சும் கண்டதையும் குழப்பி யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.. உங்க உடம்பு சரியாகனும்னுதான் இந்த மலைக்கே நாம வந்திருக்கோம்.. நினைவு இருக்கட்டும்.. ஸ்வெட்டர் சால்வைன்னு எதுவும் இல்லாம வந்துட்டோம்.. இங்க ஓடிப் போய் வாங்கிட்டு வர கடை, கண்ணின்னு எதுவுமில்ல.. குன்னூருக்குப் போய்த்தான் வாங்கனுமாம்.. மீனாகிட்ட ஞாபகப் படுத்தி வாங்கிட்டு வரச் சொல்லனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. மூட்டை வந்து இறங்கியிருக்கு.."
புனிதா ஓர்வித நிம்மதியுடன் பேசினாள்.. இல்லத்தரசிகள் இப்படித்தான்.. சிறிய தேவை நிறைவேறினாலும் பெருத்த சந்தோசம் கொள்வார்கள்.. மோகனா அவள் அளவுக்கு இருந்த ஸ்வெட்டர்களைத் தனித்து எடுத்து வைத்து, ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து மகிழ்வுடன் குதித்தாள்.. ஆண்களுக்கான ஸ்வெட்டர்களைப் போட்டுப் பார்த்த மூர்த்தி..
"கச்சிதமா இருக்கு.." என்றார்..
புனிதாவின் ஸ்வெட்டர்களை மடித்துக் கொடுத்தாள் மீனா.. ஒன்றை அவள் போட்டுக் கொள்ள.. மூர்த்தி மனைவியின் அழகு அதிகரித்திருப்பதாகச் சொன்னார்.. புனிதா வெட்கிப் போனாள்.. அந்த சதிபதியின் அன்யோன்யத்தை ரசித்தாள் மீனா..
"இந்த சால்வைகளை எடுத்துக்கங்கம்மா.. உங்களுக்கும் அப்பாவுக்கும் பிடித்த கலரில இருக்கு.."
"எனக்கு இந்தச் சால்வை அத்தனையும் வேணும்.."
"எனக்கு நாலு கொடுடி.."
அவர்கள் ஸ்வெட்டர்களையும் சால்வைகளையும் அள்ளிக் கொண்டு மாடிக்குப் போனார்கள்.. பால்கனி கண்ணாடிக்கதவின் வழி தெரிந்த அரண்மனையின் மேன் மாடங்களைப் பார்த்தாள் மீனா.. ஒளி வெள்ளத்தில் அரண்மனை ஜொலித்தது.. அந்த மேன் மாடங்களில் எந்த அறையில் விஷ்வா இருப்பான்..?
"அக்கா.. வரலையா..?"
மோகனாவின் குரலில் அறைக்குள் போனாள்.. கதவை அடைத்து விட்டு ஸ்வெட்டருடன் கம்பளிக்குள் புகுந்து தூங்க ஆரம்பித்தவளுக்கு கணகணப்பாக இருந்தது, கிரியின் வீட்டு மாடியறையில் அவள் உணர்ந்த கதகதப்பு நினைவுக்கு வந்ததில் அவளுக்குள் எதுவோ நிகழ்ந்தது..
'அவனை நினைக்காத மனமே..'
மந்திரம் போல் ஜெபித்தபடி உறங்கிப் போனாள்.. மறுநாள் காலையில் விஷ்வா வந்து விட்டான்.. புனிதா உபசாரமாக சாப்பிடச் சொன்னதும் சாப்பிட உட்கார்ந்து விட்டான்.. மெல்ல குடும்பத்தில் ஒருவனாக அவன் மாறுவதை புரிந்து கொண்டாள் மீனா.. அவள் மட்டும்தான் அதை கண்டு கொண்டிருந்தாள்.. மற்றவர்கள் அவனைக் கொண்டாடுவதில்தான் கவனமாக இருந்தார்கள்..
பயந்து கொண்டே இருந்த மோகனாவுக்கு தைரியம் சொல்லி அழைத்துக் கொண்டு போனாள் மீனா.. தானும் வருவதாகச் சொல்லிய புனிதாவை தடுத்து விட்டான் விஷ்வா..
"நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க சாரைப் பார்த்துக்கங்க.."
நான் அப்பாவைப் பார்த்துக்கொள்கிறேன்.. அம்மா மோகனாவுடன் வரட்டும் என்று சொன்னால் அவன் முகம் எப்படி மாறும் என்று கற்பனை செய்து பார்த்த மீனாவுக்கு சிரிப்பு வந்தது.. அவன் அதை கண்டு கொண்டு..
"என்ன சிரிப்பு..?" என்று முணுமுணுத்தான்..
"நத்திங்.." மீனா சிரிப்பை அடக்கிக் கொண்டாள்..
வேலைக்கு வந்திருந்த லிங்கத்திற்கு புனிதாவுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து விட்டு வீட்டுக்குச் சென்று விடும்படி சொல்லி விட்டான் விஷ்வா.. லிங்கத்துக்கு சந்தோசம்..
"உன் கார் டிரைவருக்கு லக்கிதான் அக்கா.. நேத்தும் லீவு.. இன்னைக்கும் லீவு.. நான்தான் ஸ்கூல் போயாகனும்.." பொறாமைப் பட்டாள் மோகனா..
"உனக்கு உன் பிரச்னை.." என்றாள் மீனா..
குன்னூர் கான்வெண்ட் அழகாகவும், பணக்காரத்தனமாகவும் இருந்தது.. மத்தியதர வாழ்க்கைக்கும் குறைவான பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வந்த மோகனாவுக்கு அந்த சூழலைப் பார்த்தாலே வயிறு கலங்கியது..
"அக்கா.. எனக்கு இந்த ஸ்கூல் வேண்டாம்.." என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
மீனாவுக்கும் அது சரியென்றே தோன்றியது.. இப்போது அவளுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகள் நிரந்தரமானவை அல்ல.. எந்த நேரமும் தட்டிப் பறிக்கப்படும்..
"இங்கே வேற ஸ்வல் இல்லையா சார்..?" விஷ்வாவிடம் கேட்டாள்..
"வேற ஸ்கூல்ன்னா..?" முகம் இறுக.. அழுத்தமான குரலலோடு வினவினான் விஷ்வா..
"எங்க தகுதிக்கு ஏத்ததைப் போல.." மீனா சொல்லி விட்டாள்..
"ஷட் அப்.." விஷ்வா சீறினான்..
மீனாவின் முகம் கன்றி விட்டது.. அவளுக்கு மட்டும் அப்படிச் சொல்ல ஆசையா என்ன..? நடப்பவையெல்லாம் கனவு என்று அவள் மனதில் ஓர் பட்ஷி கூவிக் கொண்டே இருக்கிறதே.. அவள் என்ன செய்வாள்..?
"இவள்தான் குழந்தை.. புரியாமல் பேசுகிறாள்.. உனக்கு என்ன வந்தது..? குன்னூரிலியே இது நம்பர் ஒன் பெஸ்ட் ஸ்கூல்.. இங்கே இடம் கிடைக்கிறதுன்னா குதிரைக் கொம்பு.. எங்க ஃபேமிலிக்குன்னு கோட்டா உண்டு.. அதை  யூஸ் பண்ணி மோகனாவுக்கு சீட் வாங்கியிருக்கேன்.."
அவனது கோபத்தில் மீனா உதட்டைக் கடித்தாள்.. மிரண்டு விழித்துக் கொண்டிருந்த மோகனாவைப் பார்க்கவும் பாவமாக இருந்தது..
"அபத்தமாக பேசாம வாயை மூடிக்கிட்டு வா.."
அவள் அப்படித்தான் இருந்தாள்.. விஷ்வாவுக்காக பிரின்சிபால்  காத்திருந்தார் .. மோகனாவுக்கு உடனே அட்மிசன் கிடைத்தது.. யூனிபார்ம், புத்தகங்கள் மற்றும் பள்ளிக் கட்டணமாக மூன்று லட்சங்கள் வந்தது.. விஷ்வாதான் பணத்தைக் கட்டினான்.. யூனிபார்ம், புத்தகங்கள் அடங்கிய பார்சலை பள்ளியின் பியூன் கார் டிக்கியில் கொண்டு வந்து வைத்ததில் விஷ்வாவின் செல்வாக்கும் உயரமும் புரிந்தது.. அதுவே மீனாவுக்கு துயரத்தையும் மருட்சியையும் கொடுத்தது..
எட்டாத உயரத்தில் அவன்.. எங்கோ ஓர் மடுவில் அவள்.. அவனை நினைக்கக் கூட ஓர் தகுதி வேண்டும்.. நெருங்க வேண்டுமானால் மேகியாக அவள் மாற வேண்டும்..
மனதின் நினைவோட்டத்தில் திடுக்கிட்டுப் போனாள் மீனா..
'ச்சீ.. என்ன நினைப்பு இது..'
மதிய உணவுக்கு குன்னூரில் இருந்த பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.. அதன் அழகில் ஈர்க்கப்பட்ட மோகனா மிரட்சியை மறந்து குதூகலமாகி விட்டாள்.. அவர்கள் சாப்பிட உட்கார்ந்த போது விஷ்வாவுக்கு போன் வந்தது.. அவன் மீனாவிடம் குனிந்து..
"ஜஸ்ட் எ மினிட்.." என்றான்..
அவள் ஒப்புதலாக தலையை அசைத்ததும் வெளியே போனான்.. அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த மோகனா..
"எனக்கு என்னவோ உன்னையும் சாரையும் பார்த்தா புருசன் பெண்டாட்டி மாதிரி இருக்குக்கா.. சாரே மாமாவா ஆகிட்டா நல்லா இருக்கும்ல்ல.." என்று சொல்லி விட்டாள்.
"மோகனா.." மீனா பதறி விட்டாள்..
"அப்படிச் சொல்லக் கூடாதுடி.." அவளது குரல் கம்மியது..
"ஏன்க்கா..? என் மனசில அவர்தான் மாமாவா ஆகனும்னு ஆசையா இருக்குக்கா.."

குழந்தை மனது.. தயக்கமில்லாமல் சொல்லிவிட்டது.. மீனாவின் மனது வலித்தது.. கிட்டாத ஒன்றிற்காக ஏக்கம் கொள்ளக் கூடாது என்று கண்கள் கலங்க தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள்..


Name

அகல்விளக்கு,20,அடுத்தடுத்து,1,அழகான ராட்சசியே,3,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,100,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,283,என்னவென்று நான் சொல்ல ?,117,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,24,நிலாக்கால நினைவுகள்,28,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,108,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,40,மகராசி,1,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -31
பொதிகையிலே பூத்தவளே -31
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy