பொதிகையிலே பூத்தவளே -29

29 "சார் சாப்பாடு ரெடியா இருக்கு.." கிரி.. வந்து விட்டான்.. மூன்றாவதாக ஒரு நபர் வந்து விட்டதில் மீனாவின் சங்கடம் கொஞ்சும் கு...

29
"சார் சாப்பாடு ரெடியா இருக்கு.."
கிரி.. வந்து விட்டான்.. மூன்றாவதாக ஒரு நபர் வந்து விட்டதில் மீனாவின் சங்கடம் கொஞ்சும் குறைந்தது.. கிரி அவளைப் பார்த்தான்..
"அம்மணிக்கு குளிர் குறைஞ்சிருச்சுங்களா..?"
மீனாவை விட்டு அகன்றிருந்த சங்கடம் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது.. குளிர் குறைந்தது ஹீட்டரினால் அல்ல என்பதில் அவளுக்கு கானாடுகிரி மலைச்சரிவில் உருண்டு விட வேண்டும் போல வெட்கம் பிடுங்கித் தின்றது..
"ஈஸி.." அவளது காதோரமாக முணுமுணுத்தான் விஷ்வா..
'உனக்கு எல்லாமே ஈஸிதாண்டா.. எனக்கு அப்படியில்லை..'
மீனா பழைய மீனாவாகி அவனை உக்கிரமாக முறைத்தான்..
"சரியாகிட்டாங்க கிரி.." அவளது முறைப்பை ரசித்த வண்ணம் சொன்னான் விஷ்வா..
கிரியைப் பின்தொடர்ந்து முதல் ஆளாக இறங்கி விட்டாள் மீனா.. அவளைக் குழந்தையைப் போல பார்த்து ரசித்த வண்ணம் வந்த விஷ்வாவைத் திரும்பியும் பார்க்கவில்லை..
கிரியின் வீட்டு விருந்த வித்தியாசமாகவும் படு ருசியாகவும் இருந்தது.. வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழைக் குளிருக்கும் கானாடுகிரி மலைக் குளிருக்கும் சூடேற்றுவதைப் போலக் கொதிக்கக் கொதிக்கக் கோழிக்குழம்பு.. வறுல்.. வேக வைத்த கிழங்கு.. தேனில் ஊறிய பழவகைகள்..
காலையிலிருந்து சுற்றிய அலுப்பு.. மீனா சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டினாள்.. கிரியின் அம்மாவுக்கு அதில் பரம சந்தோசம்..
சிரத்தையுடன் சமைத்து அன்னமிடும் மகராசிகளுக்கு அதன் ருசியறிந்து விரும்பி உண்ணும் விருந்தினரின் முகத்தில் தெரியும் திருப்திதான் வெகுமானம்..
"சாப்பாடு நல்லாயிருக்குங்களா அம்மணி.." கிரியின் அம்மா கேட்டாள்..
"சூப்பரா இருக்குங்க.." மனதாரச் சொன்னாள் மீனா..
விஷ்வாவின் முகத்தில் புன்னகை.. எதற்காக இந்தச் சிரிப்பு என்று மனதுக்குள் வெகுண்டாள் மீனா..
'பிடிக்காமலா சாப்பாட்ட இந்தக் கட்டு கட்டுவான்னு நினைக்கிறானோ..?' சம்சயமாக இருந்தது..
நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும் என்று அவனது சிரிப்பை கண்டு கொள்ளாமல் புறம் தள்ளினாள் மீனா.. அவனுக்கு என்ன..? நினைத்த இடத்தில் உணவை வரவழைத்து விடுவான்.. அவள் அப்படியா..? அந்த அத்துவானக் காட்டில் உணவுக்கு எங்கே போவாள்..?
சாப்பிட்டு முடிந்ததும் சற்று நேரம் கிரியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. கிரியும் விஷ்வாவும் முன்னறையில் இருந்தார்கள்.. கிரியின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள் மீனா.. கிரியின் தந்தை விசக்காய்ச்சலில் இறந்து விட்டதாக கிரியின் அம்மா சொன்னாள்.. விழிகளில் சோகம்..
"கிரியோட அப்பாதான் எங்க இனத்துக்கே காவல் அம்மணி.. ஜமீனில வே பாக்கலை.. இந்த மலைதான் எங்க சொத்து.. உழைக்க அஞ்ச மாட்டாரு.. கிரிய அவரோட உழைப்பில படிக்க வைச்சாரு.. கிரி படிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே வெளிநாட்டில வேல கிடைச்சுருச்சு.. கல்யாணத்தப் பண்ணிக்கிட்டு ஒன் பொஞ்சாதியோட வெளிநாட்டுக்குப் போன்னு சொன்னாரு.. சொன்ன மனுசன் விசக்காய்ச்சலில போனாரு.. கிரி கல்யாணமும் பண்ணிக்கல.. வெளிநாட்டுக்கும் போகல.. இங்க எங்க இனத்தாளுக்குக் காவலா தேங்கி நின்னுட்டான்.."
"அதில உங்களுக்கு வருத்தமா..?"
"இந்த மல எங்க குலசாமி அம்மாணி.. குலசாமி கூட இருக்கிறது வருத்தமில்ல அம்மணி.. இந்த மலையை விட்டுச் சொர்க்கத்துக்கே போனாலும் மறுபடியும் இங்ஙனவே வந்திரனும்னுதான் மனசுக் கழுயோட மனசு.. ஏங்கும்.. இந்த மலையிலயே தேங்கி நிக்கிறதில மனக் குறையில்ல அம்மணி.. கடலக் கடந்து வேலை பாத்துச் சம்பாதிக்கிற சம்பாத்தியத்த விட நாலு மடங்கு சின்ன ஜமின்தாரய்யா அள்ளிக் கொடுக்கிறாரு.. எங்க ஜனங்களோட வேலைத்திறமையை வெளிய கொண்டு வர பேக்டரிகட்டி விட்டிருக்காரு.. ஆம்பளயப் போல பொம்பளயும் சம்பாதிக்க வழி செஞ்சிருக்காரு.. ஆரு செய்வா இதைப் போல.. எங்க சின்ன ஜமின்தாரய்யா சொக்கத் தங்கம் அம்மணி.. என் குறை வேறதைப் பத்தி.."
"வேற என்னங்கம்மா..?"
"என் மகன் கல்யாணமே வேணாம்ன்னு ஒத்தைப் பனைமரமா தனிச்சு நிக்கிறானே.. அத நினைச்சுத்தான் அல்லும் பகலும் என் உசிரு கிடந்து அல்லாடுதுங்க அம்மணி.."
கிரியின் தாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. மனம் விட்டு அந்தத் தாய் பேசியதில் மீனாவின் மனம் நெகிழ்ந்தது.. அத்துவானக் காட்டில் ஓர் உறவு கிடைத்து விட்டதைப் போல உணர்ந்தாள் கிரியின் தாயாரின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னாள்..
"கவலைப்படாதீங்கம்மா.. கிரி போல தங்கமான மனிதருக்கு வாழ்க்கை நல்லபடிதான் இருக்கும்.. கூடிய சீக்கிரம் அவருக்குக் கல்யாணம் நடந்துரும் பாருங்க.."
கிரியின் அன்னையின் முகம் விகசித்தது.. மலைவாழ் ஜனங்கள் அவர்கள்.. போலிகளை எளிதில் இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்.. மீனாவின் வார்த்தைகள் உதட்டிலிருந்து உச்சரிக்கப்படுபவையல்ல.. மனதிலிருந்து வருபவை என்று எளிதில் இனம் கண்டு கொண்டாள்.. வாத்சல்யத்துடன் மீனாவின் கைகளைப் பதிலுக்குப் பிடித்துக் கொண்டாள்..
மழை குறைந்திருந்தது.. கிரியின் அன்னை தேன், தினைமாவு, பழாப்பழம் என்று மூட்டை கட்டி ஜீப்பில் ஏற்றி விட்டாள்..
"எதுக்காகம்மா..?" மீனா தயங்கினாள்..
"மொதமொலா எங்க வீட்டுக்கு வந்துட்டு வெறுங்கையாத் திரும்பிப் போவீங்களா..?" கிரியின் தாய் நியாயம் கேட்டாள்..
"அப்ப அடுத்து இவங்க வர்றப்ப எதுவும் கொடுத்தனப்ப மாட்டிங்களாம்மா..?" கிரி சிரித்தான்..
"அதெப்படி.. நம்ம மலையில விளஞ்சத அம்மணிக்குக் கொடுத்தனுப்பாம இருக்க முடியுமா..?" இப்போது வேறு நியாயம்..
ஏதோ உறவினரின் வீட்டுக்கு வந்து போவதைப் போல இருந்தது.. பிரியத்துடன் கையாட்டி விடை பெற்றாள் மீனா.. அவர்களது ஜீப் ஸ்வெட்டர் தயாரிக்கும் பேக்டரிக்கு விரைந்தது..
"இங்கேதான் விசிட் வந்தாச்சே.." மீனா கேள்வியுடன் பார்த்தாள்..
"இப்ப விசிட்டுக்காக வரவில்லை.." என்றான் விஷ்வா..
'வேற எதுக்காகடா வந்த..?'
மீனாவுக்குக் குளிராக இருந்தது.. ஆபிஸ் கட்டிடத்துக்குள் போய் விட்டால் ஹீட்டர் இருக்கும்.. குளிர் குறையும்.. அதை இவனிடம் எப்படிச் சொல்வது..? அதிகக் குளிராக இருக்கிறது என்று சொன்னால் மறுபடியும் கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பித்து விடுவான்.. எதற்கு வம்பு..?
கிரிவீட்டு மாடியறையில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தவளுக்குள் உஷ்ணம் பரவியது.. இருக்கும் துன்பங்களில் இந்தத் துன்பம் வேறா என்று மீனாவுக்குச் சலிப்பாக இருந்தது.. அவளே எதைப் பற்றியும் யோசிக்காமல் வாழ்க்கைப் பாதையில் ஓடிக் கொண்டிருப்பவள்.. இதில இளமையெனும் பூங்காற்று, பாடி வரும் ஓர் பாட்டு என்று அவனது அருகாமை கிளர்ச்சியை ஏற்படுத்துவது ஏன்..? மனதையும் உணர்வுகளையும் அடக்கி ஆளத் தெரிந்த மாய யோகி அவளல்ல.. உணர்வுக் குவியல்களுடன் கூடிய மனுஷி..! நேற்றுவரை எவ்வித உணர்வுகளுக்கும் ஆட்படாமல் விலகி நிற்கும் வலிமை வாய்ந்தவளாக இருந்தாள்.. இன்று இரும்புமணம் இளகயத்தனிக்கிறதே.. ஏன்..?
பேக்டரியின் முன்னால் ஜீப் நின்றது.. துணியினால் பார்சலாகக் கட்டப்பட்ட பெரிய மூட்டையுடன் ஒருவன் நின்றிருந்தான்.. ஜீப்பில் அந்த மூட்டையை ஏற்றினான்.. மீனாவுக்கு அது என்னவென்று தெரியவில்லை.. கிரி சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று பேசாமல் இருந்து விட்டாள்.. ஜீப் மலைவாழ் மக்களின் கைவினை கலைப் பொருள்கள் தயாராகும் பேக்டரிக்குப் போய் சேர்ந்தது.. இறங்கி விஷ்வாவின் காருக்கு மீனாவும் விஷ்வாவும் மாறினார்கள்.. டிக்கியில் கிரியின் அம்மா கொடுத்தனுப்பியிருந்த பொருள்களுடன் துணிப் பார்சலும் சேர்ந்து கொண்டது..
"என்னது அது..?" என்றாள் மீனா..
விஷ்வா பதில் சொல்லாமல் கிரியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்.. போடா என்று மீனாவும் அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை..
லிங்கத்தை விஷ்வா வீட்டுக்குப் போகச் சொல்லியிருந்தான்.. மீனா மறுப்புத் தெரிவித்த போது..
"நாம் பேக்டரி விசிட் முடித்துட்டு வர நேரமாகும்.. நானும் உன் ஃபேமிலியை மீட் பண்ணியாகனும்.. கானாடுகிரிக்கு குடும்பத்துடன் நீ வந்திருக்கும்போது உன் ஃபேமிலியை மீட் பண்ணி நலம் விசாரிக்கலைன்னா அது நன்றாக இருக்காது.. ஸோ.. நான் உன்ன டிராப் பண்ணி விடுகிறேன்.." என்று சொல்லி விட்டான்..
அதுவும் சரிதானே என்ற நினைவில் மௌனமாகி விட்டாள் மீனா.. அவளது குடும்பத்திற்கு ஒன்றும் அவன்  புதியவன் அல்லவே.. மூர்த்திக்கு நெஞ்சுவலி என்று தெரிந்ததில் இருந்து இன்றுவரை அவளது குடும்பத்திற்கு அனுசரணையாக இருப்பவன்.. பெரிய மருத்துவமனையில் மூர்த்தியை சேர்த்து விட்டு, அவரது ஆப்பரேசனுக்கும் பணத்தைக்கட்டி அவரது உயிரைக் காப்பாற்றியவன்.. தினமும் மருத்துவமனைக்கு வந்து மூர்த்தியிடம் உறவினனைப் போல நலம் விசாரித்தவன்.. மூர்த்தியின் உடல்நிலை முழுவதும் குணமாவதற்காக கானாடுகிரியில் அவளுக்கு வேலை மாறுதல் கொடுத்திருப்பவன்.. அவனை நம்பி ஊர் விட்டு ஊர் வந்தவர்களுக்கு வீடு கொடுத்து.. வசதிகள் செய்து கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்திருப்பவன்..
'ஏன் இவ்வளவு செய்கிறாய்..?' மீனாவின் மனம் துடித்தது..
'நீ யாரோ.. நான் யாரோ.. உன் பணத்துக்கும், பகட்டுக்கும் நான் மயங்க மாட்டேன்.. உயிரே போனாலும் உனக்கு வளைந்து கொடுக்க மாட்டேன் என்று தெரிந்திருந்தும் ஏன் என்னைத் தாய்ப்பறவை சிறகுகளுக்கு அடியில் நிறுத்தி பாதுகாப்பதைப் போல பாதுகாக்கிறாய்..?'
அவனைக் காமுகனாக நினைத்துப் பார்க்க அவளால் முடியவில்லை.. அவனா காமுகன்..?
என்னதான் மேகி, மாகியென்று ஆயிரம் காரணங்கள் அவள் முன் நின்றாலும் காமுகன் என்ற அளவுக்கு படு கீழ்த்தரமாக அவனை நினைக்க முடியாமல் தவித்துப் போனாள் மீனா..
'இவன் நல்லவனாகவே இருக்கட்டும்.. ஆள் மயக்கியாவே மயக்கட்டும்.. மயங்கி பின்னால் போக இவன் என்ன சாமானியனா..? சின்ன ஜமின்தார்.. எஸ்டேட் மற்றும் பேக்டரிக்களின் முதலாளி.. பரம்பரை கோடிஸ்வரன்.. இவனைப் பற்றி நினைக்கக்கூட எனக்குத் தகுதியில்லை..'
மீனா மனக்குதிரைக்கு கடிவாளமிட்டு இறுக்கிப் பிடித்தாள்.. அவளது குவார்ட்டர்ஸ் தெரிந்தது.. விஷ்வாவின் கார் ஹார்ன் சப்தத்தில் மோகனா ஓடிவந்து கதவைத் திறந்து விட்டாள்.. போர்டிகோவில் மீனாவுக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஜீப் வடிவிலான கார் நின்றிருந்தது.. விஷ்வா அதன் பின்னால் காரை நிறுத்தினான்..
"நீ டிரைவிங் கத்துக்க.." மீனாவிடம் சொன்னான்..
"என்ன கழுதைக்கு..? அப்பாவுக்கு உடம்பு சரியானதும் மதுரைக்குத் திரும்பிருவோம்.. அதுக்குப் பின்னாலே எனக்கு சொந்தமா ஸ்கூட்டி கிடைத்தாலே பெரிய விசயம்.. கார் டிரைவிங்கைக் கற்றுக்கிட்டு என்ன செய்யப் போறேன்..?" விட்டேற்றியாக பதில் சொன்னாள் மீனா..
விஷ்வா பல்லைக் கடித்தான்.. உன் கோபம் என்னையென்ன செய்யும் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மீனா..
"உன் அப்பாவுக்கு உடம்பு சரியாகும் வரை நீ இங்கேதானே இருந்தாகனும்..? நான் கானாடுகிரியிலேயே இருக்க முடியாது.. லிங்கம் எப்போது டிரைவிங் பண்ணக் கூப்பிட்டாலும் வருவார்தான்.. அவரால் வர முடியாத நெருக்கடியில் நீ காரை எடுக்க வேண்டிய சிச்சுவேசன் வந்தால் என்ன செய்வாய்..?"

விஷ்வா நிறுத்தி நிதானமாகக் கேட்ட கேள்விகளில் அரண்டு போனாள் மீனா.. அவசரம் என்றால் கூப்பிட கானாடு கிரியில் ஆட்டோக்களா இருக்கின்றன..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -29
பொதிகையிலே பூத்தவளே -29
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale-29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale-29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy