பொதிகையிலே பூத்தவளே -27

27 "வா.. இதுதான் உன் சீட்.." பக்கத்தில் இருந்த அறைக் கதவை திறந்து விட்டான் விஷ்வா.. பெரிய அறை அது.. வழவழப்பான டேபிள். கு...


27

"வா.. இதுதான் உன் சீட்.."
பக்கத்தில் இருந்த அறைக் கதவை திறந்து விட்டான் விஷ்வா.. பெரிய அறை அது.. வழவழப்பான டேபிள். குஷன் வைத்த சுழல் நாற்காலி.. டேபிளின் எதிரே நான்கு சோபாக்கள்.. சுவரில் அழகன பிரேம்களுடன் கூடிய ஓவியங்கள் என்று பணக்காரத்தனத்துடன் மிளிர்ந்தது..
'இது என் ரூமா..?'
மீனாவுக்கு மயக்கம் வராத குறைதான்.. அவள் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா..
"இது உன் ஆபிஸ் ரூம்.." என்றான்..
"பட்.. இத்தனை ரிச் லுக்குடன் ஆபிஸ் ரூமா..?"
"ரிச் லுக் இருந்தாகனும்.. பிகாஸ்.. கானாடுகிரியில் இருக்கிற என் அத்தனை பிளினெஸ்ஸையும் நிர்வகிக்கப் போகிற சீனியர் மேனேஜர் நீ.. உன் ரூம் இப்படித்தான் இருந்தாகனும்.."
"அது தான் ஏன்..? எனக்கென்ன தகுதியிருக்குன்னு இவ்வளவு பெரிய போஸ்டிங் கொடுத்திருக்கீங்க..?"
"நேர்மையா இருக்கிற பார்த்தியா.. அதுதான் உன் குவாலிபிகேசன்.. பணத்துக்கு ஆசைப்படலை.. ஆடம்பரத்தைக் கண்டு பயப்படற.. இது அடிசனல் குவாலிபிகேசன்.. வாங்கும் சேலரிக்கு உண்மையா உழைப்ப.. உன் பாஸீக்கு விசுவாசமா இருப்ப.. இதெல்லாம் தேடினாலும் கிடைக்காத குவாலிபிகேசன்ஸ்.."
அவன் அடுக்கிக் கொண்டே போக..
"போதுமே.." என்று காதுகளைப் பொத்தினாள் மீனா.. ஹாலில் இருந்து கிரி இவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.. அவன் வேறு ஏதும் நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்துடன் பட்டென கையை எடுத்து விட்டாள்..
"என்ன..?" விஷ்வா வினவினான்..
"அந்த கிரி பார்த்துக்கிட்டு இருக்கான்.. நீங்க வேற எதையோ சொல்றீங்கன்னு நினைச்சுட்டா என்ன செய்கிறது..?" முகச் சிகப்புடன் விளக்கம் சொன்னாள் மீனா..
"வேறு ஏதாவதுன்னா..?" ஒன்றும் அறியாதவனைப் போல வினவி வைத்தான் விஷ்வா..
'போடா..' என்று கோபம் கோபமாக வந்தது..
'இப்ப இவனுக்கு என்ன வேணுமாம்.. நீ நான் வெட்கப்படுவதைப் போல ஏதோ சொல்ல... அதைக் கேட்க முடியாத கூச்சத்தோடு நான் காதுகளைப் பொத்திக்கறேன்னு அவன் நினைச்சுக்கிட்டா என்ன செய்யறதுன்னு சொல்ல வர்றேன்.. போதுமா..?'
அவள் முறைப்பதைக் கண்டவன் மெதுவான குரலில்..
"இதுக்கு வாய் விட்டேத் திட்டி விடலாம்.." என்று சொல்லி விட்டு வரிசைப் பற்கள் தெரிய சிரித்தான்..
'சும்மாவே ஆள் மயக்கி.. இதில் சிரிச்சுவேற மயக்கிருவான்..' எரிச்சலுடன் முகத்தைத்திருப்பிக் கொண்டாள் மீனா..
"இப்ப மட்டும் ஊடல்ன்னு கிரி நினைச்சிற மாட்டானா..?" கண்களில் விசமம் வழியக் கேட்டு மீனாவை உசுப்பி விட்டான் விஷ்வா..
"என்னது..?" அனல் பார்வையுடன் நிமிர்ந்த மீனா..
"நினைப்பான்.. ஏன் நினைக்க மாட்டான்..? உங்ககிட்ட வேலை பார்க்கிறவனாச்சே.." என்று பொரிந்து தள்ளியபடி கிரியை சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள்..
அவள் எதற்காக அவனை முறைக்கிறாள் என்று புரியாமல் குழப்பத்துடன் அவன் பார்க்க விஷ்வா ஒன்றுமில்லை என்பதைப் போல கையை ஆட்டிச் சிரித்துக் கிரியை சமாதானப் படுத்தினான்..
"ஹி இஸ் இன்னொஸென்ட்.. அவனைப் போய் முறைக்கறியே..."
"அவனைப் பார்த்தா இன்னொஸென்ட் மாதிரித் தெரியலையே.. அங்கே நின்னுக்கிட்டு இங்கே ஏன் பார்க்கிறான்..?"
"ஏய்ய்.. தப்பான நினைவோடு பார்த்திருக்க மாட்டான்.. கிரி ரொம்ப நல்லவன்.. போகப்போக நீயே புரிஞ்சுக்குவ.."
"நல்லவனோ என்னவோ.. இன்னொஸென்ட் போல தெரியல.."
"இன்னொஸென்ட்டுன்னு அந்த மீனிங்கில சொல்லலை.. அவன் செம கிளவர்.. அவனோட மக்களுக்கு இவன்தான் தலைவன்.. எது வந்தாலும் எதிர்த்து நிற்பான்.. உன்னைப் பார்க்கனும் என்கிற எண்ணமில்லாத இன்னொஸென்டுன்னு சொன்னேன்.. தட்ஸ் ஆல்.. நீ உன் சீட்டில் உட்கார்."
மீனாவின் மனது விஷ்வாவின் விளக்கத்தில் சமாதான மடைந்தது..
அவள் தயக்கத்துடன் விஷ்வா காட்டிய சுழல் நாற்காலியில் உட்கார்ந்தாள்.. அவளது தயக்கத்தை ரசித்த விஷ்வா..
"குட்.." என்றபடி அவளுக்கு எதிரிலிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.. திரும்பிப் பார்த்து..
"கிரி.." என்று அழைத்தான்..
"அவனை எதுக்குக் கூப்பிடறிங்க..?" மீனா ஆட்சேபித்தாள்..
"நீயே தெரிந்துக்குவ.." என்றான் விஷ்வா..
கிரி உள்ளே வந்தான்.. விஷ்வா உட்காரச் சொன்னதும் அவன் பக்கத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.. முதலாளி என்ற உணர்வு மனப்பான்மை இல்லாமல் ஒரு நண்பனிடம் பழகுவதைப் போல விஷ்வா கிரியுடன் பேசிப் பழகுவதை வியப்புடன் பார்த்தாள் மீனா..
"மீனா.. நான் கானாடுகிரியில் இல்லாத நாள்களில் கிரி ஆபிசிற்கு வருவான்.. உனக்கு ஹெல்ப்பா இருப்பான்.." விஷ்வா கூறினான்..
"நீங்க இங்கேதானே இருப்பீங்க..?" கலவரத்துடன் கேட்டாள் மீனா.. அவளுக்குப் பயமாக இருந்தது..
அது மதுரை 'மால்' அல்ல.. விஷ்வா இருந்தாலும் இல்லையென்றாலும் அவள் எனக்கென்ன என்று வேலையைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு ஓட..
இது கானாடுகிரி.. மலைபிரதேசம்.. மனித நடமாட்டம் குறைந்த எஸ்டேட்.. சுற்றிலும் காடு.. அங்கே தெரிந்தவன் என்று சொல்லிக் கொள்ள விஷ்வா மட்டுமே இருக்கிறான்.. அவனும் வெளியூர் போய்விட்டால்..? அவள் என்ன செய்வாள்..?
"இங்கேயே இருக்க முடியாது மீனா.." விஷ்வாவின் முகம் மென்மையானது..
"இன்னும் சில நாள் இங்கேதான் இருப்பேன்.. பயப்பட வேண்டாம் பட்.. எப்போதும் இங்கேயே இருக்க முடியாது...  எனக்கு உலகம் முழுதும் பிஸினெஸ் இருக்கு.. ஓரிடத்தில் நிற்க முடியாது.. சுற்றிக் கொண்டே இருக்கனும்.."
'அதுதான் தெரிஞ்ச சங்கதியாச்சே..' மீனாவுக்கு சோர்வாக இருந்தது.. ஆற்றுக்கு அணை கட்டலாம்.. அருவிக்கு அணை கட்ட முடியுமா..? விஷ்வா பேரருவி..!
அவளது மனதைப் படிப்பவனைப் போலக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.. மீனாவுக்கு சள்ளையாக இருந்தது.. அவளது மனதை அறிந்து என்ன செய்யப் போகிறான்..? கானாடுகிரியில் அடங்கி இருந்து விடுவானா..,
'இவனை நம்பி ஊர் விட்டு ஊர் வந்தேன் பாரு.. என்னைச் சொல்லனும்..' தன்னைத்தானே நொந்து கொண்டாள்..
'நீ இவனை நம்பியா ஊர் விட்டு ஊர் வந்த..? உன் அப்பாவுக்கு மலைப்பிரதேசத்தில இருந்தாத்தான் உடம்பு சரியாகும்ன்னு சொன்னதினால வந்திருக்க..' மனச்சாட்சி நினைவுறுத்தியது..
"கிரி ஒரு பேக்டரிக்கு மேனேஜர்ன்னு சொன்னாங்களே.."
"யெஸ்.. மலைவாழ் மக்களின் கைவினைப் பொருள்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் பேக்டரி.. கிரியின் பொறுப்பில்தான் அது இருக்கு.. கம்பளி, ஸ்வெட்டர் தயாரிக்கிற கம்பெனியும் இவன் பொறுப்பில்தான் இருக்கு.."
"இரண்டு கம்பெனிகளைப் பார்த்துக்கிறவர் எனக்கு ஹெல்ப்பா இருப்பாரா..? ஈகோ கிளாஷ் ஆகும்.. வேண்டாம்.. நான் பார்த்துக்குவேன்.."
"நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. கிரி யாருக்கும் தலை வணங்க மாட்டான்.. அண்ணன் இவனிடம் பேசவே பயப்படுவார்.. அப்பாவும் யோசிப்பார்.. அந்த அளவுக்கு தன்மானச் சிங்கம்.."
"நானும் சிங்கம்தான் சார்.. சுயமரியாதை சிங்கம்.. சிங்கத்துக்கு சிங்கம் உதவி செய்ய முடியாது.."
"ஏனாம்..? இனம் இனத்தோடு.. அவங்களும் நீயும் ஒன்னா..? அண்ணனும் அப்பாவும் முதலாளி வர்க்கம்.. நீ தொழிலாளி வர்க்கமில்ல.. உன்னிடம் முறைத்துக்க மாட்டான்.."
"நீங்களும் முதலாளி வர்க்கம்தானே..? உங்களிடம் ஏன் முறைக்கலை..? பிரண்ட்லியா பேசறாரே.."
மீனாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விஷ்வா கிரியைப் பார்த்து புன்னகைத்து அவன் தோளில் கைபோட்டான்.. கிரி வெகு பிரியத்துடன் விஷ்வாவைப் பார்த்தான்..
"எனக்கும் சாருக்கும் இடையில் இருக்கும் அன்பு, குகனுக்கும் ராமனுக்கும் இடையில் இருந்த அன்புக்கு நிகரானது.. இதுக்கு மேலே என்ன சொல்லி உங்களுக்குப் புரிய வைக்கன்னு தெரியலை.."  கிரியின் குரல் தளுதளுத்தது..
"இதுக்கு மேலேயும் சொல்லனுமா..?" புரிந்து கொண்டவளாய் பதில் சொன்னாள் மீனா..
"சார் இல்லாத நாள்களில் நான் உங்களுடன் இருப்பேன்.. பேக்டரியையும் கம்பெனியையும் இருக்கிற இடத்தில் இருந்து கண்ட்ரோலில் வைத்துக்க எனக்குத் தெரியும்.. அதைப் பத்திக் கவலை வேண்டாம்ங்க.. அம்மணி.."
 "சரி.."
கிரி விடைபெற்றுக் கொண்டான்.. மீனா கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.. ஹாலின் ஓரத்தில் எதிரும் புதிருமாக ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் உட்கார்ந்திருந்து டேபிளில்  இருந்த கம்யூட்டரில் கண் பதித்து கீ போர்டில் டைப்படித்துக் கொண்டிருந்தார்கள்..
"அவர்கள் யார்..?"
"அந்தப் பெண்ணின் பெயர் செண்பகவள்ளி.. அந்தப் பையன் கார்மேகம்.. எஸ்டேட் ஆபிசில் வேலை செய்கிறவங்க.. செண்பகவள்ளி உனக்கு பி.ஏ.. கார்மேகம் அக்கவுண்டண்ட்.."
"ஓ.. நா உங்களுக்கு பி.ஏ.. பி.ஏவுக்கு பி.ஏ வா..?"
"அப்படித்தான்.."
"அவங்களைப் பார்த்தா வேலை செய்கிறதைப் போல தெரியலையே.."
ஹாலில் இருந்தவர்களைப் பார்த்தபடி மீனா சொல்ல.. விஷ்வா அவளது விழிகளுக்குள் ஊன்றிப் பார்த்தான்.. அவனது பார்வையில் ஏதோ இருந்தது.. எப்போதும் அவளைப் பார்க்கும் இனம் புரியாத உணர்வுகளைக் கொண்ட பார்வையல்ல அது.. வேறு ஏதோ ஒன்று தெரிந்தது..
'என்னவா இருக்கும்..?' அவள் மனம் குறுகுறுத்தது..
"எதை வைத்து அப்படிச் சொல்கிற..?"
"இதைக் கூடக் கண்டு பிடிக்க முடியாதா..? அவங்க கைதான் வேலை செய்வதைப் போல பாவ்லா செய்யுது.. ஓரக் கண்ணாலே இங்கே என்ன நடக்குதுன்னு பார்க்கிறாங்க.. காதை தீட்டிக்கிட்டு ஒட்டுக் கேட்கிறாங்க.."
"குட்.." விஷ்வா பாராட்டினான்..
"எதுக்கு..?"
"இவங்க இரண்டு பேரும் 'ஸ்பை'ன்னு முதல் பார்வையிலேயே கண்டு பிடித்ததுக்கு.."
"ஐய்யே..! இது ஒரு பெரிய வித்தை பாருங்க.. எங்க ஊரில முசப் பிடிக்கிறவன் லட்சணத்த மூஞ்சியப் பாத்தாலே தெரிஞ்சு போயிருமேன்னு சொல்லுவாக.. இதுகளைக் கண்டு பிடிக்கிறது பெரிய கஷ்டமாக்கும்..? ஆனாலும் சார்.. ஆபிஸ்ல உளவாளிகளை வைத்துக்கிட்டு இவ்வளவு திண்ணக்கமா இருக்கிற முதலாளிய இப்பத்தான் பார்க்கறேன்.."
"ஊம்..?"
தலையைச் சரித்து ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்து வைத்தான் விஷ்வா.. அதில் தடுமாறிப் போய் தடுக்கி விழப் பார்த்தது அவளது கன்னிமனம்.. மதுரையில் அவளது மனதை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள முடிந்தது.. கானாடுகிரியில் அது சாத்தியப்படவில்லை..
"இவங்களை வெளியே அனுப்பி வேறு நபர்களை வேலையில் வைத்தாலும் இதே கதைதான் தொடரும்.. அவங்க விலைக்கு வாங்கப்படுவாங்க.. உண்மையான விசுவாசிகளுக்கு இங்கே பஞ்சம் மீனா.. அதனால்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன்.. இதோ.. உன் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.."
விஷ்வா கவரைக் கொடுத்தான்.. பிரித்துப் படித்துப் பார்த்த மீனா பிரமித்தாள்.. அவளது கையிலிருந்த கவர் நழுவியது.. விஷ்வா அதைப் பிடித்து டேபிளில் வைத்தான்..
"எனக்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளம்ன்னு போட்டிருக்கே.."
"யெஸ்.. தட் இஸ் யுவர் சேலரி.."
"இவ்வளவு பணமா..?"
"நீ சீனியர் மேனேஜர்.. இது பர்ஸ்ட் ரீசன்.. சீக்கிரமா என் கடனை நீ அடைக்கனும்.. இது செகண்ட் ரீசன்.. என்னிடம் நீ கடனாளியாய் இருக்கக் கூடாது மீனா.."

விஷ்வாவின் பரிவில் மீனாவுக்கு அழுகை வந்தது..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -27
பொதிகையிலே பூத்தவளே -27
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/pothikaiyilepooththavale-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy