இது நீரோடு செல்கின்ற ஓடம் -9

9 உனைநனைத்த மழைத்துளிகள்.. என் காதலை நனைய வைத்தன ' எப்படி ஆரம்பிப்பது.. ?' இந்தக் கேள்விதான் மிருதுளாவின் மனதை ஆணி குட...

9
உனைநனைத்த மழைத்துளிகள்..
என் காதலை நனைய வைத்தன


'எப்படி ஆரம்பிப்பது..?'
இந்தக் கேள்விதான் மிருதுளாவின் மனதை ஆணி குடைவதைப் போலக் குடைந்து கொண்டிருந்தது.. அவள் மனதுக்குள் எண்ண அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதை அறியாதவளாக உமா தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்..
"ஊரு நல்லாத்தான் இருக்கு.. துறைமுக நகரமாம்.. தமிழகத்தோட பத்தாவது மாநகராட்சின்னு உன் அப்பா சொல்றாரு.. அலைகள் இல்லாத கடலாம்.. இந்த ஊருக்கு திருமந்திர நகர்ன்னு கூடப் பேரு இருக்காமே.."
"அப்படியா..? உங்களுக்கு யாரு சொன்னது..?"
"உனக்கு நல்லதா ஒரு லேடிஸ் ஹாஸ்டல் கிடைக்குமான்னு பார்க்க இன்னைக்குப் பூரா ஊரை சல்லடை போட்டுத் தேடினோமில்ல.. அதில நிறைய லேடிஸ் ஹாஸ்டலையும் பார்க்க முடிஞ்சது.. அப்பப்போ இது போல சங்கதிகளை கேக்கவும் முடிஞ்சது..."
"ரெஸ்ட் எடுத்திருக்கலாமில்ல.. எதுக்கும்மா தேவையில்லாத அலைச்சல்..?"
குற்ற உணர்வுடன் கேட்டாள் மிருதுளா.. மனசு 'பாவி' என்று அவளை வைதது.. அவளுக்காக அவளைப் பெற்றவர்கள் பாதுகாப்பான லேடிஸ் ஹாஸ்டலைத் தேடி அலைந்திருக்கிறார்கள்.. அவளோ அதைத் தகர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்திருக்கிறாள்..
"தேவையில்லாத அலைச்சலா..? வாயிலேயே போட்டிருவேன்.. ஆளைப் பாரு.. பத்துப் புள்ளைகளவா பெத்து வைச்சிருக்கோம்.. பெத்தது ஒன்னே ஒன்னு.."
"அதுவும் பொண்ணு..."
கோபப்பட்ட உமாவை சமாதானப் படுத்தும் வித்தையாக அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மிருதுளா.. அவளின் யுக்தி பலித்தது.. உமா ஆசுவாசமாகி மகளின் கன்னத்தில் தட்டினாள்..
"சீதையைத் தேட அனுமனை இலங்கைக்கு அனுப்பிட்டு ராமன் இந்தப் பக்கத்து கடலோரமா உக்காந்து மந்திரங்களை உச்சரித்தபடி தவம் செய்யத் தொடங்கினாராம்.. அவரோட தவத்துக்கு கடலலைகளோட பேரிரைச்சல் டிஸ்டர்பா இருந்ததாம்.."
"இந்த கதையெல்லாம் கேட்டுட்டு வந்தீங்களா..?"
"பின்னே..?"
"லேடிஸ் ஹாஸ்டலப் பாக்கத்தான போனிங்க..?"
"கூடவே இதையும் கேட்டோம்.. போதுமா..? அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது.."
"இருந்துட்டுப் போகட்டும்.. யாரு வேண்டாம்ன்னு சொன்னது..? சொல்லுங்க.. கடலலைகள் சத்தம் போட்டதும் ராமன் என்ன பண்ணினாராம்..? அதுககூட பேச்சு வார்த்தை நடத்தினாரா..?"
"அதுதான் இல்ல.. கடலலைகளை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி மந்திரங்களை ஓதி விட்டாராம்.. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும்
இங்கே இருக்கிற கடலில அலைகளோ.. சப்தமோ.. இருந்ததில்லையாம்..."
"வெரி இன்ட்ரெஸ்டிங் ஸ்டோரி.. ஆனா அம்மா.. நான் படிச்சதே வேற.."
"என்னத்தப் படிச்ச..?"
"இதோட ஜியாக்ரபி நேச்சர் புயல் கிளப்ப முடியாத பூகோள அமைப்போட இருக்கும்மா.. அதனாலதான் இங்கே ஹார்பரைக் கட்டியிருக்காங்க.. இது துறைமுகத்துக்கு தோதான கடல்ம்மா.. சவுத் ஆசியா கண்ட்ரீஸ்.. ஆஸ்திரேலியா.. நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியாவோட நுழைவு வாயில் இதுதான்ம்மா..."
"போடி.. படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்ங்கிற கதையாய் உன் கதை இருக்கு.. உன் பூகோள அறிவை உன் கூடவே வைச்சுக்க.. ராமன் திருமந்திரங்களை உச்சரித்ததினால தான் இங்கே புயல் வர்றதில்ல... அது தெரியாம என்னென்னவோ பேசறா.. இந்த ஊருக்கும் அதனாலதான் திருமந்திர நகர்ன்னு ஒரு பேரு வந்துச்சாம்.."
"இன்னொரு பேர் துறைமுக நகரம்தான..?"
"அதுவும்தான்.. ஆனா இந்தப் பேரு நாம வைச்சது.. திருமந்திர நகர்ங்கிற பேரை புராணம் வைச்சது.. இது ரெண்டும் இல்லாம வரலாறு வைச்ச பேரு ஒன்னு இருக்கு.."
"முத்து நகரா..?"
"அட.. உனக்கும் இது தெரியுமா..?"
"உங்களுக்கே தெரிஞ்சிருக்கிறப்ப எனக்குத் தெரியாதா..?"
"அது என்ன 'உங்களுக்கே..'ன்னு ஒரு இக்கன்னாவை வைக்கிற..? ஏன்..? அம்மா வீட்டுக்குள்ளே இருக்கிறவதானே.. இவளுக்கு என்ன தெரியும்கிற நினைப்பா..?"
"ம்மா..."
"சும்மா கன்னுக்குட்டியப் போல சவுண்டு விடாதே.. யாரு நீ..?"
"எங்கம்மாவோட செல்ல மகள்.."
திரும்பவும் 'கட்டிப்பிடி' யுக்தியை தாய்மீது பிரயோகித்தாள் மிருதுளா... அதற்காகவே மகளை வம்புக்கிழுந்த உமாவின் தாய்மனம் நெகிழ்ந்தது..
"இதுக்கொன்னும் குறைச்சலில்ல..."
போலியாக அலுத்துக் கொண்டாள் உமா.. கதை கேட்கும் ஆர்வம் மிருதுளாவுக்குள் வந்து விட்டிருந்தது.. மனதை அழுத்தும் சங்கதிகளில் இருந்து விலகி.. சற்று நேரத்துக்கு வேறு சங்கதிகளுக்கு பயணப்பட்டு வர அவள் விழைந்தாள்..
இடைபட்ட அந்த நேரத்துக்குள் எப்படி உமாவிடமும் சபாபதியிடமும் அவர்கள் தூத்துக்குடிக்கு குடி மாற வேண்டுமென்ற விவரத்தை எடுத்துச் சொல்வது என்று மனதுக்குள் வார்த்தைகளைக் கோர்த்து வைத்து அவள் தயாராக வேண்டி இருந்தது..
உமாவுக்கு அது தேவைப்பட்டதோ என்னவோ.. மகளைப் பிரிந்திருக்க வேண்டிய நெருக்கடி நிலையை மறக்க வேறு பேச்சுக்களைப் பேசுவதில் அவளும் ஆர்வம் காட்டினாள்..
"வருசத்துக்கு ஒருதரம் முத்துக் குளிப்பாங்களாம்டி.."
"எப்படிம்மா.. முத்துக்களை குவிச்சு வைச்சு அதுக்குள்ள குதிச்சு குளிப்பாங்களா..?"
"சேட்டை..? போகுது போ.. கடலுக்குள்ள குதிச்சு முத்தைத் தேடுவாங்களாம்.. பரதவர்கள்.. நேரடியா முத்துக் குளிக்கிறதில ஈடுபட்ட நகரம்ங்கிறதினால இதுக்கு முத்துக்குளித்துறைன்னு பெயர் வந்துச்சாம்.. அது அப்படியே முத்து நகரா ஆகிருச்சாம்.."
"தெரியுமே.."
"இப்பச் சொல்லு.. இவ்வளவு நேரம் வாயை மூடிக்கிட்டு கதை கேட்டது யாரு..?"
"யாரு..?"
"அத எங்கிட்டயே கேக்கறியா..?"
மகளின் காதைப் பிடித்துத் திருகினாள் உமா.. வலிப்பதைப் போல மகள் நடித்ததும் துடித்துப் போனவளாக அவள் காதை விட்டுவிட்டு..
"வலிக்குதாடி செல்லம்..?" என்று பதறினாள்..
"ஏமாந்தீங்களா..?" மகள் சிரித்தாள்..
"குசும்புடி உனக்கு.." மகளின் தலையில் செல்லமாக வலிக்காத ஒரு சின்னக் குட்டை வைத்தாள் உமா..
"ம்மா.. நாம வந்த டிரெயினுக்கு என்ன பேருன்னு மறந்துட்டிங்களா..?"
"என்ன பேராம்..?"
"முத்துநகர் எக்ஸ்பிரஸ்.."
"அட.. ஆமாமில்ல.."
உமா கன்னத்தில் கை வைத்து அதிசயத்தாள்.. மகளும்.. மனைவியும் உரையாடிக் கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டிருந்த சபாபதி.. சகலமும் அறிந்தவராய் சிரித்துக் கொண்டார்..
"உன் அப்பாவைப் பாரு.. கேலி பண்ணி சிரிக்கிறத.." உமா குறைபட்டுக் கொண்டாள்..
"நான் கேலி பண்ணினேன்னு நீ கண்டியா.." என்றார் சபாபதி..
"இந்த ஊரை பாண்டிய நாட்டோட துறைமுக ஊர்ன்னு ஹிஸ்டரி சொல்லுது.." மிருதுளா சொன்னாள்..
அவர்கள் சாப்பிடப் போனார்கள்.. அன்றைய தினம் எப்படிப்பட்டதாக இருந்தது என்று மகளிடம் விசாரித்தார் சபாபதி.. ஆதியோடு அந்தம் வரை அனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்த மிருதுளா விக்ரமுடன் ஏற்பட்டிருந்த ஒப்பந்தத்தைப் பற்றி மட்டும் சொல்லாமல் விட்டு விட்டாள்..
"மனுசங்க நல்ல மாதிரிதான் தெரியறாங்க.. உங்க ஏ.ஹெச்.எம் தான் எதிர்ப்பா இருப்பார் போல.." சிந்தனையுடன் கேட்டார் சபாபதி..
"எந்த எடத்தில வேலைக்குப் போனாலும்.. அங்கேயும் இதைப்போல ஒன்றிரண்டு ஆள்கள் இருக்கத் தான் செய்வாங்கப்பா.." என்றாள் மிருதுளா..
"அதைச் சொல்லு.."
அவருடைய அலுவலகத்தின் நினைவில் மகள் சொன்னதை உடனடியாக ஏற்றுக் கொண்டார் சபாபதி.. ஒருநாள் வேலைக்குள்ளாகவே மகளுக்குள் இத்தனை தெளிவு வந்திருப்பதில் அவர் மனதுக்குள் பிரத்யேகமான சந்தோசம் உதித்தது..
"ஹெச்.எம். தங்கமானவரா இருக்காரில்ல.." உமாவின் தாய்மனம் ஆறுதலைத் தேடியது..
"ஷ்யூர்.. கரெஸ்பாண்டென்ட் ஹெச்.எம் பேச்சுக்குத் தான் இம்பார்டன்ஸ் கொடுப்பாராம்.." என்றாள் மிருதுளா..
"அப்புறமென்ன..? கவலையை விடு.." உற்சாகமானாள் உமா..
கவலைப்பட்டது மிருதுளா இல்லை.. உமாதான் என்பதைப் புரிந்து வைத்திருந்த மிருதுளா தாயைக் கனிவுடன் பார்த்தாள்..
"கொஞ்ச நாளைக்குத்தான் மிருதுக்குட்டி.. கவர்ண்மெண்ட் ஜாப் கிடைச்சிட்டா இந்த வேலை நமக்கெதுக்கு..? அதுவரைக்கும் வீட்டில் இருக்காம வேலையைப் பார்க்கலாம்ங்கிறதுக்காகத்தான் உன்னை இவ்வளவு தொலைவில் வேலைக்கு வர நான் அலோவ் பண்ணினேன்.." என்றார் சபாபதி..
'கவர்ண்ட்மென்ட் ஜாபா..?' மிருதுளாவின் மனம் பதைத்தது..
அதற்கு மூன்று வருடங்களுக்கு வழி கொடுக்காமல் அடைத்து விட்டதை அவர்கள் அறிய நேர்ந்தால் என்ன சொல்வார்களோ என்ற கலவரப் பந்து அவள் வயிற்றுக்குள் உருண்டது..
கைக்குள்ளேயே வைத்து வளர்த்த மகளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டுமே என்ற உமாவின் தாய் மனதில் பரிதவிப்பு மிருதுளாவுக்கு வாய் திறப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தது..
"என்னவோ போங்க.. இவளுக்கு கவர்ண்ட்-மென்ட்டில வேலை கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.. உங்க வேலை கவர்ண்ட்மென்ட் வேலையா இருந்திருந்தா.. இந்நேரத்துக்கு டிரான்ஸ்பருக்கு அப்ளை பண்ணியிருக்கலாம்.. சென்னை வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இங்கேயே வீடு பாத்து குடி வந்திருக்கலாம்.. இப்படி தாய் தகப்பன் ஒரு பக்கம்.. பிள்ளை ஒரு பக்கம்ன்னு பிரிஞ்சு நின்னிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.."
உமா விட்ட பெருமூச்சில் சபாபதியின் தன் மானம் பாதிக்கப் பட்டது.. அதுவரை அவரது தன்மானத்தைப் பதம் பார்க்கும் எந்தவொரு வார்த்தையினையும் உமா பிரயோகித்ததில்லை.. முதன் முதலாக மனைவி வாயிலிருந்து அந்தச் சொல் வெளிப்பட்டு விட்டதில் அவர் முகம் மாறிப் போனார்..
"நான் கவர்ண்ட்மென்ட் வேலை பார்க்கற-வனில்லைங்கிறதை தெரிஞ்சுதானே எனக்கு கழுத்தை நீட்டின உமா..?"
அவரின் கடினமான குரலில் துணுக்குற்றாள் உமா.. அவள் என்ன சொல்ல வந்தாள்..? அவர் எதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்..?
அவள் மனதின் உணர்வுகளை முகம் துல்லியமாக படம் பிடித்துக் காட்டியதில் மிருதுளா ஊடாடினாள்...
"அப்பா.. அம்மா சொல்ல வந்ததே வேற.."
"அவ எதைச் சொல்ல வந்திருந்தாலும்.. அதுக்கு அர்த்தம் ஒன்னே ஒன்னுதான் மிருதும்மா.."
"உங்களுக்கு இங்கே டிரான்ஸ்பர் கிடைச்சிருந்தா எல்லோரும் ஒரே இடத்தில இருந்திருக்கலாமேங்கிற ஆதங்கத்தில அப்படி பேசிட்டாங்கப்பா.."
"இப்பத்தான் அது முடியாதுன்னு ஆகிப் போச்சே.. என்ன செய்யப் போகிறாளாம்..? பிறந்த வீட்டுக்கு பெட்டியைத் தூக்கிக்கிட்டுப் போகப் போகிறாளாமா..?"
"ப்பா.. நீங்க என்னப்பா சின்ன விசயத்த பெரிசு பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. அம்மாவுக்கு உங்க பவர் தெரியலைப்பா.. உங்களுக்குத் தெரியுமா..? நீங்க நினைச்சா இதே ஊரில.. நீங்க வேலை பார்க்கிறதை விடப் பெரிய கம்பெனியில.. பெரிய போஸ்டில வேலை பார்க்க முடியும்.. சேலரி மூணுமடங்கு அதிகமா கிடைக்கும்.. கம்பெனியில இருந்து கெஸ்ட ஹவுசு குவார்ட்டர்ஸா அலாட் பண்ணவும் செய்வாங்க.. அது தெரியாம அவங்களும் பேசறாங்க.. நீங்களும் சண்டைக்குப் போறிங்க.."
"என்ன சொன்ன..? என்ன சொன்ன..?"
மனத்தாங்கலை மறந்து கணவன்.. மனைவி இருவரும் தம்பதி சமேதராய் ஒரே குரலில் கேட்டார்கள்..
ஒப்பந்தம் போட்டிருப்பதையே மறைத்து.. விக்ரமின் பங்களாவின் கெஸ்ட் ஹவுஸில் குடியிருக்க வேண்டிய கட்டாயத்தை குவார்ட்டர்ஸாக்கி.. மிருதுளா மாற்றி யோசித்து கதை பின்ன ஆரம்பித்தாள்..
"ஹெச்.எம் தான் சொன்னாருப்பா.. பேமிலியைப் பத்தி விசாரிச்சவரு.. எங்க ஸ்கூல் கரெஸ்பாண்டெடோட கம்பெனியில ஒரு பெரிய போஸ்ட் காலியா இருக்குன்னு சொன்னாருப்பா.. சார் சொன்னா கரெஸ் கேட்டுக்குவாராம். தேவைப்பட்டா ரெகமெண்ட் பண்றேன்னு சொன்னாருப்பா.."
"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பாரும்மா.."
"இல்லைப்பா.. அவர் அப்படியெல்லாம் பேச்சுக்கு சொல்கிற ஆளில்ல... எதைப் பேசினாலும் மனசில இருந்து உண்மையா பேசற ஆளு.. அருமையான வேலை.. தகுந்த ஆள் கிடைக்கலன்னு யாரையும் செலக்ட் பண்ணாம தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காங்கன்னு சொன்னாருப்பா.."
"இந்தத் தூத்துக்குடியில இல்லாத ஆள்களா..?"
"அந்த வேலைக்கான எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனுமில்லப்பா..? உங்ககிட்ட அது இருக்கே.."
மிருதுளாவின் வார்த்தைகளில் இருந்த மறைமுக வற்புறுத்தலை சபாபதியின் மனம் கிரகித்துக் கொண்டது.. உமாவின் முகத்தில் பிரதிபலித்த ஆர்வத்தை அவர் கவனிக்காததைப் போலக் கவனித்தார்.. மனைவியின் முன்பு அவருடைய கம்பீரத்தை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு அது என்று அவர் மனம் கணக்கிட்டது.. அத்தனை தினங்களாக அவருடைய வேலையைப் பற்றிப் பேசியறியாதவள் அன்று பேசிவிட்டதில்.. அவள் முன்பு நிமிர்ந்து நின்று காட்ட வேண்டுமென்ற ஆண்மையின் வைராக்கியம் அவர் மனதில் துளிர் விட்டது..
இருந்தும் சிலவற்றை அவர் யோசிக்க வேண்டியிருந்தது.. எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்று எதையும் அவரால் செய்துவிட முடியாது.. எதையும் ஆற.. அமர யோசித்தாக வேண்டும்.. மிருதுளா சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு இது அருமையான வாய்ப்புத்தான்.. மனைவியின் முன்பாக அவர் தலைநிமிர்ந்து நின்று விடுவார்தான்.. ஒருவேளை அவற்றில் உண்மையில்லாமல் போய் விட்டால்..?
எதையோ நம்பி எதையோ கைவிடுவது சாலச் சிறந்ததல்லவே.. பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதை விட்டுவிடக் கூடாதே.. அவர் ஒரு உத்தியோகத்தில் இருக்கும் போதே அவர் மனைவி அதைக் குறை சொல்லி விட்டாள்.. அதுவும் இல்லையென்றால் அவரை  மதிப்பாளா..?
உமா மலையளவுக்கு மதிப்பாள் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்தான்.. இருந்தும் ஒரு கணவனின் மனமாக அவர் மனம் அவ்வளவு எளிதில் சமாதானம் அடைந்து விடவில்லை...
"பாக்கலாம் மிருதுக்குட்டி.. எதுக்கும் உங்க ஹெச்.எம்மிடம் நான் பேசனும்னு சொன்னேன்னு சொல்லு.. இதையெல்லாம் சட்டுன்னு முடிவு பண்ணிற முடியாதும்மா.. இப்ப நான் பார்த்துக்கிட்டு இருக்கிற வேலையை விட்டுட்டா என்னோட மொத்த சர்வீஸீம் போயிரும்.."

மிருதுளாவின் முகம் மலர்ந்து விட்டது.. இந்த அளவிற்கு சபாபதி பேசுகிறார் என்றால் அவர் மிருதுளா சொன்னதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார் என்று தானே அர்த்தமாகிறது..?

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -9
இது நீரோடு செல்கின்ற ஓடம் -9
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy